திங்கள், 10 பிப்ரவரி, 2020

முக்குவர் பற்றி பரதவர் போல பழமை குகன் முற்குகர் ராமாயணம்


aathi1956 aathi1956@gmail.com

திங்., 6 ஆக., 2018, பிற்பகல் 5:56
பெறுநர்: எனக்கு
விக்ரமாதித்ய பாண்டியன் , Suresh N மற்றும் 26 பேருடன் இருக்கிறார்.
முக்குவர் வரலாறு:
யார் இந்த முக்குவர்?
பரவலாக சேர மண்டலத்தில் வாழ்கிறார்கள். பரவர்களோடும் அவர்கள் அருகிலும் சேர்ந்தே வாழ்கிறார்கள். இவர்களுடன் பரதவர்கள் திருமண உறவு வைப்பதில்லை. இவர்கள் இருவரின் வம்ச வழிகள் அப்படியே இரு வேறு வழிகள். எப்படி?
முக்குவருக்கு மாதா வழி. அதாவது தாய் வழி. அவர்கள் பூர்வீகத்தை மூதாக்கள் என்பர். திபத்திய (Tibet) திருமண உறவை போலான உறவை கொண்டுள்ளனர். ஒரு தாய்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் சட்டப்படி இருக்கலாம்.. (பஞ்ச பாண்டவர் போல) இதற்கு சான்று சேர மருமக்கள் வழி .
மருமக்கள் மான்மியம் :
கேரளத்தில் எப்போதென்று அறியமுடியாத காலம் முதலே மருமக்கள் சொத்துரிமை முறை இருந்து வருகிறது. இது தாய்வழிச் சொத்துரிமை முறையின் இன்னொரு வடிவம். சொத்துரிமை முழுக்க முழுக்க பெண்களுக்கு இருந்தது. பெண்களின் சொத்துக்கு நிர்வாகியாக , உரிமை இல்லாதவராக, அவர்களின் மூத்த சகோதரர் இருந்தார். அவர் காரணவர் என்று அழைக்கப்பட்டார். பெண்களின் சொத்து அப்பெண்களின் பெண்களுக்கே செல்லும். மகன்களுக்குச் செல்லாது. அந்த மகன்களுக்கு மகள் இருந்தால் அவளுக்குச் செல்லும். அரசுரிமை போன்ற ஆண்கள் வகிக்கும் பதவிகள் காரணவராக இருக்கும் மாமனில் இருந்து மூத்த சகோதரியின் மூத்த மகனுக்குச் செல்லும்.
பரதவர்களுக்கு தந்தை வழி. ஆக யார் இந்த முக்குவர்?
இவர்கள் ஆதி குடியாகிய முற்குகர் இனத்தவர். இவர்களும் பரதவரோடு அயோத்தி கலிங்கம் பகுதியில் இருந்து ராமநாடு கடலோரமாய் ஏழு அரசர்களாய் ஆண்டு பின்னர் இலங்கையை பிடித்து ஆண்டுள்ளனர்.
சான்று:
இராமணனின் "நான்கு சகோதரருடன் ஐவரான" குகன் குலம் என்ற பெயரில் கார்த்திகை மைந்தனான முருகப்பெருமானின் திருப்பெயரில் உள்ள குலமான குகன். முற்குகர் என்று திரிபுபட்டு முக்குவர் என வழங்கியது.
முற்குகர்கள் இந்தியாவில் அயோத்தி,கலிங்கம் ஆகியவற்றிலிருந்
து வந்தார்கள் என கல்வெட்டு பாடல்களில் குறிக்கபடுவதை புரம் தள்ள முடியாது. மட்டகளப்பில் முன்பு ஆட்சி செலுத்திய கலிங்க் அம்மன்னர்களின் பரம்பரையினரே முற்குககுல மன்னர்கள் என்று கூறப் பல சான்றுகள் உள்ளன.
மறவர்களில் நெடுநாள் முன்னேயே கடல் கடந்து சென்று பிறநாடுகளில் குடியேற்றங்களை ஏற்படுத்தி அப்படி அங்கே வாழும் ஒருவகை வீர மரபினரே முற்குகர்கள்
வெள்ளைக்காரகளின் ஆட்சி காலத்தில் "முற்குகரின் சட்டம்" அடியோடு அழித்தொழிக்கப்பட்டது. இவர்களால் குடியேற்றப்பட்ட புதுக்குடியேற்ற அடிவருடிகளால் முற்குகர் ஆதி மதமான சைவ மத்திலிருந்து மாறமாட்டோம் மதமாற்றும் வேலையை முற்குகர் மக்களிடே பரப்பினர்
முக்குவர் வம்சம்:
"மதிவேவு உலகுபுகழ் தசராதன் வரும் ராச மரபில்
உயர் குகசேனன் வம்சமுடி சிரசில் அனியும்
மலர்வேவும் கழி சூழ் ராமனாடரசாண்ட மறவர் குல
மாதரெழுவர் வடநாடு விட்டு இலங்காபுரியில் வருவேளை-மனமகன் சிறைகளும் உறவினர்கள்
ஆறுகுடிகள்-மணிமேவு இராமேஸ்வரத்துதிகள் செய்தபின்
மாலோட மீதேறியே வள்ராழி தாண்டி வெகு அநுரதன் அடலோடு வளர்
நகரமேவி வரவே வசைபட்ட மாது.... மறவர் குலமாதொரொடு
வன்னியரில் ஐந்துகுடி வந்தமுறைவந்தம்மா பதிமேவுமுங்கள் மரபே.....
ஓதமொழி பரராசர் மரபிலுயரும்,படர் நாகக்கொடி உயர்
அத்தினாபுரம் பாண்டு மகராசர் மரபாம்
பண்டு கமத்தொழில் என்றுஞ்ச செய்துண்டு வந்தகுலம்........... அவரவர் கனவருடனே கலைதங்கு ஏழு பெண்கள் நாமமாவது
கலைவஞ்சி,வீரம்மை,மங்கியம்மை,கள
பமுலை
செட்டிச்சி,மகிழம்மை,நாச்சியம்ம
ை,வீரம்மை,பாலம்மை..
முற்குகர்குடிகள் தாய்வழி மூலமே ஏற்பட்டு இன்றும் அவ்வாரே நடைமுறியில் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிரித்து பெருகியவர்களின் சந்ததிகளே இன்றும் ஒவ்வோரு குடியினராக இருக்கின்றனர். இவ்வாறு ஒரே குடியாய் இருப்பவர்கள் தங்களைச் சகோதரர்களாக எண்ணி அவ்வாரே நடைமுறியிலும் செயற்பட்டு வருகின்றனர். இதனால் ஒரே குடியினருக்குள் திருமன உறவுகள் நடப்பதில்லை.
முற்குகர்கள் தமிழக இராமநாதபுரம் மறவர்களுக்கும் தொடர்பு உள்ளதை நோக்குக...
இந்த முக்குவர் நம் தமிழ் ஆதி குடியும் .. பரதவரை போன்ற தொன்மத்தை உடையவரகள் என்பதை மகிழ்வோடு பகிற்கிறேன்....
மேலும் விபரங்களுக்கு:
http://www.thevarthalam.com/முற்குகர்-என்னும்-குகன்/
நேற்று, PM 2:21

கேரளா மலையாளி தமிழ்ச்சாதி மீனவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக