புதன், 20 ஜூன், 2018

2017 கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மண்மீட்பு நூல் தமிழ்நாடு 50


aathi tamil aathi1956@gmail.com

பிப். 22
பெறுநர்: எனக்கு

தமிழக எல்லை மீட்பு போராட்டங்கள் !

வடக்கு எல்லை மீட்புப் போராட்டம்

 
முன்பு தமிழ்ப் பகுதிகளாக இருந்து இப்போது ஆந்திராவுடன் இணைக்கப் பட்டுள்ள சித்தூர் மாவட்டத்தில் 19,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் பெரும் பகுதியும், 13,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு உள்ள நெல்லூர் மாவட்டத்தின் கணிசமான பகுதியும் தமிழகத்துடன் சேர்ந்து இருக்க வேண்டியது ஆகும். ஆனால், அவை தமிழகத்துடன் இணைக்கப்படாமல் போனதால், வடபெண்ணாறு, ஆரணியாறு, பொன் வாணியாறு முதலியவற்றின்  வளமான மண் தமிழகத்திற்கு இல்லை என்றாகி விட்டது. ஆரணி ஆற்றின் பாசனப் பகுதி தமிழ்நாட்டில் இருந்தாலும், அணைக்கட்டுப் பகுதி ஆந்திராவுக்குப் போய்விட்டது.
கடந்தகால எல்லைப் பிரச்சினைகளை சரி செய்யாததால், சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்குவதற்காக செய்து கொண் ஒப்பந்தத்தை, 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் ஆந்திர மாநிலம் முழுமையாக நிறைவேற்றவில்லை. வட தமிழ்நாட்டின் குடிநீருக்கும், பாசனத்திற்கும் இன்றியமையாத பாலாற்றின் குறுக்கிலும், சித்தூர்  மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர மாநிலம் புதிய அணை கட்டுவதால் வேலூர், காஞ்சி மாவட்டங்கள் பாதிக்கப்படும்.
1949இன் இறுதியில் சென்னையில் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. ‘தமிழக எல்லை மாநாடு’  நடத்தினார். மத்திய நிதி அமைச்சராக இருந்த டாக்டர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் இம்மாநாட்டிற்கு தலைமை வகித்தார். சென்னை மாநில முதல் அமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜா இம்மாநாட்டில் கலந்து கொண்டார். ‘வட வேங்கடம் முதல் தென் குமரி வரை உள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை ம.பொ.சி. முன்மொழிய தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கடந்த காலங்களில் ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் இந்தியாவில் ஒவ்வொரு தேசிய  இனம் மற்றும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் சரியாக அமையவில்லை. ஆங்கிலேயர் சூழ்ச்சியால் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தனர். வங்கப் பிரிவினையை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதே சமயத்தில், அய்க்கிய தமிழகம், விசால ஆந்திரம், நவ கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா  குஜாõத்  என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.தமிழ்நாடு வரைபடம் 6
பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகம்
தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் கோரி சென்னையில், பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் அவரது மரணத்தில் முடிந்தது. அதனால், இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  இதன் விளைவாக கர்நூல் நகரைத் தலைநகரகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. ஆந்திரர்கள், தமிழகத்திற்குச் சொந்தமான வேங்கட மலையையும் தம் வசப்படுத்திக் கொண்டது மட்டும அல்லாமல், ‘மதறாஸ் மனதே’ என்ற முழக்கத்தையும் முன்வைத்து பொருளற்ற முறையில் போராடினார்கள்.
சென்னை உரிமைப் போர்
மத்திய அரசால் சென்னையைக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி வாஞ்சுக் குழு, இடைக்காலமாக ஆந்திராவின் தலைநகராக சென்னை  இருக்கலாமெனப் பரிந்துரை செய்தது. இதைக் கண்டித்து வாஞ்ச் குழுசிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில்,  ’சென்னை நகரம் தமிழருக்கே’ என வலியுறுத்திதி மனு கொடுப்பப்பட்டது. முதல்வர் இராஜாஜியும் குழுவின் பாரிந்துரையை எதிர்த்தார்.
சென்னை மேயர் த.செங்கல்வராயன், ம.பொ.சி. ஆகியோர் 13.12.1953 அன்று சென்னை மாநகர் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின்  கூட்டம் ஒன்றைக் கூட்டினார்கள். ‘சென்னை நகரம் தமிழருக்கே உரியது’ என வலியுறுத்தும் தீர்மானம் இதில் நிறைவேற்றப்பட்டது. 16.3.1953 அன்று சென்னைக் கடற்கரையில் கட்சி சார்பற்ற பொதுக் கூட்டத்தை மேயர் செங்கல்வராயன் கூட்டினார். இக்கூட்டத்தில் தந்தை பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் எல்.எஸ். கரையாளர், மீனாம்பாள் சிவராஜ், எஸ். முத்தையா முதலியார், எம். பக்தவத்சலம், ம.பொ.சி.  ஆகியோர் பேசினர். ‘சென்னை நகரம் தமிழருக்கே உரியது’ என்ற தீர்மானம் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு வரைபடம்7
இதுதொடர்பாக நேருவைச் சந்தித்த முதல் அமைச்சர் இராஜாஜி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “ சென்னைப் பட்டினத்தை ஆந்திராவிடம் தருவது என மத்திய அரசு முடிவு எடுக்குமானால் அதை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்புத் தரும் சக்தி எனக்கு இல்லை. இந்த நிலையில் வேறு முதல் அமைச்சரைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் எனப் பிரதமரிடம் கூறிவிட்டேன்” எனக் கூறினார்.  டில்லியில் இருந்து திரும்பியவுடன் இராஜாஜி, ம.பொ.சி.யிடம் இப்பிரச்சினைக் குறித்துப் பேசினார். ‘சென்னை நகரைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கும், ஆந்திராவுக்கும் பொதுத் தலைநகரமாக  ஆக்க நேரு முடிவு செய்து விட்டார் என்றும், அவ்வாறு நேருமானால் நான் முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும்’ அச்சமயம் இராஜாஜி கூறினார்.
செட்டி நாட்டு அரசர் இராஜா சர்.எம்.ஏ. முத்தையா செட்டியார், ம.பொ.சி. ஆகியோர் கலந்து பேசி, சென்னை நகரின் மீது தமிழர்களுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை நடத்தினர். நகர சபைகள், வணிக நிறுவனங்கள், காங்கிரஸ் குழுக்கள், தமிழ் இலக்கிய மன்றங்கள் ஆகியவற்றின் சார்பில் லால்பகதூர் சாஸ்திரிக்கு சுமார் 2,000க்கும் மேற்பட்ட தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. சாஸ்திரியை காமராஜர் சந்தித்தபோது, அவர் தமிழ்நாட்டில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தந்திகள் பற்றி கூறினார். சென்னை நகரை பற்றிய மத்திய அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்வதாகவும் சாஸ்திரி  காமராஜரிடம் உறுதி கூறினார்.
மேயர் செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில், ‘சென்னை நகரை இரண்டாகப் பிரிப்பதோ, ஆந்திர – தமிழக அரசுகளின் பொதுத் தலைநகரமாக ஆக்குவதோ, மத்திய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக செய்வதோ, ஆந்திரத்தின் இடைக்கால தலைநகராகவோ  ஆக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தை ம.பொ.சி. முன்மொழிய, முன்னாள் மேயர் எம். இராதாகிருஷ்ணன் வழிமொழிந்தார்.
25.3.1953 அன்று நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநில  அமைப்பு பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை பிரதமர் நேரு வெளியிட்டார். ‘ஆந்திராவின் தலைநகரம் ஆந்திர எல்லைக்கு உள்ளேயே இருக்கும்’ என அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழர்களின் கவலையைப் போக்கி மகிழ்ச்சியைத் தந்தது.
ஆந்திரா – வடக்கு எல்லைப் பிரச்சினை
சென்னை ராஜ்யத்தில் 1911 மார்ச் வரை சித்தூர் மாவட்டம் என்ற ஒன்று கிடையாது. முதன்முதலாக 1.4.1911இல் வட ஆற்காடு  மாவட்டத்தில் இருந்த திருத்தணிகை, புத்தூர், சித்தூர், திருப்பதி, திருக்காளத்தி,  பல்லவனேரி ஆகிய ஆறு தாலுக்காக்களைப் பிரித்து, அவற்றுடன் ஆந்திர மாநிலம் கடப்பையில் இருந்து பிரிக்கப்பட்ட மதனபள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு தாலுக்காக்களையும் சேர்த்துப் புதிதாக சித்தூர் மாவட்டம் உருவானது. வட ஆர்க்காடு மாவட்டம் எளிதில் நிர்வகிக்க  இயலாதபடி  அளவில் பெரியதாக இருந்ததால்,  தமிழர்கள் வாழ்ந்த சித்தூர் பகுதியை  பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்கியதாக ஆங்கிலேயர் கூறினர்.
அப்போதே அதற்குத் தமிழரிடம் இருந்து எதிர்ப்பு ஏற்பட்டதாகவும், சென்னை ராஜ்யம் மொழிவாரியாகத் திருத்தி அமைக்கப்படுங்கால், வட ஆர்க்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகள் திரும்பவும் தமிழகத்திற்குத் தரப்படும் என்றும் அரசின் சார்பில் உறுதி கூறப்பட்டதாகத் தெரிகிறது. சித்தூர் மாவட்டம் படைப்பில் இரு மொழி மாவட்டமாக இருப்பினும், அரசாங்க நிர்வாகத்தில் தமிழ் மாவட்டமாகவே கருதப்பட்டு வந்தது. சித்தூர் மாவட்டமானது தமிழர்த் தாலுக்காக்களையும் தெலுங்கு தாலுக்காக்களையும் கொண்ட இருமொழிப் பிரதேசமாக இருந்தாலும் நில அமைப்பிலே அதன் தமிழ்த் தாலுக்காக்கள் தனிப் பிரிவாகவே அமைந்தன. சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழங்கும் தெற்குப் பகுதி விரிந்த நிலப்பரப்பையும், தெலுங்கு வழங்கும் வடக்குப் பகுதி மலைத் தொடராகவும் இருந்தது.
தமிழ்நாடு வரைபடம் ௪
தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகள் பற்றிய பிரச்சினைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் காமராஜர், ‘தமிழ்நாடு எல்லைக் குழு’  என்ற பெயரில் ஒது தனி அமைப்பை 1949இல் அமைத்தார். இதற்குத் தலைவராக  சி.என்.  முத்துரங்க  முதலியார் நியமிக்கப்பட்டார். ஆந்திர எல்லைகளில் உள்ள தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என இந்தக் குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
வடக்கு எல்லை மீட்புப் போராட்டம்
மாநிலப் பிரிவினையின்போது, ஆந்திர மாநிலத்துடன் சேர்க்கப்பட்டுவிட்ட தமிழகத்தின் வடக்கு எல்லையான திருத்தணி, திருப்பதி பகுதிகளைத் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடத்திய போராட்டங்கள் வரலாற்றில் இடம்பெற்று உள்ளன.
தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் தலைமையில் ‘வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு’  ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் செயலாளராக கே. விநாயம் தேர்ந்து எடுக்கப்பட்டார். இக்குழுவில் மங்கலங்கிழார், சித்தூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் சி.வி. சீனிவாசன், தணிகை என். சுப்பிரமணியம், தியாகராசன்,  சுப்பிரமணிய முதலியார், சித்தூர் வழக்கறிஞர் என். அரங்கநாத முதலியார், திருவாலங்காடு  ஊராட்சி மன்றத் தலைவர் திருமலைப் பிள்ளை, காஞ்சி ஜோதிடர் சடகோபாலாச்சாரியார், ந.அ. ரசீத் ஆகியோர் அங்கம் வகித்தனர். திருத்தணி, சித்தூர் நகரம், நகரி ஆகிய ஊர்களில் வடக்கு எல்லைப் பாதுகாப்பு மாநாடுகளை இக்குழு நடத்தியது. இம்மாநாடுகளில் ம.பொ.சி., செங்கல்வராயன், திருமதி சரசுவதி பாண்டுரங்கன், முன்னாள் அமைச்சர் குருபாதம் மற்றும் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
திருப்பதி மீது படையெடுப்பு
ம.பொ.சி. அவர்கள் கோ.மோ. ஜனார்தனம்,  சோமா. சுவாமிநாதன், ஆ. தாமோதரன். சி. வேங்கடசாமி, ஆ.வை. கிருஷ்ணமூர்த்தி,  அம்மையப்பன், விசுவநாதன், ஆ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி. சுப்பிரமணியம் ஆகியோருடன் ‘திருப்பதி மீது படையெடுப்பு’  என்ற போராட்டத்தையும், அதற்கான பிரச்சாரப் பணிகளையும் மேற்கொண்டார். மங்கலங்கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வடஎல்லைப்  பகுதிக்கு புகைவண்டி மூலமாக ம.பொ.சி. திருப்பதி வரை செல்லப் பயணப்பட்டார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் ம.பொ.சி.யின் போராட்டத்தை வரவேற்றனர்.
ம.பொ.சி.யின் திருப்பதி நுழைவைத் தடுக்கப் பலர்  முனைந்தும், கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரைக் கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு,  மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். இருப்பினும் ம.பொ.சி.  சற்றும் அதைப் பொருட்படுத்தாமல், ‘வேங்கடத்தை விட மாட்டோம்’ என்று ஒரு மணி நேரம் மேடையில் கர்ஜித்தார். போராட்டம் வேகம் அடைந்தது.
சித்தூர், திருப்பதி ஆந்திரத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்காக ம.பொ.சி. பெரும் கவலை அடைந்தார். திருப்பதி, சித்தூர், திருக்õளத்தி,  திருத்தணி, பல்லவநேரி, கங்குந்தி குப்பம் போன்ற பகுதிகளை நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினர்.
09.04.1954இல் இருந்து 24.4.1953 வரை கடை அடைப்பும், பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் மறியல், போராட்டம் நடைபெற்றது. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யைத் தாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டது. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றியதாகவும், இவரை ‘நெல்லைத் தமிழன்’ என்று ம.பொ.சி. பாராட்டியதாகவும், ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1953ஆம் ஆண்டு ஜுன் 3ஆம் தேதி  எல்லைத் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைரு செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனையை ம.பொ.சி. பெற்றார்.
சித்தூர் தினம்
வடக்கு எல்லையை மீட்கும் போராட்டத்திற்குத் தமிழக மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக 5.4.1953 அன்று தமிழகம் எங்கும்  ‘சித்தூர் தினம்’ கொண்டாடும்படி வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு  அறிக்கை வெளியிட்டது.  அதற்கு இணங்க, தமிழகத்தின் பல பகுதிகளில் ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பிரதமர் நேருவுக்கு  அனுப்பப்பட்டன. சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தாலுக்காக்களில் கடை அடைப்பும், வேலை நிறுத்தமும் நடத்தப்பட்டன.
12.5.1953 அன்று மீண்டும் ஒரு மறியல் போராட்டத்தை, வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு தொடங்கிற்று. மே 18ஆம் தேதியன்று புத்தூரில் ம.பொ.சி. அவர்கள் பேசவிருந்த ஒரு கூட்டத்தில் ஆந்திரர்கள் பெரும் கலவரம் செய்தார்கள். இதையொட்டி தடியடிப் பிரயோகம் செய்து கூட்டத்தைப் போலிஸ் கலைத்தது. ம.பொ.சி., கே. விநாயகம், மங்கலங்கிழார், தியாகராஜன், சித்தூர் சீனிவாசன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
நேரு அறிவிப்பு
ஜூன் 22ஆம் தேதி திருத்தணி தாலுக்கா முழுவதும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு தொடங்கிற்று. ஜூலை 4ஆம் தேதி பிரதமர் நேரு ஒரு முக்கிய அறிவிப்பை செய்தார். ‘சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பகுதிகள் குறித்து விசாரிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எல்லைக் கமிஷன்கள் அமைக்கப்படும்’ என அறிவித்தார். நேருவின் இந்த அறிவிப்பை ஏற்று வடக்குப் பாதுகாப்புக் குழு தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டது. இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கள் சிறை சென்றனர்.
ஆந்திரத் தலைவர்களான என். சஞ்சீவ ரெட்டி, பிரகாசம் ஆகியோர் சித்தூர் மாவட்டம் பற்றிய விசாரணை நடத்த எல்லைக் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டனர். சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர், திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திக் குப்பம் ஆகிய ஆறு தாலுக்காக்களைத் தமிழகத்தில் சேர்க்க வேண்டும் என்று வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு வற்புறுத்தியது.
சட்டமன்றத்தில் விவாதம்
ஜூலை 17,18 தேதிகளில் எல்லைக் கமிஷன் கோரிக்கை பற்றிய பல்வேறு திருத்தங்கள் மீது வாக்குவாதமும் வாக்குப் பதிவும் சட்டமன்றத்தில் நடந்தன.
‘சித்தூர் தமிழ்ப் பகுதிகளுக்கு எல்லைக் கமிஷன் அனுப்ப வேண்டும்’ என்று கே. விநாயகம் கொண்டு வந்த திருத்தத்தை  காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. உழைப்பாளர் கட்சியினர், காமன்வீல் கட்சியினர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழர்களும் ஒட்டுமொத்தமாக வாக்கு அளித்தனர்.
அச்சமயத்தில், திருத்தணி ஊராட்சி மன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றபோது, வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் 9 பேர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் திருத்தணி தமிழகத்துக்கே சொந்தமானது என்பது உறுதியானது.
காமராசர் – கோபால் ரெட்டி சந்திப்பு
நேரு அளித்த வாக்குறுதிக்கு இணங்க எல்லைக் கமிஷன் அமைக்கப் படவில்லை. இப்பிரச்சினையைப் பற்றித் தங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்வதாக தமிழக முதல் அமைச்சர் காமாரஜர், ஆந்திர முதல்வர் கோபால ரெட்டி ஆகியோர் அறிக்கை வெளியிட்டார்கள்.  அதன்படி சென்னையில் இரு முதல்வர்களும் சந்தித்துப் பேசினர்.
வடவேங்கடம் போன்று  திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஒரு காலத்தில்  வட ஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓசூர் தாலுக்காவை  கொடுத்தாலன்றி சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களை தமிழகத்திற்குத் தர இயலாது என்று ஆந்திரத் தூதுக்  குழு கூறியது. ஆனால், தமிழக முதல் அமைச்சர் காமராசர் இதை ஏற்க மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை முறிந்தது.
இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவ ரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக . ஆந்திர ச் சட்டமன்றங்களில் ஒரே நாளில்  மாநிலங்கள் அமைப்பும் எல்லைகளைக் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் இன்றைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் என பிரிக்கப்பட்டது.
தெற்கு மாவட்ட எல்லை போராட்டம்:
 
தமிழ்நாடு தெற்கே கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை, வடக்கே திருத்தணி என்ற எல்லைகள் அமைந்து இன்றோடு 60-ம் ஆண்டு உதயமாகிறது. நவம்பர் 1-1956அன்று இன்றைய எல்லைப்பகுதிகள் அமைந்த தமிழ்நாடாகும். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து, தமிழ்நாட்டோடு இணைந்ததும், நெல்லைமாவட்டம் செங்கோட்டைப் பகுதிகள் அமைய பல்வேறு தியாகங்கள்
செய்த தியாக சீலர்களை இன்றைக்கு நினைத்துப் பார்க்கவேண்டிய நாளாகும். குமரி மாவட்டம் இணைய பல போராட்டங்களை முன்னெடுத்த மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி, பி.சிதம்பரம் பிள்ளை, அப்பாவு, ஜீவா, நத்தானியல், குஞ்சன் நாடார், ரசாக், வேலாயுதப் பெருமாள், வி.தாஸ், ராமசுப்பையர் ஆகியோரை வரலாற்றில் மறக்கமுடியாது.தமிழ்நாடு வரைபடம்.1 jpg
 
மார்த்தாண்டம் புதுக்கடையில், 11-08-1954 அன்று, தென் குமரிப் பகுதிகளை கேரளாவிடமிருந்து தமிழகத்தோடு இணைக்க நடந்த போராட்டத்தில் 11 தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டில் மடிந்தனர். 61 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்த குமரி மாவட்டத் தளபதிகளுக்கு வீரவணக்கம்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அதை ஒட்டியப்பகுதிகளைச் சேர்க்க கரையாளர் அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, அவர் திருவனந்தபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவரையும் எண்ணிப்பார்க்கவேண்டும் இந்த சமயத்தில். திருத்தணி மற்றும் வடக்கு எல்லைகள் மீட்புப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய ம.பொ.சி., கே.வினாயகம், மங்கள கிழார், சித்தூர் சி.வி.சீனிவாசன், வழக்கறிஞர் என்.அரங்கநாத முதலியார், திருவாலங்காடு திருமலை பிள்ளை, நா.அ.ரசீத், சடகோபாச்சாரியார், செங்கல்வராயன், திருமதி. சரசுவதி பாண்டுரங்கன், குருபாதம் போன்ற பல தியாகசீலர்கள் திருப்பதி சித்தூர், புத்தூர், திருகாளத்தி, பல்லவநேரி போன்ற வடக்குப்பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டுமென்று எண்ணற்றப் போராட்டங்கள் நடத்தி சிறைசென்றனர். இவர்களின் போராட்டங்களின் விளைவாகத்தான் தமிழகத்தின் வடக்கு எல்லையாக திருத்தணி கிடைத்தது.
இவ்வளவு தியாகங்கள் செய்து பெற்ற மண் இணைந்து 60ஆண்டுகளைக் கொண்டாடுவதைத் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. வேறு யாருக்கும் நினைவும் வரவில்லை. இதே ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை, “தமிழ்நாடு 50” என்று கடந்த 1-11-2006ல் மையிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், பல்வேறு தமிழகத் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் கலந்துகொள்ள நான் தனிமனிதனாக விழா எடுத்தேன். அதற்குப்பிறகுதான் பலர் விழித்துக்கொண்டு விழா எடுத்தார்கள். ஆனந்தவிகடனில் அன்றைக்கு நான் எழுதிய சிறப்புக்கட்டுரைக்குப் பிறகுதான் இந்த செய்தியே அப்போது வெளியே தெரியவந்தது.
 
அந்த விழாவில், தியாக சீலர்களான ம.பொ.சி, நேசமணி, பி.எஸ்.மணி, கரையாளர், தமிழ்நாடு என்று பெயர் வைக்க தன்னையே வருத்திக்கொண்டு மாண்ட சங்கரலிங்கனார் போன்றோருடைய படங்களும் திறந்து வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அமைந்த வரலாற்றை, “தமிழ்நாடு 50” என்ற நூலையும், நான் எழுதி அந்த விழாவில் வெளியிட்டேன்.
 
இப்படியான தமிழக வரலாற்றின் முக்கியமான நிகழ்வு யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையான விடயம். மானமுள்ள தமிழர்கள் இதை ஒருகணம் நினைத்துப்பாருங்கள். ஏற்கனவே கேரளாவில் நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு பகுதியில் சிலகிராமங்கள், கர்நாடகாவில் மாண்டியா, கொள்ளேகால், கோலார், ஆந்திரத்தில் திருப்பதி, சித்தூர், காளகத்தி போன்றவைகளை இழந்துள்ளோம். இழப்பும் வேதனைக்குரியதுதான்.
குறைந்தபட்சம் தமிழ்நாடு அமைந்த 60 ஆண்டு நிறைவில் சாதித்தவைகளையும், சாதிக்கத் தவறியவைகளைப் பற்றிய நிகழ்வுகளை நடத்தக்கூடத் தவறிவிட்டோம். பிறகு எப்படி காவிரி, முல்லைப்பெரியார், கச்சத்தீவு, சேதுக்கால்வாய், நதிநீர் சிக்கல்கள் என்ற தமிழகத்தின் பல உரிமைகளை மீட்டெடுக்கப் போகின்றோம். நம்முடைய அடையாளங்களைப் பற்றிப் பேசவே தயாரில்லாத நேரத்தில் பம்மாத்து வேலைகளைப் பார்த்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வருகிறோம்.
 
தினமும் அவருக்குத் தலைவலி, இவருக்குக் கால்வலி என்று விவாதிக்கும் தொலைக்காட்சிகள் கூட, தமிழ் நாடு 60-ஐக் கண்டுகொள்ளவில்லை. பத்திரிகைகளிலும் இதைக்குறித்தான ஈர்க்கக்கூடிய அளவில் செய்திகளும் வரவில்லை. இதேப்போல ஐ.நா. மன்றம் அமைந்த 70வது ஆண்டு (October 24th 1945. ) நிறைவை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தேன்.
 
நான் சொன்ன இந்தக் கருத்துகளைப் பரிசீலனை செய்யுங்கள். நியாயங்கள் இருந்தால் தமிழக மக்களே ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். இப்படி நமது உரிமைகளையும், நிகழ்வுகளையும் எண்ணிப்பார்க்காமல் இருந்தால் நாம் எப்படி விழிப்புணர்வு பெறுவோம்.
 
அறுபதாண்டு நிறைவு விழாவில், இதுகுறித்து உரிய ஆய்வுகளோடு கட்டுரைகளடங்கிய நூலும், ஆவணப்படமும் குசேலன் பானியில் வெளியிட்டு ஒரு கருத்தரங்கத்தை அடுத்த ஆண்டு 2016ல் இதே நாளில் நடத்த திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.  பொதிகை- பொருநை-கரிசல் சார்பில் இந்த வரலாற்று ஆவணங்கள் வெளியிடப்படும்.
 மீள் பதிவு:அகழி(www.akazhi.com)
 
எழுத்து:வழக்கறிஞர்  கே.எஸ்.இராதாகிருஷ்ணன் .

உட்பொதிக்கும் படங்கள் 1

உட்பொதிக்கும் படங்கள் 2

சென்னை சில்க்ஸ் தமிழர் நிறுவனம் வணிகம்


aathi1956 aathi1956@gmail.com

பிப். 22
பெறுநர்: எனக்கு

தமிழ்க் கதிர்
தி சென்னை சில்க்ச் தமிழர் கடையா ??
1 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
தமிழ்க் கதிர்
மேகநாதன் முனுசாமி
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 51 நிமிடங்களுக்கு முன்பு

மேகநாதன் முனுசாமி
ஆமாம்

தமிழ்க் கதிர்
தமிழர் கடையில் சென்னையில் தெலுங்கில் எழுதுவதின் நோக்கம்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 49 நிமிடங்களுக்கு முன்பு

தமிழ்க் கதிர்
புதிய கடை குரோம்பேட்டை சென்னை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 49 நிமிடங்களுக்கு முன்பு

மேகநாதன் முனுசாமி
அதுதான் வணிக அரசியல் யாரால் பலன் அடைகிறோமோ அவர்கள் மொழி அரசியல் இருக்கும். மார்வாடிகள் வந்தபிறகு ஜி என்பதும் மார்வாடி பஆசை பேசுவதும் நவீனத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. ஆக மொத்தம் மண்ணின் மொழி மாற்றானால் மாற்றமடையப்போகி
றது.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 39 நிமிடங்களுக்கு முன்பு

கோ. கார்த்திக் பாரதி
கோவையில் மலையாளத்திலும் எழுதப்பட்டிருக்கும் இது வணிக நோக்கம்

கள்வர் வேறு கள்ளர் வேறு சோழர் காட்டுப்படை பாவாணர் தேவர்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 22
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
அழகன் பத்தர் மற்றும் 5 பேருடன் இருக்கிறார்.
# அறிவதிகாரம் ...
இலக்கனம் வழி # கள்ளர் நிலை
# அறிந்து கொள்வோம்....
குறிஞ்சி,முல்லை,
பாலை ஆகிய முதல் மூன்று தினைகளில் அகப்பொருள் தினை மாந்தர் பெயர் #கள்ளர் இல்லை எனவே,
சங்கப்பாடல்கள் ஆறளை கள்வர்,கள்வர் என எத்தனை எத்தனை 100 பாடல்கள்
# அகப்பொருளில் வரினும் அது இன்றைய கள்ளர் சாதியினரை குறிக்காது..
மாறாக குறிஞ்சி,முல்லை,பாலை மாந்தர்களை மட்டுமே குறிக்கும்...
# புறப்பொருளில் அதாவது வேந்தர் அரசு உருவான பிற்காலத்து போர் நடவடிக்கைகளில் காட்டுப்படை தொடர்பான பாடல் எதும் கள்வர்,கள்ளர் என கூறினால் அது இன்றைய கள்ளர் சாதியினரை குறிக்கலாம்....
கால வேறுபாட்டை குறிப்பிடப்படும் சூழல் அதாவது வேந்தர் அரசிலா,பண்டைய வாழ்வியல் நிலையிலா என பிரித்தரியனும்...
மேலும்,
1.கள்ளர் தம்மையும் பாண்டியர் என நிருவுவேன் என்பதும்,
2. # குறிஞ்சி வேடர், # பாலை வேட்டுவர், # முல்லை ஆயர் பழங்குடிகளுக்கெல்லாம் மூத்த
# குறிஞ்சி_கள்ளன் என நேரடியாக சொல்வதும்,
3.வேடர்,வேட்டுவ பழங்குடி மற்றும் பாண்டியர் கால காரள மள்ளர்(பள்ளர்),
வெண்களமர் வெள்ளாளர்,
குரவர்(கம்மாளர்),
# வள்ளுவக்கணியர் ,
# பறையர்,பறம்பர்,சாக்கையர்,
என எந்த பாண்டியர் குடியை விட மூத்தகுடி #கள்ளர் என்பதும்,
தவறு தவறு தவறு தவறாகும்..
இது விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் உலகமாகா # நகைச்சுவை பேச்சாகும்...
பாண்டிய பழங் # காராள மள்ளர்(உழவு) குடியிலிருந்து சோழர் காலத்தில் வேந்தர் குலமாக,உழவனாக தோன்றிய பிற்கால பள்ளியர் போல,
பழங்கால பழங்குடி குறிஞ்சி # வேடர்
,பாலை # வேட்டுவர், பாண்டிய # மறவர் குடியிலிருந்து சோழர் காலத்தில் உறுவான காட்டுப்படை வகுப்பாரே இன்றை #கள்ளர் என அறிக..
எனவே பாலை கள்வர் எனும் பெயர் ஒற்றுமையை வைத்து இன்றைய கள்ளர் தன்னை மூத்தகுடி,பழங்குடி என சொல்லி என்னை அவ்வப்போது சிரிக்க வைக்காதீர்....
(மேலும் பதிவின் படம் எதுக்குன்னா,பாண்டியர் காலத்தில் தோற்றமே பெறாத கள்ளர் சாதியினர் எங்கனம் பாண்டியர் என்பீர்..?????? ஒரே காமடி உங்களோட, கொஞ்சமாச்சும் தமிழ் இலக்கனங்களை படிங்கய்யா சோழ வேந்தர் கால காட்டுப்படை கள்ளர்களே)
# இவன்,
நான்ங்காம் தமிழ்சங்கம் கண்ட பாண்டித்துறை தேவர்,
ஐந்தாம் தமிழ்சங்கம் கண்ட உமாமகேஸ்வரன் பிள்ளை,
ஆகியோரின் பேரனும்,
,
முத்துசாமிதேவர் பேரனும் தனித்தமிழ் ஆசானுமான ஐயன் பாவாணரின் மாணவன்,
நான்...
ந.சுரேசு வெட்டு மாவலி # அகம்படி மல்லன்,
@# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை .
# சோழநாடு ...
4 நிமிடங்கள் · Facebook for Android ·
பொது
சேமி

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
மருத நிலத்து காராள மள்ளர் குடியே இங்க பாருங்க கூத்தை,சோழர் கால கள்ளர் பாண்டியராம்...
ஹிஹிஹி...
Perumal Pandiyan
Bala Thangaraj
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 நிமிடங்களுக்கு முன்பு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
பாண்டியர் காலத்து வள்ளுவக்கணியன் தம்பி உருத்திர பெருந்துடி புலையன் சாம்பவன் அவர்களே,
உங்களுக்கெல்லாம் பிறகு வேடர்,வேட்டுவ,மறவர் எனும் காட்டுப்படயைிலிருந்து உறுவான சோழர் கால பிற்கால குடியே கள்ளர்...
இதை எல்லாம் புரிந்து வரலாறை பேசுங்கய்யா...
அதை விட்டுட்டு பாலையில ஆறளைத்தல் செய்தது எயினர்,மறவர்..
அந்த பழியை எல்லாம் கள்ளர் மேல போடக்கூடாது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சற்றுமுன்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும்

சாகர்மாலா பற்றி தொடர் 9 10

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்பிப். 22
பெறுநர்: எனக்கு
வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Ingersol Selvaraj மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-9
நாகை மாவட்டம்-சீர்காழியில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் அமைக்கபடவுள்ள புதிய துறைமுகத்திற்கான "தொழில்நுட்ப மற்றும் பொருளியல் சாத்தியக் கூறு ஆய்வறிக்கை" (Techno Economic Feasability Report-2016) ஆகத்தில் வெளியிடப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையின் அறிமுகப் பகுதியில், தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அமையவுள்ள அனல்மின் நிலையங்களுக்கு கொண்டுவரும் நோக்கில் சீர்காழியில் இந்த துறைமுகம் அமைக்க போவதாக தெரிவிக்கபடுகிறது. சென்னை எண்ணூரில் நிலக்கரியை கையாள சட்டச் சிக்கல்கள் உள்ளதால் அங்கு இருந்து தள்ளி 280 கிலோ மீட்டர் தொலைவில் புதுச்சேரி காரைக்காலில் உள்ள "மார்க்" தனியார் துறைமுத்தில் நிலக்கரி கையாளபடும் என்றும். அதற்கிடையில் ஒரு புதிய துறைமுகமாக சீர்காழி துறைமுகம் உருவாக்கபடுகிறத
ு என்று குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்து என்ன சின்ன துறைமுகங்கள் யாரால் நடத்தபட உள்ளது என்பதை நான் சொல்லல இந்திய அரசின் அரசிதழில் வெளியாகி உள்ளது. அந்த பட்டியல் கீழ்கண்டவாறு
1.திருக்குவளை துறைமுகம்-டிரைட
ம் என்ற வடநாட்டு தனியார் நாகையில் அமைக்கவுள்ள துறைமுகம் (2008 ஏப்ரல் மாதம் வெளியான அறிக்கை).
2.வனகிரி துறைமுகம்-என்.எஸ்.எல் என்ற ஆந்திர தனியார் நாகையில் அமைக்கவுள்ள துறைமுகம் (2009 சூலை மாதம் வெளியான அறிக்கை).
3.காவிரி துறைமுகம்-பி. இ. எல் என்ற பிரித்தானிய தனியார் நிறுவனம் அமைக்கவுள்ள துறைமுகம் (2010 சனவரியில் வெளியான அறிக்கை).
4.பரங்கிபேட்டை துறைமுகம்-ஐ. எல். எப். எஸ் என்ற வடநாட்டு தனியார் நிறுவனம் கடலூரில் அமைக்கவுள்ள துறைமுகம் (2010 மே மாதம் வெளியான அறிக்கை).
5.தரங்கம்பாடி துறைமுகம்-செட்ட
நாடு மின்சாரம் என்ற தனியார் நிறுவனம் நாகையில் அமைக்கவுள்ள துறைமுகம் (2012 சனவரி மாதம் வெளியான அறிக்கை).
6.பனையூர்-செய்யூர் துறைமுகம் - கடலோர தமிழ்நாடு மின்சார நிறுவனம் (Coastal Tamil Nadu Power Limited) விழுப்புரம் மரக்காணம் அருகே அமைக்கவுள்ளது.
இப்படியாக இருக்க கடலோர சரக்கு போக்குவரத்துக்காக (BIMSTEC Coastal Shipment Agreement) ஒன்றை உருவாக்கி வருகின்றனர். கடந்த 2017 நவம்பர் 27,28ல் புதுடில்லியில் கூடிய பிம்ஸ்டெக் செயற்பாட்டு குழு இந்த ஒப்பந்ததை பற்றி விவாதித்துள்ளனர்.
இது நடைமுறைபடுத்தபட்டால் கடலோரத்தில் 20 கடல் மைலுக்கு நடைபெறும். அதாவது, மீனவர்கள் 20 கடல் மைலுக்கு அப்பால் சென்று தான் பிடிபார்களாம் அதனால் அந்த இடைவேளையில் இவர்கள் சரக்கு போக்குவரத்து நடத்துவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
இளைஞர்களே நன்கு சிந்திக்கவும் இப்படி பெரிய பெரிய கப்பல்கள் போக்குவரத்து நடந்தால் மீன்கள் உற்பத்தி கம்மியாவதை விட. கடலோரமாக நாட்டுபடகு வைத்து மீன் பிடிப்பவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விகுறியாகும்.
இரண்டாவது 2016 பிப்பரவரியில் தமிழ்நாடு சட்டபேரவையில், "தமிழ்நாடு மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம்-2016" (Tamil Nadu Marine Fishing Regulation (amendment) Act, 2016) என்ற சட்டத் திருத்ததை அப்போதை மீன்வளத்துறை அமைச்சரான கே. ஏ. செயபால் முன்மொழிந்தார். பாரம்பரிய நாட்டுபடகுகள் இனிமேல் கரையில் மீன் பிடிக்க கூடாது 5.5 கிலோ மீட்டர் தள்ளி சென்று தான் மீன்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் படகுகள் தயாரிக்க தேவையான பொருட்கள், வலைகள் பெருந்தொழில் நிறுவனங்களிடையே தான் வாங்க வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.
இந்த சட்டம் மீனவர்களை வளர்க்குமா இல்ல மீன் தொழிலிற்கு ஆபத்து உண்டாக்குமா என்பதை மக்களிடமே விட்டுவிடுகிறேன்.
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 8 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Ingersol Selvaraj மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-10
புதுச்சேரி கடலோர பகுதியில் அமைந்திருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சின்ன முதலியார் சாவடியில் வசிக்கும் மீனவர் ராஜாமணி, கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை சொந்தமான வீடு வைத்திருந்தார். ஆனால், தற்போது வேறு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இதற்கு காரணம் கடல் அரிப்பு ஆகையால் அவரால் மீன்பிடி தொழிலுக்கும் சரியாக போக முடிவதில்லை.
கடந்த 2010 டிசம்பரில் தந்திராயன் குப்பத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பால் அடித்து செல்லபட்ட பல வீடுகளில் ஒரு வீடு தான் ராஜாமணி அவர்களின் வீடு. இவரை போல தந்திராயன் குப்பம், சின்ன முதலியார்சாவடி, கோட்டக் குப்பம், சோதனை குப்பம், வைத்திக் குப்பம், குறிச்சிக் குப்பம் என பல பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்பது குறிபிடதக்கது.
கிழக்கு கடற்கரை சாலை காலாபட்டியிலிருந்து புதுச்சேரி வரை 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு இப்பாதிப்புகள் தற்போது உணரபடுகிறது.
சென்னை- திருவொற்றியூர்,
எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடல் அரிப்பால் மணல் மூட்டைகளை வைத்து மக்களே தடுத்து இருப்பதை அனைவரும் அறிந்தததே. மேலும், பட்டினம்பாக்கம், திருவான்மியூர், கோவளம் பகுதிகளில் வாழும் மீனவர்களும் கடும் அவதிக்குள்ளாகி இருப்பது குறிபிடதக்கது.
தூத்துகுடியின் தெற்கு பகுதியில் கட்டபட்ட துறைமுகத்தால் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வேலப்பட்டி, தருவாய்குளம் உள்ள இடங்களில் கடல் அரிப்பு அதிமாகி இருக்கிறது. திரேச்புரம் அருகே உள்ள விவேகானந்தர் நகர் உள்ள இடங்களில் கடல் கொந்தளிப்பால் 60 மேற்பட்ட வீடுகள் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது. வேம்பார் எனும் கிராமத்தில் 12 ஆண்டுகள் முன்பு 20 மீட்டர் தள்ளி இருந்த கடல் தற்போது 10 மீட்டர் தொலைவிற்கு வந்துவிட்டதை கவனிக்கவும்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வந்த லைலா புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடல் அரிப்பால் 50 முதல் 100 மீட்டர் அளவுக்கு கடல் வெளிவந்துள்ளது. இதை இன்றளவும் எந்த கவனிப்பும் இல்லாத நிலையில் அந்த மீனவர்கள் 8 கிலோ மீட்டர் தொலைவில் தங்கள் படகுகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
சிதம்பரம் பிச்சாவரத்தை சுற்றி அமைந்துள்ள சின்ன வாய்க்கால், எம். ஜி. ஆர் திட்டு, கண்ணகி நகர், முடசல் ஒடை, பீலுமேடு போன்ற இடங்களும் கடல் அரிப்பால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
நாகை மாவட்டம் வானகிரி கிராம மக்கள் கடல் அரிப்பின் காரணமாக தங்கள் படகுகளை வேறு வழியில்லாமல் கடலிலே நிறுத்தும் நிலை ஏறபட்டுள்ளது.
நெல்லை மாவட்டதின் திசையன்விளை அருகில் உள்ள உவரியில் கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கபட்டுள்ளனர். மின்கம்பங்கள், தார் சாலைகள், வீடுகளும் கடல் அரிப்பால் பாதிக்கபடுகிறது என்று அந்த பகுதி மக்கள் குறிபிடுகின்றனர்.
கன்னியாகுமரியில் மேல மணக்குடியில் கட்டபட்டிருந்த மீனவர் ஒய்வறை 12/5/2007ல் இடிந்து விழுந்தது. தேங்காய்ப்பட்டினத்தில் கடலோரத்தில் இருந்த தென்னை மரங்கள் வேரோடு கடலில் சாய்ந்தது. இராசாக்காமங்கலம் துறை, பள்ளம், அன்னை நகர், தூத்தூரில் இருந்து நீரோடி செல்லும் பாதை முற்றிலும் கடலால் அரிக்கபட்டுவிட்டது. இது இல்லாம வல்லவிளையிலும் கடல் அரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. 1000 ஆண்டு பழமையான பகவதி அம்மன் கோவிலும் கடல் அரிப்பால் பாதிக்கபடுள்ளது.
இப்படி இயற்கை கடல் அரிப்புகளை வேகபடுத்துவதில் அரசாங்கம் கொண்டு வரும் இந்த சாகர்மாலாவும் வருகாலத்தில் பெரும்பங்கு வகிக்கும். இயற்கையை அழித்தால் அது எதிர்வினையை கொடுக்க தான் செய்யும் அதுவே இயற்கையின் விதி.
ஒரு திட்டம் என்பது முடிந்த அளவு இயற்கையுடன் இணைந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதாக இருக்க வேண்டும் அப்போ தான் நாட்டில் உற்பத்தி அதிகமாகும் உற்பத்தி அதிகமானால் பொருளாதாரம் உயரும். அதை விட்டுட்டு ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை அப்புறபடுத்தி அவர்களின் வாழ்வையே அழித்து கொண்டு வரும் திட்டம் எப்படி வளர்ச்சி திட்டமாகும்???
வளர்ச்சி வேலைவாய்ப்பு என்ற இரண்டு சொல்லில் மயங்குவதற்கு முன்பு சற்று ஆளமாக சிந்திக்கவும் ஏன் மீன் பிடி தொழிலும் தான் வேலைவாய்ப்பு உள்ளது அதை உயர்த்தினால் ஆண்டுக்கு 802 கோடி வருமானம் வரும் மீன்வளத்தில் இருந்து மேலும் அதிகரிக்கலாமே. அது மக்களின் வாழ்வையும் உயர்த்தும் உணவு தேவையையும் தீர்க்கும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் தானே???
அப்படி இல்லனா கடல் மூலமாக மின்சாரம் தயாரிக்கலாமே (Tidal wave Energy) அது நூறு சதவிதம் இயற்கையுடன் இணைந்தது தானே மற்ற நாடுகள் ளா இதுல வெற்றியும் கண்டுருக்காங்களே அதை பண்ணலாமே??
ஆக, சாகர்மாலா என்ற பெயர் இயற்கை மொத்ததையும் அழித்து கடல் மக்களை காவு வாங்க இவர்கள் தனியாரிடம் குத்தகைக்கு விடும் திட்டமாக தான் அது இருக்கிறது. கன்னியாகுமரி மக்களே படிப்பறிவில் முன்னிலையில் இருக்கும் நீங்க பொறுமையாக ஆய்வு செய்யுங்கள் நான் சொல்வதையாவது ஆய்வு பண்ணுங்க இவன் சொல்வது சரியா என்று ஆய்வு பண்ணுங்க.
கன்னியாகுமரி என்றாலே இயற்கை பேரழகு இன்றும் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் கன்னியாகுமரி தேடி வரகாரணம் அதுவே என்பதையும் மறந்துவிடாதீங்க, பூமியானது மனிதர்களும் பொருளாதாரமும் வளர்ச்சி பெற மட்டுமள்ள அனைத்து உயிர்களும் வாழவே தான் உள்ளது என்பதை சொல்லிக் கொண்டு பதிவுகளை முடிகிறேன்.
இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது அதை என் அறிவார்ந்த இளைஞர்கள் ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் கையில் உங்கள் இயற்கை வளம் மிகுந்த குமரி என்று சொல்லி இத்தோடு பதிவுகளை முடித்து கொள்கிறேன்.
பகுதி 9 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
நன்றி
நம் வரும் தலைமுறைக்கு நல்ல காற்று நீர் உணவை விட்டு செல்வோமாக.
வாழ்க வளமுடன்
வாழ்வோம் இயற்கையுடன்
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari
# savetamilnadu
1 மணி நேரம்

சாகர்மாலா தொடர் பகுதி 8

aathi1956 aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Saravanan Nvi மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-8
ஆபத்தான பெட்ரோகெமிக்கல் மண்டலத் திட்டங்கள் மட்டுமின்றி, அதுபோன்ற பல தொழில் மண்டலங்களை ஒட்டியே தமிழ் நாட்டின் இனயம் மற்றும் சீர்காழியில் இரண்டு பெரிய துறைமுகங்களை "சாகர்மாலா" கீழ் ஏற்படுத்த உள்ளன.
இனயம் துறைமுகம்:
சுமார் 1076 கிலோ மீட்டர் நீளமான தமிழ்நாட்டு கடலோரப் பகுதியில் வெறும் 68 கிலோ மீட்டர் மட்டுமே கன்னியாக்குமரியில் இருக்கிறது. அது இல்லாமல் கன்னியாக்குமரி மக்களில் 20% மக்கள் கடலை நம்பி தான் உள்ளனர். அதற்காகவே தரம் உயர்த்தபட்ட மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக குளச்சல் மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் குளச்சல் மேற்கு பகுதியிலுள்ள இனயத்தில் 27500 கோடி செலவில் அனைத்துல சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் (International Container Transhipment Terminal-ICTT) அமைக்கவுள்ளதாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இதை பார்த்த மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள் அருகிலே 35 கிலோ மீட்டர் தொலைவில் விழிஞ்சத்தில் இதே சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் உள்ளதே பின் எதற்கு இங்கே. அது இல்லாம அந்த துறைமுகமும் நட்டத்தில் தான் போய்கொண்டு இருக்கு. அது இல்லாம அதில் ஆரம்பத்தில் 13% பங்கு வகித்த ஆதானி தற்போது 60 ஆண்டுகள் வரை நிர்வகிக்க சலுகை நரேந்திர மோடி ஐயா கொடுத்துள்ளதை நன்கு கவனிக்கவும் மக்களே.
இப்படியாக அத்திட்டத்திற்கு இனயம், புத்தன்துறை, ராமந்துறை, மூல்லூர்துறை, அலூ நகர், மேல் மிடாலம், கீழ் மிடாலம் உள்ளிட்ட ஏழு கிரமங்களை சேர்த்து சுமார் 50000 மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நேரிட்டிற்கும். அது போக இரயில் பாதை, நான்கு வழி பாதை என அதற்கு 57000 மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் சூழல் உருவாகி இருக்கும்.
ஆனால், மக்கள் தங்கள் ஒற்றுமையை நிலை நாட்டி அங்கே இருந்து அத்திட்டத்தையே விரட்ட அது அப்படியே கீழமணக்குடிக்கு மாற்றபட்டது.
ஏற்கனவே, கடலின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் எழுப்பட்ட பல்வேறு துறைமுகங்கள் காரணமாக எண்ணூர் தொடங்கி புதுச்சேரி-கடலூர்-நாகபட்டினம்- தூத்துக்குடி என கடலோர கிரமங்கள் கடல் அரிப்பால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில்.
இவர்கள் சாகர்மாலா திட்டதிற்காக 800ஏக்கர் கடல் மீது மணல் கொட்ட உள்ளார்களாம். இயற்கையை சீண்ட சீண்ட அது பேராபத்தை திருப்பி பரிசாக கொடுக்கும் என்பதை மக்கள் நியாபகத்தில் வைத்து கொள்ளவும்.
இப்போ கீழமணக்குடியில் இத்திட்டத்தால் மேற்கு கடற்கரை கிராமங்களான மணக்குடி, சொத்தவிளை, பள்ளம், புத்தன்துறை, சங்கதுறை, பொழிகரை, இராசாக்காமங்கலம் துறை, ஆயிரம்கால் பொழிமுகம், அழிக்கால், பிள்ளைதோப்பு போன்ற பகுதி கடல் அரிப்பாலும் கடல்நீர் விவசாய நிலங்களில் புகும் அபாயங்களும் ஏற்படும் என்பதை கவனிக்கவும் மக்களே.
சும்மாவே ஒரு ஆண்டிற்கு கடல் அரிப்பானது புவிவெப்பமயமாதலால் இயற்கையாகவே உண்டாகிறது அது 1.6 மீட்டர் அளவே. ஆனால், இத்திட்டம் வந்தால் கடல் அரிப்பு சுமார் 20.8 மீட்டராக உயரும் என்பது ஆய்வு கூறுகிறது.
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 7இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

சாகர்மாலா பற்றி தொடர் 6 7

aathi1956 aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு
வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Ingersol Selvaraj மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-6
இந்திய அமைச்சரவை கூட்டம் 2015 மார்ச்சில் (25/3/2015), சாகர்மாலா திட்டத்தின் கீழ் 12 துறைமுகங்களை உருவாக்கவும், 1208 தீவுகளை அரசாங்கத்திற்கு வழங்கியது. இதற்காக சுமார் 1000 கோடி ருபாய் முதலீட்டில் புதிய நிறுவனம் அமைக்கபட்டது.
அந்த நிறுவனம் பெயர் "சாகர்மாலா வளர்ச்சி நிறுவனம்" (Sagarmala Developement Company) என்ற புதிய நிறுவனத்தை 2016 சூலையில் இந்திய அரசு தொடங்கியது. அதாவது 12 துறைமுகம் மட்டுமின்றி 1208 தீவுகளும் தனியாரிடம் போகப் போகிறது.
இது இல்லாம கனிம வளங்களை எடுத்து செல்ல இவர்களுக்கு என்று தனி இரயில் பாதைகளை இணைக்க ஒரு புதிய நிறுவனத்தை இந்திய அரசு 10/7/2015 அன்று தொடங்கியது. அந்த நிறுவனத்தின் பெயர் "இந்திய துறைமுகத் தொடர்வண்டி கழகம்" (Indian Port Rail Corporation Limited). முதல்கட்டமாக 26 துறைமுகங்களை இணைக்கபடவுள்ளன. இந்தியாவை சுற்றியுள்ள 1208 தீவுகளையும் இணைக்க போகிறார்.
25 திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டின் தூத்துகுடியில் உள்ள வ. உ. சி துறைமுகம் வழியே சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் தொடர்வண்டி பாதை திட்டம், தூத்துகுடி அருகில் உள்ள அரே தீவுக்கு 70.12 கோடி ரூபாயில் தொடர்வண்டி அமைக்கும் திட்டம், 150 கோடி ரூபாய் செலவில் சென்னை எண்ணூர் காமராசர் துறைமுகத்தில் இரட்டை இரயில் பாதை திட்டம் என பல திட்டங்கள் இணைக்கபட்டுள்ளன.
சாகர்மாலா நிறுவனத்தின் கீழ் 2035 ஆம் ஆண்டு வரை சுமார் 8 லட்சத்தி 40 ஆயிரம் கோடி செலவில் 415 திட்டங்களை நிறைவேற்ற போகிறது. இது நம் கடற்கரை முழுவதுமே தனியார்மயம் ஆவதை குறிக்கிறதாகும்.
என்னப்பா தனியார் தனியார் னு சொல்ற அரசாங்கம் தானப்பா நடத்துது இதுல எப்படி தனியார் வருவாங்க என்ற கேள்வி அறிவார்ந்தவர்கள் மனதில் தோன்றுவது நியாயமே. அது எப்படினு கொஞ்சம் சுருக்கமாக பார்த்துரலாம்
இந்த திட்டங்கள் எல்லாமே பன்னாட்டு-வட நாட்டு பெருமுதலாளிகளின் கூட்டுப் பங்களிப்போடு நடப்பவை (Public-Private Partnership). அதாவது, மக்களிடம் இருந்து பெறப்படும் வரிபணத்தில் இருந்து அரசின் முதலீடாக திட்டங்களை தொடங்குவார்கள். இலபகரமான திட்டமெனில் அதில் ஆதானி, அம்பானி போன்ற தனியார் நஅறுவனங்கள் ஒரு தொகையை (Share) செலுத்தி இணைவார்கள். இலாபகரமாக இருந்து மெல்ல மெல்ல மொத்தமும் தனியாரின் கைக்குள் போகும் உதரணத்திற்கு எண்ணூர் துறைமுகங்களை பார்க்கலாம். நட்டமானால் இழுத்து மூடிட்டு வெளிநாட்டுக்கு ஒடிவிடுவார்கள்.
எது எப்படியோ இலாபம் அனைத்தும் தனியார்களுக்கு தான் என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 5 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Saravanan Nvi மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-7
இந்தியாவின் ஒன்பது கடலோர மாநிலங்களில் மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ் நாடு. அதனால் தான் தமிழக மக்கள் அதிகம் விழிப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சாகர்மாலா திட்டத்தின்படி தமிழகத்தின் கடற்கரையோர இடத்தை ஆறு கடலொர பொருளியல் மண்டலங்களாக பிரிக்கின்றனர்.
1.கன்னியாகுமரி-திருநெல்வேலி-தூத்துகுடி மாவட்டங்களை மையமாக கொண்டு ஒரு மண்டலம்.
2.தூத்துக்குடியை துறைமுகத்தை தலைமையாக கொண்டு "மன்னார் கடலோர பொருளியல் மண்டலம்".
3.கடலூர்-பெரம்பலூர்-அரியலூர்-த
ிருச்சி-தஞ்சை-திருவாரூர்-நாகபட
்டினம் மாவட்டங்களை மையமாக கொண்டு ஒரு மண்டலம்.
4.கடலூர் துறைமுகத்தை மையமாக கொண்டு "பூம்புகார் கடலோர பொருளியல் மண்டலம்".
5.திருவள்ளூர்-சென்னை-காஞ்சிபுர
ம் மாவட்டங்களை மையமாக கொண்டு ஒரு மண்டலம்.
6.சென்னை எண்ணூர் துறைமுகத்தை மையமாக கொண்டும் "விசாகபட்டினம் - சென்னை தொழிற்சாலை பாதை" ( Visakapattinam Chennai Industrial Corrider- SOUTH).
இதில் பூம்புகார் மண்டலம் ஆற்றல் தொழில் குவிமையமாக (Energy Clusters) அறிவிக்கபட்டுள்ளது. இங்கே தான் ஏற்கனவே செயலில் உள்ள நெய்வேலி அனல் மின் நிலையம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
இதுபோக நாகை மாவட்டத்தில் பல புதிய அனல் மின் நிலையங்களை அமைக்கவுள்ளனர். இதுபோக 40க்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்கள் தமிழ்நாடெங்கும் கட்டபடவுள்ளன.
அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் விசகாற்று, கழிவுகள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உதாரணத்திற்கு தூத்துக்குடி, எண்ணூர் மக்கள் படும் துயரம் கண் முன்னே உள்ளது.
இதைவிட என்ன சிறப்புனா 2009ல் அனல் மின் நிலையத்தை ஆராய்ந்த மாசுகட்டுபாடு வாரியம் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் இங்கே அனைத்து அனல் மின் நிலையங்களும் சுற்றுசூழலை பாதிக்கும் வரம்பை தாண்டியே செயல்படுகிறது என்று வெளிபடையாக சொல்லியதை மக்கள் நினைவில் கொள்ளுங்கள்.
இது இப்படி இருக்க அடுத்தது கடலூர்-நாகை மாவட்டங்களில் சுமார் 45 கிராமங்களை (23000 ஹொக்டர்) எரிம வேதியல் முதலீட்டு மண்டலமாக (Petroleum Chemicals and Petrochemicals Investment Region-PCIR) கடந்த 2017 சூலையில் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலூர், புவனகிரி, சிதம்பரம் ஆகிய வட்டங்கள் சேர்த்து 25 கிராமங்களும் நாகை மாவட்டத்தின் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 20 கிராமங்களும் உள்ளன. இதில் பெரும்பாலும் கடலோர கடற்கரை கிராமங்கள் என்பது குறிபிடதக்கது.
இது இல்லாம வேதி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை, பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலையும் நிறுவபடவுள்ளன. ஏன்கனவே 2009ல் இருந்து கடலூரில் ஆந்திராவை சேர்ந்த நாகார்சுனா குழுமத்தின் நாகர்சுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பல்லாயிரம் கோடி முதலீட்டில் அமைக்கபட்டு வருகின்றது. இப்போ யோசிங்க மக்களே அரசாங்கம் யாருக்கு சாதகமாக இந்த இடத்தை (கடலூர்-நாகை) எரிம வேதியல் மண்டலமாக அறிவித்துள்ளது.
தனியார்களுக்காகவா!!! இல்ல மக்களுக்காகவா!!!!!!
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 6 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

கள்வர் கள்ளர் வேறுபாடு களவு திருவது ஆகாது வம்பலர் எயினர் மறவர் பொருள் வழிப்பறி செய்ததில்லை

aathi1956 aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு

Muniraj Vanathirayar
ஆண்டை-அடிமை என நான் கூறமுற்படவில்லை. களவு என்பதன் அக்கால வரையறை என்னவென்பதை அறிவீரா?
•சங்க இலக்கியங்களில் ஆறலை கள்வர் என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளதா?
•சங்க இலக்கியங்களில் எயினர்கள் வழிப்பறி பற்றிய பதிவுகள் உண்டா?
•ஆறலை கள்வர்களால் கொல்லப்பட்ட வழிப்போக்கருக்கு நினைவுக்கற்கள் நடப்பட்டனவா?
•வழிப்போவோர் வணிக சாத்துகளை கொள்ளையடித்தனரா?
•பிழைப்பதற்கு வழியின்றி வழிப்பறி செய்தனரா?
இந்த வினாக்களுக்கு சங்க இலக்கியத்தில் விடை தேடுவோம்.
திருத்தப்பட்டது · 3 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
ஆறலைகள்வர் என்ற சொல்லாட்சி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆறலைகள்வர் என்ற சொல்லாட்சி எட்டுத்தொகை பாடல்களில் எங்குமே கையாளப்படவில்லை. அப்பாடல்களை விளக்குமிடத்தில் உரையாசிரியர்கள்
தான் கையாண்டுள்ளனர் என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். பத்துப்பாட்டில்தான் முதன்முதலாக ஆறலைகள்வர் சொல்லாட்சி ஒரே ஒரு இடத்திலும், அதற்கான வரையறை போன்று மற்றொரு இடத்திலும் இடம்பெறுகிறது.
பொருநராற்றுப்படையில் பாலையாழின் சிறப்பைக் கூறுமிடத்தில் ஆறலைகள்வர் கூட தமது கைகளில் உள்ள கொடிய படைக்கலங்களைப் போட்டுவிட்டு அடங்கி நிற்கும்படியான பாலையாழின் என்ற பொருளில்,
"ஆறு அலை கள்வர் படை விட. அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை" (பொருநர்-21,22)
என்று கூறப்படுகிறது.
பெரும்பாணாற்றுப்படையில் திரையனது சிறப்பை அறிவிக்கும் விதமாக அவனது நாட்டின் பெருமையை சொல்லுமிடத்தில். ...
"அத்தம் செல்வார் அலறித் தாக்கி
கைப்பொருள் வௌவும் களவுஏர் வாழ்க்கை கொடியோர் இன்று ,அவன் கடியுடை வியன்புலம் "(பெரும்பாண்.39,40,41)
என்று வழிப்பறியோ களவோ செய்யாதவர்கள் இல்லாத நாடு என்று வருகிறது.

எயினர்கள் வழிப்பறியினரா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எயினர்கள் பாலைத்திணை மாந்தர்களாக அகநானூற்றில் (79,319)இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் (12)ஒரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன.
"கொடுவில் எயினர் கோட்சுரம் படர
நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள் இடை" (அகம்.79)
கொடுவில் எயினர்கள் சுரவழியில் செல்வதை அறிந்த பருந்தின் பேடை தன் துணையினை நோக்கி நெடுங்குரல் எழுப்பி அழைத்துக்கொண்டே இருக்கும்.
"கொடுவில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் கடுவினை மறவர்......... (அகம்.319 )
என்ற பாடல் செய்தியை எயினர், மறவர் என்னும் இனக்குழுவிற்கு இடையில் நடந்த போராக இது தெரிகிறது. என்கிறார் ராஜ்கௌதமன்.
சிலைவிற் பகழிச் செந்துவர் ஆடை
கொலைவில் எயினர் தங்கை.... (ஐங்குறுநூறு.363)
முளவுமா வல்சி எயினர் தங்கை... (ஐங்குறுநூறு. 364 )
என்ற இரண்டு ஐங்குறுநூறு பாடல்களிலும் வேட்டை குழுவினராகத்தான் பதிவு உள்ளது.
உலைக்கல் அன்ன பாறை ஏறி
கொடுவில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப. ..... (குறுந். 12)
என்ற குறுந்தொகை பாடலில் பாறையின் மேல் ஏறி அம்பினைத் தேய்த்து கூர்மையாக்கும் எயினர் தலைவனைப் பற்றி பேசுகிறது. ஆறலைக்களவு பற்றி அல்ல. அதேபோல பெரும்பாணாற்றுப்படை (91-94, 129-133)யில் வரும் எயினர் வேட்டை குடியினராகத்தான் சித்தரிக்கப்பட்
டுள்ளனர். புறநானூற்றிலும் (351:6,7) அகநானூற்றிலும் (181:5-10) வருகிற இரண்டு பாடல்களும் ஆஅய் எயினன் என்ற குறுநில மன்னரையே குறிக்கிறது.
பத்துப்பாட்டு, பட்டினப்பாலையில்,
"கொடுவில் எயினர் கொள்ளை உண்ட உணவு இல் வறுங்கூட்டு உள்ளகத்து இருந்து" (ப.பாலை.266,267)
என்ற பாடல் கூகைகளின் (பறவையின்) நெற்கூட்டிலிருந்து நெற்கதிர்களை கொள்ளையிட்டு செல்லும் வேட்டைக்குடி எயினர் பற்றி சொல்கிறது.
எனவே சங்க இலக்கியத்தில் வருகின்ற எயினர் எந்த இடத்திலும் வழிப்பறி செய்ததாக குறிப்பு இல்லை.
அதேபோல சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் வருகின்ற வில்லேர் உழவர் (210) வேட்டுவ வரியில் வருகிற வல்வில் எயினர் (13), இட்டுத்தலையென்னும் எயினர் (20) ஆகியோரும் நிரலை கவர்வது தொடர்பாகவே பேசப்பட்டுள்ளனர். சங்க இலக்கியங்களில் பாலைத்திணையில் வசிப்பவர்களாக வேட்டை குடியினராகத்தான் எயினரைப்பற்றி பதிவுகள் உள்ளன. ஆனால் வழிப்பறி கொள்ளையராக இல்லை.


Parakrama Paandian
அரசிற்கான தேவையே வெட்சி போரில் தான் தொடங்குகிறது, கொள்ளையடிப்பதும் அதை தடுப்பதும் தான் அரசிற்கான தேவையை ஏற்படுத்துகிறது, மறவர் கொள்ளையடிப்போராக இருந்தால் எந்த கல்வெட்டிலும் மூவேந்தரும் மறவரோடு போரிட்டு அவர்களை ஒடுக்கியதாக குறிப்பிடவில்லையே ஏன், அரசின் கடமையே மக்களை காப்பது தான், மறவரின் தொழில் நீங்கள் சொல்வதாக இருந்தால் மூவேந்தரும் மறவரும் சதா போரிட்டு கொண்டல்லவா இருந்திருக்க வேண்டும், ஆனால் சங்க இலக்கியம் வெட்சி போரை போரின் வகையாக அல்லவா சொல்கிறது, பாலை மறவரின் வீரத்தை கண்டு படையே நடுங்கும் என சேர மன்னனே பாடிய பாலை திணை பாடல் ஒன்றிருக்கிறது எந்த மன்னனாவது தன்னை அசிங்கபடுத்தி திருடனை புகழ்வானா அக்கால அரசியலை அகத்திணையில் தேடுவதே தவறு புறத்திணையில் தேடுங்கள் உண்மை வரலாறு தெரியும்
5 · விரும்பு · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
நினைவு கற்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°
வம்பலர்களுக்காகப் பெருங்கற்படை சின்னங்கள் எழுப்பப்பட்டதாக அகநானூறு (289) குறுந்தொகை(77,2
77)ஆகியவற்றில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளன.
வில்லில் கோர்த்து எய்த அம்பால் வழிப்போக்கர்கள் இறந்து விட்டனர். அவர்தம் உயர்ந்த பதுக்கில் படர்ந்த காட்டு மல்லிகையைப் பறித்து நடுகல்லிற்கு நாட்பலி கொடுத்து வழிபாடு செய்யப்பட்டதாக,
"சிலைஏ றட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த தகர்க்கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் (அகம்.289)
என்ற இப்பாடலில் கூறப்படுகிறது.
வெஞ்சுரத்து வழியில் இறந்த வம்பலரின் உவல் இடு பதுக்கை உயரமாக வளர்ந்த யானைக்கு நிழலாகப் பயன்படும் என்பதை
.......... வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடுநெல் யானைக்கு இடுநிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு. ...... (குறு.77)
என்ற பாடல் மூலம் யானைக்கு நிழலாக பிரம்மாண்டமாகப் பதுக்கை காணப்பட்டதைக் கூறுகிறது.
வளைந்த வில்லை உடைய மறவரின் நீண்ட அம்பினது வலிய ஆற்றலாகிய பகையை மதியாதவர்களாய் மாறுபட்டு நின்று உயிர் நீத்த வம்பலர்களின் மீது எழுப்பப்பட்ட உவல் இடு பதுக்கை ஊரில் தோன்றும் குன்றுகளை உடைய அகன்ற இடம் என்று காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார் 'ஆறுசெல் வம்பலர்' போரிட்டு மாண்டதை,
"அவ்விளிம்பு உரிஇய கொடுஞ்சிலை மறவர்
வை வார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந்தலை. ......(குறு.297)
என விளக்கியுள்ளார்.
இந்த மூன்று பாடல்களிலும் அயலவர்களிடம் பொருளுக்காக கொன்றதாக எந்த நேரடியான குறிப்பும் இல்லை. கொடுஞ்சிலை மறவருடன் எதிர்த்து நின்று போரில் வீழ்ந்தவர்க்கும், வில்லில் கோர்த்த அம்பால் இறந்து பட்டவர்க்கும் பதுக்கை எழுப்பப்பட்டது என்பதாகத்தான் பாடல் கூறுகிறது.
பெருங்கற்படை பற்றி ஆய்வு செய்த எஸ்.பி.குப்தா அவர்கள் இப்பெருங்கல்லறைகளில் மட்பாண்டங்களோடு இரும்புக் கருவிகள் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். இரும்பு கருவிகளில் வாள், ஈட்டி, வேல்,அம்பு, முதலான போர்க்கருவிகளும். அரிவாள், மண்வெட்டி, கொடுக்கி,கொழு, முதலான விவசாய கருவிகளும் காணப்பட்டதாக குறிப்பிடுகிறார். இதனுள்ளே வைக்கப்பட்ட பொருட்களின் தன்மையினையும், அளவினையும் பார்க்கும் பொழுது. ...
பெருங்கற்படை சின்னங்கள் குறிப்பிடுகின்ற பாடல்கள் பெரும்பாலும் தொறுபூசலில் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும், பிற உயர் குடிமக்களுக்கும் எழுப்பப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன என்கிறார் தொல்லியல் அறிஞர் க.ராஜன்.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
வம்பலர் கொன்ற தெவ்வர் (அகம்.113),வம்ப
லர் செகுத்த அஞ்சுவரு கவலை (அகம்.161),ஆறுசெல் வம்பலர் உயிர்செலப்பெயர்ப்பின் (அகம்.175),சிலைஏ றட்ட கணைவீழ் வெம்பலர் உயர்பதுக்கு(அகம்.289),நீங்கா வம்பலர் கணை இடத்தொலைந்தோர் (அகம்.313),ஆறுசெல் மாக்கள் அருநிறத்து எறிந்த (அகம்.363), வம்பமாக்கள் உயிர்த்திறம் பறித்தன (நற்.164), கொன்று ஆற்றுத் துறந்த மாக்கள் (நற். 329),வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை (நற். 352),ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த (குறு.297) போன்ற எல்லாப்பாடல்களி
லும் வம்பலர்களைப் பொருளுக்கும் கொலை செய்ததாக எங்கும் குறிப்புகள் இல்லை. கொள்ளை பற்றியே இல்லாமல் கொலைகளைப்பற்றியே பாடல்கள் பேசுகின்றன.
அத்தம் நண்ணி அதர்பார்த்திருந்த பாலை நில மாந்தர்கள் பற்றியும் வழிப்போவோர்களிடம் பறிப்பதற்காக எதிர்பார்த்திருந்து காத்திருந்ததாக உரையாசிரியர்களால் விளக்கப்பட்ட மற்ற எல்லா பாடல்களிலும் பொருளைப் பறிப்பதற்காக எதிர்பார்த்திருந்து காத்திருந்ததாக வெளிப்படையான குறிப்புகள் இல்லை.
பாலைத்திணை பாடல்கள் பற்றி கருத்து கூறும் குணா அவர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படும் பாலைத்திணை பாடல்களின் தலைவன் தன் தலைவியை விட்டு பிரிந்து சுட்டெரிக்கிற கொடிய பாலை நிலத்தினூடே சென்றதைப்பற்றிய
தாகும். பாலைத்திணை பற்றிய எல்லா பாடல்களும் தலைவன் பொருள் வேண்டிச்சென்றதைப் பற்றியன அல்ல. ! இவற்றில் பல வேங்கட மலைக்கு அப்பால் இருந்த கடும் சுரங்களில் வாழ்ந்து வந்த வடுகர் முதலானோரை அடக்கி ஒடுக்குவதற்காக நடந்த படைச்செலவுகளைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். என்கிறார்.
இக்கருத்துக்களை அரண் செய்கின்ற வேறு சிலப் பாடல்களும் பாலைத்திணையில் உள்ளன.
"ஆறுசெல் வம்பலர் வருதிறம் காண்மார்
வல்வில் ஆடவர் மேல் ஆள் ஒற்றி
நீடுநிலை யா அத்துக் கோடு கோள் அருஞ்சுரம் "(அகம்.263)
என்ற பாடலில் கருவூர் கண்ணம்பாளனார் யா மரத்தின் கிளைகளில் ஏறி வல்வில் ஆடவர்களைக்கொண்டு அங்கே வரும் அயலவர்களின் நடமாட்டத்தை ஒற்றறிந்து கண்காணித்ததாகக் கூறுகிறார்.
இதேபாடலில்
'ஒளிறுவேல் கோதை ஓம்பி காக்கும்
வஞ்சி அன்ன என் வளநகர் விளங்க'
என்று சேரநாட்டு மன்னனும் தலைநகரும் பேசப்படுகிறது. சேரர்கள் வலிமை வாய்ந்த ஒற்றர் படை வைத்திருந்தனர் என்ற பரவலாக அறியப்பட்ட செய்தியோடு இதனைப் பொருத்தினால் கூடுதல் விளக்கம் தெரியும்.
மற்றொரு பாடலில் இறந்து பட்ட வம்பலரின் குருதியைக்குடித்த காகம் ஒற்றுத்தொழிலை மேற்கொண்டவர் போல அடங்கிய குரலை உடையனவாய் மனையிடத்தே தங்கும் என்பதை, ..
"நீங்கா வம்பலர் கணைஇடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி
ஒற்றுச்சொல் மாக்களின் ஒடுங்கிய குரல
இல்வழிப் படூஉம் காக்கை .... (அகம்.313) என்ற பாடல் வழியாக கூறப்படுகிறது.
திருத்தப்பட்டது · 3 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எடுக்க முடிவு செய்து இமயமலையிலிருந்து கல் எடுத்து வரத் தீர்மானிக்கிறான். அப்போது செங்குட்டுவன் அமைச்சர் வில்லவன் கோதை இதுகுறித்து வடதிசை மன்னர்களுக்கு ஓலை அனுப்ப வேண்டுமெனக் கூறுகிறான்.அச்ச
மயத்தில் செங்குட்டுவனது மற்றொரு அமைச்சனான அழும்பில் வேள், "அவ்வாறு ஓலையனுப்பத்தேவை
யில்லை இந்த நாவலந்தீவின் பல இடங்களையும் சேர்ந்த ஒற்றர்கள் வஞ்சி மாநகர் வாயிலிலேயே நீங்காது இருந்து வருகிறார்கள்
எனவே வஞ்சிமாநகர் வாயிலிலேயே வடதிசை பயணம் குறித்து பறையறிவித்தால் போதுமானது. அவ்வாறு பறையறிவித்த செய்தி பிற நாட்டு ஒற்றர்களின் செவிக்கு எட்டிவிடும். அவர்களே தத்தம் மன்னர்களுக்கு அச்செய்தியை அனுப்பிவிடுவர் " என்று சொல்கிறான். (காட்சிக்காதை வரிகள் 173, 177)இதன்மூலம் சேரன் செங்குட்டுவன் ஆட்சியில் உள்நாட்டிலுள்ள பிற நாட்டு ஒற்றர்களையும் உளவுபார்க்கும் ஒற்றர்களும் இருந்தனர் என்பது தெரியவருகிறது. எனத் தொ.மு.சி.ரகுநாதன் தமது "இளங்கோவடிகள் யார்? " எனும் நூலில் விளக்குகிறார். எனவே இங்கு வம்பலர் என்பது ஒற்றர் என்பதும் அவர்களே வில்லம்பு உடையோர் என்பதை பொருள் கொள்ள சாத்தியம் உள்ளது. மேலே கண்ட குணா அவர்களின் கருத்தை ஒற்றுச்சொல் மாந்தர்களோடு ஒப்பீடு செய்தால் வம்பலர், ஆறுசெல் மாக்கள், வம்பமாக்கள் போன்றோரை மரபாக வணிகர்கள் எனப் பொருள் கொள்வதைத்தவிர்த்து போர் தொடர்பானவர்கள், அயலவர்கள் என பொருள் கொண்டால் பாலைத்திணை பாடல்களின் பொருள் வேறொன்றாக இருக்கும். ஏனெனில் பொருள் கவர்வதற்காக எதிர்பார்த்து காத்திருந்ததாகவோ, கொன்றதாகவோ நேரடியான குறிப்புகள் பாலைத்திணை பாடல்களில் இல்லை.
பதுக்கைகள் அமைப்பு பற்றிக் கூறும் க.ராஜன் "சுமார் 10 முதல் 15டன் எடைகொண்ட கற்களைக்கொண்டு இப் பெருங்கற்படை சின்னங்கள் உருவாக்கப்பட்டதைப் பார்க்கும் பொழுது இவை ஒரு தனி மனிதனால் உருவாக்கப்படவில்லை என்பதும், ஒரு சமுதாயமே முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது. நீத்தோர் நினைவாக அனைவரும் வியக்கும் வண்ணம் தமது திறனை முழுமையாகப் பயன்படுத்தி இம்மாபெரும் சின்னங்களை உருவாக்கி இருக்கிறார்கள். என்கிறார்.
அம்பால் எய்து வீழ்த்தப்பட்ட வம்பலரின் பதுக்கை யானை தங்கிச் செல்வதற்கு ஏற்ற பிரம்மாண்டமானது என்று பாடல் கூறுகிறது. (குறு.77). க.ராஜன் அவர்களும் உவல் இடு பதுக்கை எனப்பட்டதானது பதுக்கையுடன் கூடிய கல்வட்டம் (கி.மு.3-1) என்றே வகைப்படுத்தியுள்ளார். எனவே பொருள் தேட வெகுதொலைவிலிருந்து வேற்று நாட்டுக்கு வந்த ஒருவருக்கு அவருக்கு தொடர்பே இல்லாத ஒரு பகுதியில் அவர் இறந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து உடலைக்கைப்பற்றி வில்லும், வேலும்,வாளும், ஈட்டியும் வைத்து பதுக்கைகள் அமைத்திருப்பார்கள் என்பது பொருந்துமாறு இல்லை.
எனவே வம்பலர் பதுக்கைகள் தொறுபூசலில் ஈடுபட்ட அல்லது போர்களில் ஈடுபட்டு மாண்ட குழுத்தலைவனுக்கு எடுக்கப்பட்டதாக
வே இருக்கவேண்டும்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
பாலைக்குடிகள் ஒரு பார்வை. 2.
<•><•><•><•><•><•><•><•><•><•><•>
அன்பு உறவுகளே! சென்ற பதிவில் பாலைக்குடிகள் எப்படி உரையாசிரியர்களால் தவறாக சித்தரிக்கப்பட்டனர் என பார்த்தோம். இந்த பதிவில் ஆறலைகள்வர் தோற்றம் பற்றிய கட்டுமானங்களைக் காண்போம்.
உண்மையில் அக இலக்கிய காலத்தில் வழிப்பறி நடந்திருந்தால் அது ஆறலைக்களவாக இருந்திருந்தால் கூட புலவர்கள் அவற்றை வெளிப்படையாகப் பேசுவதில் தடை இல்லை. 'கடுங்கண் மழவர், கொலைவில் எயினர், கல்லா இளையர், கொடுவில் ஆடவர், கொடுந்தொழில் மறவர்,' எனப்பூடகமாகச் சொல்லாமல், ... வழிப்பறிக்கள்வரைக்குறிக்கும் ஆறலைகள்வர் என்ற சொல்லாட்சியைப் புலவர்மரபு வெளிப்படையாக கையாளத்தடை இல்லை. ஏனெனில் ஆறு,அலைத்தல், கள்வர், என்ற சொல்லாட்சிகள் தனித்தனியாக பாலைத்திணை முழுவதும் இடம்பெற்றுள்ளன.
இங்கு ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி குறிப்பாக கள்வர், களவு, கொள்ளை என்ற சொற்கள் நிரை கவர்பவர்களைக் குறிக்கவும், களவு, கற்பு, தொடர்பான குறிஞ்சி, மருத நில தலைமகனைக்குறிக்கவுமே வருகின்றன. ஆறலைக்கள்வர்கள் என்று விளக்கப்பட்டவர்களைக் குறிக்க எந்த இடத்திலும் வரவில்லை.
"அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென்ன. .... (அகம்.7)
"வேட்டக்கள்வர் விசியுறு கடுங்கண். ... (அகம்.63)
"கடுங்கண் மழவர் களவு உழவு. ... (அகம்.91)
"கன்றுடைக் கொள்ளையர்.....(அகம்.101)
"ஆகொள் மூதூர் கள்வர் பெருமகன்...... (அகம்.342)
இவை எல்லாமே ஆகொள் பூசல் தொடர்பானவையே. இந்த பாடல்களில் எல்லாம் கள்வர்களை வெட்சி, கரந்தை வீரர்களாகவே உரை ஆசிரியர்கள் பொருள் கொண்டுள்ளனர்.
"கடி இலம் புகூ உம் கொள்வேன் போல (அக. மருதம் 276)
"யாரும் இல்லை தானே கள்வன் (அக.குறிஞ்சி 25)
"கள்வர் போல்வர், நீ அகன்றி சினோர்க்கே (அக.மருதம் 127)
"களவனும் கடவனும் புணைவனும் தானே (அகம்.நெய்தல்318)
"கள்வர் போலக் கொடியோன் மாதோ (நற்.பாலை28)
"நள்ளென் கங்குல் கள்வன் போல (நற். மருதம் 40)
என்ற பாடல்களில் வருகிற கள்வர்கள் அனைவரும் குறிஞ்சி உரிப்பொருளான இருளில் மறைந்து வந்து தலைவியைக் கூடுகிற களவுகாலகள்வனையும், களவு முடிந்து கற்பு எனும் திருமண உறவிற்குள் வந்த பிறகு பரத்தையுடன் கூடிவிட்டு குற்ற உணர்வுடன் இல்லத்திற்கு திரும்பி வருகிற மருத நிலத்தலைவனையும்தான் நினைவு படுத்துகின்றன. எங்குமே வழிப்பறியையோ, இருட்டிற்குள் வீடு புகுந்து திருடுகிற களவையோ குறிக்கவில்லை. ஆக மருதநிலத்தின் தலைவனும் கள்ளன்தான்.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
நிரைகளை கவர்ந்து செல்வது களவு
கவர்ந்து செல்பவன் கள்வன்
தலைவியை கவர்ந்து செல்வது களவு (உடன்போக்கு)
தலைவியைக்கவர்ந்து செல்பவன் கள்வன், என்று நாம் புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென
பிற்படு பூசலின் வழிவழி ஓடி (அகம். 7)
என்ற பாடலில் பசுக்கூட்டங்களை கவர்ந்து செல்பவர்களை வெட்சி வீரர்கள் விரட்டிச்சென்று செய்யும் போரைப்போல மகளை உடன்போக்கில் கவர்ந்து சென்ற தலைவனைத் தேடிச்சென்று காண முடியாத தலைவியின் மனநிலையை 'கயமனார்' இப்படி பதிவு செய்துள்ளார்.
இதன்மூலம் நிரை கவர்தல், களவு, உடன்போக்கு தொடர்பான சண்டைகள் இனக்குழு மக்களுக்கான புராதன பூசல்கள் என்பதோடு கள்வர் என்ற சொல் 'திருட்டு' என்ற சொல்லைக்குறிக்கவில்லை என்பதும் நன்றாக விளங்குகிறது. எனவே கள்வர் என்பது திருடர் எனப்பொருள் கொண்டது பிற்காலத்தில்தான் என்பது வெள்ளிடைமலை.
ஒருவேளை ஆறலைக்கள்வரை விளக்க குறுந்தொகை,நற்றிணை இவற்றில் குறுகிய பாடல்களின் அடிகள் இடம் தராவிட்டாலும் அகநானூறு பாடலின் நீண்ட அடி எல்லை அதற்கு இடம் தருகிறது. அந்த நெடுந்தொகையிலும் பொருளுக்காக வழிப்பறி செய்ததாக இல்லை. எனவே எட்டுத்தொகை அகப்பாடல்களில் பேசப்படுவது வழிப்பறி அல்ல! . அது புவி அரசியல், வணிகப்பொருளியல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முரண்பாடு, போர் என்றுதான் கருதமுடியும்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Sivam Chozhangaraayar பதிலளித்தார் · 1 பதில்

Muniraj Vanathirayar
நன்றி! நண்பர்களே! இதுகாரும் புரிந்து இனி கள்வர் கள்ளர் என்பதை எவ்விதப்பார்வையில் அணுகவேண்டுமென அறிந்து தெளிக!

அழகன் பத்தர்
Muniraj Vanathirayar பாலை கருப்பொருள் பகற் சூறையாடல்..இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஊரை ஏமாத்த போறீங்களோ...பாலை மறவரை படைஞராக வேலைக்குச் சேர்த்தது யாருனு யோசிங்க...வரலாற்றைத் திரிப்பதை விட்டுட்டு...