புதன், 8 ஜூலை, 2020

ஈழம் கிழக்கு மண்பறிப்பு மதமோதல் 9 மேஜர் கணேஷ் படுகொலை புலிகள் மொசாட்

aathi1956 aathi1956@gmail.com

திங்., 27 ஆக., 2018, பிற்பகல் 3:54
பெறுநர்: எனக்கு
Thiruchchelvam Kathiravelippillai , Prashanth Tpr மற்றும் 87 பேருடன் இருக்கிறார்.
தொடர் -08
கந்தளாயைச் சேர்ந்த சிற்றம்பலம் விடுதலைப் புலிகளில் தன்னைக் இணைத்துக்கொண்டதன் பின்னர் சந்தோசம் மாஸ்ரரின் வழிநடத்தலில் நெறிப்படுத்தப்பட்டவர்.சிற்றம்ப
லத்திற்கு கணேஸ் என விடுதலைப் புலிகள் பெயரை மாற்றி வைத்திருந்தார்கள். மூதூர் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செல்வாக்கினை மேலோங்கச் செய்தவர். அவர் கட்டைப்பறிச்சான், சேனையூர், சம்பூர் பகுதிகளில் அதிகளவில் தனது இருப்பிடத்தை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டார். அவர் சாவடைந்ததன் பின்னர் மேஜர் தர அடிப்படையிலாக பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவரது நினைவாக சேனையூர் வர்ணகுல விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் ஒரு சிலையினையும் அமைத்திருந்தார்கள். மூதூர் பிரதேசத்தில் விடுதலைப்புலி போராளிக்கு சிலை அமைத்ததென்றால் அது மேஜர் கணேசுக்கு மாத்திரமே.
அவரது வருகைக் காலத்தில் மூதூர் பிரதேசத்தில் ஈரோஸ் அமைப்பே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் செல்வாக்கு செலுத்தியிருந்தது. பருத்த தோற்றமும் வெள்ளை நிறமும் இடுப்பில் எந்நேரமும் கைத்துப்பாக்கியுடன் காணப்படுவார். அவரது பேச்சில் கண்டிப்பு எப்போதும் இருக்கும். அன்பான மனிதன் என பழகுபவர்களால் போற்றப்பட்டவர். அவரின் நடவடிக்கையின் பால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் விடுதலைப்புலிகளில் சேர்ந்தார்கள்.
முஸ்லிம் மக்களிடமும் நெருங்கிய தொடர்பை பேணியிருந்தார். விடுதலைப் புலிகளில் இவரது காலத்தில் தான் பல முஸ்லிம் இளைஞர்களும் விடுதலைப் புலிகளில் சேர்ந்தார்கள். அக்காலத்தில் விடுதலை அமைப்புகளில் சேர்பவர்களில் ஆயுத மோகத்தில் இணைந்தவர்களும் உண்டு. அவ்வாறான கவர்ச்சி மேஜர் கணேசிடம் காணப்பட்டது. 200 சீசீ ஹொண்டா உந்துருளியில் செல்லுகின்ற போது அவரது தோற்றம் பலருக்கு ஒருவித ஈர்க்கையை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மையே.
முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் அமைப்பில் சேர்வதனை புடையினர் பல இடங்களில் பயன்படுத்தி தம்மால் பயிற்றப்பட்டவர்களையும் உட்புகுத்தி அவர்களது வீடுகளுக்கு மாதாந்த சம்பளத்தையும் வழங்கினர்.
அவ்வாறு 1983 இல் படையினரால் பயிற்றப்பட்ட ஒருவர் உறுப்பினராக இல்லாது மிகவும் நெருங்கிய விசுவாசியாக மூதூரைச் சேர்ந்த ஒரு நபர் உட்புகுத்தப்பட்டார். அவருக்கும் மேஜர் கணேசுக்குமான உறுவுகள் மிகவும் பலமாக இருந்தது. இருவரும் ஒன்றாக உந்துருளியில் பயணம் செய்யுமளவிற்கு இருவருக்குமிடையேயான உறவுகள் இருந்தது. ஒன்றாக உணவு உண்பது, ஒன்றாக உறங்குவது ஒனறாக அறுபத்திநான்கு துறையடி என்ற இடத்தில் குளிப்பது என இருவரது உறவுகள் நெருக்கமாக இருந்தது.
தனது நண்பர் மூலமாக யாராலும் முடியாத வேலையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது கணேசிற்கு. அவ்வாறாது தான் நண்பரும் செயற்பட்டார். மூதூரின் எல்லைக் கிராமங்களில் முஸ்லிம் மக்கள் சிலர் கொல்லப்பட்டனர். அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என முஸ்லிம் மக்கள் விடுதலைப் அமைப்புகள் மீதான எதிர்ப்புணர்வுகள் மெதுமெதுவாக அதிகரித்த வண்ணமிருந்தன. அதற்கான பிரதான காரணமாக இருந்தது முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் இக்கொலைகள் விடுதலை அமைப்புகளால் நிகழ்த்தப்படுகின்றன என்ற பொய்யான படையினரின் இரகசிய பரப்புரைகளாகும். அத்துடன் 85 இன் பின்னரான வெறுப்புக்குக் காரணமாக கிண்ணியா, மூதூர் நகர் எரிப்புச் சம்பவங்கள் திகழ்ந்தன.
அக்கிராமங்களில் நடைபெற்ற கொலைகளுக்கு காரணமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மீது (புளொட் PLOTE ) மீது விடுதலைப் புலிகளுக்கு ஐயமிருந்தது. அதனை அப்போது புளொட் அமைப்பிற்கு அரசியல் பொறுப்பாக இருந்த வல்லிபுரத்துடன் சந்திப்பினை ஏற்படுத்தி மேஜர் கணேஸ் பேசினார். அவர்களுக்கு தொடர்புகள் இல்லை என மறுக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) செய்திருக்க மாட்டார்கள் என்பது விடுதலைப் புலிகள் அறிந்திருந்தார்கள். ரெலோ சிங்களவர்களுக்கு எதிராக மாத்திரமே செயற்பட்டார்கள் என்பது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு.
விடுதலைப் புலிகள் நடுத்தீவிற்கு சென்று வந்தால் நடுத்தீவில் அன்றைய இரவில் எதுவித காரணமும் இன்றி ஒருவர் கொல்லப் பட்டிருப்பார். இவ்வாறே ஆலிம்சேனை, பெரியபாலம், பாலநகர் போன்ற ஊர்களில் எதுவும் அறியா அப்பாவி முஸ்லிம் மக்கள் தமது உயிரை இழந்தார்கள். மேஜர் கணேஸ்
தம்பலகமம் செல்வதற்கு தயாரானபோது தனது நண்பர் நாளை என்றால் தானும் வரமுடியும் எனக் கூற அதற்கு உடன்பட்டு காலயில அன்சார்வீட்ட சாப்பிட்டுற்று போகலாம் என்று நண்பர் கூற அதுவே முடியவாகியது.
1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் நாள் மேஜர் கணேஸ் அவரது முஸ்லிம் நண்பர் சொன்னவாறே சென்று அறுப்பதிநாலில் (ஓர் ஊரின் பெயர் அவ்வாறே அழைக்கப்படுகிறது. செபல்நகர் என்பது ஊர்ப் பெயர்.) காலையில் நீல லுமாலா துவிச்சக்கர வண்டியில் மேஜர் கணேஸ் ஆற்றுத் துறையினைக் கடந்து சென்று கறுத்தாங்காக்கா என்பவரின் வளவு மூலையில் கூட்டிச்செல்வதற்காக அன்சார் நின்றார். புன்னகையுடன் சென்று அன்சாசாருக்கு பக்கத்தில் சென்ற போது பற்றைக்குள்ளிருந்து துப்பாக்கிகள் சடசடத்தன. ஏற்கனவே போடப்பட்டிருந்த திட்டத்திற்கமைய சுரேஸ் காசிமின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பற்றைக்குள் மேஜர் கணேசின் வருகைக்காக காந்திருந்து ஒளித்திருந்து இருவர் மீதும் சுட்டுக்கொன்றனர். படையினருடன் நண்பரும் நின்றிருந்தார். அன்சார் வரவழைத்து காட்டிக்கொடுத்து மேஜர் கணேசை கொன்றதாகவே தற்போதும் தமிழ் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நடடிவக்கை விடுதலைப்புலிகள
ை மிகுந்த கோபத்திற்குள்ளா
க்கியது. நண்பன் மூலமாகவே கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் அறிந்திருந்தனர். நண்பர் பின்னர் மூதூரில் இருந்த ஊர்காவல் படைக்கு தலைவனாகி தமிழர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
மேஜர் கணேசின் நண்பரை கொல்வதற்கு பல முயற்சிகள் எடுத்தும் முடியாமல் போய்விட்டது.
புளொட் அமைப்பும் விடுதலைப் புலிகளும் நண்பரை கொல்வதற்கு பல முயற்சிகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. தமிழ் மக்கள் மீது வெறுப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்ட முறையில் தனது சகோதர்களை மூதூரின் எல்லைக் கிராமங்களில் ஒருவர் இருவராக சுட்டுக்கொன்றது மேஜர் கணேசின் நண்பரே என்பது பின்னர் தெரியவந்ததனாலேய
ே புளொட் அமைப்பினர் அவரைச் சுடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஓர் ஊர்காவல்படை வீரன் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்த போது தமிழ் மக்கள் அவனை “ஒரு படை வீரனாக நோக்காது முஸ்லிம்
மகனாக நோக்கி முஸ்லிம்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றார்கள்“ என நோக்கியதும் ஒரு படை வீரர் சாகும்போது அவனை “முஸ்லிம் ஒருவனைக் கொன்றுவிட்டார்கள்“ என முஸ்லிம் மக்கள் தவறான புரிதல்களை தங்களுக்கும் ஏற்படுத்திக் கொண்டதுமே இரு சமூகங்களுக்குமான இடைவெளிகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக தொடர்ச்சியாக தொடர்ந்தது.

Saravana Pavan
இதற்கு அடுத்த நாள் காலை மூதூரில் இருந்து நான் பேரூந்தில் போகும் போது 64 ஆம் கட்டையில் பேரூந்தை நிறுத்திய புலிகள் அமைப்பினர் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுவதாகவும் பேரூந்து ஓட முடியாது என்றும் கூறி பேரூந்தை திருப்பியனுப்பி
னர்.. அதன் பின் அங்கிருந்துபள்ள
ிக்குடியிருப்புக்கு நடந்து சென்றேன்... சூரன்போரிற்க்காக

Saravana Pavan
அண்ணன் துறையடியிலேயே சுடப்பட்டாரா? இல்லை அன்சாரின் பெரியபால வீட்டில் சாப்பிட்டுவிட்ட
ு வெளியில் வரும்போது சுடப்பட்டாரா?

Thiruchchelvam Kathiravelippillai
சாப்பிட முன்னரே கறுத்தாங்காக்க வளவு மூலையில் வைத்து சுடப்பட்டார்

R.s. Jerome
உண்மையான பதிவு ,நீண்ட நாட்களுக்குப்பிறகு நினைவுபடுத்தியதற்கு நன்றி,இவருக்கு முன்பு ஆரம்பகால உறுப்பினராக இருந்து கங்கையை கடக்கும் போது சுட்டுக்கொள்ளப்பட்ட இளங்கோ பற்றி தகவல்தெரிந்தால் பதிவிடுங்கள்.

Thiruchchelvam Kathiravelippillai
இத்தொடரின் நோக்கம் தமிழ் - முஸ்லிம் மக்களது உறவு விரிசல் பற்றி ஆராய்வதும் அதற்கான உண்மைக் காரணங்களை வெளிப்படுத்துவதும் இரு சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டிய ஏதுநிலைகளை அறிவியல் ரீதியாக தர்க்க ரீதியாக முன்வைப்பதும் ஆகும். எந்த ஒருவரையும் நியாயம் செய்வதற்கானதல்ல. தமிழர்கள் எனப்படுவோர் தமிழ் மொழியைப் பேசுகின்ற பிறப்புரிமை கொண்டவர்கள்.தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களும் தமிழர்களே. தற்காலத்தில் முஸ்லிம்கள் என வேறுபடுத்திக் காட்டுவதற்கான காரணம் தெளிவுபடுத்தல்களை எளிதாக்கவேயன்றி வேறுபடுத்துவதற்காக அல்ல. சைவர், கிறித்தவர், இஸ்லாமியர் அனைவரும் தமிழரே. தற்போது தமிழர் எனப்படுவோர் பேச்சுவளக்கில் சைவர்களும் கிறித்தவர்களையும் குறிப்பிடப்படுகின்றது. பின்னர் இத்தொடரில் மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களும் தமிழர்களாகவே குறிப்பிடப்படும்.தொடரின் நோக்குடன் தொடர்புடைய முக்கியமான நபர்களின் விடயங்கள் மாத்திரமே இத்தொடரில் பேசப்படும்.

Jawhary Abdul Azeez
அண்ணா,,,,இந்த வடகிழக்கில் மாத்திரமல்ல, முழு இலங்கையிலும் ,,தமிழர், முஸ்லீம்கள்,சிங்களவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக,ஐக்கியம், நம்பிக்கை, கட்டுப்பாடு, தியாகம், பொறுமை, ஆகிய அருங்குணங்களை வரவழைத்துக்கொண்டு மிக மிக ஒற்றுமையாக வாழவேண்டும், ஆனால் பெரும்தேசிய ,மற்றும் குறும்தேசிய இனவாதிகளும், பெரினவாதிகளும் எம்மை காலா காலம் பிரித்தாண்டு, இந்த நாட்டினை குட்டிச்சுவராக்
கிவிட்டார்கள்,ஆமாம், ,,இனவாதம், மதவாதம், தீவிரவாதம்,குறுகிய சுயநல்வாதங்கள் இல்லாத தூய்மையான. நல்லாட்சிக்கான அரசு வேண்டும்,அத்துடன் முஸ்லீம்களைப்பொறுத்தவரையில் இந்த நாட்டில் பூர்வீக குடிகள்,அவர்கள் மொழியால் தமிழ்பேசும் மக்கள், மதத்தால் முஸ்லீமகள் இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியாக இருந்து ஏனைய இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், மற்றும் எல்லா இன மக்களுடனும் கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ....ஒற்றுமையாகவும் சமாதான சௌஜன்யமாகவும் இறுக்கமாகவும் அந்நியோன்யமாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்துவருகிறா
ர்கள்,,,இந்த ஒற்றுமையை பலப்படுத்தி மிகத்தூய்மையான, நல்லாட்சிக்கான ஒரு தூய்மையான ஒரு தேசிய அரசியலினை செய்யவேண்டிய வரலாற்று மைற்கல்லில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம் அண்ணா, ஆமாம் இனவாதம், மதவாதம், பழமை வாதம் பேசுகின்ற அனைத்து இந்த போலி அரசியல் பம்பாத்துக்கூட்
டங்களையெல்லாம் இந்த மக்கள் மிகமிக விரைவில் துரத்தி அடிக்கும் காலம் வந்துவிட்டது அண்ணா,ஆமாம் வடகிழக்கு முழுக்க இந்த ஒற்றுமை செய்தியை நாம் தமிழ், முஸ்லிம் கிராமங்களில் விலாவாரியாக மேடை போட்டு எமது மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்,இல்லாவ
ிட்டால் எமது எதிர்கால சந்ததியினரும் பாழாகிவிடுவார்கள், உடனடியாக. களத்தில் இறங்க வேண்டிய வரலாற்று மைற்கல்லில் நாம் இருக்கிறோம்,ஆமாம், தூய்மையான முறையில் தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்காக ஒன்றுபட்டு உழைப்போம், தமிழர்,முஸ்லீம் ஒற்றுமையே எமது பலம்,,,வாழ் வளர்க தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை,


Theeparaj Suntharamoorthy
தொடரட்டும் கணேஸ் அண்ணனை மறக்க முடியாது அவரை கண் முன்னே கொண்டுவந்தமைக்கு நன்றி எனக்கு ஆறு வயதாக இருந்த போது கூனித்தீவில் வைத்து நாய் கடித்தது அதற்கு மருந்து கட்ட ஒவ்வொரு நாளும் அவரின் Road master ல் கூட்டிப்போவார்

Farhan Musthafa
மேஜர் கணேஷ் பற்றி நான் சேகரித்த தகவல்கள்.
https://m.facebook.com/groups/
1521218954873235?view=permalink
&id=1550928731902257
மூதூரும் புலிகளும்
பாகம் : 17
புலிகள் தங்களின் புரட்சி பற்றிய விழிப்புனர்வை மக்கள் மத்தியில் திணிப்பதற்காகவும் சிலரை மிரட்டி எச்சரிக்கை விடுக்கவும் என இரவு நேரங்களில் பொது இடங்களில் விளம்பரங்களை ஒட்டுவது வழக்கம்.
அன்றும் இதுபோன்ற ஒரு விளம்பர ஒட்ட வந்தவர்தான் புலி உறுப்பினரான நசீம். ஏற்கனவே இராணுவத்துக்கு கிடைத்த தகவலின்படி பதுங்கிருந்த இராணுவம் நசீமை போட்டுத் தள்ளுகிறார்கள். இது 2ம் லெப்டினன்ட் சுரேஷ் காசிம் தலைமையில் நடத்தப்படுகிறது. கூடவே சலீமும் இருக்கிறார். நசீம் ஏற்கனவே சலீமை சுட்டவர்களில் ஒருவர் அத்துடன் நசீம் கண்ணத்தில் தாக்கிய தழும்பும் ஆறவில்லை. அடிபட்ட பாம்பு வெறியோடு களத்தில் இருந்தது. மறுநாள் உடலை இராணுவ முகாமில் மக்கள் சென்று பார்வையிட்டனர். இராணுவ முகாம் இன்றை DS அலுவலகத்தில் அன்றிருந்தது. ( சிறுவயதில் பாடசாலை சென்ற வழியில் நானும் பார்த்துச் சென்றது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அது நசீம்தானா என்றது எனக்குத் தெரியாது.)
இது நடந்து சில நாற்கள் ஓடி இருக்கும்.........
ஒரு மரத்தை சாய்க்க இராணுவம் திட்டம் வகுக்கிறது. ஊரின் நடுவே ஒரு மரம் விருட்சமாக வளர்ந்திருந்தது
. அம்மரத்தால் பலர் தொந்தரவிற்குள்ள
ாகினர். அதன் கிளைகள் எப்போது யார் மீது விழும் என்ற பயமும் இருந்தது. அந்த மரத்தை அடியோடு பிடுங்க திட்டம் வகுக்கப்படுகிறது.
ஆம்,
அம்மரம்தான் கிழக்கில் முளைத்த புலி உறுப்பினர் மேஜர் கணேஷ். இராணுவத்திற்கும், அரசிற்கும், மூதூர் முஸ்லிம்களுக்கும் மிகப்பெரும் தலையிடியாக இருந்தான். எவ்வாறு மூதூரில் இராணுவ பக்கம் சுரைஷ் காசிமோ அவ்வாறே புலிகள் பக்கம் கணேஷ். இருவருமே பயத்தையே பயமுறுத்துபவர்கள்.
மறுநாள் பெரிய பாலம் அன்சார் வீட்டில் முஸ்லிம் சம்மேளனத்திற்கும், கணேஷுக்குமான சந்திப்பு ஒன்று நடைபெற இருந்தது. இதில் மூதூர் முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றம், முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப் படுவதை தடுத்தல் போன்ற முக்கிய அம்சங்கள் பற்றியான ஒரு சமாதான சந்திப்பாகும்.
இராணுவம் முதல்நாள் மாலையில் வண்ணாந்துறை ஆற்றோரமாக இப்றாஹிம் துறைக்குப் போய் அங்கிருந்து 64ம் கட்டை சென்று மலையடிவாரத்தால் நகர்ந்து வெட்டக்காட்டுச் சேனைவந்தடைந்தனர். இதை நேராகச் சென்றால் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் வரும் ஆனால் இராணுவமோ ஆறு கிலோ மீட்டர் சுத்தியே வந்தது. இது இராணுவ நடமாட்டம் புலிகளுக்கு அறியாமல் இருக்க எடுத்துக்கொண்ட இராணுவ யுக்தியாகும்.
இராணுவம் இருந்த இடத்திற்கும் கணேஷ் மறுநாள் வர இருக்கும் இடத்திற்கும் சுமார் 700 அல்லது 800 மீட்டர் தூரம் இருக்கும். படையினரை அவ்விடத்தில் நிறுத்திய சுரேஷ் காசிம் தன்னுடன் சலீமை மட்டும் அழைத்துக் கொண்டு அன்றிரவே அன்சார் என்பவரின் வீட்டிற்கு அருகில் பதுங்கிவிட்டார். இருவரும் மறுநாள் மாலை வரை காத்திருந்தனர். இடையிடையே நேரம் போகவென சிகரட்டையும் பற்றவைத்துக் கொண்டனர்.
மறுநாள்,
கணேஷ் வர முன் புலிகள் அதற்கான பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எந்த ஒருவரையும் சுரேஷ் காசிம் சுடவில்லை. நினைத்திருந்தால் பலரை சாய்த்திருக்கலாம். "ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்குமாம் கொக்கு" இங்கும் அதே நிலைதான் உறுமீனுக்காக காத்திருந்தார். தன்னுடன் அழைத்து வந்த சலீம் எல்லோரையும் சாய்க்கலாம் என்றார். ஆனாலும் அதற்கு அனுமதி கிடைக்க வில்லை.
கணேஷ் புறப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் 64 கட்டையை நெருங்கும்போது அதன் இயந்திரம் நின்றுவிடுகிறது. எவ்வளவோ முயற்சித்தும் அது ஸ்டார்ட் ஆகவில்லை. அதற்கு முன்கூட்டியே தெரிந்ததோ என்னமோ. தன் எஜமானனின் கடைசி பயணத்தை தடுக்க முயற்சித்தது. நடக்கவிருக்கும் விபரீதம் அறியாத கணேஷ் அசையாமல் நின்றிந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு சாதாரண சைக்கிளில் அன்சாரின் வீட்டிற்கு வருகிறார்.
1986: 11: 05 மாலை சுமார் 4 மணி இருக்கும், சைக்கிளில் வந்த கணேஷ் ஒரு காலை தரையில் வைக்க "வாங்க கணேஷ் அண்ணன்" என அன்சார் அழைக்கிறார். கணேஷ் திடீரென சுதாகரித்தவாறு " என்ன அன்சார் சிகரட் வாசனை வருகிறது" எனும்போது சுரேஷ் காசிமின் துப்பாக்கியும் இயங்க ஆரம்பிக்கிறது. வெடியை வாங்கிக் கொண்டு சரியும் போது தன் கைக்குண்டை வெடி வந்த திசையை நோக்கி எறிகிறார். அதில் மயிரிலையில் சுரேஷ் காசிமும் சலிமும் தப்பிக்கிறார்கள். கணேசுடன் சேர்ந்து அன்சாரும் சரிந்து விழுகிறார். இதில் பொதுமகன்களான அமீர் மற்றும் மனநலம் குன்றிய மீரிசா என்பவர்கள் காயத்துக்குள்ளாகிறார்கள்
துப்பாக்கிச் சத்தத்துடன் தூரத்தில் பதுங்கி இருந்த இராணுவத்தினர் துணைக்காக நெருங்கி வந்து விட்டனர். 15 நிமிடங்கள் ஒரே அமைதி நிலவுகிறது. உடனே காரியத்தில் இறங்கிய இராணுவம் அவசர அவசரமாக அங்கிருந்த கணேசின் உடலை எடுக்க விமானப் படையில் ஹெலிக்காப்டரின் உதவியை நாடி உடலை மூதூரை விட்டு அப்புறப்படுத்துகின்றனர். இராணுவமும் அவ்விடத்தை விட்டும் நகர்கின்றது.
சுரேஷ் காசிம் பல புலிகளைக் கண்டும் ஒருவரைக்கூட சுடாமல் கணேசை மட்டும் காத்திருந்தது ஏன் என பலரும் நினைக்கலாம்.
யார் இந்த கணேஷ்?
தம்பலகாமத்தில் சிற்றம்பலம் என்பவருக்குப் பிறந்த இவன் தனது 20 வயதில் புலிகளில் இணைகிறான். தன் பள்ளித் தோழன் சீலனுடன் ( சார்ல்ஸ் அன்றனி) பல போர்களில் கழந்து கொண்டு தன்திறமையால் பதவி உயர்வு பெறுகிறான். தன் முதல் போராக நெல்லியடி பொலிஸ் ரோந்து படையணியை படுகொலை செய்கிறான். சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல், உமையாள்புர இராணுவ வாகனத் தாக்குதல், முதன்முதலில் அதிகூடிய இலங்கை இராணுவம் படுகொலையான 13 இராணுவத்தினரை பலிகொண்ட திருநெல்வேலி போர், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய தாக்குதல், ஈச்சலம்பத்தை இராணுவ முற்றுகை முறியடிப்பு, கட்டைபறிச்சான் இராணுவ ட்ரக் வண்டி கண்ணிவெடித் தாக்குதல், பாலம்பட்டார் இராணுவ மோதல், புலிகளின் வரலாற்றில் இராணுவத்தின் L.M.G வகைத் துப்பாக்கியை முதல்முதலாக கைப்பற்றிய பட்டித்திடல் இராணுவ கவச வண்டித் தாக்குதல், மூதூரில் முதன்முதலாக இராணுவத்தின் T56 ரக துப்பாக்கியை கைப்பற்றிய தாக்குதல், இறால்குழி இராணுவ சுற்றிவளைப்பு முறியடிப்பு, 3ம் கொலனி இராணுவ நேரடி மோதல், வாகரை கண்ணிவெடித் தாக்குதல், தெஹிவத்தை அதிரடி பொலிசார் சந்தேகத்தில் கைதுசெய்த புலி உறுப்பினர்கள், மற்றும் தமிழ் இளைஞர் யுவதிகளை மீட்டெடுத்த தாக்குதல், முதன்முதலாக இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்திய கூனித்தீவு முற்றுகை, சம்பூர் முற்றுகை, வெருகல் புலிகளின் முகாம் முற்றுகை முறியடிப்பு, மற்றும் புலிகளுக்கான நிதிசேகரிப்பில் பிராத்தியத்தில் முதல்நிலை ( இதில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்ச்சிபடுத்தலும் அடங்கும்) இவ்வாறு அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஒருவனை அழிப்பது ஒரு படையையே அழிப்பதற்குச் சமன். இந்த மரத்தை சாய்க்கவே திட்டம் வகுக்கப்பட்டது, இந்த உறுமீனுக்காகத்தான் அந்தக் கொக்கு காத்திருந்தது.
இவ்வேட்டையானது மூதூர் புலிகளின் ஈரல்குலைகளை நடு நடுங்கச் செய்தது. ஒரு கணம் புலிகளின் தலைமையகமே ஆடிப்போய் விட்டது. முஸ்லிம் புலி உறுப்பினர்கள் பலர் இராணுவத்திடம் சரணடைவதை தன் மனதிற்குள் விதைத்துக் கொண்டனர். தமிழர்களுக்கும் சரணடையும் எண்ணம் இருந்தது. ஆனாலும் சரண்டைந்த பின் எங்கு செல்வது? நிர்க்கதியாக்கப்பட்டு புலிகளாலேயே கொள்ளப்படுவோமோ என்றும் குடும்பத்தினர் புலிகளால் தண்டிக்கப்படலாமோ என்றும் பயந்தனர்.
முஸ்லிம் புலிகளின் சரண்.........
தொடரும்........

Sounthararajan Muthucumar
இதில் பல பிழையான தகவல்களும் உண்டு பெரியபாலம் பகுதியில் விடுதலைப்புலிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடு பட்டது என்பது தவரான பதிவு மற்றும் அந்த காலப்பகுதியில் ஈச்சிலம்பற்று இரானுவ முற்றிகை முறியட்டிப்பு வாகரை கண்ணி வெடி இவை எல்லாம் தவரான பதிவு பட்டித்திடல் கண்ணி வெடி கூட கனேஷ் நடத்தவில்லை இப்படி பல விடையங்கள் உண்டு ஒரு வரலாற்று பதிவு என்பது தவராக இருக்க்கூடாது

Farhan Musthafa
Sounthararajan Muthucumar ஐயா, மேஜர் கணேஷ் என கூகுலில் தேடுங்கள், அதில் மேஜர் கணேஷ் பற்றி புலிகளின் குரல் ரேடியோ என ஒரு வெப்சைட் கிடைக்கும். நான் குறிப்பெடுத்தது அதிலிருந்தும்தா
ன், மற்றவை சம்பவத்தில் இருந்த ஒருவரிடமும். என் குறிப்பு தவறு எனில் அந்த வெப்சைட்டை புலிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தம், அல்லது நான் கூறியது சரி எனில் நீங்கள் புலிகளின் பல விடயங்களை மறைத்து முஸ்லிம்கள் புலிகளுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற வாதத்தை திணிக்க முயற்சிக்கிறீர்கள்.
ஏனெனில் இங்கு அரசு தமிழ்பேசும் வீரர்களை வைத்து உளவுபார்த்தது. அது அவர்களின் இராணுவ ரகசியங்கள், சிங்களம் பேசுபவர்களை புலிகளின் ஒற்றன் வேலைகளுக்கு அனுப்ப முடியாது. அவ்வாறு தமிழ் பேசும் மாற்று மதத்தவர்களும் ஒற்றன் வேலையில் இருந்தார்கள், அவர்களின் பெயர்கள் தாங்கள் குறிப்பிட வேண்டும். அத்துடன் இறுதி யுத்தத்தை முடித்தவர்கள் என்ற பெருமையும் கருணா போன்றோரையே சேரும். இங்கு தமிழ்பேசும் முஸ்லிம்கள் இரு பக்கங்களிலும் இருந்தார்கள். இராணுவ பக்கமிருந்தவர் மற்றவர் புலிகளின் பக்கமிருந்தவர்கள். புலிகளின் பக்கமிருந்து சரண்டைந்தவர்களை புலிகள் கொன்றாலும் இன்றும் ஒரு சிலர் உயிரோடு இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டறிந்தவரை கிடைத்த தகவல்கள்.
1: புலிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது, அவர்கள் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள், எங்கள் புலிகளில் இருந்த எங்கள் சகோதரர்களை (ஜஹாங்கீர் - நிர்மல்) வீண்பழி சுமத்தி பதவிக்காக கொன்றார்கள்.
2: சுரேஷ் காசிம் குடும்ப உறுப்பினர்களை கொலை மிரட்டல் செய்து வந்தார், ஆகவே குடும்பத்தின் நலன் கருதி சரண்டைந்தோம்.
இப்படி பல காரணங்களை விளக்கினார்கள். ஆனால் இந்த மொசாட் பற்றி அவர்கள் யாருக்கும் தெரியவில்லை.
அப்படி ஒரு குழு மொசாட்டோடு சேர்ந்து பயணித்திருந்தாலும் அவர்கள் இராணுவ உளவாளிகளே என எழுதி அவர்கள் பெயரை குறிப்பிட வேண்டுமே தவிர முஸ்லிம் என்று எழுதுவதை தவிர்த்தல் சிறந்தது.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 13

Thiruchchelvam Kathiravelippillai
Farhan Musthafa அவர்களே இதுபற்றிய தெளிவூட்டலை நான் தொடர்-8 இல் பின்னூட்டலில் தெளிவுபடுத்தியு
ள்ளேன், தங்களிக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன், முஸ்லிம் மக்களில் குறை காண்பதல்ல தொடரின் நோக்கம். பிரித்தாள்கை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன அதற்குள் எவ்வாறு இரு சமூகமும் வீழ்ந்தன என்பதை ஆராய்ந்து உண்மை உணர்ந்து பட்டறிவின் அடிப்படையில் எண்பதுகளின் முன்னர் இருந்த உறவினை நாம் கட்டியெழுப்ப முயற்சி செய்வதேயன்றி வேறு எதுவும் இல்லை
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 13

Saravana Pavan
Thiruchchelvam Kathiravelippillai அன்சார் வீட்டில் வைத்து சுடப்பட்டதென்பதும் மாலையிலேயே இந்த சம்பவம் நடந்ததென்பதும் உண்மை..
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஆக. 13
Thiruchchelvam Kathiravelippillai
Saravana Pavan அவ்வாறு கூறப்பட்டது. ஆனால் அது தவறான தகவல் என தெரிவிக்கப்படுகிறது
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 13

Saravana Pavan
Thiruchchelvam Kathiravelippillai மாலையில் என்பது 100% உண்மை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 13

Farhan Musthafa
மாலைவேலை என்பது உண்மை, சாப்பாட்டிற்காக வந்தார் என்பது தவறான தகவல். அன்சார் வீட்டிற்கு வந்த நேரம் சாப்பாட்டு நேரமில்லை, அத்துடன் மீரிசா, அமிர் (முறிவு வைத்தியர்) என்வருக்கும் துப்பாக்கி ரவைகள் பட்டது. ஆகவே இது முஸ்லிம் சமூக தலைவர்களுக்கும், மேஜர் கணேசுக்குமான பேச்சுவார்த்தைக
்காக அன்சார் வீட்டிற்கு கணேஷ் வந்தார் என்பது உண்மை, நான் அது சம்பந்தப்பட்ட ஆதாரங்களுடன் உரியவர்களை தொடர்பு கொண்டே எழுதியிருந்தேன். ஆனால் கணேஷோடு இருந்த நண்பர் முஸ்லிம் என்பது மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கணேஷ் மட்டும் வந்த பைக் பழுதாகியதால் அவர் சைக்கிளில் வந்ததை கண்ட ஒருவரின் வாக்குமூலமும் எனக்கு கிடைத்தது.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஆக. 13

Nagul Selvan
Farhan Musthafa நீங்கள் உங்கள் எழுத்துக்களில் ஒருமையிலேயே நபர்களை விழிக்கிறீர்கள், இது தவறானதாகும். அத்துடன் இக்கட்டுரைகளை வாசிக்கும்போதுத
ான் எவ்வாறு உறவுகள் சிதைபட்டன என காணமுடிகிறது. எனவே, நீங்களும் ஒற்றுமைப்படுத்ததான் முயல வேண்டும் எழுத்துக்ள் வாயிலாக
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 13

Thiruchchelvam Kathiravelippillai
இதுவிடயமாக நாம் பெரிதாக விவாதிக்கத்தேவையில்லை. நமது நோக்கு சம்பவத்தின் வெளிவரா தெரியா உண்மையை வெளிக்கொணருவதே. அன்சாருக்கும் கணேசின் கொலைக்கும் தொடர்பு இல்லை என்பது உணரப்பட வேண்டும். ஏனைய விடயங்கள் உறுதிப்படுத்திய பின் பதிவிடுகிறேன்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 13

CargoNizar Cargo
நான் உங்களுக்கு பலமுறை கூறியுள்ளேன்
சில கசப்பான உண்மைகளை தாண்டியே இந்த வரலாற்று தொடர் நகரும் என்பதை சகோதரர். Thiruchchelvam Kathiravelippillai .இப்போது புரிந்து இருப்பீர்கள். அந்த கால தமிழ்.முஸ்லிம் இனங்களின் சில மனக்கசப்புக்கு காரணம் வதந்திகள் மூலமாக பல உண்மைகளை இரு தரப்பினரும் மறைத்து விட்டார்கள். இச்சந்தர்ப்பத்த
ை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடியோர் பலர். தொடருங்கள் நான் உடன் இருக்கிறேன்

சோனகர் இசுலாமியர் முஸ்லீம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக