|
29/3/16
| |||
தமிழக அரசுகளும் மௌரியப் பேரரசும்
எழுத்தாளர்: கணியன்பாலன்
வெளியிடப்பட்டது: 09 ஏப்ரல் 2012
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழிஇக், கங்கை
நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ! " (அகம் - 265)
என்கிறார் சங்ககாலக் கவிஞர் மாமூலனார். மகதத்தை ஆண்ட நந்தர்கள் பெரும்
புகழை உடையவர்களாகவும், பெரும் படை உடையவர்களாகவும் இருந்ததோடு, மிகப்
பெரிய அளவிலான செல்வத்தையும் கொண்டிருந்தனர் என்கிறார் அவர். நந்தர்கள்
காலம் கி.மு.4 ம் நூற்றாண்டு ஆகும். நந்தர்கள் குறித்து பேசிய அவர், தனது
வேறு இரு சங்கப் பாடல்களில் நந்தர்களுக்குப் பின் வந்த மௌரியர்களின்
தமிழகப் படையெடுப்பு குறித்து
" .............................. ....மோகூர்
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த" (அகம் - 251) எனவும்
"முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து
எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த " (அகம் - 281)
எனவும் இருபாடல்களை பாடியுள்ளார். அதில், பாண்டியர் படைத் தலைவன் மோகூர்
பழையன் போன்ற, தமிழரசுகளின் எல்லைக் காவல் படைத்தலைவர்கள், பணியாததால்
வடுகர்கள் வழிகாட்ட, வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது பிராகிருதச்
சொல்லாடல் ஆகும்), மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைக் குன்றுகளை
வெட்டி தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு தமிழகத்தை நோக்கி
படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார். நந்தர்களுக்குப் பின் வந்த
மௌரியர்களை புதியவர்கள் என்ற பொருளில், முதல் பாடலில் மட்டுமே வம்ப
மோரியர் என்கிறார். (வம்ப என்றால் புதிய எனப் பொருள் படும்.). இரண்டாவது
பாடலில் மோரியர் என்றே குறிப்பிடுகிறார
்.
மாமூலனார் தவிர வேறு சில சங்கக்கவிஞர்களும், மௌரியர்களின் படையெடுப்பு
குறித்து குறிப்பிட்டுள்ளனர். வேங்கடமலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாட வந்த
கள்ளில் ஆத்திரையனார்,
"விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர.
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த" (புறம் - 175) என்கிறார்.
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் தனது அகப் பாடலில், காதலன் கடந்து
சென்ற பாதை குறித்து,
"விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த (அகம் - 69) என்கிறார்.
இச்சங்கப் பாடல்கள், மோரியர்கள் தங்களின் தேர்படை முதலான பெரும்படைகளைக்
கொண்டு வர மலைக் குன்றுகளை வெட்டி பாதை அமைத்தனர் என்பதைக்
குறிப்பிடுகின்றன.
நந்தர்களை அகற்றிய பின், ஆட்சி ஏற்ற மௌரியர்கள் வட இந்தியாவில்
பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின் தென் இந்தியா மீது படை எடுத்ததும்,
இன்றைய மைசூர் வரை தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தியத
ும், வரலாற்று மாணவன் அறிந்த செய்தி தான். ஆனால் மௌரியர்கள், வடுகர்கள்
துணையோடு தமிழகத்தை தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள
சங்கப் பாடல்கள் தரும் செய்தி பல வரலாற்று மாணவர்களுக்கு ஒரு புதிய
செய்தியே! இவை நடந்த காலம் கி.மு.4ம், 3ம் நூற்றாண்டுகள் ஆகும்.
மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த
இளஞ்சேட்சென்னி தலைமையில் தமிழக அரசுகளால் முறியடிக்கப்பட்
டது.
இளஞ்சேட்சென்னியின் தந்தையான பெரும்பூட்சென்னி குறித்தும் அவனது கழுமலப்
போர் குறித்தும் அகம் 44இல் பாடியவர் குடவாயிற் கீரத்தனார் என்ற
சங்ககாலக் கவிஞர் இக்கவிஞர் கி.மு.4ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்;
மாமூலனாருக்கும் முற்பட்டவர்.
அடுத்ததாக படுமரத்து மோசிகீரனார் என்பவர் பாடிய குறுந்தொகை 75ம் பாடலில்,
தனது காதலன் வரவைச் சொல்லிய பாணனிடம்,
"என் காதலன் வரவை நீ பார்த்தாயோ, பார்த்தவர் சொல்லிக் கேட்டனையோ,
உண்மையைச் சொல், உனக்குப் பரிசாகத் தருகிறேன், யானைகள் உலவும், சோனையின்
கரையிலிருக்கும் பாடலிப் பொன் நகரை"
என்கிறாள் பெருமகிழ்ச்சி அடைந்த தலைவி. இப்பாடலில், மகத அரசின் தலைநகராக,
கி.மு.4ம், 3ம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்று விளங்கிய பாடலிபுத்திரம்
குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சங்க காலக் கவிஞர்கள் நிகழ்கால
நிகழ்வுகளை மட்டுமே தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கும்
முந்தைய கால நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே குறிப்பிடப்படுக
ின்றன. உதாரணமாக பரணர் என்ற சங்ககால கவிஞர் இந்த மௌரியப்
படையெடுப்புக்குப் பின் சில ஆண்டுகள் கழித்து வாழ்ந்தவர். மௌரியப்
படையெடுப்பை முறியடித்த இளஞ்சேட்சென்னியின் மகனான முதலாம் கரிகாலன்
காலத்தில் வாழ்ந்தவர். அவர்தான் அதிக அளவான வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட
பாடல்களைப் பாடியவர். எனினும் அவர் மௌரியர்களைக் குறித்தோ அவர்களின்
படையெடுப்பு குறித்தோ எங்கும் குறிப்பிடவில்லை. அவர் தனது காலத்தில்
நடந்த நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மௌரியப் படையெடுப்பு அவர்
காலத்துக்கு முன்பே நடந்து விட்டதால், அது குறித்து அவர்
குறிப்பிடவில்லை.
ஆகவேதான் மேலே குறிப்பிடபட்டுள்ள சங்ககாலப் பாடல்களைப் பாடிய மாமூலனார்,
குடவாயிற் கீரத்தனார், கள்ளில் ஆத்திரையனார், உமட்டூர் கிழார் மகனார்
பரங்கொற்றனார், படுமரத்து மோசிகீரனார், பொன்றவர்கள் கி.மு.4ம், 3ம்
நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் எனக் கூறமுடியும்.
மேலும் “ஒரு வீட்டில் சாவு, இன்னொரு வீட்டில் மணவிழா. சாவு வீட்டில்
துக்கம். மணவீட்டிலோ மகிழ்ச்சி. இவ்வாறு இன்பமும் துன்பமும் கொண்டதுதான்
வாழ்க்கை. இதனைப் படைத்தவன் பண்பில்லாதவனே! எனினும் வாழ்க்கையின் இயல்பை
உணர்ந்தவரே அதில் இனிமையைக் காணமுடியும்." என்று பொருள்படும் புகழ்பெற்ற
புறம் 194வது பாடலைப் பாடிய பக்குடுக்கை நன்கணியார் என்பவர்தான், ஊழியல்,
ஒருமையியம் என்கிற அணுவியத்தை தோற்றுவித்த, கி.மு.5-ம் நூற்றாண்டில்
வாழ்ந்து வந்த, பகுத கச்சாயனார் ஆவார் எனப் பேராசிரியர் பே.க. வேலாயுதம்
என்பவர் ஆய்ந்தளித்துள்ளார். ‘தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” என்ற நூலை
எழுதிய முனைவர் க.நெடுஞ்செழியன் என்பவர் அக்கருத்தை மேலும் ஆய்ந்து உறுதி
செய்துள்ளார். (ஆதாரம்: வள்ளுவத்தின் வீழ்ச்சி” பக்.44, ஆசிரியர் :
பெங்களூர் குணா). ஆக சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.5 ஆம்
நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது எனலாம்.
அசோகரின் கல்வெட்டுகள்:
மௌரிய அரசர் அசோகர் தனது 32 கல்வெட்டுகளில், இரண்டு கல்வெட்டுகளில்
மட்டுமே தனது எல்லைக்கப்பாலுள்ள அரசுகளின் பெயர்களைக்
குறிப்பிடுகின்றார். இரண்டிலும் (2வது, 13வது) தமிழரசுகளின் பெயர்கள்
வருகின்றன. 2வது கல்வெட்டில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான
மருத்துவப் பணிகளை எந்தெந்த பகுதிகளில் செய்து வருகிறேன் என்று சொல்ல
வந்த அசோகர், சோழர்கள், பாண்டியர்கள், சத்ய புத்திரர்கள், கேரள
புத்திரர்கள் ஆகிய தமிழக நாடுகளின் நான்கு அரசகுலப் பெயர்களையும் முதலில்
சொல்லிவிட்டு, அதன் பின்னரே கிரேக்க அரசர்களின் பெயர்களைக்
குறிப்பிடுகிறார். 13வது கல்வெட்டில், தர்ம நெறி எந்தெந்த நாடுகளில் பரவ
வேண்டும் என்று சொல்ல வந்த அசோகர் முதலில் கிரேக்க அரசர்களின்
பெயர்களையும், பின்னர் சோழர்கள், பாண்டியர்கள் என இரு தமிழரசுகளின்
பெயர்களையும் குறிப்பிடுகிறார
்.
இரண்டு கல்வெட்டுகளிலும் தமிழக அரசுகளில் சோழர்களே முதன்மையாகக் குறிப்பிடப்படுக
ின்றனர். புகழ்பெற்ற அரச குலங்களால் ஆளப்படும் புகழ் பெற்ற மக்களைக்
கொண்ட நாடுகள் என்பதால்தான் கிரேக்க மன்னர்களுக்கு முன் தமிழக அரசுகள்
குறிப்பிடப்பட்டுள்ளன. பல துறைகளிலும் தனித்துவமிக்க வளர்ச்சியும், சங்க
இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்கள் படைக்கப்பட்டுக் கொண்டுமிருந்த
தமிழக அரசுகளின் வலிமையையும், பண்பாட்டு பாரம்பரியத்தையும் அசோகர்
உணர்ந்திருந்ததன் காரணமாகவே தனது கல்வெட்டில் தமிழரசுகளை முதலில் பதிவு
செய்துள்ளார் எனில் அது மிகையாகாது.
மெகஸ்தனிசும் சாணக்கியரும் :
அசோகருடைய ஆட்சிக்காலம் கி.மு.269 முதல் கி.மு.232 ஆகும். அசோகரின்
தாத்தா சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்தில், இந்தியா வந்திருந்த
கிரேக்க தூதர் மெகஸ்தனிசின் காலம் கி.மு.350 முதல் கி.மு.290 வரை எனக்
கருதப்படுகிறது. அதே காலகட்டத்தில் (கி.மு.350 முதல் கி.மு.283 வரை)
வாழ்ந்தவர்தான் நந்தர்களிடமிருந்து மகத அரசைக் கைப்பற்ற உதவிய கௌடில்யர்
எனப்படும் சாணக்கியர் ஆவார். மெகஸ்தனிஸ் மற்றும் அர்ரியன் என்பவர்கள்
எழுதிய தகவல்களைக் கொண்டு 1877ல், ‘மெகஸ்தனிஸ் மற்றும் அர்ரியன்
அவர்களால் விவரிக்கப்படும் பழமை இந்தியா” (Ancient India as described by
Megasthenes and Arrian” By J.W. Mccrindle, M.A.,) என்ற ஆங்கில நூல்
வெளியிடப்பட்டது. அந்நூலில் ‘கெராக்கிளிஸ் (Herakles) என்பவருக்கு பல
மகன்களும், பாண்டைய் (Pandai) என்ற ஒரு மகளும் இருந்தனர் என்றும், தனது
அன்புக்குரிய மகளுக்கு தென்பகுதியிலுள்ள முத்து விளைகிற பாண்டிய நாட்டைக்
கொடுத்து விட்டு இந்தியாவின் வேறு சில பகுதிகளை தனது மகன்களுக்குப்
பிரித்துக் கொடுத்து விட்டு, தான் பாடலிபுத்திர அரசை வைத்துக் கொண்டார்
என்றும், மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பாண்டிய அரசியின் சந்ததிகள் 300 நகரங்களும், 1,50,000காலாட்
படைவீரர்களும், 4000 குதிரைப் படைகளும், 500 யானைகளும் கொண்ட அரசை ஆண்டு
வருகின்றனர் என்றும், அங்கு முத்து விளைகிறது என்றும், பாடலிபுத்திர அரசு
6,00,000 காலாட்படைகளும், 30,000 குதிரைப் படைகளும், 9000 யானைகளும்
கொண்டு ஆண்டு வருகிறது என்றும் குறிப்பிடுகிறார். (நூலின் பக்கங்கள் :
39, 114, 139, 147, 156, 158, 201 to 203)
‘மெகஸ்தனிசும், இந்திய மதமும்” (Megasthenes and Indian Religion) என்ற
நூலை எழுதிய ஆலன் (Allan Dahlaguist) என்பவர், தனது நூலில் மெகஸ்தனிஸ்
குறிப்பிட்டுள்ள கெராக்கிளிஸ் என்பவர் இந்திரனா, கிருஷ்ணனா, சிவனா என்பது
குறித்து பல்வேறு மூல இந்து புனித நூல்கள், புராணங்கள் மற்றும்
தொல்பொருள் ஆய்வு முடிவுகள் கல்வெட்டுகள் முதலியன கொண்டு ஆய்வு செய்து,
கெராக்கிளிஸ் என்பவர் இந்திரனே என்றும், பாண்டைய் என்ற இளவரசிக்கு
வழங்கப்பட்டது பாண்டிய நாடே என்றும், அது கி.மு.400க்கு முன்பிருந்தே
இருந்து வருகிறது என்றும், அன்று அங்கு இந்திர விழா கொண்டாடப்பட்டு
வந்தது என்றும், கிருஷ்ணன்தான் கெராக்கிளிஸ் என்பதற்கான ஆதாரங்கள்
எதுவும் கி.மு.4-ம் நூற்றாண்டில் இல்லை என்றும் விரிவான ஆதாரங்களுடன்
நிறுவுகிறார்.
மேலும் இந்திய வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் மெகஸ்தனிஸ் பயணம் செய்த
இந்தியப் பகுதிகள் குறித்த உறுதியான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர் பாண்டிய
அரசின் தலைநகர் மதுரைக்கு பயணம் செய்ததற்கான தகவல் குறிப்புகள்
உள்ளதாகவும் (மதுரை அப்பொழுது வளர்ச்சி பெற்ற விறுவிறுப்பான நகரமாக
இருந்தது) விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அர்ரியன், மெகஸ்தனிஸ், ஆலன்
ஆகியவர்களின் மேற்கண்ட பல ஆதாரக் குறிப்புகள் இந்தியாவில் கி.மு.4-ம்
நூற்றாண்டளவில் மகதப் பேரரசுக்கு அடுத்த நிலையில் பாண்டிய அரசு இருந்தது
என்பதையும், கி.மு.4-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பாண்டிய அரசு
இருந்து வருகிறது என்பதையும் உறுதி செய்கின்றன.
சாணக்கியன் தனது அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் பாண்டிய நாட்டிலிருந்து
பாண்டிய கவாடகா, தாமிரபரணிகா எனப்படும் பல்வேறு வகை முத்துக்களும்,
பல்வேறு வகை கல்மணிகளும், முசிறி துறையிலிருந்து சௌர்ணியா என்ற வகை
கல்மணிகளும், முத்துக்களும் மகதத்துக்கு விற்பனைக்கு வருவதாகக்
குறிப்பிட்டுள்ளார். மேலும் வெண்மையும், மென்மையும் உடைய ‘துகுளா”,
‘வங்கா” (துகில், வங்கம் ஆகிய தமிழ் சொற்களுக்கு துணி என்பது பொருள்)
என்கிற பலவகைப் போர்வைத் துணிகளும், கருப்பாகவும், மதிப்பு மிக்க நவரத்ன
கல்மணிகளின் மேற்பகுதி போன்று மிகவும் மென்மையாகவும் உள்ள ‘பாண்ட்ரகா”
என்ற போர்வைகளும், கசௌமா, பாண்ட்ரகா, சௌர்ணா குடியகா என்ற பல்வேறு வகையான
ஆடை வகைகளும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, மகதத்துக்கு விற்பனைக்கு
வருவதாகவும் சாணக்கியர் தனது நூலில் குறிப்பிடுகிறார். ஆதாரம் : ஆங்கில
நூல் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் – ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு திரு.
சு. சாமசாஸ்திரி அவர்கள் பக் : 101, 107, 109, 110 முதலியன.
ஆக கி.மு.4-ம் நூற்றாண்டு அளவிலேயே பல்வேறு வகையான முத்துக்களும், நவரத்ன
கல்மணிகளும், பல்வேறு வகையான போர்வைத் துணிகளும், பல்வேறு வகையான ஆடை
வகைகளும், பல்வேறு வகையான வாசனைப் பொருட்களும் தமிழகத்திலிருந்து
முக்கியமாக பாண்டிய நாட்டிலிருந்து பெருமளவில் உற்பத்தியாகி மகதப்
பேரரசின் சந்தைகளுக்கு விற்பனைக்கு போயிருந்திருக்கின்றன என்பதை
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் தெரிவிக்கிறது.
சங்க கால வணிகம்:
தலைவன் பொருள் தேடுவதற்காக தலைவியைப் பிரிந்து மொழிபெயர்தேயம் (இன்றைய
கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்கள்) கடந்து சென்று பல மாதங்கள்
தங்கி இருந்து வணிகம் செய்து வந்தனர் என்ற தகவல் நூற்றுக்கணக்கான சங்க
கால அகப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள
து. முக்கியமாக பாலைப் பாடல்கள் பாடிய மாமூலனார் போன்ற சங்க கால
புலவர்கள் இச்செய்தியை மிக விரிவாகவும், விளக்கமாகவும் தங்கள் பாடல்களில்
குறிப்பிட்டுள்ள
னர். ஆக கி.மு.4-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே மகதப் பேரரசு
மட்டுமில்லாமல், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழ்வணிகர்கள்
நேரடியாகச் சென்று அங்கு தங்கி, வணிகம் செய்து வந்துள்ளனர் என்பதை சங்க
கால அகப் பாடல்களில் உள்ள குறிப்புகளும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும்
உறுதி செய்கின்றன.
ஆக சங்க இலக்கியங்கள் மகதஅரசு மற்றும் அதன் தலைநகர் பாடலிபுத்திரம்
குறித்தும், அதன் அரச வம்சங்களான நந்தர்கள், மௌரியர்கள் குறித்தும்
பேசுகின்றன. அசோகரின் கல்வெட்டும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும்,
மெகஸ்தனிசின் இண்டிகாவும் தமிழரசுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. ஆக அன்று
வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு,
முக்கியமாக வணிகத் தொடர்பும், பண்பாட்டுத் தொடர்பும் இருந்து வந்துள்ளது
என்பதை இவை உறுதிப்படுத்துக
ின்றன.
தமிழகத்திலிருந்து வணிகம் செய்ய வடநாடு செல்பவர்கள், முதலில் வெய்யூர்
(இன்றைய வேலூர்) வழியாக அல்லது கொங்கு நாட்டிலுள்ள தகடூர் (இன்றைய
தர்மபுரி) வழியாகச் சென்று, இன்றைய கர்நாடகத்தைக் கடந்து சாதவ
கன்னர்களின் தலைநராக இருந்த படித்தானம்(இன்றைய ஒளரங்காபாத் அருகே) போய்ச்
சேர்ந்தனர். சேர நாட்டிலிருந்து துளு நாட்டு வழியாகவும் படித்தானம்
போய்ச் சேர முடியும். பின், படித்தானத்திலிருந்து தக்காணப் பாதை வழியாக
உஜ்ஜயினி முதல் பாடலிபுத்திரம் வரையான வடநாட்டு நகரங்களுக்குச் சென்று
வந்தனர்.
சங்க காலத்தில் ஆந்திர, கலிங்க நாடு வழியாக வடநாடு செல்லும் பாதையும்
இருந்துள்ளது. மாமூலனார் தனது அகம்-61, 295, 311, 359, 393
ஆகியபாடல்களில் புல்லி என்ற குறுநில மன்னனின் வேங்கடமலையை (இன்றைய
திருப்பதி)க் கடந்து மொழிபெயர் தேயம் வழியாக தமிழர்கள் சென்றது குறித்து
பாடியுள்ளார். இவ்வழியில் செல்பவர்கள் கலிங்கத்துக்கு வணிகம் செய்யச்
சென்றவர்களாக இருத்தல் வேண்டும். பின் கலிங்கத்திலிருந்து வடநாடு செல்ல
பாதைகள் இருந்தன. ஆனால் கர்நாடகம் வழியாக படித்தானம் சென்று, பின்
வடநாடுகள் போகும் பாதையே புகழ்பெற்ற தக்காணப் பாதையாக இருந்துள்ளது.
இந்த ஆந்திர, கன்னட நாடுகளைக் கொண்ட தக்காணப் பகுதியும், இந்த வணிகப்
பாதைகளும் தமிழகத்தின் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்தது
என்றும், இந்தத் தக்காணப் பகுதியில் கொடுந்தமிழே மக்கள் மொழியாக இருந்தது
என்றும், தமிழகத்தின் வட எல்லைக்கு அப்பால் வடக்கே செல்லச் செல்ல
தமிழ்மொழி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொடுந்தமிழாக மாறியது என்றும் சங்க
இலக்கியம் குறிப்பிடுகிறது.
வட இந்திய மகத ஆட்சியும், சமண, பௌத்த மதமும் தக்காணத்தில் பரவியபோது,
கொடுந்தமிழுடன் பிராகிருதம், சமற்கிருத மொழிக் கலப்பு ஏற்பட்டு கி.பி.5ம்
நூற்றாண்டுக்குப் பின்னர் கன்னட, தெலுங்கு மொழிகள் உருவாகின. சங்க
காலத்தில் அங்கு கொடுந்தமிழே பேசப்பட்டது. கொடுந்தமிழ் என்பது
அடிப்படையில் தமிழே. தமிழ்தான் திரிக்கப்பட்டு வட இந்தியர்களால்
திராவிடம் என அழைக்கப்பட்டது. பண்டைய தமிழ் எழுத்தான ‘தமிழி” என்பது
முதலில் வட இந்தியாவில் ‘தம்ளி” என அழைக்கப்பட்டுவந்து, பின்னர்
‘திராவிடி” என திரித்து வழங்கப்பட்டது.

" ..............................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக