புதன், 8 ஜூலை, 2020

சிலப்பதிகாரம் பார்ப்பனர் தமிழ்மறையோர் என்கிறது

aathi1956 aathi1956@gmail.com

சனி, 1 செப்., 2018, முற்பகல் 10:27
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# சிலப்பதிகாரத்துப் பார்ப்பனர்கள் ஓதியது #தமிழ் நான்மறைகளா- பார்ப்பனர்கள் # தமிழர்களா...
# சிலப்பதிகாரத்தின் கட்டுரைக்காதையில்...
"வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
# வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி"
என்றுள்ளது....
# விளக்கம்
பராசரன் என்ற பூம்புகார் நகரின் பார்ப்பான் ஒருவன் சேரமன்னன் தமிழ் மறை ஓதும் பார்ப்பனர்களுக்கு வானமளவிற்கு பரிசளித்தவன் என்பதைக் கேள்விப்பட்டு அவனைக் காண காடு மலை எல்லாம் கடந்து வந்தான்... என்பதாகும்
# நன்றாக ஊன்றிக் கவனித்தால் உண்மை புரியும்.... அதாவது இதில் "#வண்டமிழ் மறையோர்க்கு" என்று குறிப்பிடப்படுவதைப் பாருங்கள்..அப்ப
ோது பார்ப்பனர்கள் ஓதியது தமிழ் நான்மறைகளே, அவை சமஸ்கிருதமல்ல என்பது விளங்கும்...
# சிலப்பதிகாரம் முழுவதிலும் பார்ப்பனர்கள் ஓதும் நான் மறைகள் வடமொழி என்று கூறப்படவேயில்லை
...
# பார்ப்பான் ஆரியனானது திராவிட சக்திகளின் நுணுக்கமான சதியே

பாண்டிய ராசன் சட்டத்தரணி
# மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட" கோவலன்-கண்ணகியின் வதுவை (திருமணம்) நடைபெற்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது...
# இங்கும்... பார்ப்பான் ஓதியது வடமொழி வேதங்கள் என்ற குறிப்பில்லை...
# இளங்கோவடிகளும் , அவரது கதையின் நாயகனான கோவலனும் சமஸ்கிருதம் அறிந்தவர்கள் என்பதை கோவலன் ஒரு சமஸ்கிருத வாக்கியத்தைப் படித்துக் காட்டினான் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுவதிலிருந்து அறியலாம்.
# எனவே பார்ப்பணன் ஓதிய மந்திரம் சமஸ்கிருத வேதங்கள் என்றால் இளங்கோவடிகள் அப்படியே குறிப்பிட்டிருப்பார் அல்லவா...
# மேலும் "ஏ விருத்த கோபால" என்று ஓரிடத்தில் கோவலன் சுட்டப்படுவதிலி
ருந்து கோபாலன் என்ற சமஸ்கிருதப் பெயரே கோவலன் என்று இளங்கோவடிகளால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
ஆக சமஸ்கிருதம் அறிந்த இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் எந்த இடத்திலும் பார்ப்பனர்கள் வட வேதங்களை ஓதியதாகக் கூறவில்லை...
# மெய்ப்பொருள் காண்போம்


வேதம் நான்மறை பார்ப்பனத்தமிழர் இலக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக