புதன், 8 ஜூலை, 2020

பாரதியார் சாதிவெறி க்கு எதிராக எழுதியது இசுலாமியர் வீட்டில் பிராமணர் யானை வேலையாள்


aathi1956 aathi1956@gmail.com

திங்., 27 ஆக., 2018, பிற்பகல் 12:34
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# இன்று காலை நானும் என் நண்பரொருவருமாக (கடையத்தில் இருக்கும் ஒரு செல்வந்தரின்)இந்த யானையைப் பார்க்கச்சென்றோம்.
அந்த யானையைப் பற்றிய விசேஷம் யாதெனில், #இதற்கு மாவுத்தர்களாக இரண்டு # பிராமணப்பிள்ளைகளும் , சைவ ஓதுவார்(குரக்கள்)வம்சத்தைச் சேர்ந்த ஒருவரும் வேலைபார்க்கிறார
்கள். சாதாரணமாக, மாவுத்தர்வேலை செய்ய மஹமதியர்களும்,ஹ
ிந்துக்களில் தணிந்த ஜாதியாருமேஏற்படுவது வழக்கம். இந்த யானைக்குப்பிராமண மாவுத்தர் கிடைத்திருக்கிறார்கள்.
# மேற்படி பிராமண மாவுத்தரில்
ஒருவனிடம்நான் இந்தயானையின் குணங்களைப் பற்றிப்பேசிக் கொண்டிருந்தேன். நான் நதிக்குப்போகையில், அவன்
அந்த யானையை கருணையின்றி அடித்துக் கொண்டிருக்க,நான் பார்த்தே னாதலால், அதை அவனுக்க நினைப்பு மூட்டி, "மிருகங்களை அன்பினால்பழக்க வேண்டும். கருணை யில்லாமல்அடித்துப பழக்குவது சரியில்லை" என்றேன்.
# நான் இந்த வார்த்தை சென்னதுதான் தாமதம்.அவன் மிகவும் நீளமாகத் தன் சாஸ்திரக்கட்டுக்களையெல்லாம் அவிழ்த்து விரிக்கத்தொடங்க
ிவிட்டான்.
# அந்த மாவுத்தன் சொல்லுகிறான்: "இந்தயானை கீழ் ஜாதி யானை; யானைகளில் பிரம,க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்குமுக்ய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும்கிளை வகுப்புக்களிருக்கின்றன. அவற்றுள்இது சூத்ர ஜாதியைச் சேர்ந்த யானை.மனிதர்களில் சூத்திரர்களுக்குள்ளே ஈழுவர்என்ற ஜாதியார் இருக்கிறார்களே, அதே மாதிரிஇந்த யானை 'வீரன்' என்னும் வகுப்பைச்சார்ந்தது.இங்ஙனம் அந்த மாவுத்தன் நீண்ட கதைசொன்னான்.
#நான் இந்த விஷயத்தை இங்கெடுத்துச் சொல்லியதன் நோக்கம் யாதெனில்,நம்மவர்கள் மனத்தில் இந்த ஜாதி பேதக்கொள்கை எத்தனை ஆழுமாகப் பதிந்திருக்கிறதென்பதை உணர்த்தும்பொருட்டே யாம்.
# பாரதியின் எழுத்துக்களில் இருந்து...
2 மணி நேரம் ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக