சனி, 25 மார்ச், 2017

அசோகர் கால தமிழகம் ஒரிசா வரை காரவேலன் மொழிதிரிந்த பகுதியும் தமிழர் கட்டுப்பாட்டில் சிலப்பதிகாரம் காலம் கிமு75 இடைச்செருகல் சங்ககால சாதவகனர் தமிழ் ஆதரவு கடல் சங்ககால 2

aathi tamil aathi1956@gmail.com

29/3/16
பெறுநர்: எனக்கு
‘திராவிடி” என திரித்து வழங்கப்பட்டது. (ஆதாரம் : தமிழெழுத்தின் வரி
வடிவம்” பக்.18, 19, ஆசிரியர் சி. கோவிந்தராசனார் அவர்கள்). அதுபோலவே
தமிழ் என்பதும் திராவிடம் எனதிரிக்கப்பட்ட
து. ஆக தமிழ் என்பதன் வடமொழி உச்சரிப்புதான் திராவிடம் ஆகும்.
அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவ
கன்னர்கள் தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை
நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள்
தக்காணத்தை ஆண்டனர். ஒரு சமயத்தில் இவர்கள், மகதத்தையே பிடித்து சிறிது
காலம் ஆண்டனர். சாதவ கன்னர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் (சாதவ என்பது
சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு
மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்கள் வெளியிட்ட
நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன.
(ஆதாரம் : 24ஃ6ஃ2010, இந்து ஆங்கில நாளிதழில் ஐராவதம் மகாதேவன் அவர்கள்
எழுதிய, ‘An epigraphic perspective, on the antiquity of Tamil' என்ற
கட்டுரை)
ஆக, கி.மு.4-ம், 3-ம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம்
முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. (கி.மு.1500 வாக்கில் இந்தியா
முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டு வந்ததாக அம்பேத்கார் குறிப்பிடுகிறார்
என்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவும். ஆதாரம் : வள்ளுவத்தின் வீழ்ச்சி -
பெங்க@ர் குணா) வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு
பெற்றிருந்தன. அதனால் தழிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து,
கொடுந்தமிழ் பேசப்பட்ட பகுதியை, மொழி பெயர் தேயம் என்றனர். (வடமொழி
என்பது பொதுவாக சமற்கிருதம் எனக் கருதப்படுகிறது. அது தவறு. கி.பி.2ம்
நூற்றாண்டு வரை வடமொழி என்பது பெரும்பாலும் பிராகிருதம் அல்லது பாலி
மொழியையே குறிக்கும்). இந்த மொழி பெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால்
பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31வது
பாடல்,
‘தமிழ்க்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர்தே எத்த” என உறுதிப்படுத்துகிறது.
காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு :
மொழி பெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்துவந்தது
என்றால் தமிழ் அரசுகள் முக்கியமாக மூவேந்தர்கள் ஒன்று
சேர்ந்துசெயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து
செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும். கலிங்க
மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணி
குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165ஆகும்.
அத்திக்கும்பா கல்வெட்டு :
11வது வரி : ’11-ம் ஆட்சியாண்டில், 1300 ஆண்டுகளாக இருந்து வந்த,
புகழ்பெற்ற நாடுகளைக் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து, முந்தைய
கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, ‘பித்துண்டா” என்ற நகரத்தைப்
பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது,பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து
விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்”.
13வது வரி : ‘12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான,
விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங் களையும்
கலிங்கத்தின் தலைநகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை
உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன். (ஆதாரம் :
www.jatland.com/home/Hathigumpha - inscription). சதானந்த அகர்வால்
அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய ‘சிரி காரவேலா” என்ற நூலில் இப்பகுதி
உள்ளது.
‘11வது வரியில் சமற்கிருதத்தில் புகழ்பெற்ற ‘ஜனபத்” என்பதை ஆங்கிலத்தில்
புகழ்பெற்ற கிராமங்கள் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஜனபத் என்பது
நாடுகளைக் குறிக்கும். எனவே புகழ்பெற்ற நாடுகள் என இங்கு மாற்றி மொழி
பெயர்க்கப்பட்டு
ள்ளது. தமிழரசுகளின் கூட்டணி என்பது நாடுகளின் கூட்டணியே அன்றி
கிராமங்களின் கூட்டணி அல்ல. அடுத்ததாக ‘பித்துண்டா” என்ற நகரம் முந்தைய
கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட
ுள்ளது. ஆகவே இந்நகரம் கலிங்கத்தின் தென் எல்லையோரத்தில்தான்
அமைந்திருக்க வேண்டும்.
கலிங்கத்தின் தென் எல்லையேரத்தில் இருந்த, முந்தைய கலிங்க மன்னர்களால்
உருவாக்கப்பட்ட இந்நகரம் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக இருந்தது
என்றால் அதன் கருத்து என்ன? தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் காவல் அரணாக
பித்துண்டா நகரம் இருந்து வந்துள்ளது என்பதும், தமிழகத்தின் வட எல்லையில்
இருந்து, கலிங்கத்தின் தென் எல்லை வரையான இன்றைய ஆந்திரத்தின் சில
பகுதிகள் தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்து வந்துள்ளது
என்பதும் அதன் பொருளாகிறது. அதன்மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ்
மூவேந்தர்களின் பாதுகாப்பின்கீழ
்தான் இருந்து வந்தது என்ற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின்
மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
மேலும், இந்நகரம் மீண்டும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கீழ்
வந்துவிடக் கூடாது என்பதற்காக, அது தரைமட்டமாக்கப்பட்டு கழுதை கொண்டு
உழப்பட்டுள்ளது.
www.freeindia.Org/biographies/kharavela/
index.htm என்ற இணைய தளப் பக்கத்தில் D.N. சன்பக் (Shanbhag) என்பவர்,
தனது கட்டுரையில், தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு
தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படையெடுத்துச்
சென்ற போது, அவை கலிங்கத்தை, தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத்
தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்கு பதிலடி தரும் விதமாகத்தான்
காரவேலன் பித்துண்டா நகரத்தை தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை
உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது
ஒரு துறைமுக நகரம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின்
தென்கிழக்கு எல்லையில் இருந்த தமிழக அரசுகளின் காவல் அரண் என்பதையும்,
மொழிபெயர் தேயமான ஆந்திரத்தின் சில பகுதிகள் தமிழக அரசுகளின்
கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்துள்ளது என்பதையும் உறுதி செய்கின்றன.
தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க
அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கனவாக இருந்தன என்ற
அவரது செய்தி, தமிழரசுகளிடையே ஐக்கிய கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர்
தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதை சந்தேகமின்றி
ஆதாரத்தோடு உறுதிப்படுத்துக
ின்றன எனலாம்.
அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய
அரசன் தொடர்ந்து வடநாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும்
ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து, அவனோடு சமாதானம் செய்து கொள்ளும்
பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக்
கொண்டுள்ளான். இதைத்தான் கல்வெட்டின் 13-வது வரி குறிப்பிடுகிறது எனலாம்.
ஆக மாமூலனாரின் பாடல்களும், காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக
அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது
என்பதையும், மொழி பெயர் தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன
தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும்
உறுதிப்படுத்துக
ின்றன.
தமிழரசுகளின் கடல் வல்லமை :
தமிழ் அரசுகள் அன்று மாபெரும் கடல் வல்லரசுகளாகவும் இருந்தன. இதுகுறித்து
வின்சென்ட் யு.ஸ்மித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், ‘தமிழ் அரசுகள்
வலிமை மிக்க கடற்படைகளை வைத்திருந்தனர். கிழக்கிலிருந்து
ம், மேற்கிலிருந்தும் வாணிபக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன” என்று தனது
இந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிடுவதாக கார்த்திகேசு சிவதம்பி அவர்கள்
பண்டைத் தமிழ் சமூகம் என்ற தனது நூலின் முன்னுரையில் தெரிவிக்கிறார்.
வின்சென்ட் யு. ஸ்மித் அவர்கள் தனது அசோகர் என்ற மற்றொரு நூலில்
‘தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகள்
பராமரித்து வந்துள்ளன” எனக் குறிப்பிடுகிறார். (ஆதாரம் : ‘அசோகர்”
வின்சென்ட் யு. ஸ்மித், தமிழில் சிவமுருகேசன் பக்: 79) தென்னிந்திய
நாடுகள் என்பன தமிழக நாடுகளே ஆகும்.
பண்டையத் தமிழக அரசுகள் வலிமை மிக்க கடற்படைகளைக் கொண்டிருந்த போதிலும்
அவர்களிடையே நடைபெற்ற போர்கள் அனைத்துமே நிலப் போர்களாகவே இருந்தன.
அவைகளுக்கிடையே கடற் போர்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் கடம்ப
மன்னர்களை, அவர்களின் கடற் கொள்ளைகளைத் தடுக்கும் பொருட்டு, தங்கள்
கடற்படை கொண்டு அவர்களைத் தாக்கி அழித்தனர். தமிழக கடல் வாணிபத்துக்குத்
தடையாக இருந்த கடற் கொள்ளையர்களையும் தாக்கி அழித்தனர் என பதிற்றுப்பத்து
குறிப்பிடுகிறது. அதுபோன்றே சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்செட்
சென்னியும், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் தென் பரதவர்களை,
அவர்களின் கடல் வல்லமையை, தங்கள் கடற்படை கொண்டு அடக்கினர் என சங்கப்
பாடல்கள் தெரிவிக்கின்றன.
ஆக கடற் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே கடற்படை பயன்படுத்தப்பட்
டதாகத் தெரிகிறது. கடல் வணிகத்தை பாதுகாப்பதிலும் தமிழக அரசுகளிடையே
ஐக்கிய கூட்டணி இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான் தமிழரசுகளுக்கிடையே
கடற்போர் எதுவும் நடைபெறவில்லை. ஆக வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல்
வாணிகத்தை பாதுகாக்கவும், வடக்கிலிருந்து வடுகர்கள் போன்ற அநாகரிக
மக்களைகட்டுப்படுத்தி வைக்கவும், மொழி பெயர் தேயப் பகுதியைப்
பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக
அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிகநீண்ட காலமாக இருந்து வந்தது என்பதை
மேலே சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.
புகழ்பெற்ற நெடியோன் எனப்படும் நிலந்தருதிருவிற்பாண்டியன்
கி.மு.5-ம்நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை வைத்திருந்தான் எனவும்,
‘சாவகம்” (இன்றைய இந்தோனேசியா தீவுகள) அன்றே அவனது கடற் படை கொண்டு
கைப்பற்றப்பட்டது எனவும், அப்பாதுரை அவர்கள் குறிப்பிடுகிறார். அதன்மூலம்
‘கிராம்பு” எனப்பட்ட வாசனைப் பொருள் வணிகம் தமிழர்களின் கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு வரப்பட்டது எனத் தெரிகிறது.
கிராம்பு என்பது உலகிலேயே இந்தோனேசியாவில் மட்டுமே விளைந்தது என்றும்,
உலகம்முழுவதும் அதற்கு மிக அதிகத் தேவை இருந்தது என்றும் அறிகிறோம்.
கி.மு.500 க்கு முன்பிருந்தே அத்தேவை கடல் வணிகம் மூலமே பூர்த்தி
செய்யப்பட்டு வந்தது. அதனால்தான் அவ்வணிகத்தை தமிழர்கள் தமது கடற்படை
கொண்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சங்க காலத்தில்
சாவகத்தில் தமிழ் பேசப்பட்டதாக மணிமேகலை காப்பியத்தின் கூற்று
அச்செய்தியை உறுதிப்படுத்துக
ிறது. (ஆதாரம் : கா. அப்பாதுரை அவர்களின் தென்னாட்டு போர்க்களங்கள் பக் :
43 முதல் 48 வரை).
மேலும் நரசய்யா அவர்களின் ‘கடல் வழி வணிகம்” என்ற நூல் தமிழர்களின்
பண்டையக் கடல் வணிகம் குறித்து பல விரிவான தகவல்களைத் தருகிறது. ஆக
கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே பண்டைய தமிழக அரசுகள் கடற் போரிலும், கடல்
வணிகத்திலும் புகழ் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக இருந்துள்ளனர்.
பண்டைய தமிழ் அரசுகள் :
பண்டைய தமிழக அரசுகளை, அசோகர் தனது கல்வெட்டுக்களில் சோழர்கள்,
பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரள புத்திரர்கள் என பன்மையில்தான்
குறிப்பிட்டுள்ள
ார். சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் ஒவ்வொருவரிலும் பலர்
இருந்து ஆண்டு வந்துள்ளனர். அதாவது சேரர்களில் மூன்று நான்கு பேரும்,
பாண்டியர்களில் மூன்று நான்கு பேரும் சோழர்களில் மூன்று நான்கு பேரும்
இருந்து ஆண்டு வந்துள்ளனர். இதனைக் கவனத்தில் கொண்டுதான் பண்டைய தமிழக
வரலாற்றை ஆராய வேண்டும். சேரர்கள் வஞ்சி, கரூர் ஆகிய இடங்களிலும்,
சோழர்கள் உறையூர், காவிரிப் பூம்பட்டினம் ஆகிய இடங்களிலும், பாண்டியர்கள்
மதுரை, கொற்கை ஆகிய இடங்களிலும் இருந்து கொண்டு மூன்று நான்கு சேர, சோழ,
பாண்டிய பரம்பரையினர் ஆண்டு வந்துள்ளனர்.
உதாரணமாகச் சேரன் கடற்பிற கோட்டிய செங்குட்டுவன் காலத்தில் அதற்குச்சற்று
முன்பும் பின்பும் (1) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,(2) பல்யானைச்செல்
குழுகுட்டுவன், (3) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்,(4) சேரன்
செல்வக்கடுங்கோ வாழியாதன், (5) களங்காய்கண்ணி நார்முடிச்சேரல், (6) ஆடு
கோட்பாட்டு சேரலாதன், (7) தகடூர் எறிந்த நெடுஞ்சேரல் இரும்பொறை, (8)
சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை ஆகிய 8 பேர் இருந்துள்ளனர்.
செங்குட்டுவனையும் சேர்த்து 9 பேர் ஆகிறது. இதேபோன்றுதான் சோழ, பாண்டிய
அரசர்களும் இருந்துள்ளனர். அதனால்தான் அசோகர் தனது கல்வெட்டுகளில் தமிழக
அரசர்களை பன்மையில் குறிப்பிட்டுள்ளார்.
சோழர்களின் முதன்மை
மெகஸ்தனிஸ், சாணக்கியர் குறிப்புகளில் இருந்தும், அசோகரின்
கல்வெட்டுகளில் இருந்தும் தமிழக வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை
அறிய முடிகிறது. கி.மு.325 முதல் கி.மு.300 வரையான காலகட்டத்தில், அதாவது
கி.மு.4-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழக மூவேந்தர்களில்
முதன்மையான அரசாக மெகஸ்தனிஸ், சாணக்கியர் ஆகிய இருவரும் குறிப்பிடுவது
பாண்டிய அரசைத்தான். ஆனால் கி.மு.3-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில்
பொறிக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ
அரசுதான்.
பாண்டிய அரசு இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான்
குறிக்கப்பட்டுள்ளது.(அசோகர்-வின்சென்ட் A ஸ்மித், தமிழில் சிவ.
முருகேசன், பக்: 123, 139)அரை நூற்றாண்டுக்குள் சோழர்கள் முதன்மை பெற்று,
பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வு
தமிழகத்தில் நடைபெற்று, அது அன்றைய இந்தியாவெங்கும் பிரதிபலித்துள்ளது.
அந்நிகழ்வு என்ன என்பதை அறிவோமாக!
சந்திரகுப்த மௌரியரின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக