| சனி, 17 ஆக., 2019, பிற்பகல் 1:27 | |||
# Nambikai_Raj
'தன் சூழ்ச்சி வலையில் தானே சிக்கிக்கொண்ட பினராயி விஜயன் என்ற தந்திர நரி'
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கேரளா வெள்ளத்தில் மூழ்கி கொண்டிருந்தபோது தமிழகம் முழுவதிலிருந்தும் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான வண்டிகள் சாரைசாரையாக கேரளாவுக்குள் சென்றுக் கொண்டிருந்தன.
கேரளாவிற்கு போன நிவாரண பொருட்களில் 60% தமிழகம் கொடுத்ததுதான்.
தமிழக அரசு சார்பில் பணமாகவும், நிவாரண பொருட்களாகவும் கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு ரூபாய் 450 கோடியை தாண்டும். ( அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம், தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ & எம்.பிகளின் ஒரு மாத ஊதியம். தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் பணம் + 10 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள்+ 5 கோடி ரூபாய் மதிப்பிலான வேட்டி, சேலைகள், Etc )
மேலும் தமிழக அரசு 150 மருத்துவ குழுக்களையும் கேரளாவிற்கு அனுப்பி வைத்தது.
தமிழகம் தன் சகோதர மாநிலமாக நினைத்து கேரளாவிற்கு உதவிக்கொண்டிருந்த அதே நேரத்தில் பினராயி விஜயன் தன் வில்லத்தனத்தை சுப்ரீம் கோர்ட்டில் காட்டிக்கொண்டிர
ுந்தார்.
கேரள வெள்ளத்திற்கு காரணமே முல்லை பெரியாறு அணைதான் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 132 அடிக்கு குறைத்துவிட வேண்டும் என சகுனியாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அந்த துரோகத்தையும்கூட தமிழகம் பொருட்படுத்தாமல் கேரளாவிற்கு உதவிக்கொண்டுதான் இருந்தது.
அப்போது சிறிய அளவில் உதவி செய்த மற்ற மாநிலங்களுக்குக்கூட தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி நன்றி சொன்ன பினராயி தமிழகத்தை உதாசீனப்படுத்தினார்.
தமிழகத்தின் மீதான ஏளனம் அப்போதும் பினராயியிடம் இருந்தது.
காலம் மீண்டும் சுழன்றது.
இந்தாண்டும் கேரளாவில் அதேபோல மழை வெள்ளம். தமிழகமும், தமிழக அரசும் அதை பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை.
இப்போது உதவுங்கள் என கோரிக்கை வைக்கிறார் பினராயி. தமிழிலேயே டுவிட் போட்டு உதவி கேட்கிறார்.
தமிழகம் உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.
அண்டை மாநில ஆட்சியாளர்களோடு நட்புறவை வைத்திருந்தால் இதுபோன்ற சூழலில் உரிமையாக உதவி கேட்கலாம்.
சமீபத்தில்கூட தமிழக அமைச்சர்கள் ஆந்திராவுக்கு சென்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் இந்தாண்டு சென்னைக்கு வழங்க வேண்டிய கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோது அன்றே தண்ணீரை திறந்துவிட்டார் அம்மாநில முதல்வர்.
ஆனால் பினராயி பக்கத்து மாநிலமான தமிழகத்தில் செய்த சில்லுண்டு வேலை எது தெரியுமா?
கடந்த மாதம் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவியபோது நம்ம ஊர் 'உண்டியல்கள்' அதை வைத்து அரசியல் செய்ய பினராயி என்ற பில்லிசூனியத்தை ஏவி விட்டன.
'சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு உதவ ரயில் மூலம் 2 மில்லியன் லிட்டர் தண்ணீரை தருவதாக சொன்னோம். ஆனால் அதை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது' என பினராயி விஜயன் கொளுத்திப்போட , அதைத்தூக்கொண்டு இங்கு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டன.
இது கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பதை கொஞ்சம் நாகரிமாக தெளிவுபடுத்தினார் அமைச்சர் வேலுமணி.
"சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தண்ணீர் தேவை 525 MLD. தற்போது ஒரு முறை மட்டும் கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் 2 MLD நீரினை அனுப்புவதாக அம்மாநில முதல்வர் கேட்டார். அப்போது குறிப்பிட்ட சில காலத்திற்கு தினமும் 2 MLD தண்ணீரை தர முடியும் என்றால் உதவுங்கள். தண்ணீரை ரயில்வே வேகன்களில் கொண்டு வரும் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஒருமுறை மட்டுமே அனுப்பமுடியும் என்றால் அந்த 2 MLD தண்ணீரை தமிழகத்தின் மற்ற பகுதியிலிருந்தே கொண்டு வந்து சமாளித்துக்கொள்கிறோம்" என தமிழகத்தின் சார்பில் தெரிவித்துவிட்டோம் என்று பதில் கொடுத்தார்.
தினமும் ஒரு ரயில் வேகன்கள் நிறைய தண்ணீர் அனுப்ப முடியாத அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் அல்ல கேரளா. மன பற்றாக்குறை நிலவும் மாநிலம். குறிப்பிட்ட காலத்திற்கு தினமும் தண்ணீர் தர முடியுமா என தமிழக அரசு கேட்டதற்கு பதிலே சொல்லாமல் கள்ள மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார் பினராயி. கடைசியில் ஒரு ரயில் தண்ணீர்கூட வரவில்லை கேரளாவிலிருந்து.
பக்காவாக சென்னையின் குடிநீர் பஞ்சத்தில் அரசியல் செய்தார் பினராயி. கேரளா சென்னைக்கு தண்ணீரை கொடுக்க வந்தது போலவும் அதை தமிழக அரசு வேண்டாம் என சொல்லிவிட்டது போலவும் ஒரு காட்சியை வெற்றிகரமாக உருவாக்கி ஆனந்தப்பட்டார்.
பினராயியிடம் ஒரு நாளைக்கு மட்டும் 2 MLD தண்ணீரை தமிழக அரசு வாங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்?
சென்னைக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றுவதே கேரளாதான் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருப
்பார்கள்.
உண்மையிலேயே தினமும் 2 MLD தண்ணீரை சென்னைக்கு அனுப்பிவிட்டு அதில் கேரளா பெருமைப்பட்டுக்கொண்டாலும் அதில் நியாயம் இருக்கும். ஆனால் ஒரேயொருமுறை சென்னைக்கு தண்ணீரை அனுப்பிவிட்டு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் முதுகில் குத்தியதை மறைத்திருப்பார்கள் இந்த போலி பெருமையால்.
கடந்த ஜூன் 20ம் தேதி சென்னை குடிநீர் பற்றாக்குறையை பயன்படுத்தி தமிழக அரசோடு அரசியல் செய்த பினராயி விஜயன் தற்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழக அரசிடம் உதவி கேட்ப்பார்?
பினராயி என்ற ஒரு கேவலமான அரசியல்வாதியின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது மலையாளிகளே!
தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல் வெறும் குவளையை காட்டி ஏமாற்றியவர்களிடம் பதிலுக்கு நாம் மனிதாபிமானத்தை காட்ட வேண்டியதில்லை.
கடந்த ஆண்டு கேரளாவிற்கு நாம் உதவியதற்கு அவர்கள் சென்னைக்கு சாரைசாரையாக அனுப்பி வைத்த தண்ணீர் ரயில்களே சாட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக