வியாழன், 1 நவம்பர், 2018

வாழப்பாடி ராமமூர்த்தி முத்துக்கருப்பன் ராஜினாமா ஒப்பீடு


aathi1956 aathi1956@gmail.com

ஏப். 6, வெள்., முற்பகல் 9:31
பெறுநர்: நான்
காவிரிப் பிரச்னைக்காக முத்துக்கருப்பன் தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். டெல்லியில் தமிழர்களுக்காக எதிர்ப்புக் குரல் கொடுக்க ஒருவராவது இருக்கிறாரே என்று தமிழகமே முத்துக்கருப்பனைக் கொண்டாடியது. முத்துக்கருப்பன், தமிழகத்தின் சொத்து என சமூக வலைதளங்கள் போற்றிப் புகழ்ந்தன. இன்னொரு கொடுமை என்னவென்றால், காவிரிப் பிரச்னைக்காக, தான் வகித்துவந்த மத்திய அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்த வாழப்பாடி ராமமூர்த்தியுடன் ஒப்பிட்டதுதான்.


உண்மையில், தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்த ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால், அது வாழப்பாடி ராமமூர்த்திதான். 1991-ம் ஆண்டு, மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அந்தக் காலகட்டத்தில், காவிரிப் பிரச்னை தீவிரமடைந்தது. கர்நாடகாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். பெங்களூரு, மைசூரில் பெரும் கலவரம் வெடித்தது.  நரசிம்மராவின் அமைச்சரவையில், தொழிலாளர் துறை இணையமைச்சராக வாழப்படி ராமமூர்த்தி இருந்தார்.

கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது. கர்நாடக முதல்வராக பங்காரப்பா இருந்தார். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு, தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாழப்பாடி ராமமூர்த்தி,1992-ம் ஆண்டு, தன் அமைச்சர் பதவியைத்  துச்சமெனத் தூக்கி எறிந்தார்.  நரசிம்மராவே வாழப்பாடியிடம் இருந்து இத்தகைய அதிரடியை எதிர்பார்க்கவில்லை. பதவிக்காகத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகத்தை சகித்துக்கொண்டு அமைச்சரவையில் தொடர அவர்  விரும்பவில்லை. பின்னர், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வாழப்பாடி விலகினார்.

இப்போதோ, 'முதலில் நீங்கள் ராஜினாமா செய்யுங்கள் அப்புறம் நாங்கள் செய்கிறோம்' என்று சொல்கிறார்கள். உச்சகட்டமாக ராஜினாமா நாடகத்தை முத்துக்கருப்பன் எம்.பி அரங்கேற்றினார். பொதுவாக, எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வெற்றுக் காகிதத்தில் தன் சொந்தக் கையெழுத்தில் 'நான் ராஜினாமா செய்கிறேன்' என்று எழுதிக் கொடுத்தால் போதுமானது. தாளில் டைப் செய்து கொடுத்தால் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாது. முத்துக்கருப்பன் எம்.பி தன் ராஜினாமா கடிதத்தை தாளில் டைப் செய்து எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்திருந்தாலும் நிராகரிக்கப்பட்டிருக்கும்.
காவிரி விவகாரத்தில் நமது  எதிர்ப்பைத் தெரிவிக்க, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு  மக்கள் பிரதிநிதிகூட டெல்லியில் இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது!

கன்னடர் காவிரி காவேரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக