| திங்., 16 செப்., 2019, முற்பகல் 10:58 | |||
சிங்களவர்/இந்திய வம்சாவளி/ஈழத்-- தமிழர்களும் சாதியமும்!
( # மிகச் # சுருக்கமாக ) 01
இந்திய வம்சாவளித் தமிழர்:
****************************** **
இந்தியாவில் இருந்து தமிழர்கள் தங்கள் வருவாய்/ வாழ்வாதாரம் கருதி மலேசியா/பர்மா போன்ற நாடுகளுக்கு வெள்ளையரோடு இலங்கை சென்றபோதே சாதியும் அவர்களைத் தொற்றிக்கொண்டு அங்கு சென்றது.
தமிழகத்தில் வெள்ளையர் ஆட்சியின்போது ஒடுக்கப்பட்ட தமிழர் உயர்ஜாதியினர்/ஜமீன் கொடுமைக்கு ஆளாகியபோது...
"இலங்கையில் அதிக வருமானம் கிடைக்கும்.அதைக்கொண்டு பணபலத்தோடு மீண்டும் தமிழகம் திரும்பும்போது, ஏற்கனவே தமிழகத்தில் உங்களை பணபலம், சாதிய ஒடுக்குமுறையால் அடக்கிய உயர்ஜாதி ஜமீன்களை எதிர்த்து சவால்விட்டு முன்னுக்கு வரலாம்" என்ற வெள்ளையரின் ஆசை வார்த்தைகளை நம்பி மலையகப்பகுதிக்கு சென்றனர் 80 வீதமான தாழ்த்தப்பட்ட சமூகத் தொழிலாளர்கள்.
இலங்கையில் வாக்குறுதிக்கு மாறாக இந்த தொழிலாளர் வெள்ளையரின் துன்புறுத்தலுக்கு ஆளான போது..
அதே வெள்ளையர்.....
அதே தொழிலாளரை அடக்கி ஒடுக்க. .. அதே தமிழகத்திலிருந்து....
அதே உயர்சாதி தமிழர்களை பெரிய கங்காணிமார்களாக இங்கே வரவழைத்து...
அவர்களை தங்கள் கைக்குள் வைத்து தொழிலாளரை கசக்கிப் பிழிந்தனர்,
என்பது வரலாறு.
சிறு உதாரணமாக...
ஹட்டன், கொட்டியாக்கொலை ஒய்யப்பன் கங்காணி இவர்களில் முக்கியமான அடக்குமுறையாளர்!
அதேவேளை தாழ்த்தப்பட்டவர்களில் இருந்தும் வலுவுள்ளவர்கள் சிலரும் இங்கே பெரிய கங்காணிமார்களாகக் கொண்டுவரப்பட்டனர்.
இது உயர்சாதி கங்காணிமார் தங்களை மிஞ்சினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கவும்,
அதேவேளை இவர்கள் மூலமாக தாழ்த்தப்பட்டவர்களை தங்கள் வலைக்குள் வைத்துக் கொள்வதற்குமான தந்திரோபாயமாகும்.
இதே நேரத்தில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் ஏற்கனவே இருந்ததைவிட அதிகளவில் சாதிப் பிரிவினை/பிரச்சினையை வளர்த்து மதமாற்றத்தையும் செய்து குழப்பியவர்களும் இந்த வெள்ளையரே, என்பதும் குறிப்பிடத்தக்கது.
1824 களில் இந்தியத் தமிழர் இங்கே அழைத்துவரப்பட்டபோதே கொழும்பில் வர்த்தகம் கருதி நிலைகொண்ட நாடார்/
செட்டியார்/பரதவர்(மீன்பிடி/கறை யார்) சமூகத்தவரும் சாதிச் சங்கங்களை ஆரம்பித்திருந்தனர்.
அதேவேளை தாழ்த்தப்பட்ட பள்ளர்,பறையர் சமூகமும், முக்குலத்தோரும், வெள்ளாளரும் மலையகத்திலேயே தொழிலாளர்களாக நிலை கொண்டனர்.
மொட்டை வெள்ளாளர் என்போர் மலையகத்தின் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆனாலும், தமிழகத்தைப்போல இங்கே இவர்களுக்குக்குள் ஜாதிப் பிரச்சினை தலைதூக்கவில்லை.
மேலும் தமிழகத்தில் இருந்தும் பம்பாய்(மும்பை) பகுதியில் இருந்து வந்த போரா/மேமன் பாய் முஸ்லிம்கள் கொழும்பில் பெரும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காலப்போக்கில் மலையகத் தமிழரின் நலனில் அக்கறை செலுத்திய இந்திய நேரு அரசு தமிழர்களை இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக சாதிச் சங்கங்களையும் இந்திய முஸ்லிம் வியாபார சமூகத்தையும் # இலங்கை # இந்திய
# காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்துக
்குள் கொண்டு வந்தது.
பரதவர் சமூகத்தின் ஐ எக்ஸ் பெரேரா,ஜோர்ஜ் ஆர் மோத்தா போன்றோரும், மேமன் சமூக ஜனாப் அசீசும், வள்ளியப்பச் செட்டியாரும் இதில் முக்கியமான சிலராவர். இவர்கள் தோட்டத் தொழிலாளருக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.
காலப்போக்கில் இலங்கை இந்திய காங்கிரஸ் # உருக்குலையச்
# செய்யப்பட்டு
#இலங்கை # தொழிலாளர் #காங்கிரஸ் ஆரம்பமாகியதோடு முக்குலத்தோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டது.
கள்ளர் சமூக தொண்டமான் தலைவராகவும், மறவர் சமூக செல்லச்சாமி செயலாளராகவும், அகம்படியர்(அகமுடையர்)சமூக அண்ணாமலை பொருளாளராகவும் ஆக்கப்பட்டனர்.
பள்ளர் சமூக வெள்ளையன் விலகி தொழிலாளர் தேசிய சங்கம் உருவாக்கினார்.
அசீஸ் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்தார்.
அதேசமயம் செல்லச்சாமி சகல சமூகத்தினரோடும் மென்போக்கைக் கடைப்பிடித்ததால் ஈற்றில் அவர் தொண்டமானால் ஓரங்கட்டப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.
இந்தக் காலத்திலேயே கொழும்பில் பல வியாபாரங்களில் குறிப்பாக நகைத் தொழிலில் வெள்ளாளர் சமூகம் கொடி கட்டிப் பறந்த நிலையில்...
அவர்களில் பெரும்பாலோர் தொண்டமானைக் கண்டுகொள்ளாத நிலையில்...
தொண்டமான் மூலம் அதிகளவான முக்குலத்தோர் செட்டியார் தெருவில் வெள்ளாளருக்கு போட்டியாக இறக்கிவிடப் பட்டனர்.
இதில் குறிப்பிடத்தக்கவர் அம்பிகா ஜூவலர்ஸ் சோலைமலைத் தேவராவார்.
சோலைமலைக்கு சென்னை தியாகராயநகரிலும் நகைக்கடை உண்டு.
கொழும்பில் நிலைகொண்ட வெள்ளாளர் சமூகம் ஏற்கனவே ஆறுநாட்டு வேளாளர் சங்கமும், தனி கல்யாண மண்டபமும் கட்டினர்.
பி பி தேவராஜ் இதனை ஆரம்பித்து வைத்தார். எனினும் கம்யூனிஸ்ட் ஆன தோழர் தேவராஜ் சாதீய உணர்வுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார்.
சமகாலத்தில் மலையகத்தில் இலங்கை திராவிட முன்னேற்றக் கழக தோழர் காலஞ்சென்ற இளஞ்செழியன் தாழ்த்தப்பட்ட மக்களின் சங்கத்தை ஆரம்பித்தார் எனினும் அது தொடரவில்லை.
அரசியலும், சாதிகளும்!
**************************
# மலையகம் /# கொழும்பு:
<><><><><><><><><><><><
அன்று ஆரம்பித்த அந்த சாதீயம்/சாதிய சங்கங்கள் மலையகத்தில் சில காலத்திற்கு முன்பு தீவிரமாகி, பின்னர் இளைஞர்கள் சிலரின் விழிப்புணர்வால் அமுங்கி இன்று மலையகத்திலும் கொழும்பிலும் மீண்டும் கொழுந்துவிட ஆரம்பித்துள்ளதோ? என்ற சந்தேகம் எழும் அதேசமயம்...
கடந்த காலங்களில் சிங்களத் தலைவர்களும் மலையகத் தொழிற்சங்க தலைவர்களையும், மக்களையும் மறைமுகமாக சாதியத்தில் உசுப்பிவிட்டு அரசியல் குளிர் காய்ந்தனர்/ காய்கின்றனர் என்பதும் நிர்வாணமான உண்மையாகும்!
இது ஒருபுறமிருக்க இதுகாலவரை இல்லாதவாறு கொழும்பில் மலையக சமூக மேம்பாடு கருதி செட்டியார் தெரு நகைத் தொழிலில் ஈடுபட்டோரால் # மலையக # கல்வி
# அபிவிருத்திச் # சங்கம் ஆரம்பிக்கப்பட்ட
ு அவர்கள் தொழிலாளர் பிள்ளைகளுக்காக தங்கள் சொந்த செலவில் பாரிய உதவிகளைச் செய்தனர், என்பதும் குறிப்பிடத்தக்க
தாகும்.
இவர்கள் அரசின் பாராட்டைப் பெற்ற அதேசமயம் எக்காரணம் கொண்டும் அரசியலையோ/அரசியல் தலைவர்களையோ எதற்காகவும் நாடவில்லை என்பது பெருமைக்குரிய விசயமாகும்!
மேலும், கடந்த மகிந்த அரசின்போது கொழும்பு மெயின் வீதியின் ஒரு பெரிய துணிக்கடையின் நிறுவனர் மட்டுமே அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரின் செல்வாக்கிற்குள் இழுக்கப்பட்டு பெரும் சொத்து நட்டமடைந்தார்.
எனினும்...
அன்று எழுந்த புலிகளின் பிரச்சினையின்போது அந்த பிரபல அரசியல்வாதி செட்டியார் தெருவில் எவரையுமே கைவைக்க விடாமல் பாதுகாத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மொத்தத்தில் இன்று மலையகத்தில் ஆறு/திகா போட்டி ஏற்பட்டுள்ள நிலையில்.....
அந்த பலப்பரீட்சையில்--- ஆறு,
ரணிலா மகிந்தவா? என்ற நீறுபூத்த நிலையில் இருக்கும் அதேசமயம்.... கொழும்பிலும் தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் முகம் கொடுக்கவேண்டிய சவாலில்.... கொழும்பு முக்குலத்தோர் சங்கத்தையும் தனது செல்வாக்கில் இழுக்க வேண்டிய அவசரத்தில் உள்ளார்.
அதோடு #கொழும்பு # செல்வாக்கு -- பிசினஸ் கில்லாடியான திகாவையும் எதிர்கொள்ளவேண்டும் என்றால் செட்டியார் தெரு/
கொழும்பு முக்குலத்தோரை தனது கட்டுப்பாட்டில் தூக்கி நிறுத்த வேண்டும்.
தவிர,
சமீப காலங்களில் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில்... கொழும்பு செட்டியார் தெருவில்
# கோட்டா # மேனியா ஏற்பட்டுள்ளது.
அவர் # பதவிக்கு # வருவார் /
# வரவேண்டும்.அவர் மூலமே தமக்கு பாதுகாப்பு மற்றும் வியாபாரத்துக்கும் உந்துதல், என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது.
அதுபோக எந்தவொரு இலங்கை அரசியல் தலைவர்களுக்கோ பிற அரசியல்வாதிகளுக்கோ நிதியுதவி அளிப்பதிலும் செட்டியார் தெரு முந்தி நிற்கும்.
இதையெல்லாம் கணக்கு போட்டே சகல கட்சி முக்கிய புள்ளிகளையும் முக்குலத்தோர் சங்கம் அழைத்துள்ளனர்.
எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக--எவர் வந்தாலும் இசைந்து போய் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும், வியாபாரத் தலைமைப் பொறுப்பை தமதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த கலாச்சார மண்டபமே ஒழிய....
முக்குலத்தோருக்கு என்று தனி ஒரு கலாச்சாரம் இருப்பதாக இதுவரை நான் அறிந்ததில்லை.
# குறிப்பு :
அமைச்சர் மனோ கணேசன் இந்த சமூகத்துக்குள் இல்லை என்றாலும்... இப்போது கொழும்பில் எழுந்துள்ள சவாலை சமாளிக்க இந்த இந்தவகை நிகழ்ச்சிகளும் ஆதரவும் கட்டாயம் அவருக்குத் தேவையாகும்.
# தொடரும் -- # நாளை # மட்டும் !
By satchithanthan PalaniSamy
தோட்டத் தொழிலாளர் முக்குலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக