|
ஜன. 18
| |||
Last updated : 17:08 (17/01/2018)
மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
அமெரிக்காவிலிருக்கும் உலகின் மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உலகத் தமிழர்களின் நீண்டகால கனவாகும். பல்கலைக்கழகம் ஒன்றில், மொழிக்கான இருக்கை ஏற்படுத்தப்படுவது, அந்த மொழிபற்றி ஆய்வு மேற்கொள்வதற்கும் அதன் சிறப்புகளை உலக அரங்கில் எடுத்துச்செல்வதற்கும் உதவும். அந்த வகையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பது, தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். தமிழ் மொழி பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் ஆய்வுசெய்வதற்கும் அதன் இலக்கிய, இலக்கண வீச்சைப் புரிந்துகொள்வதற்கும் இந்தத் தமிழ் இருக்கை உதவும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.40 கோடி தேவைப்படுகிறது. அதில், ரூ.10 கோடியை தமிழக அரசு அளித்துவிட்டது. கமல்ஹாசன், விஷால் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் நிதியளித்தனர். இந்நிலையில், தமிழ் இருக்கைக்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் மேற்கொண்ட முயற்சி அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. ஏனென்றால், அவர்கள் 'மொய்விருந்து' நடத்தி தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டியிருக்கிறார்கள்.
Advertisement
'மொய்விருந்து'- தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு வழக்கமாகும். திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதுகுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தளித்து, நிகழ்ச்சிக்கு வருகிறவர்களிடம் பணம் திரட்டுவதே 'மொய் விருந்து' என்று அழைக்கப்படுகிறது. கோவை போன்ற மேற்கு மாவட்டங்களில், இதற்கு வேறொரு முகம் உண்டு. அங்கு, புதிதாகத் தொழில் தொடங்குகிறவர்கள், 'மொய் விருந்து' நடத்தும் வழக்கம் உள்ளது. அதன்மூலம் கிடைக்கும் பணம், நிறுவன வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். இந்த 'மொய்விருந்து' வழக்கத்தை நவநாகரிக நாடான அமெரிக்காவில், தமிழுக்காக மீட்டுருவாக்கம் செய்துள்ளார்கள் தமிழர்கள்.
Advertisement
அமெரிக்காவில் நியூயார்க், நியூ இங்கிலாந்து, டல்லாஸ், கனக்டிகட், நியூ ஜெர்ஸி, கிரேட்டர் திலேவார் வேலி, வாஷிங்டன் டி.சி, கரோலினா, மிச்சிகன் பே ஏரியா ஆகிய பகுதிகளில், தமிழ் அமைப்புகள், தமிழ்ச்சங்கங்கள் மூலம் தமிழ் இருக்கைக்காக 'மொய் விருந்து' உட்பட பல நிதி திரட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான செலவை சில அமைப்புகள் ஏற்றுக் கொண்டன. 'எவ்வளவு தொகை கொடுத்தாலும் ஹார்வர்டு இருக்கைக்கான சுமை குறையும்' மேடையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தங்களால் இயன்ற தொகையைத் தமிழர்கள் வாரிக் கொடுத்தனர். அமெரிக்கா தவிர, சீனாவின் தாலியன் தமிழ் பிணையம், ஹாங்காங் தமிழ் கலாச்சார மையம் ஆகியவற்றைச் சேர்ந்த தமிழர்களும், ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டியுள்ளனர். இலங்கை கொழும்புவில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தியும் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், நியூயார்க் நகரில் மட்டும் ஏறத்தாழ 80 லட்ச ரூபாய் நன்கொடை மூலம் திரட்டப்பட்டதுதான். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் 3.12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. உலகத்தமிழர்களின் இந்த முயற்சி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கான ஆலோசனைக்குழுவின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பாலச்சந்திரனிடம் பேசினோம். “ உலகத்தமிழர்களின் இந்த முயற்சி மெச்சத்தகுந்த ஒன்று. தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டலுக்கு வாட்ஸ் ஆப் குழு மற்றும் ஃபேஸ்புக் மூலம் உலகத் தமிழர்கள் ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றனர். அடுத்து ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மொய் விருந்து மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழுக்கான இந்த அற்புதப் பணியில் வெற்றிச்செல்வன், புவனா கருணாகரன் ஆகியோர் தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகின்றனர். தமிழ் இருக்கைக்கு இன்னும் 4 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. பணம் தருவதாக உறுதியளித்தவர்களிடமிருந்து வரவேண்டிய தொகை மட்டும் 75 லட்ச ரூபாய். மீதம் 2.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதனையும்தமிழர்கள் திரட்டிவிடுவார்கள். விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையப் போகிறது” என்றார் நம்பிக்கையோடு..
பிறந்த இடத்திலிருந்து எவ்வளவு தொலைவு போனாலும், வேர்களை மறக்காதவர்கள் தமிழர்கள் என்பதை மொய் விருந்து நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் பிரதீப்.த.ரே

தமிழ்மொழி மொழிப்பற்று இனப்பற்று பல்கலை ஒற்றுமை புலம்பெயர்
Sent from my Samsung Galaxy smartphone.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக