புதன், 20 ஜூன், 2018

சாகர்மாலா திட்டம் பற்றி தொடர் பகுதி 4 5

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Å Ravin Th மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-4
போக்குவரத்து துறைக்கு பொறுப்பேற்ற இந்தியா தீட்டும் திட்டங்களை கொஞ்சம் எட்டி பார்த்துட்டு வருவோமா
அதாவது, கொழும்புவில் இருந்து வங்ககடல் ஓரமாக தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை வழியாக ஆந்திரா, ஒரிசா, நேப்பாளம், வங்கதேசம், பூட்டான், மியான்மர், தாய்லாந்து வரை சாலைகள், தொடர்வண்டிகள், போக்குவரத்து என திட்டமிட்டுள்ளது.
ஒன்றை நன்கு கவனிக்கவும் மக்களே இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவித்தது நியாயமாக பார்த்தால் அது இந்தியாவின் எதிரி நாடாக தானப்பா இருந்துருக்கனும் இங்க என்னடானா அவனுங்களுக்கு தமிழகத்துக்கும் பாலம் அமைக்கபோறாங்களாம்.
இதன் முதல் கட்டமாக குமரி முதல் கொல்கத்தா வரை "கிழக்கு கடற்கரை பொருளியல் பாதை" (East Coast Economic Corridor-ECEC) என்ற சாலையை அமைக்கவுள்ளனர்.
கடந்த 2015 சூனில் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியோடு சுமார் 22,000 கொடி ரூபாய் செலவில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராமேசுவரத்தின் தனுச்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 23 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்க போவதாக நிதின் கட்கரி (மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்) அறிவித்தது இந்த BIMSTEC நோக்கதிற்காகவே.
அதற்கு அடுத்த மாதமே (19/7/2015) அரசின் தேசிய நெடுஞ்சாலை அதிகார ஆணையம் (NHAI) தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்க 10000 கோடி செலவழிக்க உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்தார்.
அது இல்லாம இலங்கைக்கு சாலை மட்டுமின்றி தொடர்வண்டி பாதையும் அமைக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதாக நம் அன்பு ஐயா பொன். ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையில் 3/8/2015 அன்று தெரிவித்தார்.
இப்படியாக இந்திய அரசு தமிழர்களின் மீது கொண்டுள்ள காழ்புணர்ச்சி சாகர்மாலா போன்ற திட்டத்தால் பலிகொடுக்க முயற்சிக்கிறது அப்பட்டமாக தெரிகிறது.
தமிழகத்தில் மட்டும் இல்லங்க ஒட்டுமொத்த இந்திய கடலோரமே இவர்களின் பெயரால் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கபட்டு இயற்கை வளங்கை சுரண்டி நாடுகடத்த போகிறார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 3 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Suthan Nayagam மற்றும் 10 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-5
இந்திய கடலோரத்தில் 7,500 கிலோ மீட்டர் பகுதிகளை மட்டுமின்றி சுமார் 14,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆறுகள் வழியே கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்தவும் திட்டம் தீட்டபடுகிறது.
நிதின் கட்காரி (இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்) கடந்த 2015 மே மாதம் "தேசிய நீர்வழிச் சாலைகள் சட்டம்" (National Waterways Act, 2016) என்ற தனிசட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அச்சட்டம் 12/4/2016 நிறைவேற்றபட்டது.
இச்சட்டத்தின்படி 111 ஆறுகள் தேசிய நீர்வழிப் போக்குவரத்துக்க
ு பயன்படுத்த போகிறால்கள். அதில், புதுச்சேரியிலிருந்து தமிழ்நாடு வழியாக ஆந்திரவின் காக்கிநாடா வரை 1095 கிலோ மீட்டர் வழிதடம் (NW4), பிறகு திருவனந்தபுரத்தையும் கன்னியாக்குமரியை இணைக்கும் 11 கிலோ மீட்டர் நீளமான "ஆனந்த விக்டோரியா மார்தாண்டம் வாய்க்கால்" (NW13), 94 கிலோ மீட்டர் நீளமுள்ள தமிழ்நாட்டின் பவானி ஆறு (NW20), தமிழ்நாட்டிற்குள் 364 கிலோ மீட்டர் நீளமுள்ள காவிரி - கொள்ளிடம் ஆறு (NW55), 5 கிலோ மீட்டர் நீளமுள்ள மணிமுத்தாறு (NW 69), 141 கிலோ மீட்டர் நீளமுள்ள பாலாறு (NW 75),125 கிலோ மீட்டர் நீளமுள்ள பெண்ணை ஆறு (NW 80),60 கிலோ மீட்டர் நீளமுள்ள தாமிரபரணி ஆறு (NW99) என இந்த ஆறுகளையெல்லாம் போக்குவரத்து வழிதடங்களாக மாற்ற இந்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
நாம என்ன கேக்குறோம் னா ஆறுகளில் தண்ணீயே எங்களுக்கு வரது இல்ல இதுல நீங்க போக்குவரத்து வேற பண்ணிரீங்களா. இரண்டாவது, நாகர்கோவில் டவுன்லயே ஒரு ரோடு ஒழுங்கா இல்ல இந்த லட்சனத்துல ஆறுகளின் வளத்தை வேற கெடுக்க தயார் ஆயிட்டாங்க. சரி, ஆறுகள் மூலமாக போக்குவரத்து நடந்து கரியமில வாயு (pollution) குறையுமுன்னு நினைக்கலாம். அங்க தான் என்னொரு டிவிச்ட்டு, இந்த ஆறுகளின் போக்குவரத்து மக்களுக்கான போக்குவரத்து இல்ல பெருந்தொழில் நிறுவனங்களுக்கான சரக்கு போக்குவரத்து நடத்த போகிறார்கள்.
அதில், கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்பு போன்ற கனிமங்களை கடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஏற்கனவே எண்ணூரில் கடலில் எண்ணெய் கொட்டிய போது இவர்கள் என்ன செய்தாங்க னு மக்கள் மறந்துருக்க மாட்டாங்க. இதுல, இவர்களை நம்பி இருக்குற நம்ம ஆற்று வளத்தை கொடுக்கலாமா???
இப்போ புரிகிறதா ஆற்றில் மணல் கொள்ளை நடக்கும்போதும், கோக் கோலா கம்பெனிகள் லட்சகணக்கில் தண்ணீர் எடுக்கும் போதும் நம்ம அரசு மௌனமாக இருந்ததின் காரணம். ஏன்னா எல்லாவற்றையும் தான் தனியாரிடம் அடகு வைத்துவிட்டாங்க
ளே இவர்களுக்கு என்ன அக்கறை வரும் இயற்கை மீதும் அதை சார்ந்து வாழும் மக்கள் மீதும்!!!
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 4 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக