Nadesapillai Sivendran, 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
தமிழ்-2
தமிழ் ஐ ஒத்த சொற்களான இமிழ்,குமிழ்,உமிழ் என்பன எல்லாம் ஏதோ ஒரு
விதத்தில் ஒலியைக் குறிக்கின்றன.
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)
இமிழ் கடல் என்பது ஒலிக்கின்ற கடல் என்பதாகும்.
இவற்றின் பொது அடியான மிழ் அல்லது இழ் என்பது ஒலியை,பேச்சை,சொல்லைக்
குறிப்பதாக இருக்கவேண்டும்.
எனவே தமிழ் என்பதை தம்+இழ் என்று பிரித்துப் பொருள்கொண்டால் முன்னைய
பதிவில் பார்த்ததுபோன்று எமது பேச்சு,எமது மொழி என்பது அர்த்தமாகும்.
தமிழ் என்றால் எமது மொழி(Our Language)
சொல்லாய்வு வேர்ச்சொல் சொல்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக