புதன், 22 மார்ச், 2017

அங்கோர்வாட் தாய்லாந்து தமிழ் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

6/5/16
பெறுநர்: எனக்கு
Yuvaraj Amirthapandian
அங்கோர் வாட் (நகர வாட்டம்):
இப்பெயர் ஒரு நவீன காலப் பெயராகும். இதன் மூலப் பெயர்கள் சங்கதத்தைக்
குறிக்கின்றனவாம். நோகோர் என்ற கிமர் சொல் நகர என்ற சங்கதப்
பெயரிலிருந்து வந்ததாம். வாட் என்ற கிமர் சொல் சங்கதத்தின் வாட்ட என்ற
மூலத்திலிருந்து வந்ததாம். நகரம் என்று முழு விகுதி பெறும் சொல் தமிழில்
தான் உள்ளது. பின்பே சங்கதத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஏனென்றால்
சங்கதம் ஒரு வழிபாட்டு (Liturgical Language) மொழியே. மக்கள் பேசிய
மொழியல்ல. வாட்ட என்ற சொல் தமிழின் வாட்டம் என்பதிலிருந்து சென்றிருக்க
வேண்டும். அப்படியென்றால் "நகர வாட்டம்" என்ற தமிழ்ச் சொல்லே "அங்கோர்
வாட்" என்றாகியிருக்க வேண்டும். இதன் பொருள் கோயில் நகரம் (அ)
கோயில்களின் நகரம் என்பதே. கோட்டம், கோட்டை என்று முடியும் பெயர்கள்
தமிழகத்திலும் வடஇந்தியாவிலும் இன்றுமுள்ளனவல்லவா...!?
அங்கோர்வாட் கோயிலும் அதற்கு முன் கட்டப்பட்டு அடர்காடுகளுக்கு
ள் சிதைந்து போன பல நூற்றுக்கணக்கான கம்போடிய கோயில்களும் அதற்கும்
முந்தைய வழக்கொழிந்த சிவ வழிபாட்டு முறைகளும் சிவன் கோயில்கள்
அனைத்திற்கும் மூலாதாரமாக இருந்தது கூலன் (அ) கூளன் (Phnom Kulen) என்ற
மலை தான். இதன் பொருள் "விளச்சிகளின் மலை (Mountain of Lychees)"
இப்பெயர் முற்றிலும் தமிழ்த் தாக்கத்தோடு தானே உள்ளது. அங்கிருந்து தான்
இரண்டாம் சூரியவர்மனின் அங்கொர்வாட் கோயிலுக்குத் தேவையான மணற்பாறைகளும்
வெட்டியெடுக்கப்பட்டன. முதல் கிமர் பேரரசு தோன்றியதும் இங்கிருந்து தான்
என்று சொல்வர். இரண்டாம் ஜெயவர்மன் ஜாவாவிலிருந்து தன்னை
விடுவித்துக்கொண்டு தனிப் பேரரசன் ஆனான்.
இந்த கூலன் மலைத்தொடர்களில் தான் "ஆயிரம் சிவலிங்கங்களின் பள்ளத்தாக்கு"
என்ற பெயர் பெற்ற தொல்லியல் இடமுள்ளது. மணற்பாறைகளாலான ஆற்றோடைகளில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவலிங்கத் திருமேனிகள் ஆற்றோடைப் பாறைகளில்
செதுக்கப்பட்டுள்ளன. மேலிருந்து பார்க்கும் போது நீரோட்டத்தினடிய
ில் மிக அருமையாக அவைகள் தெரியும். கி.பி.9-ஆம் நூற்றாண்டுகளில் இவைகள்
செதுக்கப்பட்டுள்ளன.
வருமன் (அ) வர்மன் என்பது சேரர்களும் பல்லவர்களும் கொண்டப் பெயரே.
(பல்லவர்கள் தமிழர்கள் தானா என்பது கேள்விக்குரியதே) சேர நாட்டில்
பின்னாட்களில் கலந்த வடக்கிலிருந்து வந்த நம்பூதிரி நாயர்கள் தான் அதனை
பின்னாட்களில் வர்மன் என்பதை மாற்றி தங்களை வர்மா என்றழைத்துக்கொண்டனர்.
இதே வர்மன் பெயர் தான் காம்போஜ அரசர்களும் கொண்டிருந்தனர். அவர்களின்
மூலம் தமிழகத்திலிருந்
து தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.
மேலும் மூன்றாம் ராஜெந்திரனோடு முடிந்த சோழ வம்சம் பின்பு என்னவானது
என்று இதுகாறும் யாரும் அறியவில்லை. மூன்றாம் இராஜேந்திரன் திறமையோடு
ஆண்டான். ஆனால் முந்தைய சோழ மன்னர்களின் பால் ஏற்பட்ட சோழ வம்ச சரிவை
அவனால் தடுத்தாள முடியவில்லை. பாண்டியர்கள் தலையெடுத்து வென்றனர்.
மூன்றாம் இராஜேந்திரன் அப்போரில் கொல்லப்படவில்லை. அவன் தப்பித்து
சென்றதாக கூறுகின்றனர். அவனே தென்கீழையாசிய நாடுகளுக்கு சென்றான், அங்கு
பிற்கால கிமர் ஆட்சியை உருவாக்கினான் என்றும் சொல்கின்றனர். இதுவும்
புதினங்களாகத் தான் உள்ளன. தமிழில் கூட ஆயிரத்திலோருவன் என்றொரு
திரைப்படம் 2009-ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் உள்ளார்ந்த கதை மேற்சொன்ன
சோழ வம்சம் தொடர்புடையதாகவே இருக்கும். ஆனால், சித்தரிக்கப்பட்ட விதம்
கேலிக்குரியது.
தமிழக வணிகர்கள் தான் கடல் கடந்த அரச-சமய-சமூகக் கலாச்சாரத்திற்கும்
காரணமாயிருந்துள்ளனர். குறிப்பிட்ட பருவத்தில் ஏற்படும்
கடற்பருவக்காற்றும், கடல் நீரோட்டமும் தான் இந்தியப் பகுதியிலிருந்து
வணிகர்கள் காம்போஜம் சென்று வணிகம் செய்ய காரணமாயிருந்துள்ளனர். எந்தப்
பருவம் என்று சூழலியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் தெளிவு பெறலாம்.
அங்கோர்வாட் கோயில் முழுவதும் ஒரு நீரியல் மேலாண்மைக்கான ஆகச்சிறந்த
முதன்மைக் கட்டுமானம். அதன் வடிவமைப்பு அப்பேர்பட்டது. தனியாக அதனைப்
பற்றி எழுதவேண்டும். மேலும் ஆசுத்திரேலிய தொல்லியலாளர்கள் கண்டறிந்தது,
எதனால் திடீரென்று இந்த கிமர் நாகரீகம் காணாமற் போனது என்பது வியப்பானது.
ஆற்று நீர்ப் பாசனத்தை மட்டுமே நம்பியிருந்த கிமர் நாகரீகத்தின்
மையப்படுத்திய வேளாண்மையும் மையத்தில் அப்போதைய காலக்கட்டத்தில் உலகின்
மாபெரும் நகரமாயிறந்த அங்கோர்வாட்டும் திசை மாறிய ஆற்று நீரால்
முழுவதுமாக வழக்கொழிந்து விட்டது. அதற்கு மேல் அங்கு வாழயியலாது
என்றறிந்த மக்கள் அதனை தனித்துவிட்டு செல்லலாயினர். அவ்வாறு திசை மாறிய
ஆற்று நீர் வழித்தடங்களை தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அப்போது ஓடிய
ஓர் ஆற்றோடையில் கட்டிய ஒரு சிறு பாலம் தற்போது நீரின்றி தூர்ந்து
போயுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். தற்போது இதனருகில் பல அடிகள் கீழே
தற்போதைய ஆறு ஓடுகிறது.
# அங்கோர்வாட் # AngkorWat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக