செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழ் எழுத்து காட்டுமிராண்டி ஈவேரா

aathi tamil aathi1956@gmail.com

20/9/16
பெறுநர்: எனக்கு
தமது பரப்புரையில் பெரியாரும், ”தமிழ் மொழிக்கு ஆங்கில எழுத்துகளை
எடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டிக்கால எழுத்துகளை தள்ளிவிடு என்றேன்.
இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டைசெய்யவே இல்லை”
(தமிழும் தமிழரும்)
Palani Deepan
தமிழும் தமி்ழ் எழுத்துகளும்.
சில திங்களுக்கு முன்பு எழுத்துக் கோமாளி ஜெயமோகன், ” தமிழ் எழுத்துகளை
தவிர்த்துவிட்டு. அதற்குப்பதிலாக தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுதலாம்” என
ஒரு கட்டுரையை தி இந்து தமிழ் நாளேட்டில் எழுதியிருந்தார்.
தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமது பரப்புரையில் பெரியாரும், ”தமிழ் மொழிக்கு ஆங்கில எழுத்துகளை
எடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டிக்கால எழுத்துகளை தள்ளிவிடு என்றேன்.
இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டைசெய்யவே இல்லை”
(தமிழும் தமிழரும்)
தமிழன் எப்படி சட்டைசெய்வான்...?
”தமிழ்” என்கிற ஒற்றைச்சொல்லை எழுத ஆங்கில எழுத்துகளால் முடியுமா? ஏன்
உலக மொழியில் எந்த மொழியிலும் எழுத முடியாதே...?
ஆம். தமிழின் ”ழ” கரம் தமிழ் மொழிக்கே உள்ள சிறப்பெழுத்து. உலகின் எந்த
மொழிகளிலும் இந்த ழ கரம் இல்லை.
தமிழன் எவ்வளவு விழிப்பாய் தமது தாய் மொழிக்கு, உலகின் எந்த
எழுத்துகளாலும் எழுத முடியாத பெயரொன்றை வைத்துள்ளான் பாருங்கள்...!
மற்றொன்று தமிழின் மிகச் சிறப்பான அழகு, யாழ், பழகு, பழநி, விழி போன்ற பல
மிளிரும் சொற்கள் ”ழ” கரத்தை கொண்டு விளங்குவன.
அவ்வளவு ஏன் ”மொழி” தமிழ் மொழியில்கூட பிற கலப்பு எழுத்து
ஏற்பட்டுவிடக்கூடாது என்றே ”மொழி” என்று ”ழ” கரத்தை வைத்து மொழிந்தான்.
அவன்தான் தமிழன்...!
அவன்மொழிதான் தமிழ் மொழி...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக