புதன், 8 ஜூலை, 2020

அண்டைநாடுகள் தமிழ்திரிநிலங்கள் பல்லவர் தொண்டைநாடு கொங்காணம் தவறாக பொருள்




aathi1956 <aathi1956@gmail.com>

1 செப்., 2018, பிற்பகல் 3:43





பெறுநர்: எனக்கு












மறைந்துபோன தமிழ் நூல்கள் 205


தலைச்சங்கத்தில் இருந்தவரும், தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்று கூறப்படுகிறவருமாகிய அகத்தியனார் செய்த அகத்தியம் என்னும் நூல் இடைச்சங்க காலத்திலேயே மறைந்துவிட்டது என்பர். அதாவது, தொல்காப்பியம் தோன்றிய பிறகு அகத்தியம் இறந்துவிட்டது. என்பர். பிற்காலத்தில், அகத்தியர் பெயரால் அகத்தியம் என்னும் நூலைப் புனைந்தெழுதி வழங்கிவந்தார்கள் என்று கருதுவதற்கு இக்காலத்து வழங்கும் ‘அகத்திய’ச் சூத்திரங்கள் இடந்தருகின்றன. உதாரணமாக இதைக் காட்டுவோம்:

நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர். (பெயரியல், 16ஆம் சூத்திர உரை) கீழ்க்காணும் அகத்தியச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்.

“கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களங் கொல்லங் கூவிள மென்னும்
எல்லையின் புறத்தவு மீழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கந் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபா லிருபுறச் சையத்
துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும்
முடியுடை மூவரு மிடுநில வாட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த
பன்னிரு திசையிற் சொன்னய முடையவும்

என்றார் அகத்தியனார்.”

இதே அகத்தியச் சூத்திரத்தைச் சில வேறுபாடுகளுடன் தெய்வச் சிலையார் தமது தொல்காப்பிய உரையில் (சொல் எச்சம்., 4ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார். அது:

“கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம்
கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும்
எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம்
கலிங்கந் தெலிங்கம் கொங்கணம் துளுவம்
குடகம் குன்றகம் என்பன குடபா
விருபுறச் சையத் துடனுறையு புகூஉந்
தமிழ்திரி நிலங்களும்

--------
206 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15


முடிநிலை மூவர் இடுநில வாட்சியின்
அரசுமேம் பட்ட குறுநிலக் குடுமிகள்
பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொன்னய முடையவும்’

என்பது அகத்தியச் சூத்திரம்.”

இவ்வாறு இவர்கள் மேற்கோள் காட்டுகிற அகத்தியச் சூத்திரத்தில் கொங்கணம், துளுவம், குடகம் என்னும் நாடுகள் தமிழ் திரிந்த நிலங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகள், கடைச்சங்க காலத்தில், அதாவது, கி.பி. 300-க்கு முன்பு தமிழ் நாடுகளாகவும், தமிழ் மொழி வழங்கிய இடங்களாகவும் இருந்தன என்பதைச் சரித்திர ஆராய்ச்சி வல்லார் அறிவர். இந்த நிலங்களில் தமிழ் மொழி திரிந்து வேற்று மொழியானது பிற்காலத்தில்; கி.பி. 300-க்குப் பிற்பட்ட காலத்தில். எனவே, இந்நிலங் களைத் தமிழ் திரிந்த நிலங்கள் என்று மேற்படி அகத்தியச் சூத்திரம் கூறுகிறபடியால். இந்தச் சூத்திரத்தை எழுதிய அகத்தியர், கடைச்சங்க காலத்திற்குப் பிற்காலத்தில் இருந்த அகத்தியராதல்வேண்டும்: அல்லது, அகத்தியர் பெயரால் பிற்காலத்தில் இருந்த புலவர் புனைந்துரைத்த சூத்திரமாதல் வேண்டும்.

மேலும் மயிலைநாதர் மேற்கோள் காட்டுகிற மேற்படி அகத்தியச் சூத்திரத்தில், பல்லவம் என்னும் நாடு தமிழ் திரிந்த மொழி வழங்கும் நாடு என்று கூறப்படுகிறது. பல்லவம் என்பது பல்லவ நாடு1; அதாவது, பல்லவ அரசர்கள் அரசாண்ட நாடு. அது தொண்டைநாடு என்றும், தொண்டை மண்டலம் என்றும், அருவா நாடு என்றும் வழங்கப்படும். இந்தச் சூத்திரம், பல்லவ நாட்டை (தொண்டை நாட்டை)த் தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. சிங்களம், கொங்கணம், துளுவம், குடகம் முதலிய நாடுகளைப்போன்று பல்லவ நாடு (தொண்டைமண்டலம்) தமிழ் திரிந்து மொழி வேறுபட்ட நிலமா? அல்லவே! தமிழ் நாடாகிய தொண்டைமண்டலத்தையும் (கொங்கணம், துளுவம், குடகம் முதலியவை போன்று) தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? இவற்றையெல்லாம் ஆராயும் போது, இந்த “அகத்தியச் சூத்திரம்” போலி அகத்தியச் சூத்திரம் என்று கருத வேண்டியிருக்கிறது.

இவ்வாறு அகத்தியரைப் பற்றியும், அகத்தியத்தைப் பற்றியும் ஆராயும்போது பலப்பல சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஆனால், ஒன்றுமட்டும் உறுதியாகச் செல்லலாம். அகத்தியம் என்னும்

--------
மறைந்துபோன தமிழ் நூல்கள் 207


பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதும், அதனை உரையாசிரியர் களும் ஏனைய புலவர்களும் பயின்றுவந்தனர் என்பதும் உறுதி.

தேவாரப் பாடல்கள் சிலவற்றை அகத்தியர் தொகுத்து வைத்தார் என்றும், அதற்கு “அகத்தியர் தேவராத் திரட்டு” என்பது பெயர் என்றும் சைவர் கூறுவர். ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், முதலில் அகத்தியர் ஆணை பெற்றுப் பிறகு நாலாயிரப் பிரபந்தத்தைத் தொகுத்தார் என்று வைணவர் கூறுவர்.

இனி, அகத்தியத்தைப் பற்றி உரையாசிரியர்கள் கூறும் கருத்தைக் காட்டுவோம்:

“அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழ்.”

(தொல்.,பொருள்.,உவமவியல், 37, பேராசிரியர் உரை)

“இதன் (தொல்காப்பியத்தின்) முதனூல் செய்த ஆசிரியனால் (அகத்தியரால்) செய்யப்பட்ட யாழ்நூலுள்ளும் சாதியும் உவமத் துருவும் திருவிரியிசையும் எனக் கூறப்பட்டவற்றுட் கட்டளைப் பாட்டுச் சிறப்புடையன சாதிப்பாட்டுகளே.”

(தொல்.,பொருள்.,செய்யுள், 51, பேராசிரியர் உரை)

“அது முதனூலாகிய அகத்தியமே போலும். என்னை? அஃது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத் தினையும் அடக்கி நிற்றலின்.”

(தொல்.,பொருள்.,செய்யுள், 172, பேராசிரியர் உரை)

இதனால் அகத்திய முனிவர் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் செய்திருந்தார் என்பது தெரிகிறது.

மேலும், பேராசிரியர் கூறுகிறார்:

“தலைவர் (சிவபெருமான்?) வழிநின்று தலைவனாகிய அகத்திய னாற் செய்யப்பட்டதும் முதனூலென்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமானடிகள் களவியல் (இறையனார் அகப் பொருள்) செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலென்பது அறிவித்தற்கும். அங்ஙனம் வினையினீங்கி விளங்கிய அறிவினான் முதனூல் செய்தா னென்பது அறிவித்தற்கும் இது கூறினானென்பது. எனவே, அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம். அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் பெற்றாம்.
மொழிபெயர் நாடுகள் சிற்றரசு துளு குடகு கலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக