புதன், 20 ஜூன், 2018

சாகர்மாலா தொடர் பகுதி 8

aathi1956 aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Saravanan Nvi மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-8
ஆபத்தான பெட்ரோகெமிக்கல் மண்டலத் திட்டங்கள் மட்டுமின்றி, அதுபோன்ற பல தொழில் மண்டலங்களை ஒட்டியே தமிழ் நாட்டின் இனயம் மற்றும் சீர்காழியில் இரண்டு பெரிய துறைமுகங்களை "சாகர்மாலா" கீழ் ஏற்படுத்த உள்ளன.
இனயம் துறைமுகம்:
சுமார் 1076 கிலோ மீட்டர் நீளமான தமிழ்நாட்டு கடலோரப் பகுதியில் வெறும் 68 கிலோ மீட்டர் மட்டுமே கன்னியாக்குமரியில் இருக்கிறது. அது இல்லாமல் கன்னியாக்குமரி மக்களில் 20% மக்கள் கடலை நம்பி தான் உள்ளனர். அதற்காகவே தரம் உயர்த்தபட்ட மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக குளச்சல் மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் குளச்சல் மேற்கு பகுதியிலுள்ள இனயத்தில் 27500 கோடி செலவில் அனைத்துல சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் (International Container Transhipment Terminal-ICTT) அமைக்கவுள்ளதாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இதை பார்த்த மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள் அருகிலே 35 கிலோ மீட்டர் தொலைவில் விழிஞ்சத்தில் இதே சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் உள்ளதே பின் எதற்கு இங்கே. அது இல்லாம அந்த துறைமுகமும் நட்டத்தில் தான் போய்கொண்டு இருக்கு. அது இல்லாம அதில் ஆரம்பத்தில் 13% பங்கு வகித்த ஆதானி தற்போது 60 ஆண்டுகள் வரை நிர்வகிக்க சலுகை நரேந்திர மோடி ஐயா கொடுத்துள்ளதை நன்கு கவனிக்கவும் மக்களே.
இப்படியாக அத்திட்டத்திற்கு இனயம், புத்தன்துறை, ராமந்துறை, மூல்லூர்துறை, அலூ நகர், மேல் மிடாலம், கீழ் மிடாலம் உள்ளிட்ட ஏழு கிரமங்களை சேர்த்து சுமார் 50000 மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நேரிட்டிற்கும். அது போக இரயில் பாதை, நான்கு வழி பாதை என அதற்கு 57000 மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் சூழல் உருவாகி இருக்கும்.
ஆனால், மக்கள் தங்கள் ஒற்றுமையை நிலை நாட்டி அங்கே இருந்து அத்திட்டத்தையே விரட்ட அது அப்படியே கீழமணக்குடிக்கு மாற்றபட்டது.
ஏற்கனவே, கடலின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் எழுப்பட்ட பல்வேறு துறைமுகங்கள் காரணமாக எண்ணூர் தொடங்கி புதுச்சேரி-கடலூர்-நாகபட்டினம்- தூத்துக்குடி என கடலோர கிரமங்கள் கடல் அரிப்பால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில்.
இவர்கள் சாகர்மாலா திட்டதிற்காக 800ஏக்கர் கடல் மீது மணல் கொட்ட உள்ளார்களாம். இயற்கையை சீண்ட சீண்ட அது பேராபத்தை திருப்பி பரிசாக கொடுக்கும் என்பதை மக்கள் நியாபகத்தில் வைத்து கொள்ளவும்.
இப்போ கீழமணக்குடியில் இத்திட்டத்தால் மேற்கு கடற்கரை கிராமங்களான மணக்குடி, சொத்தவிளை, பள்ளம், புத்தன்துறை, சங்கதுறை, பொழிகரை, இராசாக்காமங்கலம் துறை, ஆயிரம்கால் பொழிமுகம், அழிக்கால், பிள்ளைதோப்பு போன்ற பகுதி கடல் அரிப்பாலும் கடல்நீர் விவசாய நிலங்களில் புகும் அபாயங்களும் ஏற்படும் என்பதை கவனிக்கவும் மக்களே.
சும்மாவே ஒரு ஆண்டிற்கு கடல் அரிப்பானது புவிவெப்பமயமாதலால் இயற்கையாகவே உண்டாகிறது அது 1.6 மீட்டர் அளவே. ஆனால், இத்திட்டம் வந்தால் கடல் அரிப்பு சுமார் 20.8 மீட்டராக உயரும் என்பது ஆய்வு கூறுகிறது.
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 7இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக