வியாழன், 1 நவம்பர், 2018

கிரிக்கெட் எதிரான போராட்டம் சிவசேனா ஆறுமுறை

aathi1956 aathi1956@gmail.com

11 ஏப்., 2018, பிற்பகல் 1:03
பெறுநர்: நான்
கதிர் நிலவன்
ஒரு செருப்பை காட்டி விருந்தாளியை அவமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு....
1991 : மும்பை வாங்கடே மைதானத்தின் ஆடுகளத்தை சேதப்படுத்தி, பின் தொடர்ந்து கலவரங்கள் செய்து அந்த டெஸ்ட் போட்டி மட்டுமல்ல முழு தொடரையும் ரத்து செய்ய வைத்தது RSSஇன் ஒரு அமைப்பான சிவசேனா.
1998: மஹாராஷ்ட்ராவில் பாஜக-சிவசேனா கூட்டாட்சி. அப்பொழுது மும்பை மைதானத்தில் நடக்கவிருந்த டெஸ்டையும் தனது கலவரங்களால் ரத்து செய்யவைத்தது.
1999: டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இந்திய-பாக்கிஸ்தான் அனியின் டெஸ்ட்டை நடத்த விடமாட்டோம் என்று சூளுரைத்தது RSSஇன் அங்கமான சிவசேனா. மீறி நடத்தினால் மைதானத்தில் விஷப்பாம்புகளை விடுவோம் என்றது. அந்த மிரட்டலுக்கு படியாத அரசு பலத்த பாதுகாப்புடன் டெஸ்டை நடத்தியது. இதற்கு எதிர்வினையாக மும்பை BCCI அலுவலகத்தை சூரையாடிய சிவசேனா, 1983ல் வாங்கிய உலகக்கோப்பையை சேதப்படுத்தியது.
மேலும் 2003, 2005, 2006 சாம்பியன்ஸ் ட்ராஃபி இப்படி RSSஇன் அங்கமான சிவசேனா எதிர்க்காத போட்டிகளே இல்லை.
இந்த வரலாறு கொண்ட RSSஇன் சங்கி கும்பல் இங்கே IPL தடைகோருவதை எள்ளி நகையாடுகிறது.
மராட்டியன் செய்தால் உரிமை போர் !! தமிழர்கள் செய்தால் தேவை இல்லாத போராட்டம் !! இனி உங்களிடம் கெஞ்ச போவதில்லை எங்கள் உரிமைகளை நாங்களே மீட்டெடுப்போம்.
# கொற்கைவேந்தன் ( # தமிழர்களம் )

ஐபிஎல் IPL 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக