|
ஏப். 7, சனி, பிற்பகல் 1:02
| |||
வேளாளர்
நேற்று, 06:38 PM க்கு ·
தனியுரிமை: பொது ·
அறிவிப்புகளைப் பெறு
தமிழ்க்குடிகளின் தோற்றமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மீட்டெழுச்சியும்
வேளாளர் இரண்டு பெரும் பிரிவாக பிரிந்த காரணம் என்ன?
தமிழர் வரலாற்றில் மருதநில உருவாக்கமும் அதன்பிறகு நடந்த வன்புல மக்களின் மருதநிலம் நோக்கிய நகர்வும் முக்கியமானவை. சங்ககாலத்தின் நடுக்கட்டம் வரை கீழுள்ள மூன்று இனக்குழுக்கள் மருதத்தின் தோற்றுவாய் காலம் தொட்டு இருந்த குடிகள். அவை
1. உழவர்
2. கடையர்
3. மள்ளர்
மருதநிலம் சங்ககாலத்தின் இறுதிக்கட்டத்தில் வன்புலத்தில் இருந்து இன்னும் இரன்டு அறுவடை சார்ந்த சமூகங்களை உள்வாங்கிக்கொண்டது. அவை எவை என்பதை நூலில் விளக்குகிறேன்.
சங்கநூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் காராளர் என்னும் உழுதுண்ணும் ஒரு குழு உருவாவதை காண்கிறோம். இந்த குழு கீழுள்ள இரண்டு சமூகங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை.
அவை,
1. உழவர், கடையர், மள்ளர் போன்ற அடிப்படை மருதநில குழுக்கள்
2. வன்புலத்தில் இருந்து மருதநிலம் நோக்கி நகர்ந்த இரண்டு அறுவடை சமூகங்கள்.
1. உழவர், கடையர், மள்ளர் போன்ற அடிப்படை மருதநில குழுக்கள்
2. வன்புலத்தில் இருந்து மருதநிலம் நோக்கி நகர்ந்த இரண்டு அறுவடை சமூகங்கள்.
முதலாம் பாண்டியப்பேரரசு முடியும் வரை
1. உழவர், கடையர், மள்ளர் போன்ற அடிப்படை மருதநில குழுக்களும்
2. வன்புலத்தில் இருந்து மருதநிலம் நோக்கி நகர்ந்த இரண்டு அறுவடை சமூகங்களும்
3. காராளர் என்ற சங்கம் மருவியகாலத்தில் தோற்றம் பெற்ற குழுவும் இயங்கிவந்தன.
முதலாம் பாண்டியப்பேரரசு முடிந்ததும் சோழப்பேரரசு தலை தூக்குகிறது. அப்போது வெள்ளாளர் என்னும் இன்னொரு குழு உருவாவதை காண்கிறோம். இவை மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகை சமூகங்களில் இருந்தும் உருவானது. இந்த நான்கு வகை குழுக்களும் இரண்டாம் பாண்டியப்பேரரசு முடியும் வரை நீடித்து வந்தது.
காலப்போக்கில் உழவு சார்ந்த உழவர் கடையர் இரண்டு சமூகங்களும் வன்புலத்தில் இருந்து மருதநிலம் நோக்கி நகர்ந்த இரண்டு அறுவடை சமூகங்களும் மேற்குறிப்பிட்ட மற்ற சமூகங்களில் எதாவது ஒன்றில் கரைந்தன. அதனால் மீதம் நிலைத்திருந்ததில் மள்ளர், காராளர், வெள்ளாளர் மட்டுமே மிஞ்சியிருந்தன.
இந்த மூன்று பிரிவிலும் இரண்டு வகை நிலங்கள் இருந்தது.
ஒன்று கோயில் சாராத மக்களுடையதும் அமைப்புகளுடையதும் ஆகும்.
மற்ற ஒன்று கோயிலுக்கு உடைய நிலங்களாகும்.
இந்த சூழலில் தான் தில்லி சுல்தான்களின் படையெடுப்பு நடக்கிறது.
ஒன்று கோயில் சாராத மக்களுடையதும் அமைப்புகளுடையதும் ஆகும்.
மற்ற ஒன்று கோயிலுக்கு உடைய நிலங்களாகும்.
இந்த சூழலில் தான் தில்லி சுல்தான்களின் படையெடுப்பு நடக்கிறது.
அதை உடைக்க பிராமணர்களால் விஜயநகரப்பேரரசு உருவாக்கப்பட்டது. விஜயநகரப்பேரரசு வைணவ மதத்தை அடிப்படையாக கொண்டது.
கோயிலை அடிப்படையாக கொண்ட சமூகங்கள் பெரும்பாலும் சைவ மதம் சார்ந்த வெள்ளாளர்களின் நிலங்களை கொண்டவை.
கோயில் நிலங்கள் மீது கைவைக்கப்பட்டால் அது அநாபாயச்சாளுக்கியன் காலத்தில் ஏற்பட்ட சைவ வைணவ சண்டை போல் அமைந்து அதை பயன்படுத்தி தில்லி சுல்தான்கள் மீண்டும் தமிழ்நாட்டில் படையெடுத்து வெற்றி பெறக்கூடாது என்பதால் விஜயநகரப்பேரரசு கோயில் நிலங்களை விட்டுவிட்டு கோயில் சாராத நிலங்களை கைப்பற்றியது.
கைப்பற்றியதோடு நில்லாமல் ஆந்திரா தெலுங்கானா பகுதிகளில் விஜயநகரத்தாரால் தோற்கடிக்கப்பட்ட ஆதி ஆந்திர மக்களை அந்த நிலங்களில் கூலிகளாய் நியமித்தனர்.
நிலமும் போய் அங்கு வேலைபார்க்கும் பிழைப்பும் போனதால் கைப்பற்றப்பட்ட நிலங்களின் சொந்தக்காரர்களான உழவு சார்ந்த குழுக்கள் கோயில் நிலங்களில் வேலை பார்க்க நகர்ந்தார்கள்.
அதுவரைக்கும் கோயில் நிலங்களில் வேலை பார்த்த அதன் சொந்தக்காரர்கள் வேலைக்கு ஆள் கிடைத்ததால் அலுவல் பணிகளை மட்டும் கொண்ட எளிமையான வேலைகளை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.
பிற்பாடு கடைசியாக பரங்கிப்பயல்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து ஆழ்கின்றனர். பரங்கிகாலத்தில் அலுவல் காரியங்களை நோக்கி நகர்ந்த கோயில் சார்ந்த நில உரிமையாளர்கள் பரங்கிகளின் அரசுப்பணி வாய்ப்பை பெற்று அலுவல் பணி போன்ற உடல் உழைப்பு அதிகம் இல்லாத பணிகளை மேற்கொள்கின்றனர்.
இரு நூற்றாண்டுகளாகவோ அதற்கும் மேலாகவோ உழவை மறந்தே போன இந்த குழுக்கள் இருபதாம் நூற்றாண்டின் கூலி வேலை பற்றாக்குறையால் நிலங்களை அதில் வேலைபார்த்தவர்களுக்கே விலைக்கு விற்று நகரமயமாக்கலுக்குள் பெருமளவு வீழ்ந்து இன்று நிலமே அல்லாத சமூகமாய் 75 விழுக்காடு மாறியாகிவிட்டது.
இருபதாம் நூற்றாண்டின் நவீன வர்ணாசிரமமான பொதுப்புத்தி எஃப்.சி. = உசந்த சாதி, பிசி = இடைச்சாதி, எஸ்சி = தாழ்ந்த சாதி என்ற மாயை தமிழர்கள் அனைவருக்குள்ளும் ஊட்டப்படுகிறது.
அதன் விளைவு தான் மருதநிலத்தை உருவாக்கிய பள்ளர்களின் உண்மையான வரலாற்றை அறியாமல் அவர்களை வெள்ளாளர் என்ற பெயரை வைக்கவிடமாட்டோம் என்று தேவையின்றி புலம்பி வருகின்றன மற்ற வெள்ளாளர் குழுக்கள்.
பதிமூன்றாம் நூற்றாண்டுவரை பறையர் மள்ளர் போன்ற சமூகங்களில் இருந்து வெள்ளாளர்கள் உருவானதற்கான சான்றுகளே படங்களில் உள்ள கல்வெட்டுகள்.
அதனால் மள்ளரை வெள்ளாளர் பெயர் போடவிடக்கூடாது எனக்கூறும் மற்ற வெள்ளாளர் அமைப்புகளின் கோரிக்கை நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தால் நான் மட்டும் தரும் கீழுள்ள கல்வெட்டு சான்றுகளை வைத்தே நீதிமன்றம் அதை எளிதாக நிராகரித்துவிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கே இத்தனை சான்றுகள் இருக்கிறதென்றால் தேவேந்திர குல வெள்ளாளர் இடத்தில் இன்னும் பல சான்றுகள் இருக்கலாம். அதனால் உண்மையை புரிந்து கொண்டு தேவேந்திரர்கள் அவர்கள் வழியில் செல்ல நல்ல வெள்ளாளர்கள் அனைவரும் உதவ வேண்டும்.
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கவும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவமானப்பட வேண்டுவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். -
தென்காசி சுப்பிரமணியன் (Tenkasi
Rajasubramanian )
Rajasubramanian )
அருஞ்சொற்பொருள்
1. வேளாளர் - காராளர் வெள்ளாளர் இருக்குழுக்களுக்கும் பொதுப்பெயர்
2. காராளர் - நிலவுரிமை கொண்டோர். விளைபொருட்களை வணிகம் செய்ய உரிமை கிடையாது. அதாவது உழுதுண்போர்.
3. வெள்ளாளர் - நிலவுரிமை கொண்டோர். விளைபொருட்களை வணிகம் செய்ய உரிமை உண்டு. அதாவது உழுவித்துண்போர்.
"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
பள்ளக் கணவன்" - முக்கூடற் பள்ளு
பள்ளக் கணவன்" - முக்கூடற் பள்ளு
இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் மள்ளன் சிறியன்
- கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, தொடர் எண் : 138 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).
- கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, தொடர் எண் : 138 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).
Viswanathan Chozhlan மற்றும் 54 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
நண்பர்களைக் குறிப்பிடவும்
Rajasubramanian Sundaram Muthiah
சுப்ரமணி ஜி அவர்களே வணக்கம்.
நீங்கள் உங்கள் யூடியூப் சேனலில் தேவேந்திர குலத்தாரை வேளாளராக ஏற்போமா என்ற தலைப்பில் காணொளி விட்டிருந்தீர்கள். அதில் அவர்கள் அதற்கான சான்றளித்தால் அதை ஏற்பதாக சொன்னீர்கள். அதனால் அதே யூடியூப் சேனலில் கீழுள்ள முக்கூடற்பள்ளு பாடலையும் இடிகரை கல்வெட்டையும் காட்டி அதில் உண்மை உள்ளதால் அதற்கு ஆதரவு தருகிறேன் என்று நீங்கள் காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
இந்த பாடலுக்கான இலக்கிய வரிகளும் கல்வெட்டு அறிக்கையும் நூல்களில் இருந்து ஸ்கிறீன்சாட்டு எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
பள்ளக் கணவன்" - முக்கூடற் பள்ளு
இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் மள்ளன் சிறியன்
- கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, தொடர் எண் : 138 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).
"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
பள்ளக் கணவன்" - முக்கூடற் பள்ளு
இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் மள்ளன் சிறியன்
- கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, தொடர் எண் : 138 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக