வெள்ளி, 20 ஏப்ரல், 2018

காஞ்சி சங்கராச்சாரி மடம் பொய் வரலாறு 1780 வாக்கில் உருவானதே




aathi tamil <aathi1956@gmail.com>

ஜன. 24





பெறுநர்: எனக்கு








காஞ்சி மடத்தின் உண்மையான சரித்திரம்
வித்யாசங்கர் சுந்தரேசன் ஆகஸ்ட் 3, 1994




இந்த கட்டுரை கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் திரு.வித்யாசங்கர் எழுதி இருந்த கருத்துக்களை மொழி பெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.


This article is a translation of Sree Vidyasankar Sunderesan’s comments based on the references given in the end of the article.




அத்வைத ஞானியான ஆதிசங்கரர் பாரதத்தில் சிருங்கேரி, பூரி, த்வாரகா, பத்ரிநாத் ஆகிய நான்கு பீடங்களை ஏற்படுத்தி வைத்தார். சர்வக்ஞபீடத்தை காஷ்மீரில் ஏற்படுத்தி கேதார்நாத்தில் முக்தியடைந்தார். இதில் எந்த மடமும் பிற மூன்று மடங்களை, அதன் அதிகாரங்களை கோரவில்லை. ஆனால், காஞ்சி மடமோ ஐந்தாவதாக சர்வக்ஞ பீடத்தை காஷ்மீரில் நிறுவவில்லை காஞ்சியிலேயே நிறுவி, காஞ்சியிலேயே முக்தி அடைந்தார் என்று கூறுகிறது. இந்த வாதத்தையே காஞ்சி மடத்தை பின்பற்றுபவர்கள், அதன் நூற்றாண்டு கண்ட மடாதிபதியான சந்திரசேகர சுவாமிகள் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடுக்கும் ஊக்கத்தில் பரப்பி வருகிறார்கள்.


நதிமூலம், ரிஷிமூலம் ஆராயக்கூடாது என்ற பழமொழி ஒன்றுண்டு. ஆனாலும், இந்திய வரலாற்றில் இதனை ஆராய வேண்டியுள்ளது. சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் நல்ல அதிகாரம் மிக்கவராக விளங்கினார். அவரது சீடர்கள் சிலர் அவரை நடமாடும் தெய்வம் என்று போற்றினர். அவரது சீடர்கள் அவரை ரிஷி, தெய்வம் என்று போற்றி வழிபட்டாலும், காஞ்சி மடத்தின் தோற்றம் பற்றிய வெளிப்படையான பேச்சுகள் எதுவும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் காலத்தில் நடைபெறவில்லை. அவரே அந்த மடத்தின் மாற்றப்பட்ட சரித்திரத்தை சிரத்தையுடன் பரப்பி வந்தார். மடத்தின் பெருமையையோ, மடாதிபதியின் பண்புகளையோ குறை சொல்லும் நோக்கில் நான் இதனை ஆராயவில்லை என்றாலும், சரித்திரத்தில் இருக்கும் உண்மையை உணமையாக கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.




1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி மடத்திலிருந்து காணாமல் போனார். நான்கு மாநிலங்களில் அவரை தேடி உளவுத்துறையும் போலீசாரும் அலைந்தனர். காஞ்சி மடத்தின் பக்தர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தார்கள். சாதுர்மாஸ்ய விரத காலத்தில் ஒரு சந்நியாசி தன இருப்பிடத்தி விட்டு வேறெங்கும் போகக்கூடாத சூழ்நிலையில் அவர் காணாமல் போனார். இறுதியில் கர்நாடகத்தில் தலைக்காவேரியில் கண்டுபிடிக்கப்பட்டார். இதனை, இந்தியா ஊடகங்கள் மிகப்பெரிய செய்தியாக வளைத்து வளைத்து எழுதித்தள்ளியது. காஞ்சி மடம் இத்திய முழுவதும் நல்ல ஊடக விளம்பரத்தை பெற்றது. Sept. 13, 1987 issue of The Illustrated Weekly of India வில் திரு.கே.பி.சுனில் அவர்கள் கட்டமிடப்பட்ட ஒரு செய்தியை “வழக்கிடப்படும் பாரம்பரியம்” ("Disputed Lineage”) என்ற தலைப்பில் எழுதி இருந்தார்.


ஆகஸ்ட் 25 தேதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாக த்வாரகா சங்கராச்சார்யார் ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாசிய விரத காலத்தில் பூனாவில் தங்கி இருக்கும் போது, காஞ்சி மடத்தை பற்றிய ஆழமான விசாரணை தேவை என்று வழியுருத்தியதுடன் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சங்கராச்சாரியார் என்று கருத முடியாது, ஏனென்றால் காஞ்சி மடம் ஆதி சங்ராச்சாரியாரால் ஸ்தாபிக்கப்பட்ட மடம் கிடையாது. அது சிருங்கேரி மடத்தின் கிளை மடமே என்று கூறி இருந்தார்.


சர்.சி.பி.ராமசாமி அய்யர் இந்துமத அறநிலைய துறையின் மத்திய ஆணையத்தின் தலைவராக இருக்கும் போது, “காஞ்சி காமகோடி பீடம்” என்ற ஒன்றே இல்லை என்று அறிவித்தார்.எனினும், காஞ்சி மடம் நாட்டின் மிகப்பெரும் மத அமைப்பாக வளர்ந்தது. இதற்கு முழுமூச்சாக இருந்தவர் காஞ்சி பெரியவர், ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதிசுவாமிகள் ஆவார். அவரே கும்பகோணத்தில் அழியும் நிலையில் இருந்த மடத்தை காஞ்சிபுரத்தில் புதுப்பித்து நிறுவினார். சரித்திரத்தில் அறிந்தது என்னவெனில் ஆதிசங்கரர் 32வயதாக இருக்கும் போது பாரதம் முழுவதும் சென்று நான்கு மடங்களை நிறுவினார் என்பது.

இந்த நூற்றாண்டில் தஞ்சாவூர் கும்பகோணம் மடத்தில் அறுவத்தேழாவது மடாதிபதி இருந்ததாக கோருகிறது.அது இருவதாம் நூற்றாண்டின் வேலையே. பரமாச்சார்யார் ஆதிசங்கரர் காஞ்சி பீடத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார் என்பது எல்லாமே ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் எழுதிய கதையே. அவர் மேலும் கூறியது என்னவெனில் ஆதிசங்கரர் இந்த மடத்தை காஞ்சிபுரத்தில் நிறுவி இங்கேயே சமாதியடைந்தார் என்பது. அவர் காஷ்மீரில் சமாதியடையவில்லை என்கிறார். காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோயிலில் அவரது சமாதி இருப்பதாக கூறி ஒரு மண்டபத்தை காட்டுகின்றனர். ஆனால், அது மிகவும் சமீபகமாகவே கட்டப்பட்டது. அதனை சமாதி என்று கூறிய பின் சிறிது காலம் கழித்து தேவியின் கோயிலுக்குள் சமாதி இருக்காது என்று கூறி அதனை சங்கராச்சாரியார் சந்நிதி என்று மாற்றி விட்டதாக கூறுகிறார்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் செய்திகளாக காஞ்சி மடத்தினர் கூறுவது காஞ்சிமடத்தை ஐந்தாவதாக நிறுவி பிற மடங்களை நிர்வகிக்க முற்பட்டார் என்கின்றனர். ஆதிசங்கரரின் பிரதான சிஷ்யராகிய சுரேஷ்வராச்சாரியர் காஞ்சி மடத்திற்கு பொறுப்பாக ஆதிசங்கரால் நியமிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.ஆனால், சிருங்கேரி மடமும் அம்மடத்தின் முதல் மடாதிபதியாக சுரேஸ்வராசார்யர் இருந்தார் என்கிறது. சுரேஸ்வராசார்யரை காஞ்சி மடத்தின் பொறுப்பாக இருந்தார் என்று கூறுவது இவர்களது கட்டுக்கதை ஆகும். காஞ்சிமடத்தையே சங்கராசார்யர் நிறுவவில்லை எனும்போது எங்கிருந்து வந்தது சுரேஷ்வராச்சாரியர் நியமனம். காஞ்சி மடம்தான் சுரேஷ்வராச்சாரியரை கோருகிறதே தவிர சிருங்கேரி மடம் எங்களுடையதே என்று முதலில் கூறவில்லை. சொல்லப்போனால், சிருங்கேரி மடத்தில் மிகபழைய அங்கீகரிக்கப்பட்ட சுரேஷ்வராச்சாரியரின் சமாதி இன்னும் சாரதா தேவி கோயிலில் உள்ளது.
காஞ்சி மடத்தின் கூற்றின்படி காஞ்சிபுரம் மடத்தை பதினெட்டாம் நூற்றாண்டில் உள்ளூர் ராஜாக்களின் எதிர்ப்பால் கும்பகோணத்திற்கு மற்றவேண்டியதாயிற்று என்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின் அருகில் மடத்தை வெறுக்கும் ராஜாக்கள் இருந்தது போலத்தெரியவில்லை.


சுனில் கட்டுரையில் கூறியதாவது, சரித்திர ஆய்வாளர்கள் காஞ்சி மதமானது1821 ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்தின் கிளைமடமாக தஞ்சாவூரின் சரபோஜியால் நிறுவப்பட்டது என்கிறார். பின்பு மைசூருக்கும், தஞ்சாவூருக்கும் சண்டை மூண்டதால் கும்பகோணம் மடம் சிருங்கேரி மடத்திலிருந்து விடுதலை பெற்று தனியாக பீடத்தை நிருவியதாக கூறுகின்றனர். ஆனால், சரபோஜி 1821 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் ராஜாவாக இருக்கவில்லை. அப்போது இருந்தது பிரதாப் சிங் துளஜாஜி. கும்பகோணம் மடத்தின் கட்டிடத்தில் 1821 என்ற தேதி சரியாக உள்ளது. மேலும், மராத்தி ராஜாவுக்கும், மைசூர் உடையாருக்கும் போர் மூண்டதாக எந்த தடயமும் ஆவணங்களும் 1821 இல் கிட்டவில்லை. அந்த சமயம் இருவருமே பிரிட்ஷின் எடுபிடிகளாக மாறி இருந்தனர் என்பதே உண்மை. எனவே இதெல்லாம் ஒரு கற்பனையே என்பதை சொல்லிபுரியவேண்டியதில்லை.


கட்டுரையில் காஞ்சிமடத்திற்கு எதிராக சுனில் கூறும் முக்கியமான உண்மைகள் என்னவெனில்,
1. சிருங்கேரி மடத்தின் கிளை மடம் ஒன்றை 1821 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் தஞ்சாவூர் ராஜாவின் உதவியால் நிறுவினர். அம்மடத்தின் முத்திரை கன்னட மொழியிலிருந்தது. மேலும், சாரதா மடம் என்றே குறிப்பிடப்பட்டது. சிருங்கேரியில் சாரதாதேவி வழிபடப்பட்டதால், அங்கிருந்து வந்ததாலேயே சாரதா மடம் எனப்பட்டது. காநிபுரத்தில் இருந்து வந்திருந்தாள் காமாட்சியை அல்லவே வைத்திருக்க வேண்டும். எனவே கும்பகோணம் மடம், இன்றுள்ளவர்கள் கூறுவது போல் காஞ்சிபுரத்தில் இருந்து வரவில்லை, சிருங்கேரியிலிருந்தே வந்தது என்பது உறுதி.
2. கும்பகோணம் மடம் சிருங்கேரியிலிருந்து விடுதலை பெற்றது என்று கூறுகிறது. மேலும், ஒருபடி சென்று சிருங்கேரி மடத்தின் கிளை மடம் என்பதை மறைத்து இம்மடம் சங்கராச்சார்யராலேயே காஞ்சிபுரத்தில் பிற மடங்களை நிர்வகிக்க நிறுவப்பட்டது என்று கூசாமல் பொய் உரைத்தது. மேலும், ஆதி சங்கரர் சமாதி அடைந்தார் இதுவே சர்வக்ஞ பீடம் என்று கூறுவதையே பாரம்பரியமாக கொள்ள ஆரம்பித்தது. பிரச்சனை என்னவென்றால் ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தை மிகவும் பின் கொண்டு சென்று 477 B.C. என்று நிர்ணயித்து அதிலிருந்து குருபரம்பரையின் பெயர்களை பொத்தாம் பொதுவாக பட்டியலிட்டது.
3. கும்பகோணம் மடம் மீண்டும் காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டதாக அதன் புதுசரித்திரம் கூறுகிறது. 1839ஆம் ஆண்டு கும்பகோனமடாதிபதி காமாக்ஷி கோயிலில் கும்பாபிசேகம் செய்ய இங்கிலீஷ் கலெலக்டரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். 1842 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கும்பினி கவர்மன்டால் காஞ்சிபுரம் காமாக்ஷி கோயிலுக்கு தனி டிரஸ்டியாக நியமிக்கப்பட்டார். இது மிகவும் அழகாக ஆவணமாகியுள்ளது. காமாக்ஷி கோயிலின் உண்மையான குருக்கள் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்து நிறைய புகார் மனுக்களை அளித்துள்ளனர். ஆக, காஞ்சி மடம் என்பது 1842 முதல் இருக்கும் ஒரு மடமாகிறது. தலைமை மடம் கும்பகோணத்திலேயே இருந்திருக்கிறது. அதன் சந்நியாசி மட்டும் அவ்வப்போது காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று வெள்ளைக்காரனால் கொடுக்கப்பட்ட உரிமைகளை செய்து வந்துள்ளார். மடம் உண்மையில் தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் சிலருக்கு மட்டும் வழிகாட்டியாக இருந்து வந்தது. சீக்கிரமாக தனது இருப்பை நிரந்தரமாக்க பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது.
4. திரு.சுனில் அவர்கள் கூறியது போல் இந்த பிரச்சாரம் இருவதாம் நூற்றாண்டில் சிதைந்து போயிருந்த கும்பகோண மடத்திற்கு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றதும் இந்த போலி சரித்திரத்தை பிரச்சாரமாக கொண்டு சென்றார். காஞ்சி மடத்தின் சரித்திரத்தை மாற்றி எழுதினார். அதில் ஒன்றே 477 BC இலிருந்து குரு பரம்பரையை பட்டியலிட்டது. முனனர் இருந்த குருபரம்பரை பற்றிய தகவல்கள் முன்னுக்கு பின் முரணாகவே இருக்கிறது. 1820 ஆம் ஆண்டுக்கு பிறகு இருக்கும் பெயர்கள் மட்டுமே சரியாக இருக்கிறது. 69 ஆவது மடாதிபதியாக கூறப்படும் ஜெயேந்திர சரஸ்வதியே கும்பகோணம் மடம் எனப்படும் காஞ்சி மடத்தின் 6 அல்லது 7 வது மடாதிபதி ஆவார். ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதியும் சரி, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியும் சரி மிகவும் அதிஷ்டசாலிகள்.. தத்துவ ஞானி டாக்டர். T. M. P. மகாதேவன், பாரதி வித்யா பவன் நிர்வாக இயக்குனர் S. ராமகிருஷ்ணன், அருண் ஷோரி, ராம்நாத் கோயங்கா, ஜனாதிபதி வெங்கட்ராமன் போன்ற பெரியமனிதர்களை அவர்களால் கவர முடிந்தது. பெர்லின் சுவர் வீழ்ந்த பொது பாரதி வித்யா பவனின் பத்திரிகையில் ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெர்லின் கல்லுடன் நிற்பது போன்ற புகைப்படம் பதிக்கப்பட்டது. ஸ்ரீ சின்மோய் அவர்களால் கொடுக்கப்பட்ட அந்த கல்லை காஞ்சிபுரம் மடத்தின் விளம்பரத்திற்காக திரு.ராமகிருஷ்ணன் பயன்படுத்திக்கொண்டார். காஞ்சி மடத்தின் விளம்பர ஏஜண்டாகவே செயல்பட்டார்.


இது போல் பல பொய்களை காஞ்சி மடத்திற்கு சம்பந்தப்பட்டதை கூற முடியும். காஞ்சி மடம் இது போன்ற பொய்களை பரப்புவதன் மூலம், அதன் ஆச்சார்யர்களின் பெருமையை புனிதத்தன்மையை இழந்து வருகிறது.

மேலும், பதினைந்தாம் நூற்றாண்டில் கும்பகோண மடத்தின் 53 வது மடாதிபதியாகிய இருந்ததாக கூறப்படும் மகா தேவேந்திர சரஸ்வதி எழுதிய வியாசசாலிய சங்கர விஜயத்தில், எங்கும் காஞ்சி மடத்தை பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், அதனது தமிழ் மொழிபெயர்ப்பில் ஆச்சார்ய கிருஷ்ண சாஸ்திரி நேபால் ராஜா கும்பகோணத்திலிருந்த காஞ்சி மடத்தை தனது ராஜகுருவாக ஏற்றுக்கொண்டு வருடாவருடம் குருதக்ஷினை அளித்து வந்ததாக கூறியுள்ளார். இந்த கூற்றை சந்தேகித்த ஆராய்ச்சியாளர்கள் நேபால் ராஜ குடும்பத்திடம் இது பற்றி வினவினர். அதுபற்றி மே13. 1940 தாங்கள் எப்போதும் இல் நேபால் ராஜ அளித்த பதிலில் காஞ்சி காமகோடி பீடத்தை குருவாக கொண்டது கிடையாது அவர்களுக்கு திரு ஆச்சார்ய கிருஷ்ண சாஸ்திரி கூறுவது போல் எந்த குருதக்ஷனையும் கொடுத்தது கிடையாது என்று பதிலளித்திருக்கிறார். 1821 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மடத்தை, பதினைந்தாம் நூற்றாண்டிலேயே இருந்ததாக கூறுவது முற்றிலும் முரண்பட்டது. அதோடு நில்லாமல், நேபால் ராஜாவுக்கு குருவாக இருந்ததாக கூறும் பொய் வேறு. திரு ஆச்சார்ய கிருஷ்ண சாஸ்திரி கூசாமல் பொய்க்கதையை காஞ்சி மடத்தை தூக்கி பிடிக்க எழுதியிருக்கிறார். இதை யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்று எண்ணம்தான் இதற்கு காரணம்.
காஞ்சி மடத்தின் கூற்றுகள் நமது நாட்டு சரித்திரத்தில் மிகப்பெரிய பித்தலாட்டமாகும். ரோமன் கத்தோலிக்க சர்ச் போல தலைமை கொண்ட ஊர் அமைப்பு இந்தியாவில் எல்லா சங்கர மடங்களையும் நிர்வகிக்கும் ஒரு பொறுப்புடன் ஒரு நிறுவனம் இந்திய சரித்திரத்தில் இல்லை. இது போன்ற ஒரு மைய அமைப்பு என்பது பாரதத்திற்கு அந்நியமானது. அப்படியே இருந்தாலும் நான்கு திசைகளில் இருந்த மடங்களை நிர்வகிக்க மதியமாக பிரயாகை, உஜ்ஜைனி, காசி போன்ற இடங்களில் மடத்தை நிறுவாமல் கடைகோடியில் இருக்கும் காஞ்சியில் அதை நிறுவினர் என்பது புவியியல் ரீதியாக உண்மையானதாக இல்லை. அதனால், காஞ்சி மடம் என்பதே ஒரு கற்பனையான உருவாக்கம். அது மிக அண்மையான ஒன்றே. காவி அணிந்த ஒவ்வொருவரும் சிலரால் கவரப்படுவர். அதுபோலவே சந்திரசேகர சுவாமிகளின் தேஜஸில் பலர் கவரப்பட்டுள்ளனர் மற்றும் முக்கியமான கோயிலான காஞ்சி காமாக்ஷி அம்மன் இவர்களது பொய்களுக்கு வித்தாக அமைந்தது.


இந்தியாவில் தென் இந்திய பிராமணர்கள் வட்டாரத்தில் இந்த போலி, பொய் மடம் பற்றி பேச்சு வந்தால் காஞ்சி மடமும் தர்மத்தை காக்க பலவற்றை செய்து வருகிறது என்று கூறி அந்த பேச்சை மூட்டைகட்டி விடுவார்கள். காஞ்சி மடம் தொடர்ந்து பொய்யை கூறி உண்மையை மறைத்து வருகிறது. இரண்டாவதாக, காஞ்சி மடம் போன்றவைகள் தர்மத்தை காக்க வேலை செய்கையில் அதன் அடிப்படை தர்மமான பொய் பேசக்கூடாது என்பதை அதாவது “சத்யம் வத” என்பதை மறக்ககூடாது. மக்கள் தங்களது குருவை தேர்ந்தெடுக்க உரிமையுடையவர்கள். குரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அவரே சத்யத்திற்கு எதிராக இருப்பின் தர்மமே அந்த இடத்தில் மூடிமறைக்கப்பட்டு விடுகிறது.


எஸ்.வித்யாசங்கர்.

1. The Illustrated Weekly of India, "The Weekly Cover Story" - K. P. Sunil, September 13, 1987.


2 a. The Truth about the Kumbhakonam Math, - Sri R. Krishnaswamy Aiyar and Sri K. R. Venkatraman, Sri Ramakrishna Press, Madurai, 1977.


b. Kanchi Kamakoti Math - a Myth - Sri Varanasi Raj Gopal Sarma, Ganga Tunga Prakashan, Varanasi, 1987. LC Call No.: BL1243.76.C62 K367 1987


http://www.advaita-vedanta.org/avhp/alt_hindu_msg.html





Posted by kumbakonam mutt at 02:39
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: Disputed lineage, fake kanchi mutt, kumbakonam mutt, காஞ்சி மடம், கும்பகோணம் மடம்


1 comment:


PONDHEEPANKAR7 March 2017 at 02:52

https://archive.org/details/KanchiKamakotiMathAMyth
https://archive.org/details/KanchiMathTamilRefutationReply

ஜீவா தமிழ்ப்பற்று கட்டுரை ஜீவானந்தம்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 23
பெறுநர்: எனக்கு

"தமிழ்மொழி மீட்புப் போராளி" ப.சீவானந்தம் நினைவு நாள்

18.1.1963

" கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீய, ஆரிய, கிரேக்க, இலத்தீன், மெக்ஸிக்கன், பெருவியன் மொழிகள் வழக்கொழிந்து போய் விட்டன. அத்துணைத் தொன்மையான தமிழ் மொழி இன்னும் உயிரோடு கன்னித் தமிழாக விளங்குகிறது.

மொழியை முதலாளி மொழியன்றோ, தொழிலாளி மொழியன்றோ  எந்த ஒரு வர்க்கமும் தனி உரிமை கொண்டாட முடியாது. மொழி சமுதாய மக்களின் ஒவ்வொரு துளிக்கும் முழுக்கடலுக்கும் சொந்தம்.

எந்த மொழியும் ஒரு தனி வர்கத்தின் கருவியல்ல.

சமுதாய மக்கள் பரஸ்பரம் சகல விதத்திலும் ஈடுபாடு கொள்வதற்கும், உறவு கொண்டாடுவதற்கும் இன்றியமையாத கருவி மொழி.

புதிய புதிய சமூக அமைப்புகள் தோன்றும் பொழுது, புதிய புதிய உற்பத்தி முறைகளும், ஒட்டுறவுகளும், ஆட்சி அமைப்புகளும், வாணிபப் போக்குகளும், பண்பாட்டு வெளியீடுகளும், இன்னோரென்னவைகளும் தோன்றும். மொழி இவைகளை எல்லாம் பிரதிபலிக்க வேண்டும். மொழி அல்லது சொல்லகராதி சர்வசதா மாறுதலுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற தொழிலும், விவசாயமும், வர்த்தகமும், போக்குவரத்தும், தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் தாங்கள் செயல்படும் பொருட்டுப் புதிய சொற்களாலும், வெளியீடுகளாலும் ஒவ்வொரு மொழியும்  சொல்லகராதியைப் பெருக்கிச் செழிப்படையச் செய்ய வேண்டுமென்று தேவைப்படுகின்றன. தேவைக்குத் தக்கபடி வேர்ச்சொல் தொகுதியைப் பெருக்கவோ சொல்லகராதியை வளப்படுத்தவோ கொஞ்சமும் தயக்கம் காட்டுதல் கூடாது.

இவ்வாறு செய்தால்தான், எந்த மொழியும் சமுதாயத்தின் சகல ஈடுபாடுகளுக்கும், உறவு முறைகளுக்கும் பயன்படும். அவ்வாறு பயன்படாத மொழி அழிந்தொழிந்து போகும்.

அன்றிருந்த தமிழர்கள் அன்றைய நிலைமைக்குத் தக்கபடி சொற்களை உற்பத்தி செய்தனர். அதே போல் இன்றையத் தமிழர்களும்  இன்றைய வளர்ச்சிக்குத் தக்கபடி தமிழில் சொற்களை உற்பத்தி செய்ய முடியும். சிறந்த வேர்ச்சொல் தொகுதியும் அற்புதமான இலக்கண முறையும் கொண்டது நமது தாய்மொழியாம் தமிழ்மொழி.

டாக்டர் நீரா.சீனிவாசன் போன்ற புதிய புதிய எழுத்தாளர்கள் சகல விஞ்ஞான உண்மைகளையும் தமிழில் கூற முடியுமென்று முன் வந்திருக்கிறார்கள். ஒரு சாதாரண யந்திரத் தொழிலாளியிடம் பேசிப்பார்த்தால் அவன் நவீன தொழில் முறை நுட்பங்களைத் தமிழில் அனாயாசமாக வெளியிடுவதைப் பார்க்கலாம். எத்தகையப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் தமிழில் பேசவும் எழுதவும் வல்லார் எண்ணிக்கைத் தமிழர்களிடையில் பெருகி வருகிறது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழியில் மட்டுமல்ல, அண்மையில் வளர்ச்சியடைந்த உக்ரேனியன், பைலோரஷ்யன், எஸ்டோனியன், லாட்வியன், லிதுவேனியன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்ல, மத்திய ஆசிய மொழிகளான உஸ்பெக், காஷக், அர்மேனியன், தாத்தார், அஜர்பைஜான், பாஷ்கீர், டாக்மென் மொழிகளிலும் சகல பொருள்களையும் கற்றுக் கொடுக்கின்றனர்.

"தமிழ் நாட்டில் தேசியக்கல்வி நடைபெற வேண்டுமாயின் அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ்பாசையில் நடத்த வேண்டும்" என்பது பொருள் என்று பாரதி 'தேசியக் கல்வி' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்று பாரதி தமிழ் மக்களை அழைக்கிறார்.

- ப.சீவானந்தம்.

(14.4.1962இல் சீவானந்தம் எழுதியது.)

தமிழ்மொழி குமரி கம்யூனிஸ்ட் பொதுவுடைமை தோழர் 

ஆண்டாள் பாசுரம் காமம் ஆபாசம் பாலியல் வைணவம்


aathi tamil <aathi1956@gmail.com>

ஜன. 20




பெறுநர்: எனக்கு




Jose Thanga Thamilan
19 மணி நேரம் ·



“முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்புணர்வதோர் ஆசையினால் – என்கொங்கை கிளர்ந்து குமைத்துகுதூகலத்து ஆவியை ஆகுலம் செய்யும் அங்குயிலே!''

நாச்சியார் தன்னுடைய காதலனாகிய கண்ணனிடம் கொண்ட காமம் அவள் எண்ணப்படி நிறைவேறாமல் தாம் பட்ட உள்ளுணர்வோடு கூடிய துன்பத்தின் மிகுதியைக் குயிலிடம் கூறுவதாகப் பாட்டடிகள் அமைந்துள்ளன.

“நான் முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றிருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற்றிருந்தேன். கண்ணனாகிய காதலன் வந்து என்னை புணராமையால் இவைகளின் அழகையெல்லாம் இழந்தேன்.
கண்ணனைப் புணர வேண்டுமென்ற ஆசை மிகுதியால் என்னுடைய மார்புகள் மகிழ்ச்சியால் உந்தப் பெற்று, பெருத்து, உணர்ச்சி வசப்பட்டு என்னுடைய உயிரைத் துன்பப்படும்படிச் செய்கின்றது. இவைகளை அழகிய குயிலே கூறுவாயாக!

மேலும் நாச்சியார் பாடுகின்றார்..

கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோராச் சோர்வேனைக்
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு
இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
என்னாகத்து இளங்கொங்கை
விருப்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புங்குதற்கு எனப்
பரிவுடைமை செப்புமினே!

கண்ணனின் பிரிவுக்கு ஆற்றாமல் வருத்தம் மிகுந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது. அக்கண்ணீர் மார்பின் முலைகளில் படிந்து முலைகளின் முனைகள் வழியாகத் துளித்துளியாக வழியும்படி வருத்தம் அடைகின்ற நான் காம நெருப்பால் சுடப்பட்டுத் தென்றலுக்கு ஆட்பட்டு துன்பமடைந்து இங்கிருப்பேன். என் மார்பின் இளைய முலைகளை கண்ணன் விரும்பி நாள்-தோறும் என்னைக் கூடும்படி விருப்பங் கொண்டு நான் இங்கு இருப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.

சாக்கடையைச் சந்தனம் என்பதும், மலக்காட்டை மலர்க்காடு என்பதும் முடை நாற்றத்தை முல்லை மணவாசம் என்பதும் தான் பக்தியும் பார்ப்பனீயமும் அதன் ஒழுக்கமும் போலும்!
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
வெறிந்து என்னழலைத் தீர்வேனே!
என்றும் பாடுகிறார் ஆண்டாள்

*** ஆண்டாள் திருப்பாவை ***

Warning: Contains sexual content!

ஆண்டாள் பாடல் - ஒரு சாம்பிள்.. இந்த பக்தி பாடலை, இங்குள்ள யாராவது தங்களது குடும்பத்தினர் மத்தியில், பிள்ளைகளுக்கு, குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு விளக்கம் சொல்லி கற்றுகொடுக்க முடியுமா என்று நீங்களே படித்து பாருங்கள். இந்த ஒரு பாடல் மட்டும் கிடையாது, ஆண்டாள் பாடிய பெரும்பாலான பாடல்கள் இப்படித்தான் உள்ளன.. சந்தேகமிருந்தால் தேடி படித்துக்கொள்ளுங்கள.

"அவரை பிராயம் தொடங்கி
ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானனுக்கே சங்கற்பித்து கொடுத்தேன் "

சின்ன வயசுல இருந்து வளர்த்து வந்த என் பருத்த முலைகளை கண்ணனுக்கே கொடுத்துடுறேன்.

"பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் கொங்கை கிளர்ந்து
குமைத்து குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்ய
என் அகத்து இளங் கொங்கை
விரும்பித்தம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்க்கு
என்புரிவுடமை செய்யுமினோ "

பாற்கடல் கொண்ட பெருமாளோடு செக்ஸ் வச்சுக்குறதுக்கு ஆண்டாளின் மார்புகள் கிளர்ந்து குதூகலிக்கிறதாம். அவரின் மார்புகள் தினமும் பெருமாளை நினைத்து விரைப்பதால் தினமும் தன்னை புணரச் சொல்றாங்க ஆண்டாள்.

"முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால்"

பெருமாளோடு செக்ஸ் பண்றத நினைச்சு ஆண்டாளின் உதடும் மார்புகளும் துடிக்கிறதாம்.

இவை எல்லாம் கடவுள் கண்ணனை நினைத்து பக்தை ஆண்டாள் பாடுவது திருப்பாவை. இன்னும் நிறைய இருக்கு

அதிலே 19 வது பாடல் ஒன்று உள்ளது. அதை எழுத ரொம்ப சங்கடமாயிருக்கு. அதனால மேட்டர மட்டும் சொல்றேன். வேற ஒண்ணுமில்ல,

அதிலே கண்ணன் தன் மனைவியை புணர்ந்து விட்டு அவள் மார்பில் படுத்து உறங்குகிறாராம். அதை பார்த்து ஆண்டாளுக்கு காம உணர்வு பொங்குகிறதாம்...

இப்பாடல்களை ஆண்டாள் எனும் கற்பனைக் கதாபாத்திரப் பெயரில் பெரியாழ்வாரே எழுதி இருக்க வேண்டும், ராஜாஜியின் கூற்றுப்படி

ஆண்டாள் வைரமுத்து என் பதிவு தீர்ப்பு




aathi tamil <aathi1956@gmail.com>

ஜன. 20



பெறுநர்: எனக்கு



Aathimoola Perumal Prakash
5 நிமிடங்கள் ·



"வயிறு"முத்து ஒரு தி.மு.க அல்லக்கை.

அவன், மேலிட உத்தரவின்பேரில், எவனோவொரு வெளிநாட்டான் ஆண்டாளை (தவறாக) தேவதாசி என்றெழுதிய வரிகளை, வேண்டுமென்றே பயன்படுத்தினான்.

(தமிழ் மற்றும் தமிழரல்லாத) வைணவர் அவனை எதிர்ப்பதில் தவறில்லை.


பிற தமிழர்கள் அந்த இனத்துரோகிக்கு ஆதரவு தரவேண்டிய அவசியமில்லை.



பார்ப்பனர் வைணவம் ஆண்டாள் 

ஜப்பான் தமிழ்மொழி தொடர்பு வேர்ச்சொல் சுசுமு சப்பான் வேளாண்மை


விக்கிபீடியா யாரும் திருத்தம் செய்யலாம் வைரமுத்து பெயர்




aathi tamil <aathi1956@gmail.com>

ஜன. 20





பெறுநர்: எனக்கு









Paul Johnson
10 மணி நேரம் ·



காவிகளின் கயமைத் தனம்

ஒரு கிறிஸ்துவர் எப்படிடா சொல்லலாம், அவர் பேரு விக்டர் ஜேம்ஸ், தெரியுமா..?" என்றான் நண்பன்.

"என்னடா ஒளர்றே...?"ன்னேன்.

"போடா, நம்பலைன்னா நீயே போயி விக்கிப்பீடியாவில் செக் பண்ணிக்க" ன்னு சொன்னான்.

உடனே, கூகுளில் vairamuthu ன்னு போட்டு விக்கி லிங்க் போயி பார்த்தேன். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.

"இல்லைடா, வைரமுத்துன்னு தான் இருக்குது.."ன்னு வாய்ஸ் மெசேஜ் பண்ணினா...
"என்னத்த பார்த்தே இந்தாடா"ன்னு சொல்லி நண்பன் லிங்க் போட்டான்.

https://en.m.wikipedia.org/w/index.php…
அட... இதுவும் விக்கி லிங்க்தான்.

(ஆனால், அதில் 'oldid' என்றுள்ளதை கவனித்தேன்.

எனினும், கிளிக் பண்ணி போயி பார்த்தால்...
//Native name Victor James // ன்னு இருந்தது..!

சிரித்துக்கொண்டே...
மேலே எடிட்டிங் ஹிஸ்டரி பார்க்க, <-Previous revision என்ற லிங்கை கிளிக் செஞ்சி முந்திய பேஜ் போயி பார்த்தேன்.

பெயர் சரியானதுக்கு மாறி இருந்தது.

(விக்கியில் அக்கவுண்ட் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் எதையும் எடிட் செய்திட முடியுமே. சில மாதங்களுக்கு முன்னர் யாரோ ஒரு புல்லுருவி மத்திய அமைச்சரின் விக்கி பக்கத்தில் போயி 'பொறி உருண்டை'ன்னு எடிட் பண்ணுனாங்களே.)

மீண்டும் போயி பார்த்தால்... மீண்டும் மீண்டும் போயிட்டே இருக்கு.

ஜனவரி 9 ம் தேதி வரை அவர் பெயர் வைரமுத்து என்றுதான் இருந்திருக்கிறது.

ஜனவரி 10ம் தேதி முதல் ஆளாளுக்கு வக்கிரத்துடன் வந்து சகட்டுமேனிக்கு வெவ்வேறு பெயர்களை சூட்டி விட்டு சென்றுள்ளனர்.

//sorimuthu//
as edited by 157.50.11.47 (talk) at 17:49, 10 January 2018

//Vairamuthu or DyeMadu//
as edited by 182.65.169.177 (talk) at 05:39, 11 January 2018

//Vairamuthu (Victor)//
as edited by 157.50.12.75 (talk) at 15:04, 11 January 2018

//Native name Victor//
as edited by Vignesh 1992 (talk | contribs) at 15:07, 11 January 2018

//Native name Victor James//
as edited by 49.207.184.187 (talk) at 16:18, 11 January 2018

//kanja poet Vairamuthu//
as edited by 2405:204:7280:1e6:d055:a9fa:7cca:97e8 (talk) at 16:58, 11 January 2018

//Native name victor James//
as edited by 117.217.213.103 (talk) at 06:04, 12 January 2018

//Native name Victor James//
as edited by 217.70.211.10 (talk) at 07:56, 12 January 2018

இப்படி ' Newer revision' அழுத்தத்தினாலும்...
//jesus saves Victor James Mairumattum//
as edited by Lakshmija (talk | contribs) at 09:11, 12 January 2018

என்று... தொடர்ந்து போய்க்கொண்டே உள்ளது.

இறுதியாக 'current revision' அழுத்தினால் நான் முதலில் கூகுளில் தேடி எடுத்தஎடுத்த பேஜ் ஓபன் ஆகிறது.

மேலுள்ளவர்கள் ஒவ்வொருமுறை தவறான பெயரை எழுதுவதும் வேறொருவர் வந்து சரியான பெயருக்கு திருத்துவதும், இன்னொருவர் மீண்டும் புதுப்பெயர் வைப்பதும்...
கடுப்பானவர்கள் என்ன செய்து விட்டனர் என்றால், இந்த பக்கத்தை ஓல்ட் ஐடி என்று ஸ்கிராப் பண்ணிட்டு வேறொரு புதிய பக்கம் போட்டுவிட்டனர்.

அதுதான் கூகுளில் தேடினால் கிடைக்கிறது..

https://en.wikipedia.org/wiki/Vairamuthu

உங்களுக்கும் இதுதான் கிடைக்கும்கிடைக்கும்.

ஆக, காவிகயவர்களின் திருட்டு வேலை செய்த லிங்க் 12ம் தேதி முதல் வழக்கொழிந்த லிங்க். அதுதான் மேலே நண்பன் தந்த லிங்க்.

"இதை எங்கிருந்துடா எடுத்தே?" என்றேன்.
"#எஸ்விசேகர் வீடியோ பேஸ்புக் போஸ்ட்டில் இருந்து"ன்னான்.

ஆக, இவர்களே பெயரை திருத்தி விட்டு,
அதையே ஆதாரமாகவும் காண்பிக்கிறார்கள்.
பேட்டியும் அளிக்கிறார்கள்.

ச்சே.
அப்படின்னா,
மத்திய அமைச்சர் பெயரையும் அதேபோல விக்கிப்பீடியாவை நம்பி ஆதாரமாக ஏற்றுக்கொள்வார்களா..?

#ப்ளடிஃப்ராட்ஸ்.
அநியாயமாய் ஒரு மதக்கலவரத்தை உண்டு பண்ணுகிறார்கள்

மீத்தேன் சாகர்மாலா நூல் மண்ணழிப்பு விரிவான புத்தகம் ஹைட்ரோகார்பன் TRI




aathi tamil <aathi1956@gmail.com>

ஜன. 20





பெறுநர்: எனக்கு









Rathish Kumaran, Ingersol Selvaraj மற்றும் 44 பேருடன்இருக்கிறார்.
13 மணி நேரம் ·



BIMSTEC பேரழிவில் தமிழர் தாயகங்கள் - நூல்
******************************************************

ஒவ்வொரு வருடமும் புத்தக விழாவில் பல நூல்களை நாம் தேடி செல்வோம். பெரும்பாலும் அது வரலாறு அல்லது சித்தாந்த புரிதலை நோக்கிய தேடலாக இருக்கும். இந்த வருட புத்தக விழாவில் நாம் அனைவரும் தேட வேண்டிய முக்கிய நூல்


“பிம்ஸ்டேக் - பேரழிவில் தமிழர் தாயகங்கள்” - - நூல் | அரங்கு என் : (சிறப்பு அரங்கம் B)

இந்த நூல் நிகழ்கால அரசியல் மற்றும் எதிர்கால பாதிப்புகளை ஆதாரங்களுடன் பேசும் ஒரு முக்கிய நூல். இந்த நூல் "தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்" சிறப்பு அரங்கம் B (அரங்கு 42 - 43க்கு எதிரில்) விற்பனைக்கு இருக்கிறது. இந்த நூலின் ஆசிரியர் தமிழ் தேசிய பேரியக்கத்தின் க. அருணபாரதி. இந்த நூலில் பல முக்கிய தகவல்களை சரியாக (sequence) கோர்த்து தந்திருக்கிறார்.

தமிழர் தாயகங்கள் எப்படி அழிவை சந்திக்கும், அதற்கான இந்திய ஒன்றியத்தின் திட்டங்கள், நகர்வுகள் என்னென்ன, இந்த திட்டங்களால் தமிழகத்தில் என்னென்ன பாதிப்புகள் நடக்கயிருக்கின்றன என பல தகவல்களை திரட்டி தந்திருக்கிறார். BIMSTEC கூட்டமைப்பு, சாகர்மாலா, பெட்ரோ கெமிக்கல் மண்டலம், தமிழக வளங்கள் கொள்ளை, தமிழகத்தை ராணுவமயமாக்கும் திட்டம் என தமிழகத்தின் மீதான பல முனை தாக்குதலை பற்றிய ஆதாரங்களுடனும் தரவுகளுடனும் நேர்த்தியாக படைத்திருக்கிறார்.

பொதுவாக நாம் அனைவரும் பல வேலைகளை முன்னெடுக்கும் பொழுது அனைத்தையும் தெரிந்து கொள்வது கடினம், தமிழர்கள் ஒவ்வொருவரும் சில தகவல்களை திரட்டி நமக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் பல தேடல்கள், வாசிப்புகள், அரசியல் கவனிப்புகளில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த புத்தகத்தை கண்டிப்பாக நாம் அனைவரும் ஒரு முறை படித்தால் நாம் என்ன சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்பதை விளங்கி கொள்ளலாம். பிரச்சனை புரியாமல் போராடினால் எதிரி எளிதில் வீழ்த்திவிடுவான். நமது எதிர்கால பிரச்சனையையை அரசியல் நகர்வுகள், திட்டங்கள் மூலம் நாம் புரிந்து கொண்டால் தான் எதிரிக்கு இணையாக போராடி நம்மை காப்பாற்றி வருங்கால சந்ததிக்கு ஒரு இடத்தை நம்மால் உறுதி செய்து கொள்ள முடியும்

பொருட்செலவு என்பதை விட மிகுந்த நேரத்தை செலவிட்டு இந்த புத்தகத்தை சகோதிரர் க.அருணபாரதி கொண்டுவந்திருக்கிறார். முயற்சிக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டு இனம், மொழி, சாதி கடந்து இந்த புத்தகத்தை வாங்கி நாம் படித்தாக வேண்டும். குறைந்தபட்சம் எதற்காக நாம் சண்டை போடுகிறோம் என்றாவது தெரிந்துகொள்ள வேண்டாமா ?