புதன், 30 செப்டம்பர், 2020

நீட் CBSE க்காக உருவானது புள்ளிவிபரம் அரசாங்க பள்ளி மாணவர் வீழ்ச்சி பட்டியல் ஒப்பீடு

 

aathi1956 aathi1956@gmail.com

வியா., 7 பிப்., 2019, பிற்பகல் 6:20
பெறுநர்: எனக்கு
முதலில் அரசாங்கப் பள்ளி மாணவர் பற்றி......

நீட் தேர்வு ஆதரவு தெரிவித்த கல்வியாளர்களை தேடி கொண்டு இருக்கிறேன்
அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 22
2015 -2016 : 33
2016-2017 : 27
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 04
_____________________
அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :59
2016 -2017 :58
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 03
_______________

அரசாங்க மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 20 ( huge difference)
_________________
இதே CBSE மாணவர்கள் பற்றி பார்க்கும்போது....

அரசாங்க மருத்துவ கல்லூரியில் CBSE பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 0
2015 -2016 : 0
2016-2017 : 14
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 611
______________
தனியார் மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 12
2015 -2016 : 3
2016-2017 : 3
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 01
_____________

தனியார் மருத்துவ கல்லூரியில் அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :16
2016 -2017 :26
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 0
____________
தனியார் மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 798
2015 -2016 : 657
2016-2017 : 1173
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 03 ( huge difference)
______________
தனியார் மருத்துவ கல்லூரியில் CBSE பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2
2015 -2016 : 2
2016-2017 : 21
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 283
______________

புதியதமிழகம் கிச்சா குரூப் எங்கடா இருக்கிங்க .....
# புறம்போக்குபசங்களா

நன்றி: பூபாலன் பரமக்குடி

மலையாளி இனவெறி ஈழம் ஆதரவின்மை 2009 படுகொலை பங்கு

 


aathi1956 aathi1956@gmail.com

புத., 6 பிப்., 2019, பிற்பகல் 8:50
பெறுநர்: எனக்கு
Venkatesa Kumar K
மலையாளிகளின் துரோகங்கள்.
சமீபத்தில் குங்குமம் இதழ் நேர்காணலில் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது ”இலங்கை பிரச்சனை பற்றி என்ன கருதுகி றீர்கள்?” “எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரி யாது, சிங்களர் பக்கம் சரியா தமிழர் பக்கம் சரியா என்றும் எனக்கு தெரியாது. எனவே எனக்கு இலங்கை பிரச்சனை பற்றி ஒன்றும் தெரியாது.” இதுவே எம்.டி.வாசுதேவனின் பதில். இதை அறியாமை என்றும் கொள்ள லாம் அகந்தை என்றும் கொள்ளலாம்.
கால காலமாக ஈழ போராட்டத்தின் மீது மலையாளிகளுக்கு பெரும் காழ்ப்புணர்வு இருக்கிறது. வரலாற்று ரீதியாக பார்த்தால் 1920களில் சிங்களவர்கள் மலையாளிகளை தாக்கத்துவங்குக
ிறார்கள். மலையாளிகள் இலங்கையைவிட்டு வெளியேறுகின்றனர். வெளியேறிய மலையாளிகளின் எண்ணி க்கை சொற்பமே. ஏ.எம்.கோபாலன் போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இந்த வெளி யேற்றத்தை தடுக்கவும் மலையாளிகளை காக்கவும் முயன்றார்கள். அதில் தோல்வியும் அடைந்தார்கள் (வர்க்க பாசத்தை விட மலை யாள பாசம் மேலானது அல்லவா).
நியாயமாக இந்த வரலாற்றின் அடிப்படை யில் மலையாளிகள் தமிழர் போராட்டத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் பின்ன தாக நடந்த மலையாளம் மற்றும் சிங்கள ஆளும் வர்க்க இணக்கத்தின் அடிப்படையில் எங்கே தமிழர்களுக்கு ஒரு தனி நாடு கிடை த்துவிடுமோ என்கிற வன்மத்தின் அடிப்படை யிலும் ஈழப்போராட்டத்திற்கு எதிராக மலை யாள உயர்மட்ட ஆளும் வர்க்க குழாம் இய ங்கியது, இயங்குகிறது என்ற நம்பிக்கை எனக்கு திடமாக உண்டு.
நாம் பலவற்றை நிரூபிக்க முடியாது ஆனால் நம் உள்ளுணர்வு அறியும் இது இப்படித்தான் என. எனக்கு பலகாலம் இப்படியான உள்ளு ணர்வே இருக்கிறது. ஈழத்துக்கு எதிராகவே செயல்படுவது அதைக்குலைப்பது அதுவே அவர்களின் மறைமுகத்திட்டம். இந்த போ ராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து எத்தனை மலையாள அதிகாரிகள் ராணுவ த்திலும் உளவுத்துறையிலும் உயர் மட்டத்து றையிலும் செயல்பட்டிருக்க
ின்றனர். இதன் பொருள் மற்ற தேசிய இன அதிகாரிகள் இப்படி நடக்கவில்லை என்பதல்ல அவர்கள் இந்திய அரசின் பிரதிநிதியாக செயல்ப ட்டார்கள். இதயத்தில் தனிப்பட்ட வன்மத்து டன் செயல்பட்டது இவர்கள் மாத்திரமே.
சிவசங்கரமேனனின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்திய வெளியுறவுச்செ யலர் பதவியில் இருக்கிறது. அவர் ஒரு நே ர்காணலில் சொன்னார் “ எனக்கு இப்போது இலங்கையில் ஆண் நண்பர்களே இல்லை, இருப்பதெல்லாம் என் சிங்கள நண்பர்களின் விதவை மனைவிகள் மாத்திரமே.” இவர் எப்படி செயல்பட்டிருப்பார் ஈழப்பிரச்சனை யில்?
சிவசங்கர மேனன்களும், எம்.கே.நாராயண ன்களும், ஆண்டனிகளும் இன்னும் நமக்கு பெயர் தெரியாத எத்தனையோ மலையாள அதிகாரிகளும் இன்ன பிறரும் இந்தியாவின் பாத்திரத்தை தீர்மானித்தார்கள். இறுதி யுத்த த்தை நடத்தினார்கள். கால காலமாய் தமிழ ர்களை வெறுப்பவர்கள் அவர்களின் தலை விதியை தீர்மானித்தால்? அதுவே நடந்த முடிந்த கோர இறுதி யுத்தம்.
இறுதி யுத்தம் முடிந்த பின்பு ஐக்கிய நாடுகள் சபை அதன் பிரதிநிதியை அனுப்பியது. அங்கும் வந்தார் ஒரு விஜய் நம்பியார் “ எல்லாம் சரியாக இருக்கிறது” என்று அறிவி த்துவிட்டும் போனார். ஒரு வேளை இன்றைய மத்திய மந்திரி சசி தரூர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக வெற்றி பெற்றிருந்தால் இந்த யுத்தத்தை மூன்று வரு டத்திற்கு முன்பே துவங்கி இருப்பார்.
எல்லா சிங்கள ஆளும் வர்க்க தலைவர்க ளும் எப்போதும் கேரளம் வருகிறார்கள். அவ ர்கள் பௌத்தர்களாக இருந்தாலும் குரு வாயுரப்பனை தரிசிக்கிறார்கள், யாக ங்கள் நடத்துகிறார்கள் மலையாள மாந்திரீகங்கள் ஈழத்தமிழர்களின் மண்டையோடுகளிலேயே நடந்தன. இறுதி யுத்தத்திற்கு பின்பு இல ங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா கேர ளத்திற்கு வந்திருந்தார் அவர் திருவனந்தபுர மன்னர் அரண்மனை உப்பரிகையில் அம ர்ந்திருக்கும் புகைப்படத்தை மலையாள மனோரமா வெளியிட்டது. தன் சொந்த வீட்டில் இருப்பது போல் அமர்ந்திருந்தார் சந்திரிகா.
தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத 2009 ஏப்ரல் மே மாதங்களில் நான் கேரளத்தில் இரு ந்தேன் தமிழ்நாடு கொந்தளித்துக்கொண்டி ருந்தது. கேரளத்தில் இருந்து ஈழத்திற்கு ஆத ரவாக ஒரு குரல், ஒரு ஆதரவு, ஒரு முனுமுனு ப்பு ஒன்றும் கிடையாது. எனக்கு தெரிந்து ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே மலையாளி எழுத்தாளர் அருந்ததிராய் மட்டு மே. (அவர் பாதி மலையாளி என்பதால் ஒருவேளை அப்படி இருந்திருக்கக்கூடும்). முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் மனித உரிமை ஆர்வலருமான கிருஷ்ணய்யர் கூட எதிர்மறையாகத்தான் பேசினார்.
சி.பி.எம் என்பது ஒரு தமிழர் விரோத கட்சி என்பதை இந்த யுத்தம் ரத்தத்தின் வழி நிரூ பித்தது. சி.பி.எம்மை எப்போதும் தீர்மான ப்ப வர்கள் மலையாளிகள் கொஞ்சம் வங்காளிக ளும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமெல்லாம் மொத்தமாக Mass Suicide செய்து கொள்ளலாம். எல்லாம் முடிந்த சாம்பல் மேட்டில் நின்று அதன் பொதுச்செ யலாளர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சொ ல்கிறார் “ஈழ விஷயத்தில் நாங்கள் நடந்து கொண்ட விதம் தவறுதான் என்பதை நினை த்து வருந்துகிறோம்”
தமிழர்களை எப்போதும் நிரூபிக்க முடியாத சதிகளும், குற்றங்களும், கொடூரங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எங்கள் சாலைகள் வழியே போகின்ற டாங்கிகள் எங்களை கொல்வதற்கு இல்லை என்றா ர்கள். அந்த டாங்கிகளும் கொச்சி வழி கடல் ஏகின.
நான் பேசிக்கொண்டிருப்பவை அனைத்தும் உள்ளுணர்வின் தடத்தில் வரலாற்றில் இவை எல்லாம் பேசப்படாமல் அதன் புதை குழி யில் அழுந்திப்போகலாம் மக்கிப்போ கலாம். யூதர்களுக்கு எழுதியது போல எவ ரேனும் எழுதப்போகிறார்களா இந்த சதி வரலாற்றை.
ஒரு உணர்வுள்ள தமிழன் குறைந்தபட்ச சமூக உணர்வு உடையவன் 2009 ஏப்ரல் மே நாட்களை குறைந்தபட்ச மனபிறழ்வு இல்லா மல் கடந்திருக்க முடியாது. சமூகவியல் ஆய்வாளர் தொ.பரமசிவம் ஒரு மேடையில் சொன்னார் ”தூக்கமற்ற இரவுகள் இவை” என்று. நான் வாழ்வதற்கான நம்பிக்கையின் பெரும்பகுதியை இந்த 2009 மே மாதம் பிடு ங்கிவிட்டது இதற்கு பிறகும் நான் வாழ்கி றேன்.
என் ஆதர்ச மகா நடிகன் மோகன்லால் இந்திய ராணுவத்தில் கௌரவ கர்ணல் ஆகி விட்டார். அடுத்த யுத்தத்திற்கு பாது காப்புதுறை அமைச்சர் ஆண்டனி அவரை யும் அனுப்புவார், லாலேட்டனின் துப்பாக்கி இந்த தமிழ் ரசிகனையும் கொல்லும்.
நன்றி - இயக்குநர் ராம்
18 நிமிடங்கள் · பொது

மழநாடு கர்நாடகா எல்லை தலைக்காவிரி இலக்கியம் கல்வெட்டு குறிப்பு மழவர்

 


aathi1956 aathi1956@gmail.com

திங்., 4 பிப்., 2019, பிற்பகல் 6:31
பெறுநர்: எனக்கு
அமுதக்கனி
*மழநாடு*
மழவர்கள் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது.
இடம்
திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கி.மு. முதல் கி.பி. வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககால புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை கி.பி. 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர், திருவக்கரை வல்லவ நாட்டை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆண்ட மழவராய பண்டாரத்தார் போன்றோர் மழநாட்டை ஆண்டு வந்தனர். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரின் முன்னோர்கள் இந்த அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர். மழநாடு எல்லை குறித்த கல்வெட்டுகள் கருநாடக மாநிலத்தில் கிடைத்துள்ளன.
மழகொங்கம்
கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது. அப்போது, சங்க இலக்கியத்தில் மழவர் பெருமகன் என்றழைக்கப்படும் அதியமான்கள் இப்பகுதியை ஆண்டு வந்தார்கள். அதியமான்கள் உருவாக்கிய கோயில்களே நாமக்கல் குகைக்கோயில்கள். தமிழக அரசியல் வரலாற்றில் மழகொங்கம் முக்கிய பங்கு வகித்தது. மலை வளமும் நீர் வளமும் மிக்கது. இப்பகுதி கிழக்கே பாச்சில்(திருவாசி) வரை பரவியிருந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமழபாடி பண்டை நாளில் மழவர் ஊராகத் திகழ்ந்தது.
மழநாடு
தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்றொரு நாடு இருப்பது பதிவாகியுள்ளது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த மழநாடு திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்க
ு வடபுறத்திலுள்ள பகுதி என்று அகராதிகள் கூறுகின்றன. மேலும், மழகொங்கம், மழபுலம் ஆகிய சொற்களுக்கு அருத்தம் மழநாடு என்று அகராதிகள் குறிப்பிடுகின்ற
ன. கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது. சங்க இலக்கியமான புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் மழவர் பெருமகன் என்றும் தலை நீர் நாடன் என்றும் அழைக்கிறார். இதன் மூலம், மழவர் பெருமகனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது என்பதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கல்வெட்டுகளில் தலைநீர் என்ற சொல் முதல் மடைப் பாய்ச்சல் என்ற அருத்தத்தில் பயின்று வரும். இதன் மூலம் காவிரியாறு முதன்முதலில் பாயும் நாடு தலைநீர் நாடு என்பது புலப்படும். இப்பெரியபுராணத்துப் பாடலின் உரையிலிருந்து மழநாடு மேல்மழநாடு, கீழ்மழநாடு முதலிய நிலப்பகுப்புகளை உடையது என்றும் அதில் கீழ்மழநாட்டை திருச்சிராப்பள்
ளி மாவட்டம் திருவாசியைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் எனும் அரசன் ஆண்டான் என்றும் அறியமுடிகிறது. இதன்மூலம், மழவர் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது என்று அறியமுடிகிறது. மேலும், சுமார்த்தப்பிராமணரின் ஒரு உட்பிரிவு மழநாட்டுப்பிருகச்சரணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலமும், மழநாடு என்றொரு நாடு இருப்பது நமக்குத் தெரியவருகிறது.
மழவர் பெயரில் உள்ள இடங்கள்
வரலாற்று இடப்பெயர்கள்
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(
கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேர
ி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றுச் சான்றுகள்
தொல்லியல் மூலங்கள் தரும் செய்திகள்
கி.பி. 6ஆம் நூற்றாண்டு
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக் கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர், மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின் மாதன் பெருதிஅரைசர் என்பவர், என்னும் செய்தி பதிவாகியுள்ளது.
கி.பி. 8ஆம் நூற்றாண்டு தொகு
கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது.
வேள்விக்குடி செப்பேடுகள் வழங்கிய பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் தாய் மழவர் குடியில் பிறந்தவராவார். இவரை மழவேந்திரனின் மகள்(செப்பேட்டில் உள்ள சங்கத சுலோகத்தின் படி மளவேந்திரன்) அதாவது மழவ மன்னன் மகள் என்றும் இவரை பாண்டிய வேந்தன் இராஜசிம்மன்(மாறவர்மன்) மணந்தான் என்றும் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இச்செப்பேட்டுகள் பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்டன என்பதால் இவற்றின் காலம் கி.பி.770 என அறியமுடிகிறது.
கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.
கி.பி. 9ஆம் நூற்றாண்டு
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள செல்லம்பட்டி என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கி.பி.898ஆம் ஆண்டு தகடூர் மாவலிவாணராயரடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்றினை ஆண்டு வந்தான். அவனுடைய மாமனும் கோவூர் நாட்டு ஐந்நூறின் தலைவனாக விளங்கியவனுமான மழற்பையன் என்பவனின் அடியான் சூழிபுளியன் என்பவன், புலியைக் கொன்றபோது இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டில் மழற்பையன் என்ற சொல் மழவர் மகன் என்ற அருத்தத்தில் பயின்று வந்துள்ளது.
கி.பி. 10ஆம் நூற்றாண்டு
கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, அருண்மொழிவர்மனை(முதலாம் இராஜராஜ சோழன்) வளர்த்த வளர்ப்புத்தாய், செம்பியன் மாதேவி, மழவர் குடியில் பிறந்தவராவார். இவர் கொல்லி மலை மழவரையரின் மகளாராவார். இவரை கல்வெட்டுக்கள் ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு வாய்த்த மழவரையர் மகளார் பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார் என்றும் மேற்கெழுந்தருளிய தேவர் கண்டராதித்த தேவர் தேவியார், மழப் பெருமானடிகள் மகளார் பராந்தகன் மா தேவடிகளான செம்பியன் மா தேவியார் என்றும் கூறும். இவரது காலம் கி.பி.910-1001 ஆகும்.
அருண்மொழிவர்மனின்(முதலாம் இராஜராஜ சோழன்) தந்தை சுந்தர சோழனின் மனைவி, முதலாம் இராஜராஜ சோழனின் தாய், வானவன் மாதேவி, மலையமான் வமிசத்து மழவர் குடியில் பிறந்தவராவார்.
தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்ற சொல் பதிவாகியுள்ளது.
தற்கால கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம் சன்னபட்னா வட்டத்தில் உள்ள ஊர் மாலூர்பட்டினம். இந்த ஊரில் கிடைத்த கல்வெட்டுகள் படி இவ்வூர் மழவூர் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து இராஜேந்திரசோழவளநாட்டுக் கிழலைநாட்டு மழவூரான இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து கரிகாலசோழவளநாட்டு பெரிய மழவூர் இராசேந்திரசிங்க
ச்சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.மற்றொரு கல்வெட்டு சன்னபட்னா எனும் ஊரை சிறியமழவூர் என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம், மழவூர்பட்டினம் என்னும் ஊர் மாலூர்பட்டினம் என்றும் சின்னமழவூர்பட்டினம் என்ற பெயர் சின்னபட்டினம் என்றாகி இன்று சன்னபட்னா என்றும் வழங்கப்படுவது புலனாகிறது.
கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொகு
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
கி.பி. 16ஆம் நூற்றாண்டு
தற்கால திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர் பேரூராட்சியில் உள்ள ஈசுவரன் கோவிலில் உள்ள கி.பி. 1528ஆம் ஆண்டு கல்வெட்டில், சி(சீ)ர்மழவர் குலம் என்ற சொல் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டு படி, கரிதுர்க்க நாவலற்கருள் கம்பையாதிபன் கன்னன் மிகு பொன்னைநாடன் கார்போலவந்த பாரியாழ்வானுக்கந்ததொரு கருணை உண்ணாமுலையன் என்பவன், திருமருவுமிசுரத்திம்மையன் என்பவனின் கிறுபைகொண்டு, சி(சீ)ர்மழவர் குலம் விளங்கத் தேசூரிலே செங்கை வேலாயுதனுக்கொரு திருக்கோவிலைக் கட்டுவித்தான் என்றுள்ளது.
தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மயில்ரங்கம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 1532ஆம் ஆண்டு கல்வெட்டில் மாடைகளில் மழவராயர், அவினாசி மழவராயர் ஆகிய சொற்கள் பதிவாகியுள்ளன.
இலக்கிய மூலங்கள் தரும் செய்திகள்
சங்ககாலம்
சங்க இலக்கியங்களில் மழவர்
இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர். வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும் வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர். பல்யானைச் செல்கெழு குட்டுவன் மூன்றாம் பத்தின் தலைவன். இவன் மழவர்களைக் காக்கும் கவசமாக விளங்கினான். இவர்கள் ஆயர் குலத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இம்மழவர் குடியினர் தண்டாரணியப் பகுதியிலும் வாழ்ந்தனர். இவர்கள் வருடை ஆடுகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்தி வளர்த்து அதன் பயனைத் துய்த்து வந்தனர். ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவர்களின் ஆடுகளைக் கவர்ந்துவந்து தன் நாட்டுத் தொண்டி மக்களுக்கு வழங்கினான். அன்றியும் ஆடுகளைக் கவர்ந்து வரும்போது எதிர்த்த ஏனை கரந்தை மழவரையும் போரில் வென்றான்.மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள் மேய்த்து வருவர்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை விரட்டினான் மழவர் குடியினர் குதிரைமலை நாட்டில் வாழ்ந்துவந்தனர். பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தனைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான். திருச்சி மாவட்டத்தில் திருப்பாச்சில் ஆசிரமத்தைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். இது இடைக்கால நிலை. இக்காலத்துத் திருமழபாடி முற்காலத்தில் மழவர்குடியினர் வாழ்ந்த இடம் எனக் கருத இடமுண்டு. இவர்கள் வாழ்ந்த ஊர் பாடி என்று வருவதால் இவர்கள் முல்லை நில குடியினர் என்பது விளங்குகிறது.
சிற்றுரை சேர்ந்த ஆயர்கள் கையை தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினை கவர்ந்து அதன் இறைச்சியை பாலைத்திணை மழவர் உண்டனர் என்றும், கன்றினையுடைய பசுவினை கொன்று உண்டனர் என்றும் கடவுளுக்கும் காணிக்கையாக பலியிட்டனர் என்றும் அறிய முடிகிறது.
மழபுலம்
மழபுலம் என்பது சங்ககாலத்தில் மழவர் வாழ்ந்த நாடு.
வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி
இவன் மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.
சங்ககாலப் புலவர் மாமூலனார் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார்.. கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
கி.பி. 11ஆம் நூற்றாண்டு
தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை
கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது.
திருத்தொண்டர் திருவந்தாதி
கி.பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இயற்றப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றிக் கூறும் பாடலில் மேல்மழநாட்டைப் பற்றி குறிப்புள்ளது.
கி.பி. 12ஆம் நூற்றாண்டு
பெரியபுராணம்
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது.
கி.பி. 13-17ஆம் நூற்றாண்டு
கைலாயமாலை
கைலாய மாலை எனும் இவ்விலக்கியம் செகராசசேகரன் என்னும் அரசன் யாழ்ப்பாணத்தை ஆளத் துவங்கிய போது உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. இதில், பாண்டி மழவன் என்பவன், செகராசசேகரனிடம் சென்று யாழ்ப்பாண அரசை ஏற்கும் படி வேண்டினார் என்ற செய்தி பதிவாகியுள்ளது. மேலும், பாண்டி மழவனை விவரிக்கையில், இவனை பொன்பற்றியூரன், அண்டர் போரில் அழல்சூரன், மின்பற்று காலின் விலங்குதன்னை - அன்புற்று வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில் திட்டமுடன் வந்து செனனித்தோன் என இன்னும் பலவாறு விவரிக்கிறது.
கி.பி. 15ஆம் நூற்றாண்டு
திருப்புகழ்
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழில் காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே என்று குறிப்பிடப்படுகிறது.
கி.பி. 18ஆம் நூற்றாண்டு
சோழ மண்டல சதகம்
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட சோழ மண்டல சதகத்தில் மழநாட்டுப் பகுதிகள் இராசாச்சிரய வளநாடு என்று குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
கட்டுரை ஆக்கம்
# தமிழ்_விக்கிப்பீடியா
29 நிமிடங்கள் · Facebook for

மண்மீட்பு காவிரி 

இராகவையங்கார் தமிழ்த்தொண்டு தமிழ்ச்சங்கம்

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 4 பிப்., 2019, பிற்பகல் 3:06
பெறுநர்: எனக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
முத்துசுவாமி இராகவையங்கார் - நினைவு நாள் இன்று (1878 சூலை 26 – 1960 பிப்ரவரி 2)
மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளர்; பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர்.
மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896 ஆம் ஆண்டில் தன்னுடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரை தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.
பாண்டித்துரைத் தேவரால் 1901 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901 ஆம் ஆண்டில் மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.அப்பணியை 1912 ஆம் ஆண்டு வரை ஆற்றினார்.
1945 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இராம. அழகப்பச் செட்டியார் வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக அவ்வாண்டிலேயே பொறுப்பேற்றார். 1951 ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார்.
மதுரை தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901 ஆம் ஆண்டு முதல் 1904 ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904 ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912 ஆம் ஆண்டு வரை அப்பணியை செவ்வனே ஆற்றினார். இவருக்கு முன்னர் 1901 – 03 ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் மாமா மகன் இரா. இராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்கு பின்னர் 1912 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை அ. நாராயண ஐயங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்.
பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் 1913 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியா,ற்றினார். அப்பணியைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது.
அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951 ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளை பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார்.[4] இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.
எழுதிய நூல்கள்:-
01 திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்
02 நரிவிருத்தம் அரும்பத உரையுடன்
03 சிதம்பரப் பாட்டியல் உரையுடன்
04 திருக்கலம்பகம் உரையுடன்
05 விக்கிரம சோழனுலா
06 சந்திரா லோகம்
07 கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை
08 பெருந்தொகை
09 திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்
10 அரிச்சந்திர வெண்பா
11 கம்பராமாயணம் – பால காண்டம்
12 திரிசிராமலை அந்தாதி
13 கம்பராமாயணம் - சுந்தர காண்டம்
மு. இராகவையங்கார் தன்னுடைய கருத்துகளை நூல்களாக எழுதி வெளியிட்டார். அவை வருமாறு:
01 வேளிர் வரலாறு வரலாறு
02 தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி திறனாய்வு
03 சேரன் செங்குட்டுவன் வரலாறு
04 தமிழரும் ஆந்திரரும் ஆராய்ச்சி
05 ஆழ்வார்கள் காலநிலை வரலாறு
06 சாசனத் தமிழ்க்கவி சரிதம் வரலாறு
07 ஆராய்ச்சித் தொகுதி இலக்கிய ஆராய்ச்சி
08 திருவிடவெந்தை எம்பெருமான் திருமங்கை ஆழ்வார் பாடல்களின் விளக்கம்
09 சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி) இலக்கிய ஆராய்ச்சி
10 செந்தமிழ் வளர்த்த தேவர்கள் வரலாறு
11 Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes
12 இலக்கியக் கட்டுரைகள் இலக்கிய ஆராய்ச்சி
13 சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி) இலக்கிய ஆராய்ச்சி
14 வினைதிரிபு விளக்கம் இலக்கணம்
15 கட்டுரை மணிகள் இலக்கிய ஆராய்ச்சி
16 தெய்வப் புலவர் கம்பர் வரலாறு
17 இலக்கிய சாசன வழக்காறுகள் வரலாறு
18 நூற்பொருட் குறிப்பகராதி
19 நிகண்டகராதி
# எமது புகழ் வணக்கம்... # நாம்_தமிழர்

பார்ப்பனர் தமிழ்மொழி தமிழறிஞர் 

இயற்கை போராளி பேராசிரியர் ஜெயராமன் இனப்பற்று

 

பெறுநர்: எனக்கு
கார்த்திகேயன் சேதுராசன்
உண்மையான பேராசிரியர் .மக்களின் பிரச்சினைகளை எந்தவித சமரசமும் இல்லாமல் கடைசி வரை போராடுபவர்.
நம்மாழ்வாருக்கு பிறகு காவிரி ஆற்று படுகையில் ஒற்றை ஆளாக கிராமகிராமமாக சென்று மீத்தேன் எரிவாயு திட்டங்கள் எவ்வளவு பேராபத்தை விளைவிக்கும் என எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியவர்.ஒஎன்ஜிசி மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
உண்மையான தமிழ்தேசிய போராளி.என்ன கொடுமை என்னவென்றால் ஊடக வெளிச்சத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் மக்களுக்கான போராளிகள் என்ற பின்பம் மட்டுமே உருவாக்கபட்டுள்ளது.
ஆனால் ஊடக வெளிச்சம் படாமல் பல வருடங்களாக தமிழ்தேசிய தளத்தில் இயங்கி வந்தவர். திராவிட கோட்பாடு தமிழினம் என்ற இனவரையரையை மறுக்கிறது.நாம் திராவிடர் அல்ல நாம் தமிழர்கள் என்று 2009க்கு முன்பே முழங்கி வருபவர்.அவரது தமிழின உணர்வை,தமிழ்தேசிய உணர்வை, அவரது ஆய்வுகள் மூலமாக அவர் எழுதிய புத்தகங்கள் மூலமாக அறியலாம்.
அவர் எழுதிய நூல்களில் மிக முக்கியமான ஆய்வு நூலாக நான் கருதுவது"தகர்ந்து போன தன்னாட்சி கணவுகள்" -இந்த புத்தகத்தில் இந்தியா எவ்வாறு தேசிய இன போராட்டங்களை சிதைத்து தனது வரைபடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளது என விவரித்து இருப்பார்.
"ஈழம்-இந்தியம் -இறையாண்மை " இந்த நூலில் இறையாண்மை என்றால் என்னவென்று எளிய பாமர மக்கள் கூட புரியும் அளவில் எழுதிய அரசியல் நாலாகும்.
மேலும்"மீத்தேன் அகதிகள்" என்ற நூல் எழுதியதற்காக வழக்குகளையும் சந்தித்து கொண்டு உள்ளார். நிலத்தடி நீர் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என்றும் ஆறுகள் அனைத்தும் கார்பரேட் மயமாக்கப்பட்டு நிலத்தடி நீர் உபயோகிக்க மீட்டர் பொருத்தப்பட்டு தனியாருக்கோ அல்லது அரசுக்கோ வரி செலுத்தும் சூழல் உருவாகும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரை எழுதியவர்.
தமிழினத்தில் இவர் ஒரு தீர்கதரிசி.தமிழினத்தின் சொத்து .கல்லூரி காலகட்டத்தில் இவரது வகுப்பை ஒரு முறை உட்கார்ந்து கவனிப்பது என்பது நமக்கு கிடைத்த வரம்.வரலாற்று பாடங்கள் நடத்தும் போது தமிழினத்தின் வரலாறுகளையும் தமிழினத்தின் தற்கால பிரச்சனைகளையும் சேர்த்தே நடத்துவார்.எவ்வளவு பெரிய தறுதலையாக இருந்தாலும் இவரது வகுப்பில் ஒரு முறை அமர்ந்தால் பொறுப்புள்ள மாணவனாக மட்டும் அல்லாமல் சிறந்த தமிழனாக வலம் வருவான்.
ஊடகத்தில் தற்போது நாம் பார்க்கும் தலைவர்கள் எத்தனை நல்ல குடிமகன்களை நாட்டிற்கு கொடுத்து உள்ளனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் வகுப்பறையில் இவரது பாடம் நடத்தியதால் பல தமிழ்தேசிய சிந்தனை கொண்ட குடிமக்களை தமிழ்நாட்டிற்கு அர்பணித்தவர்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராக பணியாற்றி இச்சமுகத்திற்கு சிறந்த தமிழர்களை உருவாக்கி கொடுத்தவர் ஐயா.செயராமன் அவர்கள். பணியில் இருக்கும் காலத்தில் இருந்து இந்த நிமிடம் வரை எந்த ஒரு மக்கள் போராட்டத்தையும் முன் நின்றவர். பணம்,புகழ் எதுவற்றிற்கும் ஆசைபடாதவர்.
எந்தவித போராடத்திலும் தன்னை முன்னிலை படுத்தாமல் மக்களின் பிரச்சினைகளை முன்னிலை படுத்தியவர்.
ஈழப்போராட்டத்தில் இவரது பங்கு மகத்தானது.இவரது phd project கூட ஈழம் தேசிய இன விடுதலை வரையறைக்குள் வருகிறது என்பதை நிறுவியது.
இந்த வயதில் கூட மக்களுக்காக சிறைவாசம் அனுபவத்து கொண்டு உள்ளார் பேராசிரியர் ஐயா செயராமன். எதற்காக இம்மண்ணை அந்நிய முதலாளிகளிடம் இருந்தும்,கார்ப்பரேட் களிடம் இருந்தும்,எண்ணெய் நிறுவனங்கள் போன்ற வல்லூறுகளிடம் இருந்து பாதுகாக்க ஏராளமான வழக்குகளை சந்தித்து கொண்டு உள்ளார்.
கதிராமங்களம் கிராமத்திற்காக இரண்டாவது முறை கைதாகி உள்ளார்.
நாம் அனைவரும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.அவர் சிறந்த ஆசிரியரா என்பது நமக்கு தெரியாது பார்த்ததும் இல்லை.
ஆனால் தமிழினத்தில் பிறந்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பேராசிரியர் ஐயா. த.செயராமன் அவர்கள் நல்ல முன்னோடி நல்ல எடுத்துக்காட்டாக பணியாற்றியவர்.
தயவுசெய்து இவரது விடுதலைக்காக குரல் கொடுங்கள்.
10 மணி நேரம் முன்பு · Messenger இலிருந்து அனுப்பியது

இனம் புத்தகம் நாசகார திட்டம் மீத்தேன் ஹைட்ரோகார்பன் 

வெளிமாநிலத்தார் குடியேற்றம் வாக்காளர் எண்ணிக்கை தொகுதிக்கு 10,000 திடீர் உயர்வு

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 2 பிப்., 2019, பிற்பகல் 7:39
பெறுநர்: எனக்கு
Josh Freed ▶ உலகத் தமிழர் பேரவை -நண்பர்கள் / World Tamil Forum ஐ விரும்பும் நண்பர்கள்
பெருகிவரும் “வெளிமாநில” வாக்காளர்கள்
தமிழ்நாட்டு அரசியலில்
ஏற்படுத்தப்போகும் சீர்குலைவு!
==================================
நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் குவியும் வெளி மாநிலத்தவர்களில் கணிசமானவர்கள் இங்கேயே வாக்காளர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த “வெளியார் வாக்காளர்கள்” தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய குறுக்கீடாக அமைவார்கள் என்று நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.
இப்போது வெளியாகியுள்ள புதிய வாக்காளர் பட்டியல் நாம் எச்சரித்ததைவிட மிக வேகமாக இந்த அபாயம் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு, நேற்று (31.01.2019) வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 2018க்குப் பிறகு புதிதாக சற்றொப்ப 8 இலட்சத்து 34 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். 5 இலட்சத்து 63 ஆயிரம் இரட்டைப் பதிவுகளை நீக்கியதற்குப் பிறகும் இந்த உயர்வு!
நம்முன் உள்ள இந்த வாக்காளர் பட்டியலையும், தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் குறித்த 2018 சூன் மாதம் வெளியான “மொழிவழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - 2011” பட்டியலையும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தால், வெளி மாநிலத்தவர்களால் இந்த வாக்காளர் எண்ணிக்கை வீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அதிக வாக்காளர்கள் உள்ள மாவட்டங்களாக சென்னைக்கு அடுத்துள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி திருவள்ளுர் மாவட்ட மக்கள் தொகை 2001 கணக்கெடுப்பை ஒப்பிட 35.24 விழுக்காடும், காஞ்சிபுர மாவட்ட எண்ணிக்கை 38.9 விழுக்காடும், வேலூரின் எண்ணிக்கை 10.04 விழுக்காடும் உயர்ந்தது.
இன்னொருபுறம், இந்திப் பேசுவோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 93 ஆயிரம் என்றும், குசராத்தி மொழி பேசுவோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரம் என்றும் - மொத்தம் பிற மொழி பேசுவோர் 88 இலட்சம் பேர் என்றும் இன்னொரு புள்ளிவிவரம் கூறியது.
வெளி மாநிலத்தவர் தொகை உயர்வு திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீமிகை எண்ணிக்கையில் இருப்பதையும், இம்மாவட்டத் தொழில் நிறுவனங்களில் இந்திக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைப் பார்க்கும்போதும், புதிய வாக்காளர் எண்ணிக்கையில் காஞ்சிபுரமும், திருவள்ளூரும் முதல் வரிசையில் வருவதும், அதுபோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் புதிய வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வெளி மாநில வாக்காளர்கள் வீக்கத்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறான “வெளியார் வாக்காளர்” எண்ணிக்கை திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களிலும் உயர்ந்திருக்கிறது.
அதிக வாக்காளர் உள்ளத் தொகுதியாக சோழிங்கநல்லுர் தொகுதி குறிப்பிடப்படுகிறது. சோழிங்கநல்லூர் பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகை எண்ணிக்கையில் வெளியார் இருப்பதையும், இதனையும் இணைத்துப் பார்த்தாலும் இந்த “வெளியார் வாக்காளர்” ஆபத்தை உணர முடியும்.
இந்த வெளி மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது என்று தலையால் அடித்துக் கொண்டு, நாம் தொடர்ந்து வலியுறுத்தினாலும் மாநில ஆட்சியாளர்கள் அதைக் கேட்பதாக இல்லை!
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000-லிருந்து 25,000 வரையிலும் வெளி மாநிலத்து வாக்காளர்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த “வெளியார் வாக்காளர்களின்” முதல் தேர்வாக பாரதிய சனதாவும், அடுத்தத் தேர்வாக காங்கிரசுக் கட்சியும்தான் இருக்கும்!
எவ்வளவுதான் தில்லிக்குக் காட்டிக் கொடுத்தாலும், அண்ணா தி.மு.க. - தி.மு.க. கட்சிகளைக்கூட இவர்கள் கருதிப் பார்க்க மாட்டார்கள்.
இந்த வெளி வாக்காளர் குறுக்கீடு நாடாளுமன்றத் தேர்தலில் மிகக்கூர்மையாக வெளிப்படும்! ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனநிலை தேர்தல் முடிவுகளில் வெளிப்படாமல், சீர்குலைக்கும் குறுக்கீடாக இந்த “வெளியார் வாக்காளர்கள்” அமைவார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட தீய விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்! எனவே, இப்போதாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ள வேண்டும்!
இறுதி வாக்காளர் பட்டியலை ஆய்ந்து, அதில் சேர்ந்துள்ள வெளி மாநில வாக்காளர்களை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலிருந்த
ு நீக்கிவிட வேண்டும்! புதிய வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் யாரையும் சேர்க்கக் கூடாது!
நேற்று, பிற்பகல் 6:09


கர்நாடகா சிலை தமிழகம் மலை வீடு சாலை சேதம் புது பாலம் வழி

 

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 1 பிப்., 2019, பிற்பகல் 1:56
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash , இடுகையைப் பகிர்ந்துள்ளார்.

கன்னடன் சிலை வைக்க...
.
.
தமிழக மலை பெயர்த்து
.
.
ரவுண்டானாக்களை இடித்து
.
.
வீடுகளை சேதப்படுத்தி
.
.
தமிழக போலீஸ் பாதுகாப்புடன்
.
.
புது பாலம் கட்டி
.
.
டோல்கேட் இடையூறு இல்லாமல்
.
.
செல்லும் இது சிலையா?
இல்லை கன்னடர் திமிரா?
வடிவேல் சுப்ரமணியம்
ஒரு சிலைக்கான மலைய வெட்டி நூத்துக்கணக்கான மரங்களை கட்டிடங்களை ரவுண்டாணாவை உடைச்சி காவல்துறை பாதுகாப்போடு எடுத்து போறாங்க
எந்த அடிப்படைலனு எந்த தமிழ் தலைவனும் கேட்கல, எந்த பகூத்தறிவு பேசுற முண்டங்களும் கேட்கல, எந்த இயக்கமோ கேட்கல
நேத்துதான் ஒரு தனி மனிதன் கேட்டிருக்காரு ஏன்டா தண்ணி தரமாட்டேனு சொன்ன உனக்கு என் ஊரு வளத்தை ஏன்டா தரனும்னு
மறைமுகமா தமிழக வளங்கள் போகுறத கேட்கல குறைந்தபட்சம் ஒரு மலையவே பெயர்த்து மாசக்கணக்குல கொண்டு போறாங்க அதையும் கேட்கல.
நாளைய தமிழகம் தமிழனுக்கானதா என்றால் இல்லை என்பதே உண்மை
இதில் முக்கியமான விசயமே ரவுண்டானா கட்டிடம் இடிக்க வேண்டிய கல்லுக்கு டோல்கேட் இடிக்கற தேவை வரல அங்க தனியா சாலை, ஒரு மேம்பாலம் தாங்காதுனு புதுசா தரைப்பாலம் இவ்ளவும் நடக்குதுனா ஊடகங்கள் கட்சிகள் இயக்கங்களுக்கு எவ்ளோ வாரி தரப்பட்டிருக்கும்.


வைணவம் கன்னடர் கன்னடவர் திமிர் இனவெறி சிலை