செவ்வாய், 5 ஜனவரி, 2021

2500 ஆண்டு பழமை தாழி யில் விளை நெல் பொருந்தல் அகழ்வாராய்ச்சி

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 15 ஆக., 2019, முற்பகல் 10:48
பெறுநர்: எனக்கு
Sadanandam Krishnakumar
பொருந்தல் அகழாய்வு நடந்த இடம்:
சேரநாட்டின் தலைநகர் வஞ்சிக்கு செல்லும் பெருவழியில் இவ்வூர் அமைந்துள்ளது. இலக்கியத்தில் "வைகாலி நாட்டு பொருந்தல்" என அழைக்கப்படுகிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான பேகனின் ஆட்சிக்குட்பட்ட பகுதி இது. பொருந்தல் அகழாய்வு குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அவ்விடத்தில் அகழாய்வு நடத்திய திரு.கா.ராஜன் அவர்களின் பேட்டி கீழே உள்ளது.
மாலன்: கிறிஸ்துவிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்பது பெருமைக்குரிய செய்திதான். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டுமல்லவா?
பேரா.ராஜன்: அறிவியல்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன். அதற்கான வாய்ப்பு பழனிக்குப் பக்கத்தில் உள்ள பொருந்தலில் அகழாய்வு செய்தபோது கிடைத்தது. பொருந்தல் அகழ்வாய்வை 2010ல் செய்தோம். ஒரு கல்லறையை தோண்டும்போது வட்டமாக ஒரு தாங்கி (மட்பாண்டங்களை வைக்க ஸ்டாண்ட் போல் பயன்படும் மண் வளையம்) அந்த கல்லறையில் இருந்தது. அதற்கு வைரா என்று பெயர். அதில் பெரிய ஜாடியில் 2 கிலோ நெல் வைத்திருந்தார்கள். முதல் தடவையாக தமிழகத்தில் நெல் கிடைக்கிறது.
அறிவியல்பூர்வமாக கால கணிப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று செய்தோம். தானியங்களை காலக் கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவின முறையான ஆக்ஸ்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்டேராமெட்ரி முறையில் செய்தபோது காலக் கணிப்பு கிமு 490 என்று வந்தது. உலகத்திலேயே பீட்டா அனலிட்டிக்கல் லேபாரட்டரி அமெரிக்காவில்தான் உள்ளது. அங்க அனுப்பியபோது இந்த காலக் கணிப்பு வந்தது..அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு 490 ஆண்டுகளுக்கு முன், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.
மாலன்: இது வேளாண்மை செய்து பெறப்பட்ட நெல்லா? அப்படி இருந்தால் அந்தக் காலத்திலேயே தமிழர்கள் வேளாண்முறைகளை அறிந்திருந்தார்கள் என்பது உறுதியாகுமல்லவா, அதனால் கேட்கிறேன். அப்படி இருந்தால் தமிழர்களின் காலம் இன்னும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாற சில நூறாண்டுகள் ஆகியிருக்குமல்லவா?
பேரா.ராஜன்: உண்மைதான் மூன்று வகையான நெல் இருக்கின்றன வேளாண்மை செய்து வளர்க்காமல் தானே விளையக்கூடிய காட்டு நெல் இதற்கு புழுதி நெல் என்ற பெயர்.இரண்டாவது விதைத்து வளர்க்கிற விளைச்சல் நெல் மற்றொன்று நாற்று விட்டுப் பறித்துநடுகின்ற ரீபிளான்டேஷன் நெல்.
காட்டு நெல்லாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். தவிர ஒரு ஆய்வுக் கூடத்தில் மட்டும் செய்யும்போது இந்தக் காலக் கணிப்பு அங்கு நடந்த சிறு தவறாக கூட இருக்கலாம். அப்படி என்றால் காட்டு நெல்லா, பயிர் செய்த நெல்லா என்று தெரிவதற்கு இதை உறுதி செய்ய இன்னொரு சோதனை வேண்டும். நம்முடைய அரசு சட்டப்படி நெல்லை வெளியில் அனுப்பக் கூடாது என்பதால், Indian institute of advance archeological study என்று இலங்கையில் உள்ள மையத்தில் இருந்து டாக்டர் பிரேம திலகர் என்பவரை இங்க வரச் சொன்னோம். அவரோடு பாண்டிச் சேரியில் உள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி ஆய்வாளர்களும் சேர்ந்து இது விளைச்சல் நெல்தான். இதன் தாவரவியல் பெயர் ஒரைசா சட்டைவா இண்டிகா என்று உறுதி செய்தார்கள். இதேபோல 4 பெருங்கற்படை சின்னங்களை ஆய்வு செய்தோம். நான்கிலும் நெல் கிடைத்தது.
மாலன்: நான்கையும் ஆய்வு செய்தீர்களா?
ஒரு நெல்லை ஆய்வுக்கு அனுப்பியபோது அதன் காலம் கிமு 450 என்று வந்தது. நான்கையும் ஆய்வுக்கு யிருக்கலாம். ஒன்றை ஆய்வு செய்யவே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகும் என்பதால் முடியவில்லை.
பொருந்தல் அகழாய்வில் நெல் மட்டுமல்ல, கார்னேலியன் மணிகள், தங்கப் பொருட்கள்,இவையும் கிடைத்தன. இவற்றை வைத்து அந்தக் கல்லறைகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களுக்காக எழுப்ப்ப்பட்டவை என்று நாங்கள நினைத்தோம். ‘பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி’ என்று புறநானுற்றில் வருகிறது அவர்கள் விவசாயத்தில் சிறந்த நிலையை அடைந்து அதன் மூலம் நிறையப் பொருட்களை வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் இருந்த வாங்கி இருக்கிறார்கள. விலை உயர்ந்த கல், மணிகள் எல்லாம் அவர்களிடம் இருந்தது.
இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது . நீங்கள செய்திருக்கும் ஆய்வுகள் எல்லாம் ஈமக்காட்டில் செய்யப்பட்டவை வாழ்விடத்திலிருந்து செய்தால்தான் இன்னும் உறுதிதயாக ஏற்றுக் கொள்ள முடியும் என்றார்கள்.
இதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் கொடுமணல் ஆய்விற்கு மிண்டும் இறங்கினோம் ஆய்வை தொடங்கும் முன்பே மாதிரி எடுக்கும்போதே மண் அடுக்கின் ஒவ்வொரு ஆழத்திலும் 10 செ.மீ, 20 செ.மீ. 50 செ,மீ., என்று தனித்தனியாக எடுக்க வேண்டும் என்ற முடிவு செய்து விட்டோம். அப்படி நாங்கள் எடுத்த மாதிரியின் காலத்தைஅறிவியல் பூர்வமாக ஆராய்ந்தோம். அவை கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிமு ஆறாம் நூற்றாண்டு வரை .சேர்ந்தவை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆய்வுக் கூடமும் ஒவ்வொரு வழிமுறையை பின்பற்றுமே அதனால் இந்த கால கணிப்பு சரியாக இருக்குமா என்று. இன்னொரு கேள்வியும் எழுந்தது.
அதற்காக நாங்கள 10 செ.மீ., ஆழத்தில் எடுத்ததை பீட் அனலிட்டிகல் சோதனைக் கூடத்திற்கும் 20 செ., ஆழத்தில் எடுத்த்தை அரிசோனா பல்கலை கழகத்திற்கும் அனுப்பினோம். இரண்டு ஆய்வுகளும் முரண்படுகிறதா என்ற பார்த்தபோது கச்சிதமாக இரண்டும் ஒரே மாதிரி இருந்த்தது. அதனால் இதன் காலம் என்பது கி.மு 2 முதல் 6 வரை இருக்கும் என முடிவு செய்தோம்.

மூத்தகுடி வேளாண்மை விவசாயம் நாகரீகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக