|
29/3/16
| |||
சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலம் கி.மு.321 முதல் கி.மு.292 ஆகும்.
அவர் மகன் பிம்பிசாரரின் ஆட்சிக் காலம் கி.மு.293 முதல் கி.மு.272 ஆகும்.
சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்திலேயே, கி.மு. 300-க்கு பின்
தக்காணத்தைக் கைப்பற்றும் பணி தொடங்கி விடுகிறது. ஆனால் பிம்பிசாரரின்
ஆட்சிக் காலத்தில் அதாவது கி.மு.293-க்குப் பிறகு அது தீவிரப்படுத்தப்
படுகிறது.
இதுகுறித்து கா.அப்பாதுரையார் அவர்களின் ‘தென்னாட்டுப் போர்க் களங்கள்”
என்ற நூல், முனைவர் எம். இராசமாணிக்கனார் அவர்கள் சங்க இலக்கியங்களில்
இருந்து திரட்டிய தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான விளக்கத்தை
வழங்குகிறது. தென்னிந்தியாவை கைப்பற்றிய காலம் அசோகரின் ஆட்சிக் காலம்
என்கிறது அந்நூல். ஆனால் பிந்துசாரரின் ஆட்சிக் காலத்தில் தான் அது
நடைபெறுகிறது. அசோகரின் ஆட்சிக் காலத்தில் அது நடந்திருக்க வாய்ப்பில்லை.
பிந்துசாரன் ஆட்சிப் பொறுப்பேற்ற போது வடக்கு, மத்திய கிழக்கு
இந்தியாவும், ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளும் மௌரிய ஆட்சியின்
கீழ் இருந்தன என்றும், பிந்துசாரன் காலத்தில் தான் தெற்குப் பகுதியில்
பேரரசு விரிவு பெற்றது என்றும், இரு கடல்களுக்கு இடைப்பட்ட நிலத்தை
கைப்பற்றியவன் என பிந்துசாரன் புகழப்படுகிறான் என்றும், விக்கிமீடியா
குறிப்பிடுகிறது. பிந்துசாரன் ஆட்சிக் காலத்தில் இன்றைய மைசூர் வரை
மௌரியப் பேரரசு விரிவு பெற்றது.
தமிழக அரசுகள் பிந்துசாரரின் நட்பு நாடுகள் என்பதால், அதனைக் கைப்பற்றும்
முயற்சி எதுவும் நடைபெற வில்லை என்ற சில வரலாற்று அறிஞர்களின் கருத்தை,
சங்க இலக்கியக் குறிப்புகள் மறுக்கின்றன. பெருஞ்செல்வமும், நல்ல வளமும்,
வணிக விரிவாக்கமும் பெற்றுத் திகழ்ந்த தமிழக அரசுகளைக் கைப்பற்ற, மௌரியப்
பேரரசு தனது முழுப் பேராற்றலை பயன்படுத்தி முயற்சித்தது என்பதை சங்க
இலக்கியக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
ஏரணக் கண்ணோட்டத்திலும், வரலாற்று அனுபவ முறையிலும் அதுவே பொருத்தமான
செய்தியாகும். தக்காணத்தையும், தமிழகத்தையும் கைப்பற்றும் மௌரியர்களின்
படையெடுப்பு கி.மு.293 முதல் கி.மு.280 வரையான காலங்களில் மிகத்
தீவிரத்தோடும், மௌரியப் பேரரசின் முழு ஆற்றலோடும் நடைபெற்றது.
தக்காணத்தின் பல பகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தை பொருத்தவரை
அப்படையெடுப்பு ஒரு பெரும் தோல்வியில் முடிந்தது என்பதுதான் வரலாறு. சங்க
இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவே. பாரசீகப் பேரரசு கி.மு.5-ம்
நூற்றாண்டில் கிரேக்க அரசுகளைக் கைப்பற்ற முயன்றபோது அம்முயற்சி
பெருந்தோல்வியில் முடிந்தது. அதுபோன்ற நிலையே மௌரியப் பேரரசின் தமிழகப்
படையெடுப்புக்கும் ஏற்பட்டது. பின் பிம்பிசாரரின் கடைசி ஆட்சி ஆண்டுகளில்
தமிழகரசுகளோடு நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.
மௌரியப் பேரரசின் படையெடுப்பு :
மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணை கொண்டு துளுவ நாட்டைத் தாக்கி, அதனை
ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாழியை கைப்பற்றிக்
கொண்டனர். பின் அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து, அங்கிருந்து
அவர்கள் அதியமான் மரபினனாகிய எழினியையும், சோழ நாட்டின் எல்லையிலுள்ள
அமுந்தூர்வேல் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர்த்
தலைவனையும், படிப்படியாகத் தாக்கத் தொடங்கினர். சேரர் எல்லையில் இருந்த
நன்னனை முதலிலேயே தாக்கியழித்திரு
ந்ததால், முதலில் சேரர்களைத் தாக்கினர்.
சேரர் படைத் தலைவன் பிட்டங்கொற்றன் மோரியர்களோடு பல தடவை போர்
புரிகிறான். போர் வெற்றி தோல்வி இல்லாமல் தொடர்கிறது. பின் மௌரியர்களை
அதியமான் மரபினன் எழினி என்பான் முதலில் வட்டாறு என்ற இடத்திலும், பின்
செல்லூர் என்ற இடத்திலும் எதிர்த்து தாக்குதல் நடத்துகிறான். இறுதியில்
செல்லூர் போரில் எழினி வீர மரணமடைந்து பெரும் புகழடைகிறான். அதன்
பின்னரும் அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து தொடர்ந்து இறுதிவரை
தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில், அவர்களின்
அரச குல வடமொழிப் (பிராகிருதம்) பெயரில் ‘சத்திய புத்திரர்கள்’ என
மூவேந்தர்களுக்கு இணையாக இடம் பெற்றனர் எனலாம்.
சோழ நாட்டெல்லையில் உள்ள அமுந்தூர்வேல் திதியனும், பாண்டிய
நாட்டெல்லையிலுள்ள மோகூர்த் தலைவனும் மோரியர்களை எதிர்த்துத் தாக்கி
அவர்களைத் தடுத்து நிறுத்து கின்றனர். இறுதியில் திதியனும் மோகூர்த்
தலைவனும் மோரியர்களைப் போரில் தோற்கடித்து தங்களது எல்லையை விட்டு
துரத்தி விடுகின்றனர். மோரியர் படை பின்வாங்கி துளுவ நாட்டை அடைந்து,
பாழி நகரில் நிலை கொள்ளுகிறது.
மௌரியப் பேரரசின் படை இதுவரை முழுமையாக போரில் ஈடுபடவில்லை. அதன்
தென்பகுதி படைத்தலைவர்களே வடுகர்களின் துணை கொண்டு போரை நடத்தி
வந்தனர்.தமிழக எல்லையில் ஏற்பட்ட பெருந்தோல்வி மௌரியப்பேரரசினை
கொதித்தெழச்செய்தது.உடனடியாக பெரும்படை திரட்டப்பட்டது. முதலில் துளு
நாட்டையும், எருமை நாட்டையும் கடந்து வரும் வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச்
செப்பனிட்டு மௌரியப் பெரும்படை வருவதற்கான பாதைகள் உருவாக்கும் பணி
நடைபெற்றது.
இந்த பெரும் போருக்கான ஆயத்தப் பணிகள் சில ஆண்டுகள்
நடைபெற்றதாகத்தெரிகிறது. இப்பாறைகளை வெட்டி பாதை அமைக்கும் பணி
குறித்தும், மோகூர் தலைவன் பணியாதது குறித்தும், வடுகர் வழி காட்டியாக
இருந்து மோரியர்களுக்கு உதவினர் என்பது குறித்தும் சங்க புலவர்கள தங்கள்
பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்த பெரும்போருக்கான ஆயத்தப் பணிகள்
முடிந்த பின் மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ நாட்டில் வந்து தங்கி,
தமிழகத்தின் மீது படையெடுக்கத் தயாராகியது.
தமிழகத்தின் பெருவெற்றி :
தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தை, சோழ அரசன் இளஞ்செட்சென்னி
நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையிலுள்ள படைத் தலைவர்களை வேளீர்கள்
மற்றும் சிற்றரசர்களை மட்டும் இப்பெரும் போருக்கு பொறுப்பாக்குவது பெரும்
ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர் ஐக்கிய கூட்டணி அரசுகளை (மாமூலனார்
மற்றும் கலிங்க மன்னர் குறிப்பிடும் தமிழக அரசுகளின் கூட்டணி) ஒன்று
திரட்டி, தனது தலைமையில் பெரும் படையைத் திரட்டுகிறான். இப்போர் தமிழகப்
போராக, தமிழக கூட்டணி அரசுகளின் போராக நடைபெற்ற போதிலும், இப்போரின்
வெற்றி சோழர்களின் வெற்றியாகவே வடவரிடத்திலும், நமது இலக்கியங்களிலும்,
புராணங்களிலும் பதிவாகி, சேர, பாண்டியர்களை விட சோழர்கள் பெரும்
புகழடைகின்றனர்.
தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப் பேரரசுக்குமிடைய
ே பெரும் போர் துவங்கியது. சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள்
தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப் புதுப் படைகளை போருக்கு
அனுப்பினர். மௌரியப் பேரரசின் முழு ஆற்றலும் திரட்டப்பட்டு பெரும்படை
கொண்டு தமிழகம் தாக்கப்பட்டது. தமிழகத்தின் வடபகுதி முழுவதும் மௌரியப்
பெரும்படையால் தாக்கப்பட்டது. வட ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற
இடத்தில் நடைபெற்ற பெரும்போரில், இளஞ்செட்சென்னி மௌரியர்களை
பெருந்தோல்வியடையச் செய்து துரத்தியடித்தான்.
வல்லம் போர் குறித்து அகம் 336-ல் பாடிய பாவைக் கொட்டிலார்என்ற பெண்பாற்
புலவர், மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார். மௌரியர்கள்
தங்களைஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர். (இது கி.மு.3-ம் நூற்றாண்டுப்
பாடல் ஆகும். இதில் குடும்ப மகளிர்கள், ‘கள்” அருந்தி தங்கள்
கணவன்மார்களின் பரத்திமை நடத்தை குறித்து வம்பளந்து கொண்டிருப்பது
குறித்த குறிப்பு வருகிறது). அதன்பின்னரும், மௌரியர்கள் சளைக்காமல்
தொடர்ந்து பல தடவை, பெரும் படைகளை அனுப்பிக் கொண்டேயிருந்தனர்.
ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய, அவர்களுக்கு வெற்றி
கிடைப்பதாகத் தெரியவில்லை.இறுதியில் தொடர்ந்து அடைந்து வந்த தோல்விகளால்
தாக்குப்பிடிக்க இயலாமல் பெரும் இழப்போடு பாழி நகருக்குப் பின்வாங்கினர்.
இளஞ்செட் சென்னி போரை தொடர்ந்து நடத்தி, பாழி நகர் வரை படையெடுத்துச்
சென்று, அதனைத் தாக்கி, இறுதியில் பெரும் வெற்றியை தமிழகத்துக்கு
வாங்கித் தந்தனன்.
இளஞ்செட் சென்னியின் பாழி நகர் வெற்றி குறித்து இடையன் சேந்தன் கொற்றனார்
என்பவர் அகம் 375-ல் பாடியுள்ளார். அதில் மௌரியர்களை அவர் வம்ப வடுகர்
என்கிறார். தமிழகத்தின் வடக்கே வாழ்பவர்களை வடுகர் என்பது பொது வழக்கு.
வடக்கேவாழும் வடுகர்களை அவர் அறிவார். ஆனால் மௌரியர்களை அவர் அறியார்.
ஆனால் மௌரியர்களும் வடக்கிருந்தே வருவதால், புதிய வடுகர்கள் என்பதால்,
அவர்களை வம்ப வடுகர் என்கிறார்.
பாழி நகரில் நடந்த இறுதிப் பெரும் போருக்குப் பின்னர் மௌரியர்கள் தமிழக
அரசுகளைப் படைகொண்டு வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்து கொண்டு நிரந்தரமாக
பின்வாங்கினர். தமிழகத்தைக் கைப்பற்றும் முயற்சி கைவிடப்பட்டு தமிழக
அரசுகளோடு நட்பு கொண்டனர். கி.மு.293-ல் பிம்பிசாரன் காலத்தில்
தீவிரப்படுத்தப்பட்ட தக்காணப் படையெடுப்பும், தமிழகப் படையெடுப்பும் 13
ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததாகக் கொண்டு, பாழி நகரில் நடந்த இவ்விறுதிப்
பெரும்போர் கி.மு.280 வாக்கில் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தப்
பெரும்போரில் சோழர் பெற்ற பெரும் புகழின் காரணமாகவே, அசோகன் தனது இரு
கல்வெட்டுகளிலும் சோழர்களை முதன்மைப் படுத்தியுள்ளான்.
‘இந்தியாவின் வரலாறு” என்ற நூல் கொ.அ. அன்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின்
ஆகிய இரு இரசிய வரலாற்று அறிஞர்களால் எழுதப்பட்டு, முன்னேற்றப்
பதிப்பகத்தால் 1987ல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அசோகன்
இளவரசனாக இருக்கையில் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்ட அவந்தி
மாநிலத்துக்கு தனது தந்தையால் அனுப்பப்பட்டு அப்பகுதியை அவன் நிர்வகித்து
வந்தான் என்ற செய்தி தரப்பட்டுள்ளது. (பக்.93)
தக்காணத்தின் துவக்கத்தில் அவந்தி மாநிலம் இருப்பதால் தமிழகப்
படையெடுப்பு குறித்த முழு விபரத்தையும் அசோகன் அறிந்திருக்க
வாய்ப்புள்ளது. இதே புத்தகம் பக்.104-ல் இன்னொரு முக்கிய தகவல் உள்ளது.
அசோகன் ஆட்சிக் காலத்தில் தனிப்பட்ட தெற்கு மாநிலம் அமைக்க, பிந்துசாரன்
ஆட்சிக் காலத்தில் இருந்த, முக்கியத்துவம் பெற்றிருந்த ‘தெற்குப்
பிரச்சினையே”காரணம் என்றும், பிற மாநில ஆட்சித் தலைவர்கள் குமாரர்கள் என
பட்டம் பெற்றிருந்த போது, தெற்கு மாநில ஆளுநர் மட்டும் பட்டத்து இளவரசன்
என்கிற‘ஆர்ய புத்ர” என்ற பட்டத்தைப் பெற்றிருந்தான் எனவும் அந்நூல்
குறிப்பிடுகிறது.
ஆக ‘தெற்கு பிரச்னை” என்பது என்ன? அதுவும் பிம்பிசாரன் ஆட்சிக் காலத்தில்
முக்கியத்துவம் பெற்றிருந்த தெற்குப் பிரச்னை என்பது என்னவாக இருக்க
முடியும்? தமிழக கூட்டணி அரசுகளிடம் மௌரியப் பேரரசு பெருந்தோல்வி
அடைந்ததும், பேரரசின் தெற்கிலுள்ள தமிழக அரசுகளிடமிருந்து எப்பொழுதும்
பேரரசுக்கு ஆபத்து இருப்பதையுமே அது சுட்டிக்காட்டுகிறது. மேலும் மொழி
பெயர் தேயம் எனப்படும் ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள பல காவல் அரண்கள்
தொடர்ந்து தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதும் ஒரு காரணமாக
இருந்திருக்கலாம்.
ஆக தமிழரசுகளின் புகழையும், செல்வாக்கையும், வலிமையையும்
அறிந்திருந்ததால்தான் அசோகர் தமிழரசுகளை, கிரேக்க மன்னர்களுக்கு முன்
தனது கல்வெட்டில் பதியச் செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது. மேலும்
கி.மு.230-ல், அசோகர் இறந்த உடன், சாதவ கன்னர்கள் தமிழக அரசுகளின்
ஆதரவோடு தனி அரசாகினர் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்வது நல்லது. சாதவ
கன்னர்கள் (நூற்றுவர்கன்னர்), தமிழரசுகளோடு நட்பு கொண்டிருந்தனர். சேரன்
செங்குட்டுவன் சாதவ கன்னர்களின் துணையோடுதான் வட நாடுகள்மீது
படையெடுத்தான் என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
சிலப்பதிகார காலம் :
சிலப்பதிகாரம் குறித்துப் பேசும் பொழுது இராம.கி அவர்களின் சிலம்பின்
காலம் கட்டுரையில் உள்ள ஒரு முக்கிய தரவை இங்கு குறிப்பிடுவது
அவசியமாகிறது. இலங்கை அரசன் கயவாகு, கண்ணகி விழாவுக்கு வந்திருந்ததாக
‘வரம்பறுகாதை” குறிப்பிட்டுள்ள செய்தியைக் கொண்டு செங்குட்டுவனின்
படையெடுப்பு காலம் கி.பி.177 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும்
இளங்கோவடிகள், செங்குட்டுவனின் தம்பி எனவும், சிலப்பதிகாரமும்,
மணிமேகலையும் இரட்டைக் காப்பியம் எனவும் கருதப்படுகிறது.
வரம்பறுகாதை என்பது பிற்காலத்திய இணைப்பு என்றும் அதில் தரப்பட்டுள்ள
இதுபோன்ற செய்திகள் ஆதாரமற்றவை என்றும் இராம.கி அவர்கள் தனது கட்டுரையில்
ஆதாரத்தோடு நிறுவுகிறார்.
அதன்படி கி.பி.177 என்ற ஆண்டு நிர்ணயம் தவறாகி விடுகிறது. அதற்குப் பதில்
சிலப்பதிகாரகால படையெடுப்பு ஆண்டு நிர்ணயம் கி.மு.75 என அவர்
குறிப்பிட்டுள்ள
ார். அது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு கருதுகோள் ஆகும். எனினும், தமிழக
கூட்டணி அரசுகளின் மௌரியப் பேரரசுக்கெதிரான இறுதிப் பெரும்போரான
செருப்பாழிப் போரின் காலம் கி.மு.280 எனும்பொழுது சேரன் செங்குட்டுவனின்
காலம் கி.பி.177 என்பது பொருந்தி வராது. எனவே கி.பி.177 என்பதை
அடிப்படையாகக் கொண்டு தமிழக வரலாற்றின் காலத்தை நிர்ணயிப்பது ஒரு தவறான
அடிப்படை என்ற இராம. கி அவர்களின் கருத்து மிக மிகச் சரியாகும்.
சிலப்பதிகாரச் சிறப்பு :
மணிமேகலை போன்று சிலப்பதிகாரம் ஒரு மதச் சார்பான நூல் அல்ல.
சிலப்பதிகாரம் தமிழ் தேசிய ஒற்றுமையை வலியுறுத்துகிறது. தமிழக வணிகம் ஒரு
உயர்வளர்ச்சியடைந்த காலத்தைக் குறிக்கிறது. பண்டைய தமிழிசையின், தமிழ்க்
கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது. தமிழ் சமுதாயத்தின் பரந்துபட்ட
மக்களின் பண்பாட்டை எடுத்துக் காட்டுவதோடு, முதலாளித்துவத்துக்கு முந்திய
வளர்ச்சியடைந்த வணிகக் குழுக்களின் முடி அரசுக்கெதிரான கருத்தை
பிரதிபலிக்கிறது. தமிழ் தேசியத்துக்கான கருவைக் கொண்டு, தனித்துவமிக்க
தமிழ்ச் சமுதாயத்தின் முதல் காப்பியமாகத் திகழ்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகக் காப்பியங்கள் அனைத்தும்
கடவுளையும், வேந்தனையும் கொண்டு புனையப்பட்டதற்கு மாறாக, சாதாரண ஒரு
வணிகனை, அதுவும் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு புனையப்பட்டதோடு, முடி
அரசுக்கு சவால்விட்டு, நியாயத்தின் அடிப்படையில் அதனை எரித்து அழிக்கும்
ஆற்றல் பெற்ற பெண்ணாகவும் படைக்கப்பட்டுள்ளது.
வரம்பறுகாதை போன்ற பிற்கால இணைப்புகளையும், இன்னபிற இடைச் செருகல்களையும்
நீக்கிப் பார்க்கும்பொழுது சிலப்பதிகாரம் ஒரு மதச் சார்பற்ற படைப்பே
ஆகும். இக்காப்பியத்தில் வருகிற மதக் கருத்துக்களும் உயர்நவிற்சி மிக்க
கற்பனைகளும், அக்காலத்திய தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கைகளையும்,
காப்பியத்துக்குத் தேவையான கற்பனை புனைவுகளையும் கொண்டு படைக்கப்
பட்டதாகவே கருத முடியும். எனவே இதனையும், மணிமேகலையையும் இரட்டைக்
காப்பியம் என்பது தவறு. கோவலன் - மாதவியின் மகள் மணிமேகலை என்பதைத் தவிர
இரு காப்பியங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எனவே மணிமேகலையின்
காலத்தைக் கொண்டு சிலப்பதிகாரத்தின் காலத்தை நிர்ணயிப்பதோ அல்லது
சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கொண்டு மணிமேகலையின் காலத்தை நிர்ணயிப்பதோ
தவறு ஆகும்.
சிலப்பதிகாரம் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்பு. அன்றே தமிழ்ச்
சமுதாயம் வணிக வளர்ச்சியில், பொருள் உற்பத்தியின் வளர்ச்சியில், ஒரு
உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருந்தது. அக்காலகட்டத்தில், முதலாளித்துவக்
கூறுகளும், தமிழ் தேசியக் கூறுகளும் தமிழ் சமுதாயத்தில் முளைவிட்டிருந்த
ன, கருக்கொண்டிருந்தன என்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது. கி.பி.15-ம்
நூற்றாண்டில் ஐரோப்பா அடைந்த வளர்ச்சியை, கிறித்துவ சகாப்தத்தின்
தொடக்கத்திலேயே அதனை அடைய தமிழகம் முயற்சி செய்திருப்பதை சிலப்பதிகாரம்
காட்டுகிறது.
அதனால்தான் ஒரு வணிகப் பெண், காப்பியத்தின் தலைவியாக ஆக முடிந்தது.
அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்ற சங்க இலக்கியப்
படைப்புகளின் உயர்தரமும், தமிழ் சமுதாயம் ஒரு உயர் கட்ட வளர்ச்சியை
அடைந்த சமுதாயமாக இருந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது.
ஆய்வு முடிவு:
ஆக ஒட்டுமொத்தமாக, கீழ்க்கண்ட ஆய்வு முடிவுகளை இக்கட்டுரை வழங்குகிறது எனலாம்.
(i) தமிழ் சமுதாயம் உயர் வளர்ச்சி பெற்றதாக, வலிமை மிக்கதாக
இருந்ததால்தான் அசோகர் தனது கல்வெட்டில் தமிழரசுகளை, கிரேக்க
மன்னர்களுக்கு முன் பதிவு செய்துள்ளார்.
(ii) மௌரியப் பேரரசுக்கெதிரான செருப்பாழிப் போரின் பெருவெற்றி காரணமாக
அசோகரின் கல்வெட்டுகளில் சேர பாண்டியர்களைவிட சோழர்கள் முதன்மை பெற்றனர்.
(iii) செருப்பாழிப் போரின் காலமான கி.மு.280 என்பது தமிழக வரலாற்றுக்கு
ஒரு அடிப்படையாக இருக்க முடியும். மாமூலனாரின் சங்க காலப் பாடல்கள்
இக்காலத்தை நிர்ணயிக்கக் காரணமாகின்றன.
(iv) பண்டைய தமிழகத்தில் தமிழரசுகளிடையே பல நூற்றாண்டுகளாக ஒரு ஐக்கிய
கூட்டணி இருந்து வந்துள்ளது. அக்கூட்டணியின் பாதுகாப்பில்தான் தென்
இந்தியக் கடல் பகுதிகளும் மொழிபெயர் தேயமும் இருந்து வந்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக