|
ஏப். 6, வெள்., முற்பகல் 9:47
| |||
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு; அவமதிப்பு வழக்கு தொடர ஆலோசனை- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி
நாராயணசாமி
Published : 31 Mar 2018 08:23 IST Updated : 31 Mar 2018 08:23 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள கெடு முடிவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியிருக்கிறார்.
புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில், நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சிகளும் அழுத்தம் தந்து வருகிறோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும், பிரதமருக்கு இரு முறை கடிதம் எழுதியும், புதுச்சேரிக்கு பிரதமர் வந்தபோது நேரில் சந்தித்து வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக, சட்டநிபுணர்களுடன் டெல்லியில் ஆலோசித்துள்ளேன். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றார்.

காவேரி பாண்டிச்சேரி முதல்வர் முதலமைச்சர் நடுவணரசு மத்திய அரசு ஹிந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக