புதன், 20 ஜூன், 2018

சாகர்மாலா பற்றி தொடர் 6 7

aathi1956 aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு
வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Ingersol Selvaraj மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-6
இந்திய அமைச்சரவை கூட்டம் 2015 மார்ச்சில் (25/3/2015), சாகர்மாலா திட்டத்தின் கீழ் 12 துறைமுகங்களை உருவாக்கவும், 1208 தீவுகளை அரசாங்கத்திற்கு வழங்கியது. இதற்காக சுமார் 1000 கோடி ருபாய் முதலீட்டில் புதிய நிறுவனம் அமைக்கபட்டது.
அந்த நிறுவனம் பெயர் "சாகர்மாலா வளர்ச்சி நிறுவனம்" (Sagarmala Developement Company) என்ற புதிய நிறுவனத்தை 2016 சூலையில் இந்திய அரசு தொடங்கியது. அதாவது 12 துறைமுகம் மட்டுமின்றி 1208 தீவுகளும் தனியாரிடம் போகப் போகிறது.
இது இல்லாம கனிம வளங்களை எடுத்து செல்ல இவர்களுக்கு என்று தனி இரயில் பாதைகளை இணைக்க ஒரு புதிய நிறுவனத்தை இந்திய அரசு 10/7/2015 அன்று தொடங்கியது. அந்த நிறுவனத்தின் பெயர் "இந்திய துறைமுகத் தொடர்வண்டி கழகம்" (Indian Port Rail Corporation Limited). முதல்கட்டமாக 26 துறைமுகங்களை இணைக்கபடவுள்ளன. இந்தியாவை சுற்றியுள்ள 1208 தீவுகளையும் இணைக்க போகிறார்.
25 திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டின் தூத்துகுடியில் உள்ள வ. உ. சி துறைமுகம் வழியே சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் தொடர்வண்டி பாதை திட்டம், தூத்துகுடி அருகில் உள்ள அரே தீவுக்கு 70.12 கோடி ரூபாயில் தொடர்வண்டி அமைக்கும் திட்டம், 150 கோடி ரூபாய் செலவில் சென்னை எண்ணூர் காமராசர் துறைமுகத்தில் இரட்டை இரயில் பாதை திட்டம் என பல திட்டங்கள் இணைக்கபட்டுள்ளன.
சாகர்மாலா நிறுவனத்தின் கீழ் 2035 ஆம் ஆண்டு வரை சுமார் 8 லட்சத்தி 40 ஆயிரம் கோடி செலவில் 415 திட்டங்களை நிறைவேற்ற போகிறது. இது நம் கடற்கரை முழுவதுமே தனியார்மயம் ஆவதை குறிக்கிறதாகும்.
என்னப்பா தனியார் தனியார் னு சொல்ற அரசாங்கம் தானப்பா நடத்துது இதுல எப்படி தனியார் வருவாங்க என்ற கேள்வி அறிவார்ந்தவர்கள் மனதில் தோன்றுவது நியாயமே. அது எப்படினு கொஞ்சம் சுருக்கமாக பார்த்துரலாம்
இந்த திட்டங்கள் எல்லாமே பன்னாட்டு-வட நாட்டு பெருமுதலாளிகளின் கூட்டுப் பங்களிப்போடு நடப்பவை (Public-Private Partnership). அதாவது, மக்களிடம் இருந்து பெறப்படும் வரிபணத்தில் இருந்து அரசின் முதலீடாக திட்டங்களை தொடங்குவார்கள். இலபகரமான திட்டமெனில் அதில் ஆதானி, அம்பானி போன்ற தனியார் நஅறுவனங்கள் ஒரு தொகையை (Share) செலுத்தி இணைவார்கள். இலாபகரமாக இருந்து மெல்ல மெல்ல மொத்தமும் தனியாரின் கைக்குள் போகும் உதரணத்திற்கு எண்ணூர் துறைமுகங்களை பார்க்கலாம். நட்டமானால் இழுத்து மூடிட்டு வெளிநாட்டுக்கு ஒடிவிடுவார்கள்.
எது எப்படியோ இலாபம் அனைத்தும் தனியார்களுக்கு தான் என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 5 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Saravanan Nvi மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-7
இந்தியாவின் ஒன்பது கடலோர மாநிலங்களில் மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ் நாடு. அதனால் தான் தமிழக மக்கள் அதிகம் விழிப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சாகர்மாலா திட்டத்தின்படி தமிழகத்தின் கடற்கரையோர இடத்தை ஆறு கடலொர பொருளியல் மண்டலங்களாக பிரிக்கின்றனர்.
1.கன்னியாகுமரி-திருநெல்வேலி-தூத்துகுடி மாவட்டங்களை மையமாக கொண்டு ஒரு மண்டலம்.
2.தூத்துக்குடியை துறைமுகத்தை தலைமையாக கொண்டு "மன்னார் கடலோர பொருளியல் மண்டலம்".
3.கடலூர்-பெரம்பலூர்-அரியலூர்-த
ிருச்சி-தஞ்சை-திருவாரூர்-நாகபட
்டினம் மாவட்டங்களை மையமாக கொண்டு ஒரு மண்டலம்.
4.கடலூர் துறைமுகத்தை மையமாக கொண்டு "பூம்புகார் கடலோர பொருளியல் மண்டலம்".
5.திருவள்ளூர்-சென்னை-காஞ்சிபுர
ம் மாவட்டங்களை மையமாக கொண்டு ஒரு மண்டலம்.
6.சென்னை எண்ணூர் துறைமுகத்தை மையமாக கொண்டும் "விசாகபட்டினம் - சென்னை தொழிற்சாலை பாதை" ( Visakapattinam Chennai Industrial Corrider- SOUTH).
இதில் பூம்புகார் மண்டலம் ஆற்றல் தொழில் குவிமையமாக (Energy Clusters) அறிவிக்கபட்டுள்ளது. இங்கே தான் ஏற்கனவே செயலில் உள்ள நெய்வேலி அனல் மின் நிலையம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
இதுபோக நாகை மாவட்டத்தில் பல புதிய அனல் மின் நிலையங்களை அமைக்கவுள்ளனர். இதுபோக 40க்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்கள் தமிழ்நாடெங்கும் கட்டபடவுள்ளன.
அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் விசகாற்று, கழிவுகள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உதாரணத்திற்கு தூத்துக்குடி, எண்ணூர் மக்கள் படும் துயரம் கண் முன்னே உள்ளது.
இதைவிட என்ன சிறப்புனா 2009ல் அனல் மின் நிலையத்தை ஆராய்ந்த மாசுகட்டுபாடு வாரியம் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் இங்கே அனைத்து அனல் மின் நிலையங்களும் சுற்றுசூழலை பாதிக்கும் வரம்பை தாண்டியே செயல்படுகிறது என்று வெளிபடையாக சொல்லியதை மக்கள் நினைவில் கொள்ளுங்கள்.
இது இப்படி இருக்க அடுத்தது கடலூர்-நாகை மாவட்டங்களில் சுமார் 45 கிராமங்களை (23000 ஹொக்டர்) எரிம வேதியல் முதலீட்டு மண்டலமாக (Petroleum Chemicals and Petrochemicals Investment Region-PCIR) கடந்த 2017 சூலையில் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலூர், புவனகிரி, சிதம்பரம் ஆகிய வட்டங்கள் சேர்த்து 25 கிராமங்களும் நாகை மாவட்டத்தின் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 20 கிராமங்களும் உள்ளன. இதில் பெரும்பாலும் கடலோர கடற்கரை கிராமங்கள் என்பது குறிபிடதக்கது.
இது இல்லாம வேதி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை, பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலையும் நிறுவபடவுள்ளன. ஏன்கனவே 2009ல் இருந்து கடலூரில் ஆந்திராவை சேர்ந்த நாகார்சுனா குழுமத்தின் நாகர்சுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பல்லாயிரம் கோடி முதலீட்டில் அமைக்கபட்டு வருகின்றது. இப்போ யோசிங்க மக்களே அரசாங்கம் யாருக்கு சாதகமாக இந்த இடத்தை (கடலூர்-நாகை) எரிம வேதியல் மண்டலமாக அறிவித்துள்ளது.
தனியார்களுக்காகவா!!! இல்ல மக்களுக்காகவா!!!!!!
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 6 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக