திங்கள், 27 மார்ச், 2017

ஈழம் வன்னியர் பரதவர் வம்சாவழி

aathi tamil aathi1956@gmail.com

17/3/16
பெறுநர்: எனக்கு
Suresh R Reno
ஈழத்து வன்னிமைகளை ஆண்ட வன்னிகள் யார்?
(பரதர்குல சமுதாயம் இன்னும் தன் வரலாறை மறந்து தூங்குவது இனியும் நல்லதல்ல)
பட்டங்களினால் வரும் குழப்பங்களை தெளிவிப்பதற்கும் தன் சமூகத்துக்காகவே
தனக்கு தானே திருத்தி எழுதிக்கொள்ளும் போலி வரலாற்று ஆசிரியர்களை
உலகத்துக்கு அடையாளம் காட்டுவதற்கும் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இதற்கு மேற்கோளாக கொண்ட நூலான "பரதவர் மீட்பு இன வரையியல் வரலாறு" நூல்
மிகவும் உதவியாக இருந்தது. வன்னியர் சமுதாய வரலாற்று ஆசிரியர்களான
நடன.காசிநாதன்,சதாசிவ.பண்டாரத்த
ார் முதலிய ஆராய்ச்சியாளர் நூல்களில் வன்னியர்களே தமிழ் நாடு முழுவதும்
அரசர்களாக இருந்ததாகவும் நாயக்கர் காலத்திலும் மறவர்,கள்ளர் காலங்களிலும்
அவர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தம் நூல்களில் எழுதி கதை பாடுகிறார்கள்.
இது உண்மையா அப்படி வன்னிய மன்னர்கள் அழிக்கப்பட்டால் அம்மக்களாவது
மிஞ்சி இருக்க வேண்டுமே தமிழகம் முழுவதும். வரலாற்று கல்வெட்டு ஆய்வாளர்
திரு.கலைக்கோவன் அவர்கள் "வன்னியர்" என்ற பட்டம் 12-ஆம் நூற்றாண்டு -க்கு
முன் எந்த கல்வெட்டிலும் காணப்படவில்லை என்று திட்டவட்டமாக கூறுகிறார்.
அதுவும் பெரும்பாலான வன்னியர் என்ற கல்வெட்டுகள் திருக்கோவிலுரை ஆண்ட
சுருதிமான்கள் மற்றும் சேதிராயர் மன்னர்களே சுட்டுகின்றது என்று
தெரிவிக்கின்றார்.
அப்போது அந்த அழிக்கப்பட்ட வன்னியர் என்ற பெயருடை மன்னர்கள் யார் அவர்கள்
இந்த [(PALLI OR VANNIYAN) 6 of the Palar in the Cauvery delta, between
the Palar and Pennar. They have written a Puranam and a drama bearing
on this to Brahmans, declare that they are superior since, while the
latter must be invested tale.]. என்ற இனத்துடன் சிறிதாவது
பொருந்துகின்றதா என்று பார்ப்போம். ஏனெனில் பள்ளி என்று பத்தாயிரம் தடவை
உச்சரித்தால் அது வன்னியன் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டு விடுமா? என்ற
சந்தேகம் எழுகின்றது. இவர்களை பள்ளி என்ற வன்னியன் என்று எட்கர் தர்ஸ்டன்
கூறுகின்றாரே. இந்த பள்ளி என்ற பெயர் இவர்களை தவிர யாருக்கும் கிடையாது
ஆனால். வன்னியன் என்ற பட்டப்பெயர் வலையர்,கள்ளர்,ம
ுத்தரையர்,பார்க்கவகுலத்தார்,மறவர், பரதவர்,வேட்டுவர்,வெள்ளாளர் என பல
இனத்துள்ளும் நாம் காண்கின்றோம். அழிக்கப்பட்டதாக சொல்லப்படும்
வன்னியர்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையான அந்த வன்னியர்
என்ற பட்டம் உள்ளவர்களை பார்ப்போம்.
யாழ்பாண சக்கரவர்த்தி ஆரிய சேகரனும் வன்னிப் பகுதியினை ஆண்ட வன்னியர்?
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 9 மணி நேரத்திற்கு முன்பு
1 பதில்
Suresh R Reno
யாழ்பாண சக்கரவர்த்தி ஆரிய சேகரன் யார்?என்பதைப்பற்றி பல பல கதைகள்
யாழ்பாண வைபவ மாலை மற்றும் வையாபாடல் முதலிய சுயபுராணங்களில்
தெரிவிக்கப்படுகின்றது. இதில் இவர் 13-ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு
வருபவர் என கூறுகின்றனர். இன்னோர் ஆதாரத்தில் இவர் சோழ அரச குமாரன்
பாண்டிய மந்திரியால் முடிசூட்டப்பட்டவன் என்று கூறப்படுகின்றது. இன்னோர்
ஆதாரத்தில் சோழ அரச குமாரியை மணந்தவன் என கூறப்படுகின்றது. இன்னும் சில
இடங்களில் இவர்கள் தங்களை பிராமனர் என கூறிக்கொள்வர். இவ்வாறு பல கதைகள்
கூறினாலும் 13-ஆம் நூற்றாண்டுக்கு முன் இவர்கள் வாழ்ந்ததாக எந்த ஆதாரமும்
கிடையாது பின் இவர்கள் யார்?
சோழரின் படை தளபதியான மடிகை ஆரிய சேனையின் தலைவனான மீனவ பரதவன்:
சோழரின் தெரிந்த வேளக்காரப்படை,வ
ில்லிகள்,மடிகை ஆரிய சேனையின் வீரர்களாக பரதவர்களே பணியாற்றியுள்ளனர்.
இவர்களின் தொகையில் தான் பல படைகளை உருவாக்கிய முதலாம் இராஜ இராஜன்
இலங்கையை சிங்களாந்தக தெரிந்த வேளக்காரப் படையின் மூலமாக வென்றதாக இலங்கை
கல்வெட்டு கூறுகிறது. இதைப்போல் தான் கேரள நாட்டு புகழ் பெற்ற "காந்தளூர்
சாலை காலமறுத்தருளி" என்று தொடங்கும் மெய்கீர்த்தியில் முக்கியப்
பணியாற்றியவர்கள் பரதவ வீரர்கள் என கல்வெட்டு கூறுகின்றது.
இதைப்போல் "பட்டினத்தார்" என்ற ஐநூற்றுவர் மற்றும் ஆயிரத்தவர் என்ற
வணிகக்குழுவாக மாறிய பட்டினப்பாக்க மீனவ இனத்தார் இன்று "நகரத்தார்" என
அறியப்படுபவர்கள் என நாம் கூறவேண்டியதில்லை.
இப்படி சோழர்களின் பல மெய்கீர்த்திக்க
ு காரணமான பரதவர்களின் சேனை தமிழ் சோழர்களுக்கு பின் தனது செல்வாக்கை
இழக்க நேரிட்டது. இரண்டாம் சளுக்க சோழனான குலோத்துங்கன் காலத்தில்
வடக்கில் எப்படி "காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின்" கலவரத்தால் சோழ தேசம்
பாதிப்புக்கு உள்ளானதோ அப்போது சோழரின் கீழ் இருந்த தலைவர்கள் அனைவரும்
சளுக்க சோழருக்கு எதிராக கலகம் செய்ய தொடங்கினர். இந்த காலக்கட்டத்தில்
சோழரின் படையிலிருந்து வெளியேறிய வில்லிகள்,தெரிந்த வேளக்கார படைகள்
மற்றும் ஆரிய சேனை ஆகியோர்கள் தென்முகமாக கடல் பயணம் மூலம் இலங்கையை
அடைந்தனர். இவர்கள் சோழ படை வீரர்கள் ஆதலால் சிங்கள மன்னனை விரட்டி
தமிழர்களுடன் ஒன்றிணைந்து ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தைத்
தோற்றுவித்தனர்.
இது தான் வரலாறு இப்படி சென்ற பரதவ இனத்தலைவனே ஆரிய சக்கரவர்த்தி என்ற
ஜெகராஜ சேகரன்.
குகன் வழி வந்த வாளரசு வென்ற வன்னியரும் மற்றும் பரதகுல படையாட்சிகளும்:
ஈழத்து வன்னியரை ஒரு ஆங்கில வரலாற்று ஆய்வாளர் " Jaffana vawnniers are
sea-farers"அதாவது யாழ்பாண வன்னியர்கள் கடலோடிகள் எனக் கூறுகின்றார்.
பிறப்பில் பரவனை தவிர யாரும் கடலோட முடியாது.
இவன் பதவியேற்றதும் இவனது பரதவ சமூகத்தின் உறவினர்களான மதுரை,திருச்சி,
துளுநாடு,தொண்டை மண்டலம்,திருக்கோவலூர் முதலிய இடங்களில் பணி புரிந்த
இளஞ்சிங்க மாப்பாணன்,மது வீர மழவராயர், அரசாண்ட மழவராயர், அத்தி
மாப்பாணன் முதலிய பரதவ இன அதிகாரிகளை அழைத்து தம்பல காமம்,
வெருகல்,கொட்டிக
ாயரம்,திருக்கோணமலை,நொச்சி ஆகிய ஊர்களின் வன்னிகளை ஆள வைத்தான்.
[வன்னி(வவுனி)-காடு சூழ்ந்த பிரதேசம்,வன்னியெத்தலோ-வனங்களில் வாழும்
வனவாசிகள்- இந்த வனப்பிரதேசம் தான் பிற்பாடு வவுனியா என
அழைக்கப்பட்டது-இந்த வனப் பிரதேசங்களை ஆண்டதால் இவர்கள் வன்னியர் என
அழைக்கப்பட்டனர்]
என்வே இந்த வன்னிகளை ஆண்ட வன்னியர்கள் ஆரிய சக்கரவர்த்திகளின் உறவினர்களே ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக