aathi tamil <aathi1956@gmail.com>
ஜன. 20
பெறுநர்: எனக்கு
Rathish Kumaran, Ingersol Selvaraj மற்றும் 44 பேருடன்இருக்கிறார்.
13 மணி நேரம் ·
BIMSTEC பேரழிவில் தமிழர் தாயகங்கள் - நூல்
******************************************************
ஒவ்வொரு வருடமும் புத்தக விழாவில் பல நூல்களை நாம் தேடி செல்வோம். பெரும்பாலும் அது வரலாறு அல்லது சித்தாந்த புரிதலை நோக்கிய தேடலாக இருக்கும். இந்த வருட புத்தக விழாவில் நாம் அனைவரும் தேட வேண்டிய முக்கிய நூல்
“பிம்ஸ்டேக் - பேரழிவில் தமிழர் தாயகங்கள்” - - நூல் | அரங்கு என் : (சிறப்பு அரங்கம் B)
இந்த நூல் நிகழ்கால அரசியல் மற்றும் எதிர்கால பாதிப்புகளை ஆதாரங்களுடன் பேசும் ஒரு முக்கிய நூல். இந்த நூல் "தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்" சிறப்பு அரங்கம் B (அரங்கு 42 - 43க்கு எதிரில்) விற்பனைக்கு இருக்கிறது. இந்த நூலின் ஆசிரியர் தமிழ் தேசிய பேரியக்கத்தின் க. அருணபாரதி. இந்த நூலில் பல முக்கிய தகவல்களை சரியாக (sequence) கோர்த்து தந்திருக்கிறார்.
தமிழர் தாயகங்கள் எப்படி அழிவை சந்திக்கும், அதற்கான இந்திய ஒன்றியத்தின் திட்டங்கள், நகர்வுகள் என்னென்ன, இந்த திட்டங்களால் தமிழகத்தில் என்னென்ன பாதிப்புகள் நடக்கயிருக்கின்றன என பல தகவல்களை திரட்டி தந்திருக்கிறார். BIMSTEC கூட்டமைப்பு, சாகர்மாலா, பெட்ரோ கெமிக்கல் மண்டலம், தமிழக வளங்கள் கொள்ளை, தமிழகத்தை ராணுவமயமாக்கும் திட்டம் என தமிழகத்தின் மீதான பல முனை தாக்குதலை பற்றிய ஆதாரங்களுடனும் தரவுகளுடனும் நேர்த்தியாக படைத்திருக்கிறார்.
பொதுவாக நாம் அனைவரும் பல வேலைகளை முன்னெடுக்கும் பொழுது அனைத்தையும் தெரிந்து கொள்வது கடினம், தமிழர்கள் ஒவ்வொருவரும் சில தகவல்களை திரட்டி நமக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் பல தேடல்கள், வாசிப்புகள், அரசியல் கவனிப்புகளில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த புத்தகத்தை கண்டிப்பாக நாம் அனைவரும் ஒரு முறை படித்தால் நாம் என்ன சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்பதை விளங்கி கொள்ளலாம். பிரச்சனை புரியாமல் போராடினால் எதிரி எளிதில் வீழ்த்திவிடுவான். நமது எதிர்கால பிரச்சனையையை அரசியல் நகர்வுகள், திட்டங்கள் மூலம் நாம் புரிந்து கொண்டால் தான் எதிரிக்கு இணையாக போராடி நம்மை காப்பாற்றி வருங்கால சந்ததிக்கு ஒரு இடத்தை நம்மால் உறுதி செய்து கொள்ள முடியும்
பொருட்செலவு என்பதை விட மிகுந்த நேரத்தை செலவிட்டு இந்த புத்தகத்தை சகோதிரர் க.அருணபாரதி கொண்டுவந்திருக்கிறார். முயற்சிக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டு இனம், மொழி, சாதி கடந்து இந்த புத்தகத்தை வாங்கி நாம் படித்தாக வேண்டும். குறைந்தபட்சம் எதற்காக நாம் சண்டை போடுகிறோம் என்றாவது தெரிந்துகொள்ள வேண்டாமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக