aathi tamil<aathi1956@gmail.com> | 14 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 10:45 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
கத்திவாக்கம் நவீனன்
கி.மு 31 என்று திருவள்ளுவரின் காலத்தை பின்னுக்கு தள்ளுவதின் நோக்கம் என்ன?? ============================== ===================== அறை நூற்றாண்டிற்கு முன் வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்தாக தெரிகிறது. சங்க காலங்களில் புலவர்கள் அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே பரிசில் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள் தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க கால புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மேலும் ஊன் பொதி பசுங்குடையார், இடையன் சேந்தன் கொற்றனார், பாவைக்கொட்டிலார் போன்றோர் அப்போரில் வெற்றி பெற்றவர்கள் தமிழ் அரசர்களே என்றும் ஆயினும் சோழன் இளஞ்சேட் செண்ணி மௌரியர்களை பாளி நகரம் வரை விரட்டிச் சென்று வென்றதாக அவ்வரசனை புகழ்ந்து பாடுகின்றனர். அதாவது இப்போர்கள் அப்புலவர்களின் காலத்தில் நடந்தவை என தெளிவாக தெரிகிறது. இவை அசோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது. மேலும் மாமூலனார் மௌரியர்களுக்கு மூன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம் மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர். மாமூலனாரின் காலம் தெரியாத காலங்களிலேயே வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி ஆரியர்கள் கி.மு 600 வாக்கில் தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டது.ஆரியனான விஜயன் என்பவன் பாண்டியன் மகளை திருமணம் செய்த பிறகு கி.மு 543ல் இலங்கையை அடைகிறான்.இவை இலங்கை நூலான மகாவம்சம் மூலம் தெரியவருகிறது. ஆக ஆரியர்கள் கி.மு 700 வாக்கில் தமிழகம் வந்திருக்க வேண்டும். திருவள்ளுவர் திருக்குறளில் 12000 கு மேற்ப்பட்ட தமிழ் சொற்களையும்,50கு குறைவான வடமொழி சொற்களையும் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் மறைமலை அடிகள்,மொழி ஞாயிறு தேவநேய பாவானர், பாரதிதாசன் போன்றோர் மேற்க்கண்ட வார்த்தைகளிலும் தமிழ் வேர் சொற்கள் இருப்பதாக நிரூபிக்கின்றனர்.தேவநேய பாவானர் 16 (வடமொழி) சொற்கள் இருப்பதாகவும் ,சி.இலக்குவனார் 10கு குறைவாக இருப்பதாக கூறுவதும் கவணிக்கத்தக்கது. மேலும் ரிக் வேதத்தில் இந்திரனை பற்றிய குறிப்பும், ஆரியர்கள் தமிழகம் நுழைந்த பிறகு இந்திரனை பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர் திருக்குறளை ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும்.இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவருகிறது. இதன் மூலம் வள்ளுவர் காலம் குறைந்தது கி.மு 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும் |
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
திருவள்ளுவர் காலம் கிமு 6ம் நூற்றாண்டு மாமூலனார் மோரியர் மௌரியர் ஆரியர் வள்ளுவர் குறள் திருக்குறள் பழமை திமு திபி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக