வியாழன், 1 நவம்பர், 2018

காவிரி பிரச்சனை பின்னணி பெங்களூர் ஐடி மற்றும் கார்ப்பரேட்

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 3, செவ்., பிற்பகல் 8:12
பெறுநர்: நான்
காவிரி நீர் சிக்கலில் இத்தகைய தீர்ப்பை வழங்கியதற்கு நடைபெறவுள்ள கர்னாடகாவின் சட்டமன்றத் தேர்தல் காரணமல்ல. தேர்தல் முடிந்துவிட்டாலும் தீர்ப்பானது மாறப் போவதில்லை. கர்னாடகாவின் தலைநகரமான பெங்களூரூவை தலைமையகமாக உடைய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நலனே இத்தீர்ப்புக்கு முதன்மை காரணியாகும். பெங்களூரூவை தலைமையகமாக கொள்ளாத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அங்குதான் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்ட அலுவலகங்களை அமைத்திருக்கின்றன. இந்நிறுவனங்கள் முதலில் இங்கு அல்லது இந்தியாவின் ஏனைய பகுதிகளில் செயற்படத் தொடங்கி பின்னர் தமது சந்தையான அமெரிக்கா போன்ற நாடுகளில் தமது அலுவலகங்களை திறந்தது போய் அத்தகைய நாடுகளிலேயே இதே துறையில் முதலீட்டை மேற்கொண்டு வேறு நிறுவனங்களையும் வாங்கத் தொடங்கிவிட்டன. அது மட்டுமல்லாமல் இந்நிறுவனங்களில் முதல் சில இடங்களில் இருக்கும் நிறுவனங்களின் விற்றுமுதலானது(turnover) சில இலட்சக் கோடிகள் ஆகும். இந்நிறுவனங்களின் முதலாளிகளில் ஒருவரான அசிம் பிரேம்ஜி போன்றோர் மிகப் பணக்கார இந்தியர் என்ற பட்டியலில் முதல் அல்லது முதல் சில இடங்களில் வரக்கூடியவர். இத்தகைய முதலாளிகளின் நலனே முதன்மையாக இத்தீர்ப்புக்கு பின்னுள்ளது. இன்னொரு புறத்தில் தமிழகத்தின் காவிரி மண்டல பகுதிகள் பெட்ரோல் இரசாயன மண்டலமாக மாற்றுவதற்கு தமிழக காவிரி மண்டல பகுதியில் நீர் இல்லாமல் இருந்தால் அதற்கு ஏதுவாக இருக்கும். இக்காரணியும் இத்தீர்ப்புக்கு பின்னுள்ளது. இந்தியா தனது தேவையில் கச்சா எண்ணெய்யையும் இயற்கை எரிவாயுவையும் திரவ எரிவாயுவையும்  75 விழுக்காட்டிற்கும் மேல் இறக்குமதி செய்துவரும்போதே உலகெங்கும் இந்தியப் பெருமூலதனம் பரந்து விரிந்து வருகிறது. மேற்காண் இறக்குமதிக்கு அன்னிய செலாவணியானது அதிகமாக செலவாகிறது. தமிழக காவிரி மண்டலத்தை கச்சா எண்ணெய், ஷேல் எரிவாயு ஆகியனவற்றை தோண்டியெடுக்கும் மண்டலமாக மாறிவிட்டால் அன்னிய செலாவணி பெரியளவில் மிச்சமாகும். இதனால் இந்தியப் பெருமூலதனமானது முன்பை விட உலகெங்கும் பரந்து விரியும். அதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் நோக்கம். தமிழகத்திலிருந்து வளர்ந்து இந்தியா மற்றும் உலக அளவி்ல் சென்றுள்ள HCL என்ற குழுமமானது பெங்களூரூவில் முதன்மையான அலுவலகத்தை கொண்டுள்ளதால் அது இத்தீர்ப்பை வரவேற்கவே செய்யும். அதே போல் தமிகத்தைச் சேர்ந்த டிடிகே குழுமத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமானது பெங்களூரூவை தலைமையகமாக கொண்டுள்ளதால் அதுவும் இத்தீர்ப்பை வரவேற்கவே செய்யும். அத்துடன் தமிழகத்தை தலைமையகமாக உடைய டிவிஎஸ் குழுமமும் இத்தீர்ப்பை வரவேற்கவே செய்யும். ஏனெனில் அக்குழுமம் உற்பத்தி செய்யும் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல், ஷேல் எரிவாயு ஆகியன காவிரி மண்டலத்திலேயே அவை அதிகமாக விற்பனையாகும். இவ்வாகனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ரானே, சக்தி மோட்டார்ஸ் ஆகிய குழுமங்களும் இத்தீர்ப்பை வரவேற்கவே செய்யும். இவ்வாகனங்களை வாங்குவதற்கு கடன் வழங்கும் ஸ்ரீராம் குழுமமும் இத்தீர்ப்பை ஆதரிக்கவே செய்யும். மேற்காண் HCL, TTK, TVS, Rane Motors, Sakthi Motors, Sri Ram group ஆகியன தமிழகத்திலிருந்து வளர்ந்து இந்தியா மற்றும் உலகளவில் விரிந்துள்ள குழுமங்கள் ஆகும்.
               தமிழகத்திலிருந்து வளர்ந்து உலகெங்கும் சென்றுள்ள பல பெருமுதலாளிகளில் ஒன்றான அமல்கமேஷன் குழுமத்தின் TAFE நிறுவனத்தின் உற்பத்தி பொருளாக டிராக்டர் இருப்பதால் இத்தீர்ப்பை ஆதரிக்க வாய்ப்பில்லை. ஆனால் இக்குழுமத்தின் Simson, India Piston, Engine Valves போன்ற நிறுவனங்கள் இ்த்தீர்ப்பை ஆதரிக்கக்கூடிய டிவிஎஸ் குழுமத்திற்கு உதிரி பாகங்களை சப்ளை செய்வதால் தீர்ப்பை ஆதரிக்கவே செய்யும். அத்துடன் தமிழக ஆட்டோமொபைல் உதிரி பாக நிறுவனங்கள் இந்திய இராணுவ தளவாட உற்பத்திக்கான உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களாக மாற்றப்படுவதற்கு பாஜக அரசாங்கமானது defence corridorஐ தமிழகத்தில் எண்ணூர், ஆவடி, திருச்சி, கோவை, ஓசூர் ஆகியவற்றிீல் அமைக்கிறது. மேலும் தமிழகத்தின் 800 நுண், சிறு மற்றும் நடுத்தர ரக ஆட்டோமொபைல் உதிரி பாக நிறுவனங்கள் மேற்காண் defence corridorல் இடம் பெறுவதற்கு பாஜக அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளன. இந்நிறுவனங்களும் இத்தீர்ப்பிற்கு காரணமான பாஜகவை ஆதரிக்கவே செய்யும்.

காவேரி நதிநீர் பாஜக ஆறு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக