புதன், 22 மார்ச், 2017

அயோத்திதாசர் அயோத்தி பறையர்

aathi tamil aathi1956@gmail.com

5/5/16
பெறுநர்: எனக்கு
பறையர் சமூகம் இன்று அனுபவிக்கும்  கல்வி , பிரதிநிதித்துவ உரிமை,
இத்யாதி இத்யாதி போன்ற அனைத்துக்கும் வித்திட்டவர்,

" அறிவுக் குடி"
 ஆசான் ஐய்யன் அயோத்திதாச பண்டிதர்



பறையர்களின் வரலாற்றை மீட்டுத் தந்தவர்,



பறையர்களே தமிழ் அந்தண(ஐய்ய)ர்கள்
என்று சான்றுகளுடன் நிறுவியர்,


தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் தங்கையை திருமணம் செய்தவர் ...



திருவள்ளுவபறையரால் எழுதப்பட்டு இன்று உலகமே போற்றும் பொதுமறையான
"திரிக்குறள்" எனப்படும் "திருக்குறளை"



மனித சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் அளித்த குடும்பத்தை சேர்ந்தவரே
பண்டிதர்..


ஓலைச்சுவடியில் பல தலைமுறைகளாக பாதுகாத்து வந்த திருக்குறளை

 வெள்ளையரான "எல்லீஸ் துரை" அவர்களின் மூலம்  அச்சிட்டு


திருக்குறளை  மனித சமூகத்திற்கு கொடையாக அளித்தவர் கந்தப்பன் பட்லர்
எனும் அயோத்தி தாசரின் பாட்டனார்..





அம்பேத்கரால் தான் பறையர் சமூகம் பல உரிமைகளை இன்று அனுபவிக்கின்றார்கள்
என்கிற ஒரு பொய் பிரச்சாரம் இங்கே தொடர்ந்து நடக்கின்றது...



அம்பேத்கருக்கு  முன்பே அதாவது  அம்பேட்கர் சிறுவனாக பள்ளியில் படித்துக்
கொண்டு  இருந்த போதே


பண்டிதரின் முயற்சியால் பறையர்கள் கல்வி,கல்விக் கூடம், வேலைவாய்ப்பு ,
பிரதிநிதித்துவ உரிமை என்று இன்னும் பல விடையங்களை பண்டிதரின் உழைப்பால்
அடைந்து விட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது...





பிற்காலத்தில் காமராசரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத் திட்டம் எனப்படும்
இன்றைய சத்துணவுத் திட்டத்தை


அன்றைய காலகட்டத்திலே
"ஹென்றி ஆல்காட்" அவர்களுடன் இனைந்து  நடை முறைப் படுத்தியவர்  பண்டிதர் அவர்கள்...

அனைவரும் இந்தியனாக இருந்த போது .. " தமிழன்" என்கிற அடையாளத்தை முன்னிறுத்தியவர்,



முதன் முதலாக " தமிழன்" என்கிற அடையாளத்தை பொதுவெளிக்கு கொண்டு வந்தவர்...



பறையர்களை பழந்தமிழர்கள்,தொல் தமிழர்கள், ஆதி தமிழர்கள், என்று பதிவிட
வேண்டுமென்று குரல் கொடுத்தவர்..


இன்னும் நிறைய உள்ளது ...

பண்டிதரை பற்றி சொல்ல பக்கங்கள் போதாது




முக்கியமான சில விசயங்களை மட்டும் அதுவும் மிகவும் சுருக்கமாக இங்கே
தந்துள்ளேன் ...



அவரது நினைவு நாளான ( மே 5 ) இன்று

 அன்னாரை நினைவு கூர்ந்து அவர் காட்டிய "அறம், அறிவு,அன்பு" என்கிற திசையில்

 தமிழர்களாகிய நாம் பயணிக்க சபதமேற்போம்



குறிப்பு : பண்டிதர் எழுதிய நூற்கள் அரசுடைமையாக்கப்பட்டு குறைந்த
விலைக்கு கிடைக்கின்றது.


இணையத்திலும் பண்டிதரின் நூற்கள்  pdf  வடிவில் கிடைக்கின்றது

http://thamizhagam.net/nationalized%20books/Pndithar%20K%20Ayodhi%20Dasap%20Pandithar.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக