| செவ்., 17 செப்., 2019, பிற்பகல் 5:25 | |||
இளங்குமரன் தா
குஞ்சம்மா.
யார் இந்தக் குஞ்சம்மா?
மதுரை மேல அனுமந்தராயன் தெரு இசையரசி சண்முக வடிவு பெற்ற மகள்.
இசையே கூத்தாகவும், இசையே திரைப்படமாகவும் ஆனகாலத்தில் நம் சுப்புலட்சுமி நடித்தது சேவா சதனம் (1939), சகுந்தலை (1940), சாவித்திரி (1941), மீரா (1945) என்ற நான்கே திரைப்படங்கள்தான். சுப்புலட்சுமியி
ன் தமிழ் இசைதான். திரை யிசையாக நம்மை முதலில் வந்தடைந்தது.
ஒரு தமிழ் இசைப் பாடகியை, 'கர்நாடக சங்கீதப் பாடகி' என்று பேசிப்பேசியே கர்நாடக சங்கீத அரிப்பெடுத்தவர்
களெல்லாம், மெத்தவே சொரிந்து கொண்டார்கள்.
ஆனால் இந்தக் கூச்சலுக்கு மத்தியில் 'வடவரையை மத்தாக்கி' என்று தமிழரைத் தாலாட்டிய அந்த மாணிக்கத் தொட்டில் பாடிய சிலப்பதிகாரப் பாடலைப் பற்றி யாரும் பேசவில்லை. ஏனென்றால் அது தமிழ்ப்பாட்டு; தமிழ் இசைப்பாட்டு.
இதில் துயரம் என்னவென்றால் தமிழின் நலன் காக்கும் நாயகர்கள் கூட அவர் பாடிய சிலப்பதிகாரப் பாடல் பற்றிப் பேச மறந்ததுதான்.
16/09/1916 இந்தத் தமிழ்க் குயிலின் பிறந்த நாள்.
நன்றி ஐயா நா. மம்மது
சிலப்பதிகாரம் சினிமா திரைப்படம் நடிகை பெண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக