புதன், 6 ஜனவரி, 2021

சிவண் என்பதன் பொருள் பொருந்துதல் இலக்கியம் சொல் சொல்லாய்வு சிவணிய

 

aathi tamil aathi1956@gmail.com

புத., 4 செப்., 2019, பிற்பகல் 1:21
பெறுநர்: எனக்கு
Ingersol Selvaraj
# சிவண்_என்பது_பண
்டைய_தமிழ்ச்சொல்
சங்க இலக்கியங்களில் இது கையாளப்பட்டுள்ள பாங்கையும் பொருளையும் காணலாம்.
--------------------------------------
# தொல்காப்பியம் 2-115
தம்தம் பொருள்வயின் தம்மொடு
# சிவணலும் ,
ஆகுபெயர் அதனதன் பொருளோடு
# பொருந்திவரும்
--------------------------------------
நற்றிணை 82
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல், சேறு ஆடு இரும் புறம் நீறொடு
# சிவண
சேறு படிந்து காய்ந்த பன்றி முதுகு வெண்ணீறு போல் # பொருத்தி காணப்பட்டது
--------------------------------------
# அகநானூறு 66
மணி புரை செவ் வாய் மார்பகம்
# சிவணப் , புல்லி, பெரும! செல் இனி, அகத்து என
தன் வீட்டுக்குத் திரும்பும் தலைவனின் மார்பைப் பரத்தை தன் வாயைப் #பொருத்தி முத்தமிட்டு அழுத கண்ணினளாய் அனுப்பிவைத்தாள்.
--------------------------------------
#தொல்காப்பியம் 1-175
பல்லவை நுதலிய அகர இறுபெயர், வற்றொடு # சிவணல் எச்சம் இன்றே.
'பல' என்னும் சொல் 'வற்று' என்னும் சாரியையோடு # பொருந்துதல் விலக்கு ஆகாது
--------------------------------------
#தொல்காப்பியம் 2-153
அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம், அம் முறைப்பெயரொடு # சிவணாது ஆயினும், விளியொடு கொள்ப' தெளியுமோரே.
தாயைக் குறிக்காமல் பொதுப்பட பிறரை விளிக்கும் 'அம்ம' என்னும் சொல் 'அம்ம' என்னும் முறைப்பெயருடன் # பொருந்தாமல் 'அம்மா' என நீட்டத்துடனும் வரும்.
--------------------------------------
#தொல்காப்பியம் 1-101
சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத், தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும், தம்தம் சார்பின் பிறப்பொடு # சிவணி , ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும் .
சார்பெழுத்துக்களின் பிறப்பு தம் இன எழுத்துக்களின் பிறப்போடு
# பொருந்தி வரும்.
--------------------------------------
# புறநானூறு 328
துடுப்பொடு # சிவணிய களிக் கொள் வெண் சோறு .
துடுப்போடு # பொருந்திக் கொண்டிருக்கும் வெண்பொங்கல் சோறு.
--------------------------------------
#தொல்காப்பியம் 1-46
மெய்யின் இயக்கம் அகரமொடு
# சிவணும் .
மெய்யெழுத்து 'அ' எழுத்தோடு #பொருந்தி ஒலிக்கும்.
17 மணி நேரம் · பொது

சிவன் சைவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக