புதன், 20 ஜூன், 2018

டி.எம்.சி என்பது எவ்வளவு 14 tmc குறைப்பு ஒரு லட்சம் ஏக்கர் விவசாயம் குறையும்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 19
பெறுநர்: எனக்கு

Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.

ஒரு  டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.

கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும். அப்படியெனில் ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.

டிஎம்சி அளவிடும் முறை :

கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் :

ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.

கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் நன்மை தீமைகள் :

கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு 177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு :

தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

நெல் பயிர் சாகுபடிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கும்.

Ancient Tamil Civilization

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக