|
ஜன. 24
| |||
முன்பு சரவணன் தற்போது சரத் பிரபு; தொடரும் மருத்துவ மாணவர்கள் மரணம்: அன்புமணி சந்தேகம்
சென்னை
எய்ம்ஸ் மாணவர் சரவணன், நேற்று மர்ம மரணமடைந்த சரத் பிரபு, அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
Published : 17 Jan 2018 16:05IST Updated : 17 Jan 2018 16:05IST
முன்னர் மருத்துவ மாணவர் சரவணன் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டார், தற்போது மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்ம மரணம், இதுவும் கொலையாக இருக்குமோ என அன்புமணி ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''டெலியில் உள்ள டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த சரத்பிரபு கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து, யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த சரத் பிரபு இன்று காலை விடுதியின் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் சரத்பிரபுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்பிரபு நன்றாக படிக்கும் மாணவர் என்றும், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை.
அதேநேரத்தில் இதுகுறித்த விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, சரத் பிரபு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக யு.சி.எம்.எஸ் நிர்வாகம் கூறியிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மருத்துவ மாணவர் சரத்பிரபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதை திசை திருப்பி குற்றவாளிகளைக் காப்பாற்ற இப்படி கூறப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் விஷ ஊசி செலுத்தி படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்டால் காலியாகும் மருத்துவ மேற்படிப்பு இடத்தில் சேர வாய்ப்புள்ள சிலர் தான் சரவணனை கொலை செய்திருக்கக்கூடும் என்று குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், அதை தற்கொலை என்று கூறி வழக்கை மூடி மறைக்க மருத்துவமனை நிர்வாகம் முயன்றது.
இதுதொடர்பாக எய்ம்ஸ் மாணவர்கள் சிலர் என்னைச் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி காவல்துறை ஆணையர், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோரை சந்தித்து இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதைத் தொடர்ந்து தான் அவரது உடற்கூறு ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டு மருத்துவர் சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல், மருத்துவர் சரத்பிரபு மரணத்தில் உள்ள மர்மமும் விலக்கப்பட வேண்டும்.
அதேபோல் குஜராத்தின் அகமதாபாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் சாதி அடிப்படையில் பேராசிரியர்கள் அளித்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்றார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மருத்துவ மாணவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தை ஆளும் அரசு இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் கொண்டாட்டங்களை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
விரைவில் டெல்லி செல்லவிருக்கும் நான் மத்திய அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து மாணவர் சரத்பிரபு மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவேன். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் சரவணன்
விஷ ஊசி போட்டு கொலை
டில்லி மருத்துவ பல்கலை கழக மாணவர்
மர்ம மரணம்
கொலையாக இருக்கலாம்
அன்புமணி ராமதாஸ் சந்தேகம்

------------
வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களின் மரணங்கள் ஏன் நின்றபாடில்லை?
டெல்லியில் மர்மமான முறையில் தமிழக மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம் அடைந்தார். சமீப காலத்தில், மர்மமான முறையில் இறந்த 3-ஆவது தமிழக மாணவர் இவர்.
"சில மாநிலங்களில் தமிழக மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை இது உறுதிப்படுத்துகிறதா? புதிய சூழ்நிலைகள், அழுத்தங்களை எதிர்கொள்ளும் மன உறுதி தமிழக மாணவர்களுக்கு இல்லையா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
தமிழக மருத்துவ மாணவர் டெல்லியில் மர்ம மரணம்
"கொலையோ தற்கொலையோ உயர் கல்வி கற்கும் மாணவர்களின் (குறிப்பாக தமிழ்) எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அரசு உரிய நடவடிக்கை வேண்டும், தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப் படுகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகத் தெரிகிறது. இது வரை நடந்த மரணங்களே இதற்கு சாட்சி. தொடரும் மரணங்கள் மரணிக்கவில்லை," என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
"சமீபகாலங்களிலா அல்லது இந்த ஆட்சியிலா? என்ற கேள்வியேழுகிறது. மேலும் சில மாநிலங்களில் அல்ல எங்கள் தமிழகத்திலே பாரபட்சமாக நடந்த நீட் தேர்வே போதும் மத்திய அரசு தமிழர்களை எப்படி நடத்தும் என்பதற்கு. பல கஷ்டங்களை கடந்தாலும் படித்து பட்டம் பெறவேணடும் என்ற எண்ணத்தில் செல்லும் மாணவ மாணவர்களின் மனதை மிக மிக நொந்துபொகவைப்பாதாலே இந்நிலை ஏற்படுகிறது," என்கிறார் ரமேஷ் நாராயண்.
சக்தி சரவணன் இவாறு கூறியுள்ளார் ,"யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் தமிழரின் கருத்தியல் சிந்தனை வளர்ச்சியை ஏனைய மொழி மாநிலத்தவரிடம் எதிர்பார்ப்பது மிகவும் அரிதானது."
"சொந்த மாநிலத்திலேயே தமிழர்களுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு தர மறுக்கிறது மத்திய அரசு. வேலைவாய்ப்புகளை அண்டை மாநிலத்தவர்க்கே வழங்குகிறது . மெக்கலே கல்வி முறை இந்தியாவை எப்படி சீரழித்து உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு," என்று கூறியுள்ளார் முத்துச்செல்வம்.
வேலாயுதம் கந்தசாமி எனும் நேயர் மரணமடைந்தவர் தவிர பிறரால் அந்த காரணங்களை எவ்வாறு அறிய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-----------------
டெல்லியில் தொடரும் தமிழக மாணவர்களின் திடீர் மரணங்களுக்கு தீர்வு என்ன?
தலைநகர் டெல்லிக்கு மருத்துவ மேல் படிப்புகளுக்காக வந்த தமிழக மாணவர் சரவணன் கடந்த 2016-ஆம் ஆண்டிலும், சரத் பிரபு சமீபத்திலும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இரு குடும்பத்தாரும்
முறையிட்டுள்ள நிலையில், அந்த சம்பவங்களுக்கான மூல காரணத்தை ஆராய வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதேபோல, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. மாணவரான முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் கடந்த ஆண்டு மார்ச் மாதம், தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். சேலத்தைச் சேர்ந்த இவர் ஒரு தலித் மாணவர்,
தற்கொலை தொடர்பான எந்தக் குறிப்பையும் அவர் எழுதிவைத்திருக்கவில்லை. ரஜினி கிருஷ் என்ற பெயரில் உள்ள அவரது முகநூல் பக்கத்தில், "எதிலும் சமத்துவம் இல்லை. எம்.ஃபில், பி.எச்டி நுழைவுச்சேர்க்கையில் சமத்துவம் இல்லை. நேர்காணலில் சமத்துவம் இல்லை. ஒடுக்கப்பட்டவர்களின் கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்பட்டால் எல்லாமே மறுக்கப்படுகிறது" என்று முத்துகிருஷ்ணன் பதிவிட்டிருந்தார்.
முற்றுப் பெறாத வழக்குகள்
தமிழக மருத்துவ மாணவர் சரத் பிரபு விவகாரத்தில், அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எட்டும் அளவுக்கு கோழை அல்ல என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் நல்ல நிலையிலேயே இருந்தார் என்று அவரது உறவினர் ஜெயகாந்தன் கூறுகிறார்.
இதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன் கடந்த ஆண்டு உயிரிழந்தார். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர அவரும் டெல்லி வந்தவர்.
ஹோஸ் காஸ் கிராமம் என்ற பகுதியில் தங்கியிருந்த அவர், தனது வலது கையில் ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது ரத்தத்தில் பொட்டாசியம் குளோரைட் கலந்திருந்தது பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.
ஆனால், வலது கை பழக்கம் உள்ள ஒருவரால், இடது கை மூலம் வலது கையில் உள்ள நரம்பில் ஓர் ஊசியை சரியாக அழுத்திச் செலுத்த முடியாது என்று அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக மருத்துவ மாணவர் டெல்லியில் மர்ம மரணம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் தற்கொலை
மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு
இதற்கிடையே, தனது மகன் சரவணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அதை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை கணேசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட அவரது வழக்கை ஆறு மாதங்களுக்குப் பிறகு கொலை வழக்காக காவல்துறை மாற்றி தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
சரவணன் - சரத் பிரபு வழக்குகளின் வேறுபாடு
சரவணன் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, அந்த காவல்துறை சரகத்தில் கூடுதல் துணை ஆணையராக நுபுர் பிரசாத் இருந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று துணை ஆணையராக ஷாதரா காவல் சரகத்தில் அவர் பணியாற்றி வருகிறார். அவரது காவல் சரக எல்லையில்தான் சரத் பிரபு உயிரிழந்த பகுதியும் வருகிறது.
இது குறித்து நுபுர் பிரசாத்திடம் பிபிசி கேட்டதற்கு, துரதிருஷ்டவசமாக இரு தமிழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நான் தலைமை ஏற்றுள்ள காவல் சரகத்தில் நடந்துள்ளன என்றார்.
ஆனால், சரவணன் வழக்கில் சில முற்றுப்பெறாத குழப்பங்கள் நிலவின. அவர் ஊசி செலுத்துவதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிய வந்ததால், அவருக்கு யாராவது ஒருவர் அந்த ஊசியை செலுத்தியிருக்க வேண்டும் என்பது விசாரணையின் புதிய கோணத்தை ஆராயத் தூண்டியது என்கிறார் நுபுர் பிரசாத்.
அதேசமயம், "சரத் பிரபு விவகாரத்தில், அவர் உயிரிழந்த இடத்தில் ஊசியும், மருந்தும் இருந்துள்ளன. தற்கொலை செய்து கொண்டதற்கான குறிப்பு உள்ளதா அல்லது வேறு யாரிடமாவது அந்த எண்ணம் குறித்து அவர் பேசினாரா போன்றவை குறித்து விசாரித்து வருகிறோம்" என்று நுபுர் பிரசாத் தெரிவித்தார்.
"மன அழுத்தங்களுடன் பணி செய்கிறோம்''
இதற்கிடையே, சரத் பிரபு விவகாரத்தில், அவர் பயிற்சி எடுத்து வந்த குரு தேக் பகதூர் மருத்துவமனையில் கூடுதல் பணிச்சுமையால் சக மருத்துவர்கள், மிகுந்த மன அழுத்தங்களுக்கு ஆளாவதாக பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்த மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவர்கள் சங்கத்தினரும் பல முறை முறையிட்டுள்ளனர் என்று அந்த மருத்துவர்கள் கூறினர்.
தமிழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள், தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவங்களில், அத்தகைய எண்ணம் குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் மாணவர்களுக்கு எதனால் ஏற்படுகின்றன என்று டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் உளவியல் நிபுணர் டாக்டர் மோனிகாவிடம் கேட்டோம்.
தொடர்புடைய செய்திகள்
வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களின் மரணங்கள் ஏன் நின்றபாடில்லை?
பிற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் பாகுபாட்டுக்கு ஆளாகின்றனரா?
மற்ற பகுதிகளைப் போல டெல்லி ஒன்றும் நட்புறவுக்கு வலு சேர்க்கும் இடமில்லை என்பது உண்மைதான் என்று அவர் கூறினார். எனவேதான் குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து டெல்லி போன்ற வட மாநிலங்களுக்கு வரும் மாணவர்கள், இளைஞர்கள், தங்களை வெளிநபர்கள் போலவே உணர்கிறார்கள். அதற்கு அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, குடும்பப் பின்னணி போன்றவை ஓர் காரணம் என்கிறார் மோனிகா.
குறிப்பாக, பெற்றோர், நண்பர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழ்ந்தவர்களுக்கு டெல்லியில் காணப்போடும் வர்த்தகமய வாழ்க்கை முறை, அவர்களின் பணியில் மிகுந்த அழுத்தத்தை உணர இடம் கொடுக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பணி முடிந்த பிறகு விடுமுறை நாட்களிலும் புத்துணர்வுக்கோ, மகிழ்ச்சிகரமாக பொழுதை கழிக்கவோ அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால் தங்களின் அழுத்தங்களின் சுமையை குறைக்க வடிகாலின்றி மாணவர்கள் தவிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
உளவியல் நிபுணரின் யோசனைகள்
இதற்கு ஒரே தீர்வாக அந்தந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகங்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கான பிரத்யேக கவுன்சிலிங் மையங்களை நிறுவ வேண்டும் என்பது மோனிகாவின் யோசனை.
மருத்துவம் மட்டுமின்றி, உயர் மருத்துவ படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கும் இந்த ஆலோசனைகளும் கலந்தாய்வுகளும் தேவை. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவ சமூகங்களை அவர்களின் வட்டாரத் தொடர்புகளுடன் ஒருங்கிணைக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்கிறார் மோனிகா.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரு மூத்த மருத்துவரிடம் மனம் விட்டுப் பேசும் சூழ்நிலையையும் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்புப் படைகள், தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பது போன்ற பட்டீ எனப்படும் நட்பு வட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மோனிகா கூறினார்.
"மருத்துவமனைகளில் பெயரளவுக்கு கவுன்சிலிங் மையங்கள் செயல்படாமல், இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு நட்பான சூழலை உருவாக்கும் முகமையாக அவை இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு ஆறுதல் கூறும் இடத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கும் இயல்பாகவே அழுத்தங்களும் வலிகளும் இருக்கும் என்பதை பலரும் உணரத் தவறுகிறார்கள்" என்று மற்றொரு உளவியலாளர் ராஜசேகரன் குறிப்பிட்டார்.
இளம் தலைமுறை தற்கொலை அதிகம்
உலகில் 15 வயது முதல் 21 வயது வரையிலான இளம் தலைமுறையினரின் தற்கொலை விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று லேன்செட் மருத்துவ சஞ்சிகையின் 2012-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை கூறுகிறது.
இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டில் மாணவர்களாக இருந்த 8,934 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 2015-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் 39,775 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 8,934 பேரின் தற்கொலை சம்பவங்களில் மகராஷ்டிரத்தில் 1,230 பேரும், தமிழகத்தில் 955 பேரும் அடங்குவர்.
கல்வி, இளைஞர் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் மகாராஷ்டிரமும் தமிழகமும் முன்னேறி காணப்படுகின்றன. இந்த இரண்டிலும் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள், பொருளாரத வளர்ச்சி மற்றும் இளைய தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவ மாணவர் மரணத்தில் சந்தேகம்- நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லியில் தமிழ் மாணவனின் மரணம் கொலை வழக்காக மாற்றம்
முத்துகிருஷ்ணன் மரணம்: சி.பி.ஐ. விசாரணை கோரும் அரசியல் கட்சிகள்
இந்தியாவிலேயே அதிக தற்கொலை சம்பவங்கள் பதிவான மாநிலமாக சிக்கிம் உள்ளது என்று லேன்செட் கூறியுள்ளது. தனிபர் வருமானம், கல்வியறிவு போன்றவற்றில் இந்தியாவிலேயே ஏழாவதாகவும் தனிபர் வருமான விகிதத்தில் டெல்லி, சண்டிகருக்குப் பிறகு பணப்புழக்கம் அதிகம் மிக்க மாநிலமாகவும் சிக்கிம் உள்ளது.
தற்கொலைக்கு முக்கிய காரணங்கள்
பொதுவாக வேலைவாய்ப்பின்மை, வறுமை, கடன் சுமையின் அச்சம் போன்ற காரணங்களால் 21 வயது முதல் 30 வரையிலான இளம் தலைமுறையினரில் ஒரு பிரிவினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தங்களின் வாழ்க்கை தொடக்கத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியாமல், அதற்கான வாய்ப்புகளை அணுக முடியாமல் இந்த வயதினர் விரைவாக வாழ்வை முடித்துக் கொள்கின்றனர் என்று லேன்செட் ஆய்வு கூறுகிறது.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம்
நீதிபதிகள் நியமனம் ஒரு நடுநிலையான குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: சந்துரு கருத்து
தேர்வில் தோல்வி, பணி அழுத்தம் என வரும்போது தற்கொலை எண்ணத்தால் தூண்டப்பட்டவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும், ஆறுதல் கூறி தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் குடும்பத்தில் உள்ளவர்களோ சுற்றுவட்டாரமோ முன்வராதது, ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மன நலன் மேம்பாட்டுக்காக ஆளும் அரசுகள் வெறும் 0.06 சதவீதம் அளவுக்கு மட்டுமே நிதி செலவிடுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஓர் அறிக்கை கூறுகிறது. ஆனால், வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானவை 4 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை மன நலன் மேம்பாட்டுக்காக ஒதுக்குகின்றன.
உளவியல் நிபுணர்களுக்கு பற்றாக்குறை
2015-ஆம் ஆண்டில் மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த நாடாளுமன்ற கேள்விகளுக்கான பதிலில், இந்தியாவில் மன நல மருத்துவ வல்லுநர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. 3,800 உளவியலாளர்கள், 898 மருத்துவ உளவியலாளர்கள், 850 உளவில் சமூக ஊழியர்கள், 1,500 மன நல செவிலியர்கள் மட்டுமே தேசிய அளவில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு பத்து லட்சம் பேருக்கு மூன்று உளவியல் நிபுணர்கள் அல்லது அதை விடக் குறைவானவர்களே உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
மற்ற காமன்வெல்த் நாடுகளில் லட்சம் பேருக்கு, இது 5.6 ஆக உள்ளது. இந்த மதிப்பீட்டின்படி பார்த்தால், இந்தியாவில் 66,200 உளவியலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
அந்த வகையில், தொலைதூரத்தில் இருந்து டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு படிக்கவோ வேலைக்காகவோ வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, அவர்களுக்கான அழுத்தங்களையும் வலிகளையும் குறைக்கக் கூடிய கட்டமைப்புகளை ஏற்படுத்த அவசியம் அதிகரித்து வருகிறது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் தொடர்ச்சியாக உயிரிழந்திருப்பதை, ஒரு சம்பவமாகப் பார்க்காமல் சமூக வளர்ச்சித் தடைக்கான ஓர் எச்சரிக்கையாக பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக மாணவர்கள் மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரும் மு.க.ஸ்டாலின்
Web Team அரசியல் 18 Jan, 2018 07:55 AM
வெளி மாநிலங்களில் தொடரும் தமிழக மாணவர்களின் மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் திருப்பூர் மாணவர் சரவணன் உயிரிழந்ததும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் மாரிராஜ் சித்திரவதைக்குள்ளாகி தற்கொலை செய்ய முயன்றதையும் குறிப்பிட்டுள்ளார்.
சரவணன் மரணம், மாரிராஜ் மீதான தாக்குதல் போன்றவற்றில் மாநில அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்து, உரிய முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், தற்போது டெல்லியில் இன்னொரு தமிழக மாணவர் சரத் பிரபுவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லியில் தமிழக மாணவர்களின் தொடர் மரணங்களை தடுக்கும் வகையில், சரவணன் மரணம், சரத் பிரபுவின் மரணம் ஆகியவை குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

-------------------
ஹிந்தியா ஹிந்தியர் கொலை மர்மமான ஹிந்தியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக