செவ்வாய், 21 மார்ச், 2017

ஆய் ஆயக்கர் வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

20/9/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam என்பவர்
Yuvaraj Amirthapandian மற்றும் Arul Raja M ஆகியோருடன்.
'ஆயக்கர் பவன்', இந்தச் சொல்லைப் பார்த்துவிட்டு நண்பரொருவர் வேதனையுடன்
'இப்படி நம் தமிழ்நாட்டில்கூடத் தமிழ் மெல்ல வழக்கழிந்து போகிறதே' என்று
என்னிடம் கூறினார். சிரித்தேன் நான். ஏனென்று கேட்டார்.
"வடக்கேயும் இதே பெயர்தானல்லவா?" என்றேன். நாவலந்தீவு முழுக்கச்
சுற்றியுள்ள அவர் ஆம் என்றார். மீண்டும் சிரித்துவிட்டுக் கூறினேன்,
"அட, செந்தமிழ் நாவலந்தீவு முழுக்க ஆள்கிறதே! பின் எதற்கையா
கலங்குகிறீர்?" என்றேன். புரியாமல்விழித்தவர், விளக்கம் கோரினார்.
அளித்தேன். முகமலர்ச்சியுடன் நன்றி கூறிவிட்டுப் போனார் நண்பர்.
அவ்விளக்கத்தை இங்கே பதியவேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால் பல்வேறு
பணிகளால் இதனைப்பற்றி மறந்தே போயிருந்தேன். நேற்று மீண்டும் நண்பர்
யுவராசுவிடம் வேறு ஒரு தகவல் குறித்து உரையாடிக் கொண்டிருக்கையில்
அவரளித்த இணைப்பில் இச்சொல்லைப் பிறிதொரு வந்தேறிமொழி அடிவருடிக் கூட்டம்
பயன்படுத்திக் 'கர்' என்பதற்கான விளக்கத்தை இதனோடு சேர்த்துத் தவறாகப்
பதிவிட்டிருந்ததனைக் காண நேர்ந்தது. அப்பொழுது 'கர்' என்பதற்கான தமிழ்
வேர்ச்சொல் விளக்கத்தை அளிப்பதாகக் கூறினேன். ஆனால் அதற்குமுன் இந்த
'ஆயக்கர்' பற்றிக் கூறினால் பின்னதைப் பின்னர் விலக்கிக்கொள்ளலாம் என்று
தற்பொழுது 'ஆயக்கர்' குறித்து விளக்கத் துணிந்தேன்.
முதலில் இந்த 'ஆய்' எனும் சொல்லைப் பார்ப்போம். ஆய் என்பதற்குப் பல்வேறு
பொருளிருந்தாலும், தற்பொழுது நம் கருவோடு தொடர்புடைய பொருளைமட்டும்
காணலாம். ஆராய்தல், தேடுதல் எனும் பொருளோடு, பிரித்தெடுத்தல்,
திரட்டுதல், சேர்த்தல் (To separate, sift, collect) என்னும் பொருளையும்,
அளவு, முறை (Measure, order) என்றும், ஒழுங்கு, கட்டளை (Orderliness,
command) என்னும் பொருளையும் கொண்டுள்ளது. (ஆய் + தரு என்பது ஆய்தரு,
ஆய்தர், ஆடர் - Order என்றும் ஆகியிருத்தல் கண்கூடு). ஆக, இன்னாருக்கு
இன்னின்ன வரி இடவேண்டும் என்று நன்கு ஆய்ந்து அளந்து வரியிட்டு, அதனை ஒரு
கட்டளையின்மூலம் திரட்டி வகைப்படுத்திப் பிரித்துச் சேர்க்கவேண்டிய அரசு
நிதியத்தில் சேற்பதல்லவா இந்த 'ஆயக்கர் பவனின்' பணியாகிறது? இதன்
தொடர்பாகத்தானே ஆயக்கட்டு, ஆயக்கட்டு மானியம், ஆயக்கம் (மொத்தவெண் -
Total number) எனும் சொற்களும் உள்ளன? அட! அக்காலத்தில் வரிதிரட்டுபவனை
'ஆயக்காரன்' (ஆயம் + காரன்) என்றல்லவா அழைத்துள்ளனர்!
கவனிக்க: ஆயக்காரி என்றொரு சொல் உண்டு, இது விலைமகள், பொதுமகள் (Whore)
என்னும் பொருளைக் கொண்டதாகும்!
தனக்கென நாடில்லாமல் ஆடுமாடு மேய்த்து நாவலந்தீவினுள் நுழைந்து
வஞ்சகத்தால் நம்மை இன்னும் தெற்கே விரட்டி, நம்மிடமிருந்து திருடிய, நாம்
போற்றிய ஐந்நிலத் தலைவர்களைத் திரித்து மாற்றி அதனை நமக்கே பற்பல புராணப்
புனைவோடு இறைவராய்த் திருப்பியளித்து, மன்னர்களை மயக்கிக் கோயில்
கட்டுவித்து அதனையும் நம்மிடமிருந்து பிடுங்கிப் பேயாடிய ஆரியப்
பேயர்களின் முகத்திரையை இனியும் விடாது கிழித்து, உலகோற்கும்
தாய்மொழியாம் நம் இன்மொழியின் பெருமையை மீண்டும் இவ்வுலகோரறியச் செய்வோம்
வாரீர்!!!
# எல்லாமே_தமிழ்தாண்டா
# அதுதாண்டா_தமிழ்
# அதுகூடத்_தமிழ்தாண்டா
நேற்று, 10:37 AM · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக