வெள்ளி, 13 ஏப்ரல், 2018

சல்லிக்கட்டு போராட்டம் நடக்குமுன் முயற்சி செய்த முகநூல் மூவர்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 15
பெறுநர்: எனக்கு
Perumal Ammavasi Thevan , Rajkumar Palaniswamy இன் இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
தடையை மீறி ஜல்லிக் கட்டு நடத்த முயன்று கைது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான க. அதியமான், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் ராஜ்குமார் பழனிச்சாமி, கள்ளர் சட்டப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தேவன் ஆகியோர் தடையை மீறி ஜல்லிக் கட்டு நடத்த முயன்ற காரணத்திற்காக கடந்த 16/01/2016 அன்று பாலமேட்டில் வைத்து கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் ஜனவரி 21ம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டு 22ம் மதுரை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
சிறையிலிருந்து விடுதலை செய்ப்பட்ட அவர்களை மறத்தமிழர் சேனைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், முத்துக்குமார், வீரகுல அமரன் இயக்கத் தலைவர் கி.ரா. முருகன் ஆகியோர் சிறை வாசலில் வைத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.
http://perumalthevan.blogspot.in/2016/01/blog-post_50.html
Rajkumar Palaniswamy
இதே நாளில் அன்று ! சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சல்லிக்கட்டு நடக்க வேண்டுமென சிறை சென்ற நாள் இந்நாளே.
பாலமேட்டில் சல்லிக்கட்டு நடக்க வேண்டுமென மாடுபிடி வீரர்களுடன் வாடிவாசல் முன்பு கூடினோம். பல்லாயிரம் காவல்துறையினர் சூழ இருந்தனர். சல்லிக்கட்டுக்கு தடை, அதை உடைக்க வேண்டுமென அங்குள்ள கிராம மக்களிடம் பேசினோம். சல்லிக்கட்டு நிர்வாகக் குழுவிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஒட்டுமொத்த கிராமமே ஆர்ப்பரித்தது. இதன் விளைவாக மிரண்டு போன காவல்துறை என்னையும், திரு. Athiyaman Thamuka அதியமான், திரு. Perumal Ammavasi Thevan அவர்களையும் சுற்றிவளைத்து கைது செய்து பல கிலோமீட்டர் அப்பால் உள்ள காவல் நிலையத்தில் சிறை வைத்தது. பல பொய் வழக்குகள் போட்டு , எங்களை வழக்கறிஞர்களை கூட அழைக்க முடியாமல் செய்து மதுரை சிறையில் அடைத்தது. குடும்பத்தை ஆதரவில்லாமல் மதுரையில் அன்று விட்டு விட்டு நாங்கள் அடைந்த துன்பம் சொல்லில் அடங்காது.
ஆனால் இன்று அதே பாலமேட்டில் காளைகள் சீறி பாய்ந்து வரும் காட்சி எங்கள் துன்பத்தை ஒன்றுமில்லாமல் செய்துள்ளது. சல்லிக்கட்டு வரலாற்று போராட்டத்தில் எங்களை போன்ற சிறியவர்கள் பங்கும் இருக்கிறது என்று நினைக்கும் போது பேருவகை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக