aathi tamil<aathi1956@gmail.com> | 17 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:46 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
Palani Deepan
சித்திரை ஒன்று. சித்திரை ஒன்றை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடக்கூடாது என திராவிடர்கள் வெகுண்டு எழுகின்றனர். சில தமிழர்களும் தகுந்த புரிதல்கள் இல்லாமல் அவர்களுக்கு துணை போகின்றனர். திராவிடர்கள் வெகுண்டு எழுவதின் பின்னணியில் பெரும் நுண்ணரசியல் இருக்கிறது. தமிழனுக்கு அரசியலே தெரியாது. இதில் நுண்ணரசியலை அவன் எங்கிருந்து தெரிந்து கொள்ளப் போகிறான்...? பாரத தேசத்தில் இன்றுவரை கறைபடாத ஒரு இனம் உண்டு என்றால் அது தமிழ் இனமே. தமிழ் தேசியமே. ஆரியம் முடிந்தவரை தமிழையும் தமிழ் நாட்டையும் சமத்கிருதத்தின் மூலம் ஆரியமயமாக்க முயற்சி செய்தது. அதில் குறிப்பிட்ட அளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அவ்வளவு எளிதாக ஆரியம் வெற்றிபெற்றுவிட ஆற்றல் மிக்க தமிழ் உணர்வுள்ள தமிழர்கள் விட்டுவிடவில்லை. தொடர்ந்து எதிர்த்தும் நின்றனர். அடுத்து, திராவிடம் நமது தமிழ் அடையாளங்களை எல்லாம் திராவிட மயமாக்க தனது அரசியல் அதிகார ஆணவத்தின் மூலம் தொடர்ந்து முயன்று வருகிறது. அதன் ஒரு கூறுதான் இந்த புத்தாண்டு தகிடுதித்தங்கள். தமிழனுக்கு என்று தனித்த அடையாளம் வேண்டும் என்றும், அது ஆரிய, இந்திய சமய சார்பாக இருக்க கூடாது என்றும் வள்ளல் க.நமச்சிவாய முதலியார் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, தை முதல் நாளை "தமிழர் நாளாக" உலகெங்கும் கொண்டாட வேண்டும் என நடைமுறைப் படுத்தினார். அதற்கு அவர் வைத்த பெயர் ”தமிழர் திருநாள்”. இதில் உழவர்களையும் சேர்த்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக “பொங்கல் திருநாளாகவும்” கொண்டாட ஏற்பாடு செய்தார். பின்பு இதனை ஒரு தமிழர் இயக்கமாகவே அவர் கொண்டுவந்தார். தமிழர்களிடையே வாழ்த்து அட்டைகளை அனுப்பும் முறையையும் இவரே கொண்டு வந்தார். (இவையாவும் ஈ.வெ.ரா. தமிழக அரசியலில் பிரபலமாவதற்கு முன்பே என்பதை கவனிக்க வேண்டும்.) இவருக்கு துணையாக அன்றைய பெ.தூரன், அண்ணல்தங்கோ, திரு.வி.க. கல்கி, உ.வே.சாமிநாத ஐயர் துணை நின்றனர். வெகு வேகமாக இந்த தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் தமிழர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று அவர்களது வாழ்வோடும், அடையாளத்தோடும் முதன்மைப் பெற்று ஒன்றிப் போனது. என்ன அது...? தமிழர் திருநாளா...? அதுவும் ஒரு தமிழன் உருவாக்கி இயக்கம் கண்டதா...? தமிழ் பாமர, உழவர்களிடையேயும் இரண்டறக் கலந்ததா....? என்ன கொடுமை ஐயா இது...? அப்புறம் திராவிடம் எப்படி இங்கு வாழும்...? ஆம் அந்தத் தமிழர் திருநாளின் முதன்மையை உடைக்க வேண்டிதான்... அந்த நாளில் நமது மரபில் இல்லாத புத்தாண்டு தொடக்கம் என்ற ஒன்று ”திணித்து” நம்மிடையே குழப்பத்தை விளைவிப்பது. தமிழர்களே.... தமிழர் திருநாள் நம் தமிழர்களின் தனித்த அடையாளத்திற்காக நமது தமிழ் முன்னோர்கள் நமக்காக பாடுபட்டு உழைத்து ஒரு இயக்கமாக வளர்த்தது. அதனை முழுமையாக கொண்டாடி மகிழ்வோம். பகைவர்களின் ஏமாற்றுதல்களுக்கு உள்ளாகமல் தமிழனின் அடையாளம் ”தமிழர் திருநாள்” என உலகெங்கும் முழங்குவோம். நமது தமிழ் நாடு. நமது கொண்டாட்டம் நாம் தான் வரையறுக்க வேண்டும். திட்டமிட வேண்டும். (இதற்காக திராவிடம் போட்ட சதிதிட்டங்கள், கொடுத்த பொய் சான்றுகள் யாவையும் அடுத்த அடுத்த பதிப்புகளில் தகுந்த மெய் சான்றுகளுடன் விளக்கம் அளிக்க உள்ளேன்.) 1 ம.நே. · நண்பர்கள் |
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
தை புத்தாண்டு அறிவிப்பு தமிழர் திருநாள் ஐ குழப்ப திராவிடம் செய்த சதி பொங்கல் கருணாநிதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக