|
ஏப். 10, செவ்., பிற்பகல் 3:21
| |||
கூர்ங்கோட்டவர்
ஆதிச்சநல்லூர் கோட்டை:
ஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர் சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் 2005 ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்ப
ட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது.
ஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.
கோட்டைச்சுவரின் பரப்பளவை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.
நான் அனுமானித்த வரையில் ஆதிச்சநல்லூர் என்பது கடையர் வாழ்ந்த நகரமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் தான் நெய்தல் மருதம் இரண்டையும் கையாளத்தெரிந்தவராக இருந்தனர். இங்கு கிடைத்த பானையோடுகள் கருவாடு வைக்கும் பானையோடுகளாக இருந்திருக்க வேண்டும். தாழிகளுக்குள் நெல் கிடைத்துள்ளதால் வேளாண்மையும் அறிந்த மக்களாக இவர்கள் இருந்துள்ளனர். செப்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் உள்ளதால் இது கி.மு. 5000 தொட்டே செப்புக்காலம் நிறைந்த நகரமாக இருந்திருக்க வேண்டும். கோட்டைச்சுவர் பாசிமணி உருக்காலையையும் மக்கள் வாழிடத்தையும் பிரிப்பது போல் உள்ளதால் பெரிய பரப்பளவில் இருந்திருக்க வேண்டும். சிறிய நகரத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க தேவை இருந்திருக்காது. கோட்டையினுள் மக்கள் வாழிடம், கோட்டையை ஒட்டி பாசிமணி உருக்காலை, இடுகாடு இப்படி மூன்றாக பிரிக்கப்பட்டிருப்பதை பார்த்தால் கோட்டைநகரம் பெரிதாகவே இருந்திருக்க வேண்டும்.
ஆனால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு மண்ணடுக்குக்கு கீழ் ஆற்றுமணல் இருக்கும் கீழடியை பிடித்துக்கொண்டு அமர்நாத்து என்ற பௌத்த ஆதரவு ஆய்வாளரை புரட்சியாளர் போல் அடையாளப்படுத்தி வருகின்றனர் தமிழினத்துரோகிகள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னரே தமிழருக்கு எழுத்து வந்தது என்ற ஐராவதம் மகாதேவனின் அண்டப்புழுகு அடிபட்டு போனதால் அடுத்து பௌத்த சைன காலமே தமிழருக்கு நாகரிகம் வந்தது என்ற புதிய அண்டப்புழுகை உருவாக்க தான் அமர்நாத்துகள் பயன்படுத்தப்படு
கின்றனர். தமிழின வரலாற்று அழிப்பு வேலையில் முதலாளித்துவமும் அதன் ஃபேக்கு ஐடிகளான பொதுவுடமை, கிண்டியம், திராவிடம், தலித்தியம் போன்ரவையும் கூட்டுக்களவாணிக
ளாய் செயல்படுவதை ஆராய்ந்து பார்த்தால் உணரலாம். - தென்காசி சுப்பிரமணியன் ( Rajasubramanian Sundaram Muthiah )
36 நிமிடங்கள் ·

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக