திங்கள், 10 பிப்ரவரி, 2020

தா.கிருட்டிணன் கொலை திமுக கருணாநிதி செய்தது அவரது மகன் கடிதம்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 4:05
பெறுநர்: எனக்கு

தா. கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட பின் கருணாநிதிக்கு தா.கிருட்டினன் மகன்
தா.கி. தொல்காப்பியன் எழுதிய கடிதம் இது

பெருமதிப்புக்குரிய ஐயா, தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, தா.கிருட்டிணன் மகன் தொல்காப்பியன் வணக்கத்துடன் எழுதுவது.

குடும்பத்தை கவனிக்காமல், தங்களுக்காகவும், தளபதிக்காகவும், தி.மு.க-வுக்காகவும், 1952 முதல் தன் வாழ்நாளில் 90 சதவிகிதத்துக்கும் மேலாகச் செலவழித்த என் தந்தை, எங்களை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார்.
அவர் இயற்கையாகவோ அல்லது நோய்வாய்ப்பட்டோ இறந்திருந்தால், எங்களுக்கு இந்த அளவு மன வேதனை இருந்திருக்காது.
அவர் எதற்காக, யாரால்... இந்த அளவுக்குக் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்பதை நானும் என் குடும்பத்தாரும் வாழ்நாள் முழுக்க எண்ணி எண்ணி சாகப்போகிறோம்.
அவரை யார் கொலை செய்து இருப்பார்கள், கொலை செய்ய யார் ஆணை இட்டிருப்பார்கள் அல்லது தூண்டி இருப்பார்கள் என்பது தங்களது மனசாட்சிக்குத் தெரியும். அண்ணா மீது ஆணையாக, அதைத் தங்களால் மறுக்க முடியாது!
அமெரிக்காவில் இருக்கும் நான், வாரம் ஒரு முறையாவது அப்பாவுடன் பேசிவிடுவேன். அந்த நேரங்களில் தங்களின் நலத்தையும் நான் விசாரிக்கத் தவறியது இல்லை.
பெரும்பாலும் எங்கள் பேச்சு அரசியல் சம்பந்தமாகத்தான் இருக்கும். தாங்கள் என் அப்பாவை திரு. மு.க.அழகிரியோடு அனுசரித்துப் போக விரும்பியதையும்..
திரு. அழகிரியுடனான பழைய அனுபவங்களால் என் அப்பாவால் அனுசரித்துப்போக முடியாததையும், அதனால் தாங்கள் என் அப்பா மீது வருத்தத்துடன் இருந்ததையும்பற்றி பல முறை கூறி உள்ளார்.
தாங்கள் பல நாட்கள் என் அப்பாவுடன் சரியாகப் பேசாமல் இருந்த நேரங்களில், அவர் எந்த அளவுக்கு சோர்ந்துபோய் இருந்தார் என்பதையும் நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.
சில சமயங்களில் தாங்கள் அவருடன் நன்கு பேசுகிறபோது உற்சாகத்தின் விளிம்புக்கு அவர் சென்றதையும் நான் கவனித்து இருக்கிறேன். எங்களை எல்லாம்விட, தங்களையும் கட்சியையுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்து மறைந்துவிட்டார் அவர்.
மே 18-ம் தேதி என் அப்பாவின் பிறந்த நாள். அன்று காலை அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். அப்போது, தங்களைச் சந்திக்கப்போவது பற்றி கூறினார். அன்று மாலை மீண்டும் அவருடன் பேசியபோது, மிக மிக மகிழ்ச்சியாக இருந்தார்.
தங்களைச் சந்தித்தது பற்றியும், தாங்கள் அவருடன் கனிவோடு பேசியது பற்றியும் மிகவும் உற்சாகமாக விவரித்தார். எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டதையும் கூறினார். நான்கூட, 'ஒரே நாளில் எப்படி அப்பா இவ்வளவு மாற்றங்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு பிறகு அவரிடம் பேச முடியவில்லை. 19-ம் தேதி இரவு (அமெரிக்காவில்) இங்கே 20-ம் தேதி காலை... என் அப்பா கொல்லப்பட்ட செய்தி இடியென என் காதில் விழுந்தது. கதறி அழுவதைத் தவிர, நான் என்ன செய்ய முடியும்?
மதுரை கவுன்சிலர் லீலாவதி கொல்லப்பட்டபோது போலீஸார் குற்றவாளிகளை அடித்துத் துன்புறுத்தவில்லையா? திட்டமிட்டுக் கொலை செய்தவர்கள் என்றாவது ஒப்புக்கொண்டது உண்டா?
நீங்கள் அந்தக் குற்றவாளிகளை உடனே கட்சியில் இருந்து நீக்கவில்லையா? உடன்பிறப்புகளைத் துன்புறுத்தினார்களா? அந்தக் கொலையாளிகள் என்ன துன்பப்பட்டு விட்டார்கள்? கொடூரமாகக் கொல்லப்பட்ட என் அப்பாவை விடவா துன்பப்பட்டு விட்டார்கள்?
அப்பாவின் மரண ஓலத்தை வீட்டில் இருந்து கேட்டு ஓடிச் சென்று, நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில்கிடந்த அவரைத் தன் மடியில் வைத்துக் கதறினாரே என் அம்மா... அவரைவிடவா அவர்கள் துன்பப்பட்டார்க
ள்?
என் அம்மாவின் மனது என்ன பாடுபட்டு இருக்கும்? என் அம்மாவுக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமை இந்த உலகில் யாருக்கும் ஏற்படக் கூடாது. தற்போது பிடிபட்டுள்ள இந்தக் கொலைகார உடன்பிறப்புகள் அப்பாவைக் கொன்றது உண்மை.
அவர்களுக்கும் என் அப்பாவுக்கும் என்ன பகை? யாருக்காக இந்தக் கொலையை செய்தார்கள் என்பது தங்களுக்குத் தெரியும். அவர்களைக் கட்சியைவிட்டு தற்காலிகமாகக்கூட நீக்காமல் இருப்பது என்ன நியாயம்?
தங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டது என்பதற்காக தாங்கள் அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அந்த நாயைவிட நன்றியாக இருந்தாரே என் அப்பா... அவரைக் கொலை செய்தவர்களைத் தற்காலிகமாகக்கூட கட்சியைவிட்டு நீக்காமல் இருப்பது நியாயம் அல்ல. யார் யாரோ ஏதேதோ சொன்னார்கள்.
80-வது பிறந்த நாளைக் கொண்டாடப்போவது இல்லை என்ற தங்களின் அறிக்கையைப் படித்ததும், நான் தங்கள் மீது வைத்து இருந்த நம்பிக்கையை இழக்கத் துவங்கிவிட்டேன்.
1952 முதல், கலைஞர், தி.மு.க., பிறகு தளபதி என்று கடைசியில் உயிரைவிட்ட என் தந்தையின் குடும்பத்துக்கு, நீங்கள் ஆறுதல்கூட சொல்லவில்லையே? ஏன், ஒரு ஆறுதல் கடிதம்கூட எழுதவில்லையே?
ஒன்று மட்டும் உண்மை... கடைசியில் இப்படித்தான் நடக்கும் என்று என் அப்பாவுக்குத் தெரிந்தே இருந்தாலும்... அவர் கலைஞருக்காகவும், கழகத்துக்காகவும், தளபதிக்காகவும் உழைத்ததில் எந்தவித மாறுதலும் இருந்திருக்காது.
மறைந்த என் தந்தை என்னுடன் பேச முடிந்தால், தலைவரின் இந்த நிலை குறித்துத் தலைவருக்காகப் பரிந்துதான் பேசி இருப்பார். அப்படிப்பட்டத் தூய தொண்டர் அவர்!
# Krishna_Muthukaruppan

ஆதாரம் சான்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக