|
21/8/16
| |||
Nakkeeran Balasubramanyam
"ருத்ராக்ஷ..." என்று வடகறி மொழியில் கூறப்படுவதனையே 'உருத்திராட்சை'
என்கிறோமாம் நாம்! 'உருத்திராக்கம்' என்றும் அதனைத் தமிழ்ப்படுத்துவோரும்
உண்டு. ஆனால் இக்கொட்டையைப்பற
்றி பாவாணர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போமா?
அக்கம்: வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் என நிறங்களால்
ஐவகைப்பட்டதும், ஒன்றுமுதல் பதினாறு வரை முண்முனைகளைக் (முள் + முனை =
முண்முனை) கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக்
கருதப்படுவதும், குமரிநாட்டுக் காலந்தொட்டுச் சிவநெறித் தமிழரால்
அணியப்பட்டுவருவதும், பனிமலையடிவார நேப்பாள நாட்டில் இயற்கையாய்
விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்நாடு வந்தபின்
உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) எனப்பெயர் மாறியதுமான 'காய்மணி' என்கிறார்.
Rudraksa bead, a Nepalese product of five different colours, having
one to sixteen pointed projections over the surface, considered to
possess some medical properties, and customarily worn by the Tamilian
Saivites form Lemurian or pre-historic times...
மேலும்,
"தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்" என்று திருப்புகழ் (475) புகழ்கிறது.
அள்= கூர்மை (திவா). அள் --> அள்கு --> அகு.
வெள் --> வெள்கு -->வெகு = விரும்பு, மிக விரும்பு, பிறர் பொருளை விரும்பு.
அகு --> அக்கு = கூர்மை, முனை, முள்முனை, முள்முனையுள்ள அக்க மணி.
"உருப்புலக்கை அணிந்தவர் " - திருவானைக் கோச் செங். 4
அக்கு --> அக்கம் = பெரிய அக்கமணி, 'அம்' பெருமைப் பொருட் பின்னொட்டு.
விளக்கு --> (கலங்கரை) விளக்கம்.
கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை,
முண்மணி என்பன அக்கமணியின் வேறு பெயர்கள். இவற்றுள் முதல் நான்கொழிந்த
ஏனைய வெல்லாம், அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர்
முனைகளைக் கொண்டதென்றே பொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை.
கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், 'கடவுண்மணி'
முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே.
கடவுள் மணி, முள் மணி என்பன கடவுண்மணி. முண்மணி என்று புணர்ந்தது போன்றே,
கள் மணி என்பதும் கண்மணி என்று புணரும்.
ஆரியப் பூசாரியார், இருபெரும் தூய தமிழ் மதங்களான சிவனியத்தையும்
(சைவம்), மாலியத்தையும் (வைணவம்), ஆரியப்படுத்தும் வகையில், தமிழரின்
முத்தொழிற் கடவுளை மூவேறு ஒருதொழில் திருமேனிகளாகப் பகுத்து,
முத்திருமேனிக் (திரிமூர்த்தி) கொள்கையைப் புதிதாக வகுத்து, படைப்பிற்கு
வேதத்திற் சொல்லப்படாத பிரமா (Brahma) என்னும் ஒரு தெய்வத்தைப் படைத்து,
காப்பிற்கு 'விஷ்ணு' எனும் வேதக் கதிரவத் தெய்வத்தை 'விண்டு' எனும்
திருமாலோடும், அழிப்பிற்கு உருத்திரன் (Rudra - ருத்திர) எனும் வேதக்
காற்றுத் தெய்வத்தைச் சிவனொடும் இணைத்து, கண்மணி எனும் கூட்டுச் சொல்லைக்
கண் + மணி என்று தவறாகப் பிரித்து, அக்கம் எனும் தென்சொல்லைத் 'அக்ஷ'
என்று திரித்து, அதற்குக் கண் என்று வடவழிப் பொருளூட்டி, 'சிவமணி'
என்பதையொப்ப 'ருத்ராக்ஷ' எனும் பெயரைப் புணர்த்து, அது உருத்திரன்
(உருத்ர) எனும் சிவனின் கண்ணினின்று தோன்றியதால் அப்பெயர் பெற்றதென்று
கூறி, அதற்குச் சான்றுபோல் 'முப்புற எரிப்பு' (திரிபுரத் தகனம்) எனுங்
கதையுங் கட்டி, ஆராய்ச்சியில்லா
ர்க்குத் தெரியாதவாறு உண்மையை முற்றும் மறைத்துவிட்டனர்.
இற்றைத் தமிழர்க்குப் பொதுவாக மதத்துறையில் பகுத்தறிவின்மைய
ால், கண்மணி என்பது சிவனின் கண்ணினின்று தோன்றிய மணியே என்றும், அக்கம்
என்பது 'அக்ஷ' எனும் வடசொல்லின் திரிபேஎன்றும் ஆரியப் புராணப்
புரட்டையெல்லாம் முழு உண்மையென்றும், அதை ஆராய்தல் இறைவனுக்கு மாறான
அறங்கடை (பாவம்) என்றும் நம்பிக்கொண்டிரு
க்கின்றனர்.
ஆரிய வேதக் காற்றுத் தெய்வமான உருத்திரனுக்கும், சிவனுக்கும் யாதொரு
தொடர்பும் இல்லை. மங்கலம் என்று பொருள்படும், சிவ என்னும் ஆரிய அடைமொழி
இந்திரன், அக்கினி, உருத்திரன் எனும் ஆரிய வேத முச்சிறு தெய்வங்கட்கும்
பொதுவாக வழங்கப்பட்டுள்ளது. அதற்குச் சிவந்தவன் என்று பொருள்படும்
'சிவன்' எனும் செந்தமிழ்ப் பெயர்ச்சொல்லொடு எள்ளளவுந் தொடர்பில்லை.
அந்திவண்ணன், அழல்வண்ணன், செம்மேனியன், மாணிக்கக்கூத்தன், முதலிய சிவன்
பெயர்களை நோக்குக.
உருத்திரன் எனும் ஆரியத் தெய்வ இயல் விளக்கமும், அவனுக்கும்
சிவனுக்குமுள்ள மாபெரும் வேறுபாடும், முப்புற எரிப்புக் கதையின்
முழுப்புரட்டும், உருத்திராக்கம் எனுஞ்சொல்லின்கீழ்க் கூறப்படும்.
சிவநெறி குமரிநாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்துவிட்ட தூய தமிழ்
மதமாதலாலும், அக்கமணி மேனாடுகளில் விளையாமையாலும், கிரேக்கத்திற்கு இனமான
ஒரு மொழியைப் பேசிக்கொண்டிருந்த மேலையாசிய ஆரிய வகுப்பார்
இந்தியாவிற்குப் புகுமுன்னரே தமிழர் இந்தியா முழுதும் பரவி வடஇந்தியத்
தமிழர் முன்பு திராவிடராயும் பின்பு பிராகிதராயும் மாறியதனாலும்,
அக்கமணியைச் சிவனியர் குமரிநாட்டுக் காலந்தொட்டு அணிந்துவந்ததனாலும்,
அம்மணிக்கு அப்பெயரே உலக வழக்கில் வழங்கியதனாலும், தமிழ் முறைப்படி,
'முண்மணி' என்பதே அப்பெயர்ப் பொருளாம்.
என்கிறார்!
எவ்வளவு இழந்திருக்கிறோம், அதுவும் ஒரு பெரும் புரட்டுக் கூட்டத்திடம்
நம் மொழியையே இழந்திருக்கிறோமென்பதும் தெரிகிறதா?
# எல்லாமே_தமிழ்தாண்டா
# அதுகூடத்_தமிழ்தாண்டா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக