திங்கள், 10 பிப்ரவரி, 2020

மதம் தாண்டிய தமிழர் பண்பாடு பின்பற்ற செய்யவேண்டியவை

aathi1956 aathi1956@gmail.com

திங்., 20 ஆக., 2018, முற்பகல் 11:30
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்,
தமிழ்ப்புகழ் குணசேகரன் களத்தமிழன் பாண்டியர் மற்றும் 35 பேருடன் இருக்கிறார்.
மரபுவழி தமிழ் தேசியரின் 10 கடமைகள்
=================================
கடமை_1: எச்சமயத்தவராயினும் குலதெய்வ வழிபாடு அவசியம். சிறுதெய்வம் என்று சிறுமைப்படுத்தும் வைதீகம், ஷிர்க் என்று ஒழிக்கும் இஸ்லாம், சாத்தான் என்று ஏசும் கிருத்தவம் ஆகியற்றில் இருப்போரும், சைவ, வைணவ, பௌத்த சமயங்களில் இருப்போர் குலதெய்வ வழிபாடு தமிழரின் ஆதி வழிபாடு என்பதனை உணர்ந்து குல தெய்வ வழிபாடு செய்வதுபோல், வைதீக, இஸ்லாமிய, கிருத்துவ சமயங்களில் இருக்கும் தமிழர்களும் ,தம் மக்களுக்கு குலதெய்வ கோவில்களில் முடியிறக்கி காது குத்த வேண்டும் !!!!

கடமை_2: எச்சமயத்தவராயினும் தம் இறையை தமிழ் மொழியிலேயே வழிபட வேண்டும். வைதீகம் ஆரியத்தையும், இசுலாம் அரேபியத்தையும், கிருத்துவம் இலத்தீனையும், பௌத்தம் பாலியையும் வழிப்பாட்டில் திணிக்கிறது. இன்று சைவ, வைணவ சமயத்தில் இருப்போர் பலர், தமிழ் மொழியின் ஆற்றலை உணர்ந்து, தமிழ் வழிப்பாட்டிற்கு மாறியுள்ளனர். திருமுறை, பாசுரங்களை பாடுகின்றனர். அதேப்போல் பிற சமயத்தவரும் தமிழிலேயே வழிபாடு செய்யவேண்டும்!!!

கடமை_3: தமிழர் தம் மக்களுக்கு செந்தமிழ் பெயர்களையே சூட்டல் வேண்டும். ஆண்கள் பெயர் 'அன்'/இகர விகுதியிலேயே முடிய வேண்டும். எ-கா) மாறன், நன்னன், எழிலன், செழியன், பெருவழுதி, இளஞ்செட்சென்னி.
பெண்கள் பெயர், இ/ஐ ஆகியவற்றிலேயே முடிய வேண்டும். எ-கா) கண்ணகி, மாதவி, கோதை, ஔவை.
தமிழ் பெயரியல் முறையிலேயே இருத்தல் வேண்டும்.
//ஊர்பெயர்// //தந்தை பெயர்// //சொந்தபெயர்// என்றிருத்தல் வேண்டும். எகா) மதுரை கணக்காயனார் மகன் நக்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக