திங்கள், 10 பிப்ரவரி, 2020

கருணாநிதி 2009 பிறந்தநாள் க்கு சொன்ன விளக்கம் சாவுவீடு அருகே கல்யாண வீடு

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 12 ஆக., 2018, முற்பகல் 10:31
பெறுநர்: எனக்கு
Sunday, June 9, 2013
at 11:56 AM கருணாநிதியின் நெஞ்சுக்கு அநீதி!
கலைஞர் கருணாநிதிக்கு 90 வயது; நாமும் வாழ்த்துகளைக்கூறுவோம். அவரு டைய பிறந்தநாளையொட்டி தி.மு.க.சார்பில் 90 நாட்கள் விழாக்களாம்; அறிவா லய நிலைய வித்வான்களின் கச்சேரி; தமிழ் கொண்டு ஆராதிக்கிறோம் என்று கருணாநிதி அடிப்பொடிகள் ஏற்பாடு செய்துள்ள கவிஞர்களின் ‘கவிமாலை’ என்று கருணாநிதி பிறந்தநாள் விழாக்களை வழக்கம் போல அமர்க்களப் படுத் துகின்றனர்.
ஜூன் மூன்றாம் தேதி தன்னுடைய பிறந்தநாள் செய்தி என்ன என்று செய்தியா ளர்கள் கேட்டதாகவும், மாலையில் ஒய்.எம்.சி.ஏ திடல் கூட்டத்திற்கு வந்து கேளுங்கள் பதில் கூறுகிறேன் என்று கருணாநிதி கூறினாராம்.அவரே தனது பேச்சில் இதைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
பத்திரிகையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். கருணாநிதி தனது பிறந்தநாள் செய்தியாகக் கூறியது, சேதுக்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற் றக்கோரி போராட்டம் நடத்தப் போகிறோம். இதுதான் 90 ஆவது பிறந்தநாள்
கூட்டத்தில் அவரது அறிவிப்பு.
தமிழீழத்தில் இலட்சோப இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட துயரம்
நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழர்கள் நடைப்பிணங்களாக மிச் சம் இருப்பவர்கள் அங்கே வாழ்க்கைப் பாட்டுக்கு திண்டாடிக் கொண்டு இருக் கின்றனர். சிங்கள இராணுவம் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஏழு ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆக்கிரமித்துவிட்டது. தமிழர் பகுதி கள் எங்கும் மூலைக்கு மூலை, சந்துக்கு சந்து சிங்கள இராணுவம் சிங்கள கொலைவெறி இராணுவத்தின் கெடுபிடிகள், மிரட்டல்கள்; பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன.
தமிழர்களின் பூமிக்கு சிங்களவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டுவிட்டன. வழிபாட் டுத் தலங்கள் அனைத்தும் சிங்கள பெளத்த விகாரைகளாக மாற்றப்பட்டு விட் டன. தெருவெல்லாம் தமிழ், தமிழரின் அடையாளம் சிதைக்கப்பட்டு சிங்கள மும், சிங்களவனின் முகவரியும் கொடுக்கப்பட்டு விட்டது.இராணுவ குடியி ருப்பு களும், சிங்கள மக்கள் குடியேற்றமும், தமிழர்களின் தொன்றுதொட்டு வாழ்ந்த பூர்வீக மண்ணில், அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உருவாகி விட்டன.
தமிழர்கள் நிலத்தின் மீது உரிமை கொண்டாடும் சிங்கள அரசு,அந்த மக்களை அந்நாட்டுக் குடிமக்கள் என்று கருதுவதில்லை. ஏதோ பகை நாட்டு மக்களைப் போல நடத்துவது தொடருகிறது. வீடு, வாசல் இழந்து பெண்டு பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு, வளமும், செல்வமும் கொட்டிக்கிடக்க வாழ்ந்த தமிழர்
குடும்பங்கள் நாடோடிக் கூட்டம் ஆக்கப்பட்டு விட்டன. தங்கள் மண்ணில் தலைசாய்த்து படுக்கக்கூட தமிழனுக்கு ஒரு இடம் இல்லை.போரில் தமிழனை வெற்றிகொண்ட வெறி, நான்கு ஆண்டுகள் ஆன பிறகும், சிங்கள ஆதிக்கத் தின் கொடுமைகள் நீடிக்கின்றன.
தமிழீழத்தை அழித்த சிங்கள இராஜபக்சேவுக்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த காங்கிரஸ் கூட்டணி அரசில், பதவி பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு
தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த கருணாநிதி,இன்னமும்ஈழத்தமிழர் படு கொலை, தமிழர்கள் நினைவுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்கின்றார்.
ஈழம் என்ற வார்த்தையைக்கூறினாலே,தமது துரோகம் தமிழர்களின் நெஞ்சில் நெருப்புக் கனலை உருவாக்கும் என்றுதான் கருணாநிதி அதை மறக்கச்செய்ய வேண்டும் என்று நாடகம் ஆடுகிறார்.
தமது 90 ஆவது பிறந்தநாள் விழாக்கொண்டாட்டங்களில் பல நிகழ்ச்சிகள் நடந் த போதும், 3 ஆம் தேதி பொதுக் கூட்டத்திலும் தமிழீழம் குறித்தோ, அந்த மக்கள் படும் இன்னல் குறித்தோ ஒரு வார்த்தை கூட கருணாநிதி பேசவில்லை ; மிக
கவனமாகத் தவிர்த்துவிட்டார்; இது கருணாநிதியின் நெஞ்சுக்கு அநீதி.
முதலில் பிறந்தநாள் கொண்டாட எப்படி மனம் வருகிறது இவருக்கு?இப்போது மட்டுமா? 2009 மே 17, 18, 19 ஆம் தேதிகளில் முள்ளி வாய்க்காலில் தமிழர் பிணங்கள் இலட்சக்கணக்கில் குவிந்து கிடந்தபோது, ஈழத்தமிழனின் இரத்த வாடை காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்த பொழுதில், தமிழனின் ஓலக் குரல், குற்றுயிரும் குலை உயிருமாக போர்க்களத்தில் காயம் பட்டவர்கள்,சிங் கள விமான குண்டு வீச்சில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், உயிர்காக் கும் மருத்துவம் இன்றி, மடிந்து கொண்டு இருக்கின்றார்கள் என்ற செய்திகள் வந்த பொழுது,மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறையான முள்வேலி முகாம்களில், விலங்குகளை விடக் கொடுமையாக அடைக்கப்பட்டுக் கிடக் கின்றார்கள் என்ற இதயத்தை சுக்குநூறாக்கும் தகவல்கள் மிதந்து வந்து கொண்டிருக்கிற வேளையில், 2009, ஜூன் 3 ஆம் தேதி அறிவாலயத்தில் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை வெகு விமரிசையாக நடத்திக் கொண்டிருந்த வர் கருணாநிதி.
முதலமைச்சர் பொறுப்பில் தாம் இருக்கும்போது,தமிழீழத்தில் தமிழ் இனத்திற் கு மிகப்பெரிய கேடு சூழ்ந்ததே, இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப் பட்டார் களே என்ற கவலையும், பதைபதைப்பும்,துடிப்பும் ‘தமிழ் இனத்தலைவர்’ பட் டம் சூட்டிக் கொண்ட கருணாநிதிக்கு இருந்திருக்கு மானால் 2009, ஜூன் 3 ஆம் தேதி, 85 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு மனம் இருந்து இருக்காது.
ஆனால், கருணாநிதி தமிழகம், ஈழத்தமிழர் படுகொலையைப் பற்றி நினைக்க வே கூடாது; குறிப்பாக தி.மு.க. தொண்டர்கள் உள்ளத்தில் ஈழம் இருந்துவிடக் கூடாது. தமது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூழ்கி திளைத்து விருந்துண் டு, விழா நினைப்பில் கிடக்க வேண்டும் என்று நினைத்தார்.
2009 ஜூன் 3 பிறந்தநாள் விழாவிற்கு முன்பு முரசொலியில் அவர் எழுதியதை வரலாறு மறந்துவிட முடியுமா?
தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு நியாயம் கற்பிக்க புறநானூற்றுப் பாடல் வரிகளை எடுத்து மடல் தீட்டினார் கருணாநிதி;
“ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈரம்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூ அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப் பண்பு இலாளன்;
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே” -புறநானூறு (194)
மேற்கண்ட புறநானூற்றுப் பாடலைத் தீட்டியவர் பக்குடுக்கை நண்கணியார் என்னும் புலவர். இதற்குப் பொருள் வருமாறு:
“ஒரு வீட்டிலே இழவு விழுந்து ‘சாப்பறை’ ஒலிக்கும்.மற்றொரு வீட்டிலே திரு மணத்தில் வாசிக்கின்ற கேட்பதற்கு இனிமையான மத்தள ஓசை முழங்கிக்
கொண்டிருக்கும், காதலருடன் கூடியிருக்கும் மகளிர் மலர் மாலையாகிய அணியைப் பூண்டு மகிழ்ந்து இருப்பார்கள்; காதலரை மாளக் கொடுத்த மகளிர்
துன்புற்று வருந்துவர். அவர்களுடைய மையுண்ட கண்கள் குளிர்ந்த நீரைத் தொடர்ச்சியாகக் கொட்டிக்கொண்டே இருக்கும். அந்தப் பண்பற்ற பிரம்ம தேவன், நிச்சயமாகவே உலகத்தை இவ்வாறு படைத்து இருக்கின்றான். இவ்வு லகத்தின் இயற்கை கொடுமையானது; ஆதலால் இவ்வுலகின் இயல்பை
உணர்ந்தவர்கள்; நன்மை தரும் செயல்களைக் கண்டறிந்து செய்து இன்பம் அடைக.”
இதைத்தான் கருணாநிதி எடுத்துக் காட்டினார்.
தமிழீழத்தில் இலட்சக் கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கிடந்தா லும் அங்கு ‘சாப்பறை’ ஒலி கேட்டுக் கொண்டு இருந்தாலும், அறிவாலயத்தில்
இவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் மங்கள இசை ஒலி கேட்பதில் தவறு இல்லை;
இன்பமும், துன்பமும் உலக இயற்கை என்று, நெஞ்சில் துளி ஈரமும் இல்லா மல் 2009, ஜூனில் எழுதிய கருணாநிதி, நான்கு ஆண்டுகளாக கொஞ்சமும் வெட்கப்படாமல் வேதனைப் படாமல் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டு இருக் கின்றார். அவர் வாரிசுகளும் பிறந்தநாள் விழாக்களை நடத்தி ஏதோ ‘மன் னாதி மன்னர்’ குடும்ப வாரிசுகள் போல நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
2009, ஜனவரி 30 இல் தமிழ்நாட்டில் இன உணர்வு நெருப்பைப் பற்ற வைக்க, முத்துக்குமார் தன் உடலுக்கு நெருப்பு மூட்டி கரிக்கட்டை ஆனான்.அவன் உடல் சென்னை கொளப்பாக்கத்தில் கிடக்கின்றது. முன்பின் தெரிந்திராத அந்த வீரப்பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் திரண்டுவிட்டார்கள்.
உலகம் முழுதும், தமிழர் வாழும் இடம் எங்கும் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த அவன் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு இரங்கல் ஊர்வலம் நடத்துகின்றார்கள். களத்தில் கடைசி நேரம் வரை போராடிக் கொண்டிருந்த
மாவீரர் திலகம் பிரபாகரன் அருகிலே இருந்த இனமான கவிஞர் புதுவை இரத் தினதுரை கண்ணீர் கவிதையை எழுதி அனுப்புகிறார்.
“முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,
என அறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உந்தனது
ஈகம் அறிந்து எம்மிற் தீ பற்றுதே
நீட்டிக் கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலி எழுதும் என்னைச் சுற்றி
நூறு சடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்
சின்ன அக்கினிக் குஞ்சே!
உன் நெஞ்சில் இருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச் சோதிப் பெருவெளிச்சம்
எமக்குச் சக்தி தரும்
வைய வாசலை எமக்காகத் திறக்கச் செய்யும்
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டு உலுப்பும்,
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது”
ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய இந்த இரங்கல் பாவில் உள்ள வரிகளைப் போல முத்துக்குமாரின் மரணம் புயலாகி தமிழ்நாட்டைப்போட்டு உலுக்கியது. தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வீதிக்கு வீதி, தெருவுக்குத் தெரு போரை நிறுத்து என்ற போர் முழக்கம் டெல்லி யை அதிரச் செய்தது.
ஒட்டுமொத்தத் தமிழினமும் முத்துக்குமாருக்காக பதறி அழுது,சினத்தீ மூண்டு எழுந்த நேரத்தில், கருணாநிதி குடும்பம் மட்டும் கிடாவெட்டி அழகிரியின் பிறந் தநாள் விழாவை பிரம்மாண்டமாக நடத்தி, மதுரையில் விருந்து வைத்த னர்; எங்கே நடக்கும் இந்த அக்கிரமம்?
திராவிட இயக்கத்தின் பெருமைகளை சீர்குலைத்து வரலாறு நம் மீது வசை பாடுகிற இழிநிலையை உருவாக்கி உள்ள கருணாநிதியின் இனத்துரோக அரசி யலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் விரைந்தோடி வந்து கொண்டு இருக் கின்றது.
நன்றிகள்
கட்டுரையாளர் :- ஈழ வாளேந்தி
வெளியீடு :- சங்கொலி

மங்கள ஒலி சாப்பறை புறநானூறு இலக்கியம் மழுப்பல் திமுக மதிமுக வைகோ ஊடகம் சான்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக