திங்கள், 27 மார்ச், 2017

தனக்கு விரும்பாததை பிறருக்கு செய்யாதே குறள்கண்பூசியஸ் கன்பூசியஸ்

aathi tamil aathi1956@gmail.com

23/3/16
பெறுநர்: எனக்கு
இறுதியில் ஞானி ஒருவரிடம் சென்று கேட்டான். அவர் ‘‘நீ கால் மாற்றும் வரை
காத்திருக்க வேண்டாம். நீ காலைத் தூக்கும் நேரத்தில் சொல்லிவிட
முடியும்” என்றார்.
அவன் வியப்புடன், ‘‘சொல்லுங்கள்’’ என்றான்.
‘‘உனக்கு எது வெறுப்பானதோ, அதை நீ உன் சக மனிதருக்குச் செய்யாதே’’
(தால்முத் சப்பாத் 3/ஏ) என்றார் அந்த ஞானி.
‘‘இவ்வளவுதானா? வண்டி வண்டியாய் எழுதப்பட்டிருக்கிறதே. அவையெல்லாம்
என்ன?’’ என்று அவன் கேட்டான்.
‘‘நான் சொன்னதுதான் வேதத்தின் சாரம். மற்றவையெல்லாம் அதன்
விளக்கவுரைகள்’’ என்றார் அந்த ஞானி.
இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென் றால் அந்த ஞானி சொன்னது யூத
மதத்தின் சாரம் மட்டுமல்ல; எல்லா மதங்களின் சாரமும் அதுதான்.
இந்த வாசகம் இடம்பெறாத சமய நூல்களே இல்லை. அதில் சொல் வேறுபாடு
இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்து ஒன்றே.
தாவோயிஸத்தின் தாய் ஷாங்கான் இங்பியன் கூறுகிறது:
‘உன் அண்டை வீட்டானின் லாபத்தை உன் லாபமாக நினை.
அவனுடைய நஷ்டத்தை உன் நஷ்டமாக நினை’.
கன்ஃபுஷிய மத நூலான அனபெட்ஸ் (15.33) கூறுகிறது:
‘பிறர் உனக்குச் செய்யக்கூடாது என்று நினைப்பவற்றை நீ பிறருக்குச் செய்யாதே’.
ஹிந்து மத தர்மங்களையெல்லாம் தொகுத்துத் தரும் மஹாபாரதம் (5.1317) கூறுகிறது:
‘பிறர் உனக்கு எதைச் செய்தால் வேதனை என்று நினைக்கிறாயோ, அதை நீ
பிறருக்குச் செய்யாதே’.
புத்த மதத்தின் ‘உடன் ஸ்வர்க்’ (5.18) கூறுகிறது:
‘எது உன்னைப் புண்படுத்தும் என்று நினைக் கிறாயோ, அதை நீ பிறருக்குச் செய்யாதே’.
கிறித்துவ மத நூலான புதிய ஏற்பாட்டில் (மத்தேயு 7.12) இயேசு பெருமான் கூறுகிறார்:
மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறார்களோ, அவை களை நீங்களும்
அவர் களுக்குச் செய்யுங்கள்’.
இஸ்லாமியச் சமய நூலான ஹதீஸில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) கூறுகிறார்:
‘உங்களில் எவரும் தாம் விரும்புவதைத் தமது சகோ தரனுக்கும் விரும்பாதவரை
அவர் இறை நம்பிக்கையாள ராக மாட்டார்’.
திருவள்ளுவர் (குறள் 326) கூறுகிறார்:
‘இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.’
மதவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர், தத்தம் மத நூல்களில் கூறப்
பட்டிருக்கும் இந்த ஓர் அறத்தை மட்டும் கடைப்பிடித்திருந்தால் உலகில்
போரும் பூசலும் ஏற்பட்டிருக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக