திங்கள், 20 மார்ச், 2017

ஆயுதபூஜை தமிழ் பண்டிகை ஆயுதபூசை சரஸ்வதிபூசை

aathi tamil aathi1956@gmail.com

11/10/16
பெறுநர்: எனக்கு
Palani Deepan
ஆயுத பூசை.
தீபாவளியின் உண்மை வரலாற்றை வெளிக் கொணர்ந்தது போல, இந்த ஆயுத பூசையின்
உண்மைத் தன்மையையும் வரலாற்று பூர்வமாக வெளிக்கொணர வேண்டும் என்று கோவை
பாலு கேட்டுக்கொண்டார்.
அதனை நண்பர் சிறப்பாகச் செய்துள்ளார்.
Hyram Ravi
பண்டைய தமிழரும் ஆயுதபூஜையும் !
இன்றைய காலகட்டத்தில் வாகனங்கள்,இயந்திரங்களுக்கு பூசனை செய்து
ஆயுதபூஜையை கொண்டாடுவதை போலவே பண்டைய தமிழர்கள் போர்கருவிகளுக்கு பூசனை
செய்து சிறப்பித்து வழிபடும் வழக்கம் இருந்திருக்கிறது.இந்த ஆயுதபூஜையே
பதிற்றுப்பத்தில் "வாளுடை விலவு என்றும் தொல்காப்பியத்தில் வாள் மங்கலம்
என்றும் அழைக்கப்படுகிறது. ஆயுதங்களை வாழ்த்தி செய்யப்படும் சிறப்புச்
சடங்காக "மாணார்ச் சுட்டிய வாள் மங்கலம் " (தொல்)– பகைவரைக் குறித்த வாள்
வென்றியாற் பசிப்பிணி தீர்த்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும்
வாண்மங்கலமும்- (நச்சினார்க்கினியர் உரை ) என
குறிப்பிடபடுகிறது.சிலப்பதிகார
ம் வேட்டுவவரியில், ’வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்’ என்ற குறிப்பு
உள்ளது. ‘ கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன்
செல்லும்போலும் ‘ . 12 ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் உலாவில்
ஒட்டக்கூத்தர், ஆயுதங்களில் வெற்றித் திருமகள் குடியிருப்பதாகச்
சொல்கிறார்.’ வருங் கொற்ற மார்க்கு மணங்கினுடனே மருங்கிற் றிருவுடைவாள்
வாய்ப்ப ‘ .
இப்படி ஆயுதங்களை தெய்வமாக கருதும் மரபு இருக்கும் காரணத்தினால்,
அவற்றிற்கு விழா எடுப்பதும், அந்த விழாவிலே அவற்றைக் கையாளும் வீரர்களைப்
புகழ்ந்து பாடுவதும் மரபு.
நேற்று, 01:50 PM · நண்பர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக