திங்கள், 27 மார்ச், 2017

ஈழம் வன்னியர் பரதவர் வம்சாவழி தொடர்பு 2

aathi tamil aathi1956@gmail.com

17/3/16
பெறுநர்: எனக்கு
Suresh R Reno
இவர்களை வாளரசுவென்ற வன்னியர்,போர் வீரர் வென்ற வன்னியர்,முண்ட
வன்னியர்,மொறண்ட வன்னியர்,அரசுநிலை காத்த வன்னியர் ஆவர்.
இவ்வன்னியர் தம்மை இராமாயண காவியத்தில் வரும் குகன் பரம்பரையினர் என
கூறிக்கொள்வர்.ஆ
ரிய சக்கரவர்த்தியும் தம்மை இராமனால் குடியேற்றப்பட்ட குகன் வம்சாவழி என
கூறுக்கொண்டுள்ள
ார். ஏனென்றால் இருவரும் பரதவ இனத்தவரே.
இவ்வாறு வன்னியர்களாகவும
்,ஆரியசக்கரவர்த்திகளாகவும் அரசாண்ட பரதவர்கள் பிற்பாடு தம் தலைமையை சோழ
மன்னர்களிடம் இருந்து பாண்டிய மன்னர்களுக்கு மாற்றினர். இவர்களை பாண்டிய
மன்னன் ஆதரித்தான்.
இதன் பிற்பாடு பாண்டியர் துளுக்கரால் வீழ்த்தப்பட்ட பின் ஆரியசேகரன்
பாண்டியர் மீது படையெடுத்து பாண்டியரையும்,ச
ேதுபதிகளையும் வீழ்த்தி சேதுபதிகளின் காவலில் இருந்த இராமேஸ்வரம்
கோயிலின் கர்ப்ப கிரகத்தை திரிகோண மலையிலிருந்து கொண்டு வந்த கற்களால்
கட்டி தம்மை சேதுக்காவலன் என பட்டம் புனைந்தான்.இவனது நாணயத்தில்
நந்தி,சூரியர்,சந்திரர்,வெண்குட
ை,லிங்கம் ஆகியன காணப்படும். ஆனால் இராமேஸ்வரத்தின் இதர
பிரகாரங்களிலும்,திருப்புல்லானி
,உத்திரகோச மங்கை முதலிய இடங்களிலும் காணப்படும் "சேதுபதி" எனப் பெயர்
பொரிக்கப்பட்ட கல்வெட்டுகள் இராமநாதபுரம் மன்னர் சேதுபதியையே
தெள்ளத்தெளிவாக குறிக்கும்.
எனினும், தமிழக அறிஞரான கே. சேசாத்திரி (இராமேஸ்வரம் மகா கும்பாபிஷேகச்
சிறப்பு மலர், பக் 186,க ) 1975 கைலாயமாலையின் காலம் 15 ஆம்
நூற்றாண்டென்பர். முதலியார் இராசநாயகம் கி. பி. 1604 க்குப் பின் கோவில்
கட்டப்பட்டதென்ப
தற்கு. சேது பதிக்குச் செழும்பா சுரமனுப்பி (கை. மா. கண்ணி 234)என்ற
தொடர் ஆதாரமென்பர். இதில் வரும் சேதுபதி "இராமநாதபுரத்து மன்னராகிய
சேதுபதி என்றே கொள்ளக் கிடக்கிறது. உடையான் சேதுபதியெனப் பெயர் பூண்ட
சடையக்கதேவரே முதல் இராமநாத புரத்துக்குத் தலைவராக மதுரை நாயக்கரசனாகிய
முத்துக்கிருஷ்ண
ப்ப நாயக்கரால் கி. பி. 1604 இல் நியமிக்கப்பட்டனர். அச் சேதுபதியென்னும்
பெயர் இந்நூல கத்துக் குறிக்கப்பட்டதென்பது தெளிவு" (கை. மா. பக். III)
என்பர்.
ஆனால், சேசாத்திரி (~. சிறப்பு மலர் பக். 186 g.)பரராசசேகரன் கி. பி.
1414இல் சேதுபதி இராமேஸ்வரம் கோயிலைக் கட்டுவதற்குத் திருகோணமயிலிருந்து
வெட்டிச் சீராக்கப்பட்ட கற்களை அனுப்பியதாகக்கூறி, சேதுபதிக்கும்15 ஆம்
நூற்றாண்டுக் குரிய யாழ்ப்பாண அரசர்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை
விளக்குவார். கலாநிதி யேம்சு டேர்சஸ் (Indian Antiquary Vol. XII) கி.
பி. 1434 இல் வாழ்ந்த உடையார் சேதுபதி பற்றிக் கூறுவார். சேதுபதிகள்
பாண்டி மறவர்கள். அவர்கள் சேதுபதி என்ற விருதைத் தொடர்ந்தும்
கொண்டிருந்தார்கள் என ஆய்வாளர் கூறுவர். (Rev. James Tracy, The Madras
Journal of Literature and Science). எனவே, இராசநாயகம் அவர்கள் காட்டிய
ஆதாரங்கள் வலுவிழக்கின்றன. "நல்லூர் கைலாச நாதர் கோவில் முதலாம்
சிங்கையாரியன் காலத்தில் (கி. பி. 1260)கட்டப்பட்டது என்பதை மறுக்க
எவ்வித ஆதாரமுமில்லை" என்பார் சி. பத்மநாதன் (The Kingdom of Jaffna, P.
194; 1978). எனினும்,நூலெழுந்த காலத்தை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.
வையாபாலிலும் (16 ஆம் நூ. ஆ.?) 'சேதுபதி' (செய். 38) வருவது
நோக்கத்தக்கது.
இவ்வாறு "சேதுக்காவலன்" என்று பட்டம் புனைந்த செகராஜசேகரன் இந்த பட்டத்தை
தன் கீழ் இருந்த வன்னியர்களுக்கு வழங்கினான்.
இதனால் தான் இவர்களிலும் சேதுக்காவலர் வன்னியன் என்றும் சில பட்டங்கள் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக