aathi tamil <aathi1956@gmail.com>
ஜன. 20



பெறுநர்: எனக்கு

சுரேஷ் தேவர் சாேழநாடு Suresh N உடன்.
2 மணி நேரம் ·
#ஈழவர்_தீயார் யார்...????
மக்கள் பற்பல சமயங்களில் தமிழ்நாட்டினின்று ஈழத்திற்குக் குடியேறியது போன்றே, ஈழத்தினின்றும் தமிழ்நாட்டிற்குக் குடியேறி வந்திருக்கின்றனர். கரிகால் வளவன் ஈழத்தின்மேற் படையெடுத்துப் பன்னீராயிரம் குடிகளைச் சிறைபிடித்துக் கொண்டு வந்து, காவிரிக்குக் கரை கட்டுவித்ததாக அவன்மெய்க்கீர்த்தி கூறும். இங்ஙனம் கொண்டுவரப்பட்டவரும் குடியேறியவருமே #ஈழவர் எனப்பட்டனர். மலையாள நாட்டில் இவரைத் தீவார் அல்லது #தீயார் என்பர்.
கம்பளர் காம்பிலிச் சீமையினின்றும், இரட்டியார்
இரட்ட பாடியினின்றும், ஒட்டர் ஒட்டரஅல்லது ஒரிசாச் சீமையினின்றும் வந்தவராவர்.
செங்குந்தர் பாணர் என்பவர் தமிழ்நாட்டுத் தமிழரே யாயினும், தொழில் மாறியிருக்கின்றனர். செங்குந்தம் பிடித்துச் சோழருக்குப் படைமறவராயிருந்தவர் செங்குந்தர். பாண் அல்லது இசைத்தொழிலைக் கொண்டிருந்தவர் பாணர். இவ்விரு வகுப்பாரும், இன்று முறையே நெசவையும் தையலையும் மேற் கொண்டுள்ளனர்.
“ பாணர்க்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும்
தாணு வுரித்ததுவும் சக்கரத்தோன் _ ஊணதுவும்
எம்மானை யேத்துவதும் ஈசனிடத் துஞ்சிரத்தும்
தைம்மாசி பங்குனிமா தம்’’
என்று காளமேகர் பாடியிருத்தல் காண்க. மலையாள நாட்டுப் பாணர் கூடையும் தாழங்குடையும் முடைவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
#சொல்லாராய்ச்சி_கட்டுறைகள்,
@ஐயன்_பாவாணர்..
++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக