|
ஏப். 6, வெள்., முற்பகல் 9:31
| |||
 மரபு வழித் தமிழ்த்தேசியத் தக்கார் அவையம்
4-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் – 55
நாள்: 05.04.2018
தொடர் நாள்: 105
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----------------
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் நான்காவது முழுநிலவாகிய சித்திரை முழுநிலவு முறை முற்றாமல் தோல்வியுற்றது. கடந்த 01.04.2018-ல் அமைந்திருக்க வேண்டிய முழுநிலவானது 31.03.2018 அன்று முந்தித் தோன்றிய படியால் ஆண்டு நாட்களில் ஒருநாள் சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் இவ்வாண்டில் இதுவரை இரண்டு நாட்கள் குறைவு பட்டுள்ளன.
120, 240, 360 நாட்களின் நூல் எல்லை:-
ஓர் ஆண்டின் உட்கூடான 12 மாதங்களை முறையே 4 x 3 = 12 எனப் பகுத்தால் அவை 120 நாள், 240 நாள் மற்றும் 360 நாள் எனச் சுட்டி நிற்கும். இம் மூன்று எல்லைகளும் மூன்றாம் பிறை நாள் என்பதும், இவை கோத்தொழில் வல்லுநர்களால் 360 முத்துக்களைக் கொண்ட மாலை ஒன்றினை மூன்றாக மடித்துக் கணக்கிடப்பட்டன என்றும் கருத இடம் இருக்கிறது.
தை முதல் சித்திரை எல்லை வரை தலைப்பகுதி எனவும்
வைகாசி முதல் ஆவணி வரை இடைப்பகுதி எனவும்
புரட்டாசி முதல் மார்கழி வரை கடைப்பகுதி எனவும்
கணக்கிடப்பட்டிருக்கலாம்.
தலை, இடை, கடை:-
தலை, இடை, கடை என முறையே பகுத்துப் பார்க்கும் மரபு ஒரு சுழல்முறைச் செயலாகத் தெரிகிறது. மானசாரம் என்ற பெருந்தச்சு நூல் பிரதம பங்த்தி, மத்ய பங்த்தி, அந்திய பங்த்தி என முறையே ஒரு மாதத்தின் 30 நாட்களை மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு 10 நாளின் எல்லையிலும் முளைக்குச்சியின் நிழலை நூலால் அடித்து அளக்கச் சொல்கிறது. அவ்வகையில் ஓர் ஆண்டினை மூன்றாகப் பகுத்து மூன்று ‘தை’ முதன்மை கற்பித்திருக்கலாம் என்று கருதலாம்.
தமிழின் சிறப்பு ‘தகரம்’:-
தமிழில் ‘த’எனும் எழுத்து தலைமைப் பண்புடையது என்று தமிழறிஞர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த ஒலிப்பு தலை, இடை, கடை ஆகிய மூன்று நிலையிலும் எந்த ஒரு சொல்லிலும் அதன் தன்மை குன்றாது அமையும் என்பது உயர் ஆய்வுக்கு உரியது. இம்மூன்று நிலைகளில் எந்த ஒன்றிலேனும் தகரம் தனது பண்பில் நிலைதளருமாயின் அது இடம் பெற்றுள்ள சொல் தமிழ்ச் சொல் அன்று என்று அடித்துச் சொல்லலாம். தகர ஆகாசம், தகரலயம் என்பன ஓக மரபினரின் பாடல்களில் இடம் பெற்றுள்ளமை கருதத் தக்கது.
கடைநாள்:-
ஒரு நாளின் எல்லையைக் ‘கடைநாள்’ என்று அழைக்கும் வழக்கம் பழந்தமிழரிடையே இருந்திருக்கிறது.
வான் கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார் இருள் நின்ற கடைநாள் கங்குல் ………. (சிலம்பு – நாடுகாண் காதை 1-3)
முத்தை முதல்வி:-
மணிமேகலையில் ஒரு ‘குச்சரக் குடிகை’ என்ற கட்டுமான அமைப்பு பேசப்படுகிறது. அதனுள் சென்ற மணிமேகலை ‘உள்வரி’ எனும் பகுதியில் உரு மறைந்ததும், ‘மாய விச்சை மந்திரம்’ ஓதி உருவ மாற்றம் பெற்றதும், ‘மாவண் தமிழ்த்திறம்’ என்று புகழப்படுவதும் இந்த மூன்று ‘தை’ முதன்மை அறிந்த திருத்த முயற்சி என்று ஐயப் படலாம். அறத்தின் வித்து அதைச் செய்யும் என்று தமிழின் பெயரால் நம்பலாம்.
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சரக் குடிகை தன் அகம் புக்கு
(மணிமேகலை – உதயகுமரன் அம்பலம் புக்காதை, 144-145 – செம்மொழிநூல் பக்.-1415)
பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம்
மும்மையின் வணங்கி
(மணிமேகலை – உலகஅறவி புக்க காதை – 88-89, செம்மொழிநூல் பக்.-1412)
நிழல் நாள் சிறப்பு:-
சங்கு எனில் அது ‘முளைக் குச்சி’ என்று புரிந்து கொண்டால், அதன் நிழல் விழும் அடிப்பலகையை சங்கப் பலகை என்று இன்று புரிந்து கொள்ளலாம். தரையில் முளைக்குச்சி அறைந்தால் ‘நிழல்காண் மண்டிலத்தை’ நீர் மட்டமாக அமைக்க வேண்டும் என்று மானசாரம் கூறுவதைக் கருதிப் பார்த்தால், நேர்த்தியான மரப்பலகையின் மீது கூர்மையான ‘கணிச்சி’ ஒன்று சங்காகப் பொருத்தப் பட்டிருக்கலாம் என்று ஐயப்படலாம்.
தொங்கு நூல் பலகை:-
‘பிரலம்ப பலகா லட்சணம்’ என்ற ஓர் அத்தியாயம் பதப்பகுப்பு செய்யும் நுட்பம் பற்றியதும் ‘சித்’ ஆகாசம் பற்றிய நுட்பம் என்பதும் அதன் மறுதலை நிமிர்த்தலே இந்த சங்கப்பலகை ஆகிய சங்கும் பலகையும் என்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
சங்கம் இருப்பார்:-
ஆண்டாள் பாசுரம் ஒன்று அரிய செய்தியினைத் தருகிறது. உலகத்து அரசர்கள் எல்லாம் ஒன்று கூடி வந்து பேரரசனாகிய உனது பள்ளிக் கட்டிலின் கீழே அமர்ந்து முளைக்குச்சியாகிய சங்கின் நிழலை உற்றுப் பார்க்க வட்ட வடிவில் சூழ்ந்து கொள்வது போல, பிள்ளாய்! உன்னைத் துயில் எழுப்ப வந்து சூழ்ந்துள்ளோம் என்று குறிப்பிடுவதாகக் கூறலாம்.
அங்கன் மாஞாலத்து அரசர்
அபிமான பங்கமாய் வந்து
நின் பள்ளிக் கட்டிற்கீழ் அமர்ந்து
சங்கம் இருப்பார் போல்
தலைப் பெய்தோம் – ஆண்டாள் பாசுரம் – 22
இச்செய்தியை மேலோட்டமாக விட்டு விடாமல் ‘அடியிற்றன்ன அளவு அரசர்க்கு உணர்த்தி’ (மாநாகன் இனமணி 25) என்ற செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகைக் கற்பனை அன்று. பெரும்பயன் தொகுக்கும் தேஎம்கொள் கொள்ளை (மலைபடுகடாஅம் – 317) என்று கருதி மகிழலாம். (கொள்ளை – கொள்கையாக இருக்கலாம்)
முச்சங்கம்:-
இறையனார் களவியல் உரையில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் பற்றிய அரிய செய்திப் பதிவு உள்ளது. இதுவரை தமிழறிஞர்கள் இவற்றை ‘முளைக்குச்சியும் அதன் அடிப் பலகையும் என்று கருதிப் பார்க்கவில்லை.
தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலுக்காக ஒரு மாற்றுப் பார்வையில் இவ்வாறாக ஒப்பிட்டுப் பார்த்து சார்பற்ற நிலையில் ஆய்ந்திட வேண்டும் என்று மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் முதன் முறையாக இப்பதிவில் தமிழ் அறிஞர்களை வேண்டி நிற்கிறது.
பிழையெனில் இப்பார்வையைத் திரும்பப் பெறவும் தயங்காது.
சங்கம் இரீஇயனார் பாண்டியர்:-
தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என இம்மூன்றையுமே அமைத்தவர்கள் பாண்டியர்கள் என்பது உவப்பான செய்தி.
பெரும்பெயர்ப் பலகை:-
பாண்டியர்களைத் தொடர்ந்து, இப்பொழில் முழுதாண்ட நின் முன்தினை முதல்வர் போல, அதாவது பாண்டியர்களைப் போல அவரது வழியில்
பெரும்பெயர்ப் பலகை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல் (பதிற்றுப்பத்து 17:20, 23, 24)
இது சேர மன்னர்களின் முயற்சி. இங்கே பெரும்பெயர்ப் பலகை ‘இரீஇய’ என்ற பதிவை, களவியல் உரையின் ‘இரீஇயனார்’ மற்றும் ஆண்டாள் பாசுரத்தின் ‘சங்கம் இருப்பார்’ என்ற அழுத்தமான சொல்லாடல்களால் அழகுற உறுதி செய்யலாம்.
அரும்பெறல் மரபின்பெரும்பெயர் முருக! என்று திருமுருகாற்றுப்படை வியப்பதும், பேரளவு எய்திய பெரும்பெயர்ப்பாண்டில் என்று நெடுநல்வாடை வியப்பதும் பெரும்பெயர்ப் பலகை இரீஇய என்று பதிற்றுப் பத்து போற்றுவதும் சங்கப் பலகையோடு ஒத்த பொருள் தோற்றுவன என்று ஆய்வுக்காக ஐயப்படலாம்.
இத்தொடக்கத்தார்:-
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என முறையே முச்சங்கம் பற்றிப் பேசும் இறையனார் களவியல் உரையானது ‘இத்தொடக்கத்தார்’ இன்னார் என்றும், அரசர்கள் இன்னார் என்றும், நூல்கள் இவை இவை என்றும், அவை நீடித்த ஆண்டுகள் இவ்வாறு என்றும் திறம்பட எடுத்து இயம்புகிறது. தேவை ஒரு மாற்றுப் பார்வை மட்டுமே.
இதுபற்றிய கருத்தாடல்களில் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் எவரையும் ஒருபோதும் வழிமறிக்காது. நோக்கம் தமிழ்தான், அதன் ஆக்கம் இமைதான் என்பதில் அடுத்த தலைமுறை எடுத்து வைக்க விருக்கும் வழித்தடத்தில் மலர் தூவிட விழையும்.
தலைச்சங்கம் இவ்வாண்டு:-
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களின் எல்லை நாள் ஆகிய 120-வது நாளில் 2 நாட்கள் குறைவுற்ற படியால் 118-வது நாளில் சித்திரை மாதக் கடைசிநாள் அமைந்து விடும். அன்று மூன்றாம் பிறைநாள்.
டிசம்பர் – 22.12.2017 முதல் 31.12.2017வரை 10 நாள்
சனவரி – 01.01.2018 முதல் 31.01.2018 வரை 31 நாள்
பிப்ரவரி – 01.02.2018 முதல் 28.02.2018 வரை 28 நாள்
மார்ச்சு – 01.03.2018 முதல் 31.03.2018 வரை 31 நாள்
ஏப்பிரல் – 01.04.2018 முதல் 18.04.2018 வரை 18 நாள்
ஆக மொத்தம் 118 நாள்
ஆகமொத்தம் 118-வது நாளில்
மூன்றாம் பிறையை உறுதி செய்து இரண்டு நாள் இழப்பைக் கணக்கில் கொண்டு 19.04.2018-ல் வைகாசிப் பாட்டை தொடங்கி 30.04.2018-ல் வைகாசி முழுநிலவை எதிர்பார்க்கும் அமைப்பு ஆகிய மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் நிழலைத் தொடர்ந்து விரட்டி வருகிறது. நிலவைத் தொடர்ந்து வருகிறது. வல்லுநர்களைத் தேடி வருகிறது. இன்றைய நிலையில் நண்பகல் நிழல் ஆனது வடபாதியில் இருந்து தென்பாதிக்குத் திரும்பவில்லை. இது மிகவும் கூர்ந்து நோக்கத் தக்க நுட்பம் ஆகும்.
தமிழக அரசும் தமிழ்ப்புத்தாண்டுச் சட்டமும்:-
தமிழக அரசின் நடப்புத் தமிழ்ப்புத்தாண்டு என்பது சட்டப்படி 14.04.2018 என்று விடுமுறை அறிவிப்பால் தெரிகிறது. அது கொண்டாடலாம் அல்லது கைவிடலாம். அதன் மீது நம்பிக்கை வைத்திருப்போரை அது முதன்மைப் படுத்தலாம் அல்லது படுத்தாது விடலாம்.
எது எப்படியாயினும், விளைவுகளைக் கணக்கில் கொண்டு, இனிவரும் காலங்களில் தமிழ்ப்புத்தாண்டுப் புரிதலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பைத் தமிழறிஞர்கள் தட்டிக் கழிக்க இயலாது.
தேய்பிறையில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடித் தனது அறியாமையை வெளிப்படுத்திடவும் கூடாது. நல்லவைகளை எதிர்பார்ப்போம். வருவதை எதிர்கொள்வோம்.
இறையனார் களவியல் உரையில் உள்ளவாறு முச்சங்கம்
பெயர்
இடம்
இலக்கணம்
நூல்கள்
இத்தொடக்கத்தார்
தலைச் சங்கம்
கடல் கொண்ட மதுரை
அகத்தியர்
பரிபாடல்
முதுநாரை
முதுகுருகு
களரியாவிரை
அகத்தியம்
அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரிஞ்சியூர் முடிநாக ராயர், நிதியின் கிழவன்
இடைச் சங்கம்
கபாட புரம்
அகத்தியம்
தொல்காப்பியம்
மகாபுராணம்
இசைநுனுக்கம்
பூதபுராணம்
கலி
குருகு
வெண்டாளி
வியாழ மாலை அகவல்
அகத்தியனார், தொல்காப்பியனார்
இருந்தையூர்க் கருங்கோழிமோசி, வெள்ளூர்க்காப்பியன்,
சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோன்,
கீரந்தை.
கடைச் சங்கம்
உத்தர மதுரை
அகத்தியம்
தொல்காப்பியம்
நெடுந்தொகை நானூறு,
குறுந்தொகை நானூறு
நற்றிணை நானூறு
புறநானூறு
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
நூற்றைம்பது கலி
எழுபது பரிபாடல்
கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை
சிறு மேதாவியர், சேந்தன் பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திரு மாறனார், நல்லந்துவனார், மருதன் இனநாகனார், கணக்காயனர் மகனார், நக்கீரனார்
குறிப்பு: சங்கம் இரீஇயனார் ஆகிய அரசர்களின் குறிப்பு உள்ளது.
முச்சங்கம்:-
முச்சங்கம் தொடர்பான இறையனார் களவியல் உரையின் அரிய செய்திகள் ஆகியவற்றை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் மிகுந்த விழிப்புணர்வுடன் தமிழ்ப் புலமை மரபினரின் நெறிகாட்டுதலின்படி மட்டுமே கையாளும். மற்றபடி அதில் உள்ள தொழில் நுட்பச் செய்திகளை எவர் மீதும் உடனடியாகத் திணிக்காமல் அவரவர் அறிவு நிலைக்கு ஏற்றவாறு புரிய வைக்கப் பாடுபடும்.
மீண்டும் மீண்டும் சங்கம்:-
அது அதன் பண்பு ஆதலின் அறிவுத்துறைகளின் வகைப்படுத்தலில் தமிழ்ப் புத்தாண்டுக்காக யாம் பணியா மரபைப் பின்பற்றுவோம்.
இது மரபு வழித் தமிழ்த்தேசியத் தக்கார் அவையத்தின் வெளியீடு
___---ooo000OOO000ooo---___
4-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் – 55
நாள்: 05.04.2018
தொடர் நாள்: 105
------------------------------

இது மரபு வழித் தமிழ்த்தேசியத்
___---ooo000OOO000ooo---___
காலக்கணக்கீடு புத்தாண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக