திங்கள், 10 பிப்ரவரி, 2020

கேரளா காடு அழிப்புதான் வெள்ளம் வர காரணம்

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 19 ஆக., 2018, முற்பகல் 11:15
பெறுநர்: எனக்கு
மனிதர்களின் பேராசையே கேரளாவின் அழிவு நிலைக்கு காரணம்?

லங்காசிறிக்கு செல்ல
மேலதிக செய்திகளுக்கு
முகப்புக்கு செல்ல
முக்கிய செ... பிரபலமானவ...
வீடியோ கட்டுரைகள்
இணையத்தி... நேற்று அதி...
இந்தவாரம் அ... 124
SHARES 124
SHARES
#Kerala Floods

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்ததற்கும், அந்த மழையால் கடுமையான சேதம் ஏற்பட்டதற்கும் சூழியல் மோசமடைந்ததும், சுற்றுச்சூழல் கொள்கைகளையும் முறையாகக் கையாளாமல் விட்டதுமே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியபகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் வருகிறது.
மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தமலைப்பகுதியில் மனிதர்களின் பேராசை, பணம் ஈட்டும் நோக்கம், வர்த்தக நோக்கத்தில் இயற்கையை சூறையாடியதன் விளைவுதான் இன்று கேரளாவில் நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்ற மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது.
கட்கில் குழு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியைப் பாதுகாப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக சுற்றுச்சூழல் ஆர்வலரும், விஞ்ஞானியுமான மாதவ் கட்கில் தலைமையில் குழு அமைத்தது.
கட்கில் தலைமையிலான ஆணையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஆய்வு செய்து கடந்த 2011-ம்ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் மேற்குதொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளையும், கடைப்பிடிக்க வேண்டிய கடினமான விதிமுறைகளையும் வகுத்திருந்தது.
அந்த அறிக்கையில், 1.40 லட்சம் கி.மீ கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை கட்கில் ஆணையம் 3 பிரிவுகளைப் பிரித்து ஒவ்வொரு பிரிவுகளையும் எப்படி பாதுகாக்க வேண்டும், எந்தெந்த இடம் எதற்குமுக்கியத்துவம் வாய்ந்தது, எந்தப் பணிகளைச் செய்யலாம், எந்த பகுதியில் மட்டும் மக்கள் வசிக்கலாம்என்பதைப் பட்டியலிட்டது.
குறிப்பாக வளங்களை அழித்து, சுரங்கம் தோண்டுவது, கல்குவாரிகளை அமைப்பது, மரங்களை அழித்துபெரிய கட்டிடங்களைக் கட்டுவது, ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் அமைப்பது போன்றவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏறக்குறைய 64 சதவீத பகுதிகளை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அந்தஆணையம் அறிவித்தது
எதிர்ப்பு
ஆனால், இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த அப்போது கேரளாவில் ஆட்சியி்ல இருந்த காங்கிரஸ்அரசு கடுமையாக எதிர்த்தது. அதிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்து வந்த ஒரு குறிப்பிட்டமதத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்த்தனர், தங்களின் வாழ்விடம் பாழாகிடும், விவசாயம் பாதிக்கும் என எதிர்ப்புத் தெரிவித்தனர். கேரளாவில் உள்ள வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களும்எதிர்த்தனர்.
மக்களின் நலனுக்கு விரோதமாகவும், களச்சூழலையும் புரிந்து கொள்ளாமல், முற்றிலும் இயற்கைக்குச் சார்பான முறையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று விமர்சிக்கப்பட்டது.
பொறுப்பற்றதனத்தோடு அனைத்துச் சுற்றுச்சூழல் கொள்கைகளையும் கையாண்டால் இப்படித்தான் நேரும். இந்த பாதிப்புகள் அனைத்தும் இயற்கையில் ஏற்பட்டவை அல்ல. மனிதத்தவறுகளே அனைத்துக்கும் காரணம்.
மனிதர்களின் பேராசை, வனங்களையும், இயற்கைகயையும் அழித்ததே காரணம். அதிலும் குறிப்பாகக் குவாரிகளை வனப்பகுதிகளில் செயல்படுத்தியதே நிலச்சரிவுக்கும், மலைப்பகுதியில் மண் சரிவுக்கும்காரணம் என கட்கில் ஆணையம் தெரிவித்துள்ளது.

இயற்கை பேராசை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக