புதன், 6 ஜனவரி, 2021

நீதிக்கட்சி திராவிடம் கொள்கை ஏற்கவில்லை ஈவேரா விமர்சனம் ஜஸ்டிஸ்

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 22 ஆக., 2019, பிற்பகல் 4:17
பெறுநர்: எனக்கு
விஷ்வா விஸ்வநாத்
நீதிக்கட்சித் தலைவர்கள் திராவிடர் - திராவிட நாடு - திராவிட சித்தாந்தம் என்ற எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் கூற்றே இதற்குச் சான்று:
1944ஆம் ஆண்டு சூன் மாதம் 17ஆம் நாளிட்ட குடியரசு ஏட்டில் பெரியார் எழுதுகிறார்:
”தென்னிந்தியப் பெருங்குடி மக்களுக்கு இலட்சியச் சொல் ஒன்று இல்லாமல் இருப்பது பெருங்கேடு. இந்தக் காரணத்தாலேயும் (பார்ப்பனர்) “அல்லாதார்’’ என்ற பட்டம் நமக்குக் கூடாது என்பதாலேயும், நாமெல்லாரும் ஒரு கூட்டிற்குள் வர வேண்டும் என்பதாலேயும் ஒரு குறிச்சொல் தேவை. மிகமிகத் தேவை. இதைப் பல நாட்களாகவே நான் கூறி வருகிறேன்’’ - ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி - 1.
“அந்தக் காலத்தில் இந்தக் கட்சி எந்த மக்களின் நல்வாழ்விற்காக ஏற்பட்டதோ, அந்த மக்களுக்குப் பெயரென்ன என்ற பிரச்சினை எழுந்தது. ஆனால், “திராவிடர்” என்ற பெயருக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்காதக் காரணத்தால், பெரிதும் ஆந்திரர் ஒப்புக் கொள்ளாததால், “தென்னிந்தியர்” என்று ஏற்படுத்திக் கொண்டார்கள்.
“பார்ப்பனரல்லாதார் என்று கூறிக் கொள்ளும் ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் எந்த வகையில் பார்ப்பனரிலிருந்து வேறுபடுகின்றனர்? நடை, உடை, பாவனைகளில், மதத் துறையில், வேஷத்தில் பார்ப்பானை விட இரண்டு மடங்காக அல்லவா இருக்கின்றார்கள்! இந்தப் பார்ப்பனரல்லாதார் வீட்டுக் கலியாணம், கருமாதி, சாந்தி முகூர்த்தம், திவசம், பூசை எல்லாம் பார்ப்பான் இல்லா விட்டால் ஆகாது! உத்தி யோகத்தில், தேர்தலில் மட்டும் பார்ப்பானுடன் போட்டி போட வேண்டும் என்றால் யார் ஒப்புக் கொள்வார்கள்?’’.
பெரியார், கும்பகோணம் சொற்பொழிவு, 26, 27.11.1944, குடியரசு இதழ், 09.12.1944, ஈ.வெ.ரா. சிந்தனைகள் (வே. ஆனைமுத்து தொகுப்பு) பாகம் - 1.
“1917ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டு முடிய 26 ஆண்டுகள் மறைந்தன. காலஞ்சென்ற தலைவர்கள், ஆதியில் “திராவிடர் கட்சி’’ என்ற பெயரைக் கொள்வதில் அபிப்பிராயபேதம் கொண்டிருந்தார்கள். இந்தத் திராவிடர் கழகத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் தேவாங்கர், தங்களைப் பிராமணர்களென்றே கூறிக் கொண்டிருந்தனர். மேலும், ஆந்திர ஜமீன்தார்கள் தங்களை ஆரியர்கள் என்றே கருதி வந்தார்கள். காலஞ்சென்ற உறுதியான தலைவர் பனகல் அரசருக்கே பூணூலும் உச்சிக் குடுமியும் இருந்தன. அவர் பெரிய சமற்கிருதப் பண்டிதர்.
“ஸ்ரீரங்கத்தில் வடமொழியில் வாசித்தளிக்கப்பட்ட வரவேற்புக்கு, வடமொழியிலேயே பனகல் அரசர் பதிலளித்திருக்கிறார். இந்தி எதிர்ப்புக் காலத்தில் ஆரியர் - திராவிடர் பிரச்சினை நம் கட்சியைப் பலமாக ஆக்கிரமித்தபோது, வெங்கடகிரிராஜா அவர்கள் அதற்காகவே கட்சியை விட்டு விலகினார்’’.
-பெரியார், சேலம் செவ்வாய்ப்பேட்ட
ை சொற்பொழிவு, 16.1944, குடிஅரசு 29.01.1944 ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுப்பு 1 - பக்கம் 550.
நீதிக்கட்சித் தலைவர்கள் திராவிடத்தை ஏற்கவில்லை என்று பெரியாரே வேதனைப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக