திங்கள், 20 மார்ச், 2017

இராமன் சோழர் பரம்பரை சிபி தூங்கெயில்

aathi tamil aathi1956@gmail.com

11/10/16
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — சி.பா.அருட்கண்ண
னார் மற்றும் 24 பேர் உடன்.
இராமன் யார்? இராவணன் யார்? திராவிட புளூகுகள் என்ன?
==============================
==========================
ராமன் சூரிய குலத்தில் தோன்றியவன். சோழர்களும் சூரிய குலத்தைச்
சேர்ந்தவர்கள். எனவே, ராமனது பரம்பரையை தெரிந்து கொண்டால், ராமனுக்கும்,
சோழனுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று தெரிய வரும்.
மனுவில் ஆரம்பித்து, இக்ஷ்வாகு, சிபி போன்ற மன்னர்கள் பரம்பரையில்
சோழர்கள் வந்தனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ள
து. சிபியின் வம்சத்தில் வந்தவர்கள் ஆதலால் சோழர்கள் செம்பியன்
என்றழைக்கப்பட்டனர். சிபி என்னும் அரசன் யார், அவனைப் பற்றித் தமிழ்ப்
புலவர்கள் என்ன சொல்லியுள்ளார்க
ள் என்று பார்த்தால், பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. அவற்றுள்
முக்கிய ஆச்சரியம், சிபியுடன் மட்டுமல்ல, அயோத்தி ராமனுடனும், சோழர்களின்
வம்சத்துக்குத் தொடர்பு உள்ளது என்பதாகும்.
சிபியைப் பற்றிய கதை பல பழம் நூல்களில் உள்ளது. மகாபாரதம், ஸ்ரீமத்
பாகவதம், புராணங்கள் போன்றவற்றில் உள்ளது. புத்த ஜாதகக் கதைகளில் உள்ளது.
போதிசத்துவரே ஒரு முறை சிபியாகப் பிறந்தார் என்று புத்த ஜாதகக் கதைகள்
கூறுகின்றன. மேலும் சிபி என்ற பெயர் பல வேறு இடங்களில், வெவ்வேறான காலக்
கட்டத்தில் வருகிறது.
பாகிஸ்தானத்தில் உள்ள பலுச்சிஸ்தானத்தில் சிபி என்ற பெயரில் ஓரிடம்
உள்ளது. அங்குள்ள மக்கள் சிபி மக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள சிபி என்னும் இடத்தை சிபி அரசாண்டான் என்றும்
மகாபாரதம் கூறுகிறது. அது போல கங்கைக் கரையில் உள்ள காசி நகரையும் சிபி
என்ற பெயருள்ள அரசன் ஆண்டான் என்றும் வருகிறது. இப்படிப் வேறுபட்ட
விவரங்கள் சிபியைப் பற்றி உள்ளன. ஆனால் சிபியின் பெருமையைப் பற்றி
தமிழில் சொல்லப்பட்ட அளவுக்கு, வேறு எந்த மொழியிலும், புராண, மகாபாரத,
ஜாதகக் கதைகளிலும், சொல்லப்படவில்லை.தமிழ் காட்டும் விவரங்கள் மூலம் சில
குழப்பங்களையும் தீர்க்க முடிகிறது.
சிபியைப் போற்றும் இடங்களில், மூன்று மதில்களை உடைய தூங்கெயிலை வெற்றி
கொண்டவன் என்று இன்னொரு அரசனையும் பற்றி தமிழ் இலக்கியம் கூறுகிறது.
சிபியின் பெருமை, ஒரு புறாவுக்காகத் தன் சதையை வெட்டிக் கொடுத்தவன் என்பது.
இது பல இடங்களிலும் சொல்லப்படுகிறது. அவன் வம்சத்தில் வந்தவர்கள் என்று
சோழ மன்னர்களைப் போற்றும் பாடல் ஒன்று சிலப்பதிகாரத்தில் வருகிறது. அதில்
வேறு விவரங்களும் வருகின்றன. அந்த விவரங்களில் ஒன்று தூங்கெயில் வெற்றி
கொண்ட அரசனைப்பற்றியது.
அப்பாடல் வாழ்த்துக் காதையில் அம்மானை வரியில் வருகிறது.
அம்மானை என்பது பெண்கள் பாடும் பாடல். அதில் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பி
அம்மானை என்பார். மற்றொருவர் அதற்குப் பதில் தர வேண்டும். அப்படிக்
கேட்கப்படும் கேள்வியிலேயே, சோழர்கள் பெருமை சொல்லப்படுகிறது.
முதல் கேள்வி, இந்திரனுடைய உயர்ந்த அரண்களைக் காத்த சோழன் யார்?
அதற்குப் பதில் நமக்கும் இப்பொழுது தெரியும். அது முசுகுந்தன் என்னும்
முன்னாள் அரசன். இவன் சோழவர்மன், சோழர் ஆட்சியைத் தமிழ் நாட்டில்
ஸ்தாபிப்பதற்குப் பல தலைமுறைகள் முன்பே தோன்றினவன்.
ஆனால் அந்த அம்மானைப் பாடலில் வரும் பதில் இப்படி இருக்கிறது
வானின் கண் அசைகின்ற மூன்று மதில்களை அழித்தவனே அவன்.
இந்திரன் மதிலைக் காத்தவன் முசுகுந்தன். அவன் அழிக்கவில்லை. ஆகவே இந்தப்
பதில் அவனைப் பற்றியது அல்ல. இது வேறொரு அரசன் மதிலைகளை அழித்த கதையைச்
சொல்கிறது. இந்த வர்ணனை சங்கத் தமிழில் பல இடங்களில் வருகிறது.
அடுத்த கேள்வி, புறாவுக்காகத் தன் உடம்பை அரிந்தவன் யார்?
அதற்குப் பதில் சிபி என்று சொல்லவில்லை. மாறாக, அரண்மனை வாயிலின் முன்
ஆராய்ச்சி மணி அடித்த பசுவிற்காகத் தன் மகன் மீது தேர்க்காலை ஒட்டினவன்
என்று அம்மானை பாடப்படுகிறது.
அதாவது கேள்வி ஒருவரைப் பற்றி, ஆனால் அதற்கான நேரிடையான பதில் கிடையாது.
மற்றொரு சோழ மன்னனின் பெருமையைப் பறை சாற்றிச் சொல்லி, சோழ மனனர்
அனைவரையுமே பெருமைப் படுத்தி சொல்லப்பட்டுள்ளது.
கேள்வியில் சுட்டிக் காட்டப்படும் அரசன் வேறு, பதிலில் வரும் அரசன் வேறு
என்று இந்த அம்மானையில் தெரிகிறது.
முதல் கேள்வியில் வந்த அரசன் முசுகுந்தன்.
அதற்கான பதிலில் வந்தவன் அவனில்லை.
அப்படியென்றால் அவன் யார்?
இதைத் தேட, அந்தப் பதிலில் வரும் முக்கிய குறிப்புகளைக் காண்போம்.
அவையாவன மூன்று மதில், வானின் கண் தென்படும் மதில், அந்த மதிகளை அழித்த
ஒருவன்.
இதுவரை பாரத நாட்டில் வழங்கி வந்துள்ள கதைகளில், வானின் கண் தென்படும்
மதில் இரண்டு இடங்களில்தான் உள்ளன.
ஒன்று, தேவர்களது தலைநகரான அமராவதி என்னும் நகரம். இதனைக் காத்தவன் முசுகுந்தன்.
மற்றொன்று ராவணன் ஆண்ட இலங்கை நகரம்.
அது திரிகூட மலை மீது அமைந்திருந்தது. இந்த மலையைத் திரிகோண மலை என்றும்
கூறுவார். மூன்று சிகரங்கள் அல்லது மூன்று மதில்கள் சூழ்ந்திருப்பதன்
காரணமாக ராவணனது நகரம் மூன்று மதில்கள் கொண்ட 'தூங்கெயில்' அதாவது,
'தொங்கும் நகரம்' அல்லது "தொங்கும் மதில்" என்று அழைக்கப்பட்டது.
அது தேவர்களது அமராவதி போன்றது என்று வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
அமராவதியும், இலங்கையையும் தொங்கும் நகரம் என்று ஏன் சொன்னார்கள்?
அவை இரண்டும் மேகங்கள் தவழும் மலை மீது அமைந்திருந்தன. தூரத்திலிருந்து
பார்பதற்கு மேகங்களுக்கிடைய
ே வானிலிருந்து தொங்கும் நகரம் போலத் தெரியுமாம்.அந்த நகரங்களின்
செழிப்புக்கும் , வளத்திற்கும் குறைவே கிடையாது. அதனால் இலங்கையை
அமராவதியுடன் ஒப்பிட்டு ராமாயணத்தில் விவரங்கள் வருகின்றன.
சமீபத்திய சில அகழ்வாராய்ச்சிகளும், இராமாயண விவரங்கள் சிலவும், அமராவதி
என்று ஒரு பட்டணம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கக்
கூடிய சாத்தியக் கூறுகளைக் கொடுக்கிறது.
மூன்று மதில்களைக் கொண்ட நகரத்தை உடைய ஒருவனை வென்ற அரசன் சோழர்களது
வம்சத்துடன் தொடர்பு கொண்டவன் என்பது.
இதே கருத்தை மணிமேகலை முதல் அத்தியாயத்தில் நான்காவது வரியில்
காண்கிறோம். ஐம் பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை புகார்
நகரில் நடந்த இந்திர விழா பற்றியே ஆரம்பிக்கிறது. 'தூங்கெயில் எறிந்த'
செம்பியர்கள் வழி வந்த சோழ மன்னன், அகத்திய முனிவர் சொன்னபடி, இந்திரனை
வணங்கி இந்திர விழாவை ஆரம்பித்தான் என்கிறது மணிமேகலை.
சிபியையும், தூங்கெயில் எறிந்த மன்னனைப் பற்றியும் சிலப்பதிகாரத்தில்
மற்றொரு இடத்திலும் பார்க்கிறோம். கண்ணகிக்குச் சிலை வடிக்க, சேர மன்னன்
செங்குட்டுவன் இமயமலை சென்று, கல் எடுத்து அங்கிருந்து கங்கைக் கரைக்கு
வந்து, கங்கையில் அந்தக் கல்லை நீராட்டி, அங்கு தங்கியிருக்கிறான்.
அத்துடன் அவன் வஞ்சி நகரை விட்டுக் கிளம்பி முப்பத்தி இரண்டு மாதங்கள்
ஆகி விட்டன என்று அவனது ஜோதிடர் கூறுகிறார். அந்தக் காலக் கட்டத்தில்,
தமிழ் நாட்டிலிருந்து மாடலன் என்னும் அந்தணன் கங்கையில் புனித நீராட
வருகிறான். வந்த இடத்தில் சேர மன்னனைப் பார்க்கிறான். சேரனும், மாடலனிடம்
தமிழ் நாட்டு நிலவரங்களைக் கேட்கிறான்.
சோழ நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆண்ட, ஒருவருக்கொருவர் உறவினர்களான
ஒன்பது சோழ மன்னர்களும், அவர்களுக்கும் உயர்ந்த நிலையில் சக்கரவர்த்தி
போல ஆண்ட வளவன் கிள்ளியை எதிர்த்தனர். ஆனால் வளவன் கிள்ளி ஒரே பகல்
பொழுதில் அவர்கள் அனைவரையும் அடக்கி விட்டான். இதைச் சொன்ன மாடலன்
இன்னும் ஒரு விஷயம் சொல்கிறான். தூங்கெயில் மூன்றினை எறிந்தவனும்,
புறாவுக்காகத் தன் உடம்பை தராசுக் கோலில் இட்டவனும் வளர்த்த அறம் கொண்ட
செங்கோல் திரிந்து போகுமா? போகாது. சோழன் செங்கோல் எந்தக் குறைவும்
இல்லாமல் இருக்கிறது என்று . தூங்கெயில் கதையையும் நினைவு கூர்கிறான்.
தூங்கெயில் கதை புறநானூறிலும் வருகிறது.(புறநானூறு 39 ).
சோழ மன்னன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவனை, மாறோக்கத்து
நப்பசலையார் வாழ்த்துகிறார். அந்த மன்னன் உயிர்களிடத்தில் இரக்கம்
கொண்டவன். தன்னை மற்றவர்கள் புகழ வேண்டுமென்று அவன் இரக்கத்தைக்
காட்டுபவனில்லை. அவன் முன்னோனான புறாவுக்காத் தன் உடம்பை அரிந்து
கொடுத்தவன் மரபில் வந்துள்ளவன் ஆதலால், அவனுக்கு இரக்கம் காட்டுதல்
என்பது இயல்பாக உள்ளது.
இந்த மன்னன் பகைவரை வெல்பவன். அது புகழுக்காகச் செய்வது அல்ல. இவனது
முன்னோன் ஒருவன், தேவர்கள் நெருங்குவதற்குப் பயப்படும் ஆகாயத்திலிருந்த
ு தொங்கும் தூங்கெயிலை வென்றவன். அதனால் அப்படிப் பகைவரை வெல்லுதல்
என்பது இவனுக்கு இயல்பாக உள்ளது என்கிறார் புலவர்.
இந்தத் தூங்கெயில் எறிந்த விஷயம், சிறுபாணாற்றுப் படை (79 -82 ),
கலிங்கத்துப் பரணி (17 ) ராஜா ராஜா சோழன் உலா (13), விக்கிரம சோழன் உலா
(8-9) போன்றவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் அப்படி வென்ற அரசன் பெயர் எங்கும் சொல்லப்படவில்லை. அப்படிப்
பார்த்தால், சிபியின் பெயரும் , மனு நீதிச் சோழனின் பெயரும்,
முசுகுந்தனின் பெயரும் எங்கும் சொல்லப்படவில்லை. அவர்கள் செயலைச்
சொல்லிச் சொல்லியே புளகாங்கிதம் அடைந்திருக்கின்
றனர். மேலும், சங்கப் புலவர்கள் பொதுவாகவே, அரசன் பெயரைச் சொல்வதில்லை.
அந்த அரசர்கள் செய்த செயல்களது அடிப்படையில், பிற இடங்களில் வரும்
அவர்களது கதைக் குறிப்புகளைக் கொண்டு நாம் அவர்கள் பெயரை அறிகிறோம்.
உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் வரும் முசுகுந்தனைப் பற்றி உரை ஆசிரியரான,
அடியார்க்கு நல்லார் வாயிலாகத் தான் நாம் அறிகிறோம். செப்பேடுகளிலும்
அந்தப் பெயர் வந்துள்ளதாலும், அந்த மன்னனைப் பற்றி மகாபாரதத்திலும்
விவரங்கள் வருவதாலும் அவனைப் பற்றிய ஒரு முழுமையான தகவல் நமக்குக்
கிடைத்துள்ளது.
அப்படியே சிபி என்னும் மன்னனைப் பற்றியும், தகவல்கள் தெரிகின்றன.
செப்பேடுகளிலும் அவன் பெயர் இடம் பெற்றுள்ளதால், செம்பியன் என்று சங்கப்
புலவர்கள் புகழாரம் சூட்டுவதற்குக் காரணம், சிபியை முன்னிட்டு அந்த
அளவுக்கு சோழர்கள் பெருமை நிறைந்தவர்களாக இருந்திருக்கிறா
ர்கள் என்று தெரிகிறது.
இதில் 'தூங்கெயில்' எறிந்தவன் யார் என்பது பற்றி செப்பேடுகளில்
சொல்லப்படவில்லை. ஆனால் சங்கப் புலவர்கள் அந்தத் தகவலை அடிக்கடி நினைவு
கூர்ந்துள்ளனர்.
தூங்கெயில் என்பப்படுவது ராவணனுடைய இலங்கை என்பதாலும், அதை அழித்தவன்
ராமன் என்பதாலும், நாம் ராமனது பரம்பரையைப் பார்க்க வேண்டும்.
எந்த மனு மற்றும் இக்ஷ்வாகு பரம்பரையிலிருந்து தாங்கள் வந்தவர்கள் என்று
சோழர்கள் சொல்லிக் கொண்டார்களோ, அதே மனு மற்றும் இக்ஷ்வாகு பரம்பரையில்
வந்தவன் ராமன்.
செப்பேடுகளில் காணப்படும் சோழர் பரம்பரையில் ககுஸ்தன் என்னும் மன்னன்
பெயரும் வருகிறது. ராமனது முன்னோனும் ககுஸ்தன் ஆவார். அதனால் ராமனுக்கும்
ககுஸ்தன் என்னும் பெயரும் உண்டு.
ராமனது பரம்பரையில் வரும் முன்னோர்கள் பெயர் வால்மீகி ராமாயணத்தில்
வருகிறது. இப்பொழுது புழக்கத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட ராமாயணங்கள்
உள்ளன. ஆனால் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத்தான் ஆதாராமாக எடுத்துக் கொள்ள
வேண்டும்.
ராமனின் சமகாலத்தில் வாழ்ந்தவர் வால்மீகி. ராமனின் சரித்திரத்தை அவர்
எழுத, அதை ராமனின் மகன்களான லவனும், குசனும் கற்றுக் கொண்டு, அப்படியே
அதை ராமனுக்கு முன்னிலையில் பாடினார்கள். அந்தக் கதையில் ஏதேனும் தவறு,
குறை இருப்பின், அப்பொழுதே அவை சரி செய்யப்பட்டு அல்லது சரி
பார்க்கப்பட்டிருக்கும். எனவேதான் வால்மீகி ராமாயணம் நம்பத் தகுந்தது,
ஆதாரபூர்வமானது.
ராமன்- சீதை திருமணம் நடப்பதற்கு முன், ராமனது குல குருவான வசிஷ்டர்
ராமனது பரம்பரையில் வந்த மன்னர்கள் பெயரையும் அவர்கள் பெருமையையும்
பற்றியும் பேசுகிறார். ராமனுக்கு முன் வந்த மன்னர்கள் பெயரை வரிசையாகச்
சொல்கிறார். அதாவது இன்னார் மகன் இன்னார் பட்டத்துக்கு வந்தார் என்று
அடுத்ததடுத்து வரிசையாகச் சொல்கிறார்.
ராமன்(ரகு வம்சம்) பரம்பரை
01. பிரம்மா
02. மரீசி
03. காஷ்யபர்
04. சூரியன் (சோழர் பரம்பரை இங்கிருந்து ஆரம்பிக்கிறது)
05. மனு
06. இக்ஷ்வாகு (வசிஷ்டர் இவரை அயோத்தியின் முதல் அரசன் என்று சொல்கிறார். )
07. குக்ஷி
08. விகுக்ஷி
09. பாணன்
10. அனரண்யன்
11. ப்ரீது (சோழர் பரம்பரையில் வருகிறார்)
12. திரிசங்கு
13. துந்துமாரன் (சோழர் பரம்பரையில் வருகிறார்)
14. யுவனாஷ்வன் (சோழர் பரம்பரையில் வருகிறார்)
15. மாந்தாதா (இதுவரை சோழன் பரம்பரையும், ராமன் பரம்பரையும் ஒத்து இருக்கிறது.)
16. சுசந்தி
17. த்ருவசந்தி
18. பரதன்
19. அசிதன்
20. சகரன்
21. அசமஞ்சன்
22. அம்ஷுமான்
23. திலீபன்
24. பாகீரதன் (கங்கையைக் கொண்டு வந்தவன்)
25. ககுஸ்தன் (சோழர் பரம்பரையில் இக்ஷ்வாகுவுக்கு அடுத்து இந்த அரசன் வந்து
விடுகிறான்)
26. ரகு
27. பிரவ்ரித்தன்
28. சங்கனன்
29. சுதர்ஷணன்
30. அக்னிவர்ச்ணன்
31. ஷீக்ருகன்
32. மரு
33. ப்ரஷுஸ்ருகன்
34. அம்பரீஷன்
35. நஹுஷன்
36. யயாதி
37. நாபாகன்
38. அஜன்
39. தசரதன்
40.ராமன்
ராமன் பரம்பரையில் வந்த(36) யயாதியின் மகளான மாதவிக்கும் உசீனரனுக்கும்
பிறந்தவனே சிபி என்பது முக்கியச்செய்தி.
மனுவின் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்.
செப்பேடுகளில் கொடுக்கப்பட்டுள
்ள வம்சாவளி
01. சூரியன்
02. மனு
03. இக்ஷ்வாகு
04. விகுக்ஷி
05. புரஞ்சயன்
06. இக்ஷ்வாகு
07. ககுஸ்தன்
08. அர்யமன்
09. அனலப்ரதாபன்
10. வேணன்
11. ப்ரித்து
12. துந்துமாரன்
13. யுவனாச்வன்
14. மாந்தாதா
15. முசுகுந்தன் (இவனே நாளங்காடிப் பூதத்தைஇந்திரனி
டமிருந்து பெற்றவன்)
16. வல்லபன்
17. ப்ரிதுலக்ஷன்
18. பார்திவசூடாமணி
19. தீர்கபாஹு
20. சந்த்ரஜீத்
21. சங்க்ருதி
22. பஞ்சபன்
23. சத்யவ்ரதன் (ருத்ரஜீத் எனப்பட்டான். இந்தப்பெயர்களுக்கெல்லாம் காரணம்
இருக்கிறது )
24. உசீனரன்
25. சிபி (இவனே புறாவுக்காகத் தன் தசையை அரிந்துகொடுத்தவன். இவனை
முன்னிட்டே , சோழர்கள்தங்களைச் 'செம்பியன்' என்றழைத்துக் கொண்டனர்.)
26. மருத்தன்
27. துஷ்யந்தன்
28. பரதன்
29. சோழவர்மன் (இவன்தான் தமிழகத்தில் சோழ நாட்டைஸ்தாபித்து, சோழர்கள்
ஆட்சியை ஆரம்பித்து வைத்தான்.)
30. ராஜகேசரிவர்மன்
31. பரகேசரி
32. சித்ரரதன்
33. சித்ரச்வன்
34. சித்ரதன்வன் (இவன் காவேரி ஆற்றைக் கொண்டு வந்தவன்என்கிறது செப்பேடு )
35. சுரகுரு
36. வ்யக்ரகேது (த்ரேதா யுகத்தின் கடைசி மன்னன்.இவன்தான் புலிச் சின்னத்தை
சோழர்கள் கொடியில் பொறித்தவன்.)
சோழர் பரம்பரையையும், ராமன்(ரகு வம்சம்) பரம்பரையையும் ஒரு ஒப்பீடு.
1. மாந்தாதா வரை, இருவர் பரம்பரையும் ஒத்ததாக உள்ளது.
2. மாந்தாதாவுக்குப் பின் சோழர் பரம்பரையில் முசுகுந்தன் வருகிறான். ராமன்
பரம்பரையில் சுசந்தி வருகிறான்.
3. அவனுடைய இரண்டு பிள்ளைகளில் முதல் மகன் இக்ஷ்வாகு சிம்மாசனத்துக்கு
வருகிறான் என்று வசிஷ்டர் கூறுகிறார். மற்றொரு பிள்ளையைப் பற்றி ராமாயணத்தில்
ஒரு குறிப்பும் இல்லை.
இதைக் காணும் போது ஒரு அரசனின் பிள்ளைகள் பலர் இருந்தால், அவர்களில்
ஒருவர் இக்ஷ்வாகு பரம்பரையில் தொடர்கிறார். மற்றவர்கள், வேறு வேறு
இடங்களில் அரசு அமைத்து ஆண்டிருக்க வேண்டும். அவர்கள் வழியில் தனித் தனி
பரம்பரை தொடர்ந்திருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு ராமனது சகோதரர்களைச் சொல்லலாம். ராமன் அயோத்தியின்
பட்டத்திற்கு வந்தாலும், மற்ற சகோதரகளுக்கு ஆங்காங்கே அரசுரிமை
கொடுத்திருக்கிறான். அதிலும் அடுத்த தலைமுறை மகன்கள் வேறு வேறு இடங்களில்
நாட்டி ஸ்தாபித்து ஆண்டிருக்கிறார்கள். இன்றைக்கு பாகிஸ்தானத்தில்
இருக்கும் பெஷாவர் என்பது பரதனது மகன் புஷ்கலனது பெயரில் புஷ்கலாவதி
என்று
அமைக்கப்பட்டு, அந்த மகனிடமே ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட
து.
மற்றொரு மகனான தக்ஷன் பெயரில் அமைக்கப்பட்டதே தக்ஷசீலம்என்னும் நகரம்.
அதுவும் அந்த மகனிடம் கொடுக்கப்பட்டு அவனை அடுத்து அவன் பரம்பரையினர்
ஆண்டு வந்தனர். அது போலவே லக்ஷ்மணன், சத்ருக்னன் மகன்களுக்கும், வெவ்
வேறு இடங்களில் ஆட்சிப் பொறுப்பு கொடுக்கப்பற்றிருக்கிறது என்று மகா கவி
காளிதாசர் தான் எழுதிய 'ரகு வம்சம்' என்னும் நூலில் எழுதி
உள்ளார்.ராமனுக்குப் பிறகு அயோத்தி சிம்மாசனத்துக்க
ு வந்தது ராமனின் மகனான குசன், அவனைத் தொடர்ந்து அவன்
சந்ததியினர் என்று காளிதாசர் அவர்கள் பெயரைப் பட்டியலிடுகிறார்.
எனவே ராமன் பரம்பரை காட்டுவது, ஒரு மகனின் வழியில் வந்தவர்களை மட்டுமே.
மற்ற மகன்கள் ஆங்காங்கே சென்று தங்களுக்கென்று அரசுரிமை நாட்டி தங்கள்
பரம்பரையை அமைத்திருக்க வேண்டும். அதனால்தான் வால்மீகி ராமாயணத்தில்
வரும் ராமன் பரம்பரையில் மனுவில் ஆரம்பித்து36 அரசர்கள் ராமன் வரை
சொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதே காலகட்டத்தில் புராணங்கள் கூறும் அரசர்கள்
63 ஆவர். அந்த அரசர்களும் இக்ஷ்வாகு பரம்பரையினர்தாம். ஆனால் அயோத்தியைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்திருக்க மாட்டார்கள். வேறு வேறு இடங்களில்
பரவி இருப்பார்கள்.
சிபியின் சரித்திரத்தைப் பல்வேறு இலக்கியங்களிலிருந்து ஆராய்ந்தால், அவன்
தந்தை உசீனரன் என்று தெரிகிறது. சோழர் செப்பேடுகளும் அதையே
தெரிவிக்கின்றன. உசீனரன் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவன் என்று மகா
பாரதத்தில் வருகிறது. ராமன் பரம்பரையில் வந்த யயாதியின் மகளான
மாதவிக்கும் உசீனரனுக்கும் பிறந்தவனே சிபி என்பது முக்கியச் செய்தி.
அதாவது, மனுவில் ஆரம்பித்து மாந்தாதா வரை சோழர்கள் குலமும் சூரிய
குலத்திலிருந்து வேறுபடவில்லை. அதற்குப் பிறகு, பங்காளிகளாகப் பிரிந்து
மாறியிருக்க வேண்டும். அப்படி மாறினதில் சூரிய வம்சத்தை விட்டு விலகியும்
போயிருக்கிறார்கள். ஆண் சந்ததி நின்று போய், பெண் சந்ததி மூலமாக குலம்
மாறியிருக்க வேண்டும். எனினும் யயாதியின் மகள் மூலம், மீண்டும் சூரிய குல
சம்பந்தம் வந்திருக்கிறது.
யயாதி என்னும் அரசன், ராமனது தந்தையான தசரதனுக்குக் கொள்ளுத் தாத்தா.
அவனது மகள் வழியில் வந்த சந்ததியில் சிபி வருகிறான். இப்படி சிபிக்கும்,
ராமனுக்கும் ரத்த சம்பந்தம் இருந்திருக்கின்றது.
சோழர்கள் தங்கள் சூரிய குல அடையாளத்தையே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆண் வாரிசு அளவில் மீண்டும், சிபிக்குப் பிறகு சூரிய குல சம்பந்தம்
அவர்கள் பரம்பரையில் வந்திருந்தால்தான் தாங்கள் சூரிய குலம் என்று
சொல்லிக் கொண்டிருக்க முடியும். மேலும் ராமன் வம்சாவளியில் வந்ததைப் போல,
எல்லா மன்னர்கள் பெயரையும் சோழர்கள் செபெப்டுகளில் பொறிக்கவில்லை
என்பதையும், உபரி சர வஸு பற்றிய குறிப்பில் இருக்கிறது.
புறாவுக்கு இரங்கிய சிபியின் கதை மிகவும் பிரசித்தமானது.
ராமனின் கதை தூங்கெயில் சம்பந்தப்பட்டது.
இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆதலால் இவர்கள் இருவரையுமே சோழப்
பரம்பரையுடன் இணைத்து, சங்கப் புலவர்களும், சிலப்பதிகாரமும்,
மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளனர் என்று தெரிகிறது.
முசுகுந்தனைப் பற்றி மகாபாரதத்தில் விவரங்கள் இருக்கின்றன. அவன் ராஜ
ரிஷியாகவும், பல நாடுகளைத் தன் கீழ் கொண்டு வந்த சக்கரவர்த்தியாக
வும் போற்றப்படுகிறான். அவனுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் எல்லாம் கங்கைக்
கரையில் இருக்கின்றன. அவனுக்கும் புகார் நகருக்கும் என்ன தொடர்பு என்று
பார்த்தால், நாளங்காடிப் பூதத்தைப் பெற்ற விதத்தை, 'அமரனிற் பெற்று,
தமரில் தந்து" என்கிறது சிலப்பதிகாரம். அதாவது, அமரன் என்று சொல்லபப்டும்
இந்திரனிடமிருந்து பெற்றதை, முசுகுந்தன் தன் தமருக்கு, அதாவது
தன்னைச்சேர்ந்தோ
ருக்குத் தந்தான் என்று பொருள் அமைகிறது. அதாவது சோழர்கள் முசுகுந்தனுடன்
தொடர்புடையவர்கள் என்று தெரிகிறது. அந்தத் தொடர்பு என்ன என்பது 1905 -ஆம்
வருடம் திருவாலங்காடு என்னும் இடத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ள செப்புத்
தகடுகளின் மூலம் தெரிகிறது.
சமீபத்தில் விழாக் கண்ட தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனின்
மகனான முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் கட்டில் ஏறியஆறாம் ஆண்டு
எழுதப்பட்டவை அவை. பல கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்களைக்
குறிக்கும் அந்தத் தகடுகளில், சோழர் வம்சாவளி எழுதப்பட்டுள்ளது.
இன்றைக்கு நாம் அறிந்த சோழர்கள் பிற்காலச் சோழர்கள். சிலப்பதிகாரம் நடந்த
காலத்துக்குப் பிறகு வந்தவர்கள். ஆனால் சோழர் வம்சம், பல்லாயிரக் கணக்கான
ஆண்டுகள் முன்னால் எங்கோ நீண்டு கொண்டே போகிறது. அப்படிச் செல்லும்
வம்சத்தில், முசுகுந்தனைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன.
இது வரை வரும் வம்சாவளியில் கவனிக்க வேண்டிய விவரங்கள்
சோழ நாடு உருவாக்கப்பட்ட போது காவேரி என்னும் நதியே நாட்டில் ஓடவில்லை
என்று தெரிகிறது. கி-மு- 1.500 -வந்ததாகச் சொல்லப்படும் சிந்து சமவெளி
மனிதன் எங்கே? மலை தோன்றியும், நதி தோன்றாத காலத்திலேயே நகரம்
நிர்மாணித்த சோழ வர்மன் எங்கே? எது தொன்மை வாய்ந்தது?
மனு, இக்ஷ்வாகு போன்றவர்கள் வம்சத்தில், மிக மிக முற்காலத்தில்
முசுகுந்தன் வந்திருக்கிறான். அப்பொழுது அவன் பெற்ற பூதத்தை அப்போழுதோ
அல்லது, பிற்காலத்தில் அவன் சந்ததியர் தமிழகப் பகுதியில் சோழ நாட்டை
நிர்மாணித்த போதோ , புகார் நகரில் நாளங்காடிப் பூதம் என்று
அமைத்திருக்கின்றனர். அதைதான் இளங்கோவடிகள் 'அமரனில் பெற்று, தமரிற்
தந்து' என்றிருக்கிறார்.
இது வரை சொன்னது த்ரேதா யுகம் வரை வந்த வம்சாவளி என்று செப்பேடுகள்
சொல்கின்றன. நிச்சயமாக இவர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்தவர்கள் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம்
எனலாம். இது வரை கிடைத்துள்ள ஆதாரங்களை கொண்டு, காவேரி நதி ஆரம்பித்த
காலத்தை அறிவியல் முறைகள் மூலம் நிர்ணயம் செய்தால், மிகச் சரியாக
சோழர்களது ஆரம்பமும்,. அதன் மூலம் தமிழனது தொன்மையையும் கணக்கிடலாம்.
தொடரும்....
9 அக்டோபர், 09:00 PM · பொது

16 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    பதிலளிநீக்கு
  3. வில்லவர் மற்றும் பாணர்

    வட இந்திய பாண குலங்கள்

    வட இந்திய பாணர்களுக்கு பாண, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    பல்லவ பாணர்

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

    பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    மீனா வம்சம்
    ___________________________________

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

    சத்தீஸ்கர் பாண இராச்சியம்

    பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

    திக்கம்கரின் பாண்டிய வம்சம்

    பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

    பாண வர்த்தகர்கள்

    இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
    பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

    பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

    முடிவுரை
    ____________________________________________

    இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
    பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

    சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

    பதிலளிநீக்கு
  4. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரர் தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.

    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர். சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.


    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

    பதிலளிநீக்கு
  6. அசுர திராவிட துடக்கம்

    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  7. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர்
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர்
    பணிக்கர் = பணிக்கா
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

    பதிலளிநீக்கு
  8. குமரிக்கண்டம்

    பாண்டியன் இராச்சியத்தின் தோற்றம்.

    பாண்டியன் இராச்சியத்தின் ஆரம்பம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியம் (கிமு 9990)
    2. முதலாவது பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டியன் இராச்சியம்
    4. இரண்டாவது பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாம் பாண்டிய இராச்சியம்
    6. சங்க காலத்தின் முடிவு (கி.பி 1)

    புதிய கற்காலம் (கிமு 10000)

    பாண்டிய இராச்சியம் நிறுவுதல்(கிமு 9990)
    ______________________________________

    பண்டைய தமிழ் சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னர் காய்சின வழுதி கிமு 9990 இல், பாண்டிய நாட்டை நிறுவினார். அதாவது தற்போதிலிருந்து 11,971 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியநாடு நிறுவப்பட்டது.

    பாண்டியன் நாடு

    பாண்டிய நாடு குமரிகண்டத்தில் நிறுவப்பட்டது. இது கன்னியாகுமரிக்கு தெற்கே அமைந்திருந்த ஒரு பெரிய பழங்கால நிலப்பரப்பு ஆகும். குமரிக்கண்டம் குமரி நதிக்கும் பஃறுளி நதிக்கும் இடையில் இருந்தது.

    தமிழ் சங்கங்கள்

    கி.பி 5-8 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை மூன்று தமிழ் சங்கங்களின் காலம் குறித்த விவரங்களைத் தருகிறது.

    தலைச்சங்கம் (கிமு 9990 முதல் கிமு 5550 வரை)

    பாண்டிய மன்னர் காய்சின வழுதி அதே காலகட்டத்தில் தலைச்சங்கம் என்று அறியப்பட்ட முதல் தமிழ் சங்கத்தை நிறுவினார்.

    முதல் தமிழ் சங்க காலத்தில் குறைந்தபட்சம் 89 பாண்டிய மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆண்டனர், ஆனால் உண்மையில் மன்னர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.


    பாண்டிய நாட்டின் முதல் தலைநகரம் தென் மதுரை ஆகும். இது 4440 ஆண்டுகள் நீடித்த முதல் தமிழ் சகாப்தத்தின் முடிவில் பெரும் பிரளயத்திற்குப் பிறகு கடலுக்கு அடியில் மூழ்கிய தென் மதுரை ஆகும்.

    மூன்று மதுரைகள்

    உண்மையில் மதுரை என்று அழைக்கப்படும் மூன்று தலைநகரங்கள் இருந்தன. குமரிகண்டத்தில் உண்டாயிருந்த தென் மதுரை, பண்டைய பாண்டிய இராச்சியத்தின் தலைநகராக இருந்த மதுரை, மற்றும் வட இந்தியாவில் மதுரா புரி என்று அழைக்கப்பட்ட வட மதுரை. மதுரா புரி பழங்காலத்தில் ஒரு பாணப்பாண்டியன் தலைநகராக இருந்திருக்கலாம்

    முதல் தமிழ் சங்கம்

    முதல் தமிழ் சங்கம் பாண்டிய மன்னன் காய்சின வழுதியின் ஆட்சியின் போது தொடங்கி சுமார் 4440 ஆண்டுகள் செயல்பட்டு வந்தது, இது கடுங்கோன் மன்னரின் ஆட்சியில் முடிவுக்கு வந்தது.

    புறநானூறு எனும் ஒரு பண்டைய தமிழ் இலக்கியத்தின் படி, பாண்டிய மன்னன் பஃறுளி ஆறு கடலிற் கலக்குமிடத்து மூந்நீர் விழா எடுத்தான் என்று கூறுகிறது.

    முதல் பிரளயம்(கிமு 5,550)

    பண்டைய தமிழ் இலக்கியங்களின்படி, முதல் தமிழ் சகாப்தத்தின் முடிவில், கடுங்கோன் மன்னனின் ஆட்சியின் போது, ​​அதாவது கிமு 5,550 இல் குமரிக்கண்டத்தை ஆழத்தில் மூழ்கடித்த ஒரு பேரழிவு பிரளயம் ஏற்பட்டது.

    முதல் பிரளயத்தில் பஃறுளி நதி, குமரி மலைத்தொடர், குமரி நதி மற்றும் தென் மதுரை ஆகியவை கடலுக்கு அடியில் மூழ்கின.

    இதேபோல் ஒரு பண்டைய பிரளயம், பல பண்டைய இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது எ.கா. சுமேரிய ஆவணங்களில் கில்கேமேஷ் காவியம், ஆதியாகமம் பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள நோவாவின் பிரளயம் என்பவையாகும்.

    ஸ்ரதாதேவா மனு

    மகாவிஷ்ணுவின் அவதாரமான ஒரு பெரிய மீனால் இழுத்துச் செல்லப்பட்ட படகில் ஏறி பிரளயத்திலிருந்து தப்பிய திராவிட மன்னரான ஷ்ரதாதேவா மனுவின் கதையை மத்ஸ்ய புராணம் விவரிக்கிறது.

    பிரளயத்திற்குப் பிறகு, ஷ்ரதாதேவா மனுவின் படகு கரைக்கு வந்து மலைய மலையின் உச்சியில் அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையில் தரையிறங்கியது.

    ஸ்ரதாதேவா மனு-பாண்டியன்

    குமரிக்கண்டத்தை வெள்ளம் சூழ்ந்தபோது, ​​பாண்டியன் குடும்பத்தினர் படகில் ஏறி வெள்ளத்தில் இருந்து தப்பியிருக்கலாம்.

    அந்த படகு மலைய மலைகள் என்னும் மேற்கு தொடர்ச்சி மலையில் தரையிறங்கியிருக்கலாம். மீனவரின் முந்தைய கதை மத்ஸ்ய புராணத்திற்கு அடிப்படையாக இருக்கலாம். மீனவரின் வடநாட்டு உறவினர்கள் மீனா மற்றும் மத்ஸ்யா என்னும் பெயர்களால் அறியப்படுகிறார்கள்.

    கிமு 5550 இல் குமரிக்கண்டத்தை மூழ்கடித்த பிரளயம் ஆரம்பகால தமிழ் வரலாற்றில் கூறப்பட்ட இரண்டு பிரளயங்களில் முதன்மையானது.

    பதிலளிநீக்கு
  9. குமரிக்கண்டம்

    பாண்டிய இராச்சியத்தின் புனரமைப்பு (கிமு 5500)
    ________________________________________

    இரண்டாவது தமிழ் சங்கம்
    இடைச்சங்கம் (கிமு 5550 முதல் கிமு 1850 வரை)

    பாண்டிய மாநாடு அதன் புதிய தலைநகரான கபாடபுரத்தில், பாண்டிய மன்னர் வெண் தேர் செழியனால் மீண்டும் நிறுவப்பட்டது. இடைச்சங்கம் என்று அழைக்கப்படும் தமிழ் சங்கத்தின் இரண்டாவது அமர்வு கபாடபுரத்தில் கூட்டப்பட்டது.

    செம்புக்காலம்(கிமு 4500)

    இரண்டாவது தமிழ் சங்கம் மீன் கூடல் காலம் என்றும் அழைக்கப்பட்டது. பண்டைய பஃறுளி ஆற்றின் வடக்கே சுமார் 700 காதம் (1120 கி.மீ) மற்றும் குமரி நதி கழிமுகத்திற்கு தெற்கே குவாடம் அமைந்திருந்தது.

    பாண்டிய மாநாட்டின் இடைச்சங்க காலம் கிமு 5550 முதல் கிமு 1,850 வரை சுமார் 3700 ஆண்டுகள் நீடித்தது. முதல் மன்னர் வெண் தேர் செழியன், கடைசி பாண்டிய மன்னர் முடத்திருமாறன் ஆவார். அந்த காலகட்டத்தில் 59 பாண்டியன் மன்னர்கள் ஆட்சி செய்ததாக இறையனார் அகப்பொருள் கூறுகிறது.

    இரண்டாவது பிரளயம் (கிமு 1850)

    கிமு 1850 இல் இரண்டாம் தமிழ் சங்கத்தின் முடிவில் பாண்டிய தலைநகரம் கபாடபுரம் மற்றொரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது. இந்த பிரளயம் குவாடம் மற்றும் குமரிக்காண்டத்தின் மீதமுள்ள பகுதியை என்றென்றுமாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்த பிரளயம் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலத்திற்கு ஒத்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சிகிமு 1900 முதல் கிமு 1700 வரைபுள்ள காலகட்டத்திலாகும்.

    பாண்டிய இராச்சியத்தின் இடமாற்றம் (கிமு 1850)
    _________________________________________

    மூன்றாம் தமிழ் சங்கம்(கிமு 1850 முதல் கி.பி 1 வரை)

    கிமு 1850 இல் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பிறகு, பாண்டிய மாநாட்டின் தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்டு, அங்கு மூன்றாவது தமிழ் சங்கம் கூட்டப்பட்டது. 49 பாண்டிய மன்னர்களும், 449 பங்கேற்ற கவிஞர்களும் கொண்ட மூன்றாவது தமிழ் சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது.

    கொற்கை மற்றும் தென்காசி இரண்டாம் தலைநகரங்களாக இருந்தன. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த, கொற்கை பாண்டியர்களின் பண்டைய தலைநகரம் ஆயிருந்தது. மலைய மலைகளுக்கு அருகிலுள்ள மற்றொரு பண்டைய பாண்டிய தலைநகரம் தென்காசி. இலங்கை மிகவும் பழங்காலத்திலிருந்தே பாண்டியர்களால் ஆளப்பட்டது. ஸ்ரீலங்காவின் பண்டைய பெயர் தாம்பபாணி, தாமிரபரணி நதியின்பெயரிலிருந்து வந்தது.


    மூன்றாவது தமிழ் சங்கம் முடத்திருமாறன் மன்னரின் ஆட்சியில் தொடங்கி, உக்கிரப்பெருவழுதி(கிமு 42 முதல் கி.பி 1 வரை) மன்னனின் ஆட்சியுடன் முடிந்தது என்று சிலப்பதிகாரம் என்ற காவியத்தில் கூறப்பட்டுள்ளது.

    இரும்பு யுகம் (கிமு 1300)

    கி.மு 1850 ல் பிரளயத்திற்குப் பிறகு தலைநகரம்கபாடபுரம் நவீன மதுரைக்கு மாற்றப்பட்டிருந்தது. கபாடபுரம் கிமு ஆறாம் நூற்றாண்டு வரை வட இந்திய காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அது மீண்டும் கட்டப்பட்டது என்று அறிகிறோம்.

    ராமாயணத்தில் கபாடபுரம்

    இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18), சீதையை நோக்கி தென்திசையில் தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள். ராமாயணம் கபாடபுரத்தை கவாடம் என்று குறிப்பிடுகிறது.

    பதிலளிநீக்கு
  10. குமரிக்கண்டம்
    _________________________________________

    குமரிக்கண்டத்தின் இருப்பிடம்

    பாரம்பரியமாக கன்னியாகுமரிக்கு தெற்கே ஒரு பெரிய நிலப்பரப்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது என்றும் அது ஒரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது என்றும் கருதப்பட்டது. அந்த நிலப்பரப்பு நிச்சயமாக ஸ்ரீலங்காவையும் சேர்த்திருக்கும்.

    ஸ்ரீலங்காவில்
    கொமரி

    கொமரி என்பது இலங்கையின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இடமாகும். இது கொமரி காயலை ஒட்டிய ஒரு மெல்லிய நிலப்பரப்பு ஆகும். கடலுக்குள் கொமரியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், கொமரி முகடுகள் என்று அழைக்கப்படும் மூழ்கிய மணல் முகடுகள் உள்ளன. கொமரியா என்று அழைக்கப்படும் ஒரு இடம் இன்னும் உள்நாட்டில் உள்ளது.

    ஸ்ரீலங்காவில்
    மதுரா

    உள்நாட்டில் கொமரிக்கு மேற்கே சுமார் 140 கி.மீ தொலைவில், மதுரா ஓயா தேசிய பூங்காவிற்கு அருகில் மதுரா என்ற இடம் உள்ளது. மதுரு ஓயா என்ற நதி அங்கிருந்து கொமரிக்கு வடக்கே வடக்கு மத்திய மாகாணத்திற்குள் பாய்கிறது.

    ஸ்ரீலங்காவில்
    மஹாவெலி கங்கா

    மஹாபலியின் பெயரிடப்பட்ட மகாவெலி கங்கை என்ற நதி மதுரு ஓயாவின் வடக்கே பாய்கிறது. மகாபலி தமிழ் வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் ஆகியோரின் முன்னோடியாக கருதப்படுகிறார். வில்லவர்கள்வழிவந்த பண்டைய பாண்டியர்களின் ஆட்சியின் போது இந்த நதிக்கு பெயரிடப்பட்டிருக்கலாம்.

    இந்தோனேசியா

    ஜாவா தீவின் வடக்கில் மதுரா என்ற தீவு உள்ளது. ஜாவா தீவில் சுரபயாவுக்கு அருகில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா தீவுவாசிகள் நீண்ட வாள்களை எடுத்துச் செல்கிறார்கள். வாள்களின் முனை முன்னோக்கி வளைந்திருக்கும். மதுரா தீவுக்கு பாண்டியர்களுடன் தொடர்பு இருக்கலாம்.

    லெமூரியா

    லெமூர் புதைபடிவங்கள் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவில் காணப்படுகின்றன, ஆனால் ஆப்பிரிக்காவிலோ அல்லது அரேபியாவிலோ காணப்படவில்லை.1864 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டர், லெமுரியா என்ற மீப்பெருங்கண்டம் கடந்த காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகக் கருதினார். லெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நிலப்பரப்பு மடகாஸ்கரையும் இந்தியாவையும் இணைத்ததாகவும் நம்பப்பட்டது. கி.பி 1912 இல் கண்டப்பெயர்ச்சி கோட்பாடு தோன்றிய பின்னர் லெமூரியா கோட்பாடு பெரும்பாலும் அறிவியல் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    குமரி வரம்பு

    1964 ஆம் ஆண்டில் கேப் கொமொரினுக்கு தெற்கே கடற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரமுள்ள ஒரு கடல் கோடு கண்டுபிடிக்கப்பட்டது. கன்னியாகுமாரிக்கு அருகாமையில் இருப்பதால் இதற்கு கொமொரின் ரிட்ஜ் என்று பெயரிடப்பட்டது.

    இலங்கைக்கு மேற்கே இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரிக்கு தெற்கே 200 கி.மீ தொலைவில் இந்த கடற்கோடு அமைந்துள்ளது. இதன் பரிமாணங்கள் வடக்கு-தெற்கில் 500 கி.மீ நீளமும் கிழக்கு-மேற்கில் 150 கி.மீ அகலமும் கொண்டவை..

    கொமோரின் ரிட்ஜ் NNW இலிருந்து SSE திசையை நோக்கி அட்சரேகைகள் 1.5 ° N மற்றும் 6.5 ° N க்கு இடையில் நீண்டுள்ளது. கடல் தளத்திலிருந்து கடலின் சராசரி ஆழம் 2 முதல் 4.2 கி.மீ ஆகும், கொமரின் ரிட்ஜில் கடலின் குறைந்தபட்ச ஆழம் 1 கி.மீ ஆகும்.

    வடக்கு எல்லையில், கொமொரின் ரிட்ஜ் கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள கண்டத் திட்டுடன் இணைகிறது. கொமரின் ரிட்ஜ் குமரிகண்டத்தின் எச்சமாக இருக்கக்கூடும். ஆனால் மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் ஒரு நிலத்தை மூழ்கடிக்கும் பேரழிவு என்ன என்பது தெரியவில்லை.

    புவி வெப்பமடைதல் காரணம் துருவ பனிக்கட்டி உருகுவதால், கடல் மட்டம் உயர்வது ஒரு காரணமாக இருக்கலாம். இந்திய புவித்தட்டு யூரேசிய புவித்தட்டுடன் மோதியபோது, ​​அதன் தெற்கு விளிம்புகீழ்நோக்கி சாய்ந்து குமரிக்கண்டம் மூழ்கியதா?
    அல்லது ஒரு பண்டைய விண்கல் பொழிவு காரணமாக, நிலம் வெடித்து சிதறியிருக்கலாம்.

    முடிவுரை

    குமரிகண்டம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    என்றாலும்

    இது திராவிட மக்களின் தென்னிந்திய அட்லாண்டிஸ் ஆகும்.

    பதிலளிநீக்கு
  11. சூரிய, சந்திர மற்றும் அக்னி வம்சங்கள்

    பாணா, மீனா, வில்லவர், மீனவர் அனைத்து குலங்களும் பழங்குடி வில்லவர் குலங்கள்.
    கிமு 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பாண்டிய இராச்சியம் மிகப் பழமையான இராச்சியம்.
    பாணர், மீனா, வில்லவர், பில், மீனவர் அனைவரும் இந்தியா முழுவதையும் ஆண்டனர்.

    சிந்து சமவெளி நாகரீகம், திராவிட பாணா, மீனா மற்றும் மெசபதோமிய மக்களின் கலாச்சாரமாக இருந்திருக்கலாம், இது கிமு 3300 முதல் கிமு 1300 வரை நீடித்தது.
    ஆரிய புலம்பெயர்ந்தோர் கிமு 1900 இல் வந்தனர்.
    0கிமு 1700 முதல் கிமு 1200 வரை இந்தோ-ஆரியர்கள் ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் சிந்து சமவெளியில் வாழ்ந்தனர். கிமு 1200க்குப் பிறகு இந்தோ-ஆரியர்கள் பஞ்சாபையும், பின்னர் உத்தரப்பிரதேசத்தையும் ஆக்கிரமித்தனர். கிமு 800 முதல் கிமு 500 வரை ஆரிய வம்சங்கள் உத்தரபிரதேச பகுதியை மட்டுமே ஆட்சி செய்தன. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கிமு 700 முதல் கிமு 500 வரை கோசல சாம்ராஜ்யம் இருந்தது. சூரியவம்சம் பெரும்பாலும் கங்கைக்கு வடக்கே ஆட்சி செய்தது.l

    மற்றொரு குழு மக்கள் நாகர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடைய யாதவர்கள். பாண்டவர்களும் கவுரவர்களும் நாகர்கள் மற்றும் யாதவர்கள் அவர்களின் உறவினர்கள். நாகர்களும் யாதவர்களும் சந்திர வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர். நாகர்கள் தெற்கே வந்து மகாராஷ்டிராவையும், யாதவர்கள் நர்மதா வரை வந்து ஹைஹையா ராஜ்ஜியத்தை நிறுவினர்.

    ராஜ வம்சங்களை சூரியவம்சம், சந்திரவம்சம் மற்றும் அக்னிவம்சம் என வகைப்படுத்துவது திராவிட பாணர்கள் மற்றும் வில்லவர்களின் ஆரியத்திற்கு முந்தைய வழக்கம்.

    பண்டைய பாணர்களும் வில்லவர்களும் தங்களை அக்னிவம்சம் என்று கருதினர். ராஜ்புத், ஜாட் மற்றும் பிற க்ஷத்திரியர்கள் போன்ற பிற்கால வம்சங்கள் பாணர்களிருந்து (பாணா, பில் மற்றும் மீனா) உருவாகின்றன. அவர்கள் அனைவரும் அக்னிவம்சிகள்.
    கலப்படமில்லாத வில்லவர் மற்றும் பாணர்கள் அனைவரும் தங்களை அக்னிவம்சிகள் என்றும் பழங்காலத்திலிருந்தே அழைத்துக் கொண்டனர். ஆரம்பகாலப் உத்திரப்பிரதேசம் கூட
    பாண-வில்லவர் ஆட்சியாளர்களால் மட்டுமே ஆளப்பட்டது. மதுரா என்பது சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட வடமதுரை. வட மதுரை கிமு ஆறாம் நூற்றாண்டில் சூரிய வம்சத்தால் கைப்பற்றப்பட்டது ஆனால் யாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வில்லவர்-மீனவரின் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன் அடையாளங்கள் இடைக்காலத்தில் அவுத் மாநிலத்தின் (அயோத்தி) அதிகாரப்பூர்வ சின்னமாகத் தொடர்ந்தன. இந்தோ-ஆரிய சூரிய வம்சத்தின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகும் வில்லவர்-பாணா-மீனா மக்கள் உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து ஆட்சி செய்தனர்.

    நவீன உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன், அதாவது வில்லவர் சின்னம். சூரிய வம்சம் உத்தரப்பிரதேசத்தில் சக்திவாய்ந்ததாக இருந்திருந்தால், உ.பி. அரசாங்கம் சூரிய முத்திரையைப் பயன்படுத்தியிருக்கும், வில்லவர்-பாணா-மீனாவின் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன் சின்னங்களை அல்ல.

    ஆரியர்கள் மற்றும் யாதவ-நாகர்கள் வடமேற்கு இந்தியாவில் சிறிது இறையாண்மையைக் கொண்டிருந்தனர். ஆனால் ஆரியர்கள் மற்றும் நாக-யாதவர்கள் தங்கள் வலிமையை மிகைப்படுத்திக் காட்டிய நல்ல வரலாற்றாசிரியர்களைக் கொண்டிருந்தனர். ஆனால் பாணப்பாண்டியன் ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர் ஆரியர்கள் மற்றும் நாக-யாதவர்கள் வட மேற்கு இந்தியாவில் மாத்திரமே இருந்தனர்.
    இந்தியா முழுவதையும் ஆண்ட திராவிடர்களான பாணப்பாண்டிய மன்னர்களை அசுரர் என்று அழைப்பது ஆரியர்களின் வழக்கம்.

    சூரியவம்சம் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ராஜ்ஜியம் என்ற கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இக்ஷவாகு மற்றும் பாஞ்சால நாடுகள் கிமு 700 முதல் கிமு 500 வரையிலான குறுகிய கால சாளரத்தில் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே சக்திவாய்ந்தவை.
    கிமு 530 இல் பீமனின் கீழ் பாண்டவர்கள் கோசல அரசை தோற்கடித்தனர். இதனால் ஆரிய சூரிய வம்சம் நாகா சந்திர வம்சத்தால் தோற்கடிக்கப்பட்டது. சூரிய வம்சத்தின் கடைசி மன்னன் பிரசனாஜித் என்ற பசெனெடி ஒரு பௌத்தராகவும், கௌதம புத்தரின் சீடராகவும் ஆனார். சூரிய வம்ச மன்னர்கள் கிமு 700 முதல் கிமு 500 வரை கிழக்கு உத்தரப்பிரதேசத்தை மட்டுமே ஆட்சி செய்தனர், அவர்கள் சக்திவாய்ந்த ஆட்சியாளர்கள் அல்ல.
    கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மங்கத மன்னர்கள் முன்னாள் இக்ஷவாகு பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தனர்.

    பதிலளிநீக்கு
  12. சூரிய, சந்திர மற்றும் அக்னி வம்சங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடர்கள் (அசுரர்), ஆரியர்கள் (தேவர்) மற்றும் நாகர்கள். இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பழங்குடி இனம் திராவிடர்கள். ஆரியர்கள் மற்றும் நாகர்கள் மிகவும் பிற்காலத்தில் தோன்றினர்.

    ஒரு வில்லவர் அல்லது பாண மன்னன் ஒரு நாககுல இளவரசியை (பாண்டவர், கவுரவர் அல்லது யாதவர்) திருமணம் செய்து கொள்ளும்போது, ​​அவரது சந்ததியினர் தங்களை சந்திரவம்சம் என்று அழைக்கலாம்.

    வில்லவர்கள் அல்லது பாண மன்னன் ஒரு ஆரிய இளவரசியை மணக்கும்போது அவனுடைய சந்ததியினர் தங்களை சூரியவம்சம் என்று அழைக்கலாம்.
    இவ்வாறு இக்ஷவாகு வம்சத்துடன் கலந்து கொண்ட வில்லவர் ஆட்சியாளர்களான சோழர்கள் தங்களை சூரியவம்சம் என்று அழைத்தனர். இது வெறும் அலங்கார பட்டம் மாத்திரமாகும்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் பாண்டவர்களுடன் சில திருமண தொடர்புகளை கொண்டிருந்த வில்லவர் வழித்தோன்றல் பாண்டியர்கள் தங்களை சந்திரவம்சம் என்று அழைத்தனர்.

    வில்லவர்களாக இருந்த சேரர்களும் தங்களை அக்னிவம்சம் என்று அழைத்துக் கொண்ட ஆரிய நாகர்களுடன் ஒருபோதும் கலக்கவில்லை. மகாபலி மன்னனால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான வம்சம் அக்னிவம்சம் ஆகும்.

    இந்திய வம்சங்கள் திராவிடர்களிடமிருந்து உருவானவை அல்ல ஆரியர்கள்
    1.திராவிடர்கள் வில்லவர் மற்றும் பாணர் = அக்னிவம்சம்
    2. திராவிட வில்லவர் மற்றும் பாணர் + ஆரியன்= சூரியவம்சம்
    3. திராவிட வில்லவர் மற்றும் பாணர் + நாகா = சந்திரவம்சம்

    பாண்டியர்களுக்கு பாண்டவர்களுடன் சில திருமண தொடர்புகள் இருந்தன. எனவே பிந்தைய பாண்டியர்கள் தங்களை சந்திரவம்சம் என்று அழைத்தனர்.

    ஆந்திர இக்ஷவாகு மற்றும் மேற்கு கங்க வம்சத்தின் இக்ஷவாகு ஆட்சியாளர்களுடன் சோழர்களுக்கு சில தொடர்புகள் இருந்தன.

    சேர சோழ பாண்டியர்கள் மற்றபடி திராவிட வில்லவர் வம்சங்களாக தொடர்கின்றனர்.

    உண்மையில் பெரும்பாலான வேத பழங்குடியினர் ஆரியர்கள் அல்ல. கிமு 150 இல் சாகர் மற்றும் கிபி 470 இல் ஹூணர் வருகை வரை கங்கைக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளையும் பாணா, மீனா, பாணப்பாண்டியன் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர்.

    இந்தியா அடிப்படையில் ஒரு திராவிட நாடு. பெரும்பாலான திராவிடர்கள் இதை உணரவில்லை.

    பதிலளிநீக்கு
  13. சூரிய, சந்திர மற்றும் அக்னி வம்சங்கள்

    பாணா, மீனா, வில்லவர், மீனவர் அனைத்து குலங்களும் பழங்குடி வில்லவர் குலங்கள்.
    கிமு 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பாண்டிய இராச்சியம் மிகப் பழமையான இராச்சியம்.
    பாணர், மீனா, வில்லவர், பில், மீனவர் பழங்காலத்திலிருந்தே இந்தியா முழுவதையும் ஆண்ட குலங்கள்.

    சிந்து சமவெளி நாகரீகம்

    சிந்து சமவெளி நாகரீகம், திராவிட பாணா, மீனா மற்றும் மெசபதோமிய மக்களின் கலாச்சாரமாக இருந்திருக்கலாம், இது கிமு 3300 முதல் கிமு 1300 வரை நீடித்தது.
    ஆரிய புலம்பெயர்ந்தோர் கிமு 1900 இல் வந்தனர்.
    0கிமு 1700 முதல் கிமு 1200 வரை இந்தோ-ஆரியர்கள் ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் சிந்து சமவெளியில் வாழ்ந்தனர். கிமு 1200க்குப் பிறகு இந்தோ-ஆரியர்கள் பஞ்சாபையும், பின்னர் உத்தரப்பிரதேசத்தையும் ஆக்கிரமித்தனர். கிமு 800 முதல் கிமு 500 வரை ஆரிய வம்சங்கள் உத்தரபிரதேச பகுதியை மட்டுமே ஆட்சி செய்தன. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கிமு 700 முதல் கிமு 500 வரை கோசல சாம்ராஜ்யம் இருந்தது. சூரியவம்சம் பெரும்பாலும் கங்கைக்கு வடக்கே ஆட்சி செய்தது.

    வட இந்தியாவை ஆண்ட மற்றொரு குலம் நாகர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடைய யாதவர்கள் ஆவர். பாண்டவர்களும் கவுரவர்களும் நாகர்கள் மற்றும் யாதவர்கள் அவர்களின் உறவினர்கள். நாகர்களும் யாதவர்களும் சந்திர வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர். நாகர்கள் தெற்கே வந்து மகாராஷ்டிராவையும், யாதவர்கள் நர்மதா வரை வந்து ஹைஹையா ராஜ்ஜியத்தை நிறுவினர்.

    ராஜ வம்சங்களை சூரியவம்சம், சந்திரவம்சம் மற்றும் அக்னிவம்சம் என வகைப்படுத்துவது திராவிட பாணர்கள் மற்றும் வில்லவர்களின் ஆரியத்திற்கு முந்தைய வழக்கம்.

    பண்டைய பாணர்களும் வில்லவர்களும் தங்களை அக்னிவம்சம் என்று கருதினர். ராஜ்புத், ஜாட் மற்றும் பிற க்ஷத்திரியர்கள் போன்ற பிற்கால வம்சங்கள் பாணர்களிருந்து (பாணா, பில் மற்றும் மீனா) உருவாகின்றன. அவர்கள் அனைவரும் அக்னிவம்சிகள்.
    கலப்படமில்லாத வில்லவர் மற்றும் பாணர்கள் அனைவரும் தங்களை அக்னிவம்சிகள் என்றும் பழங்காலத்திலிருந்தே அழைத்துக் கொண்டனர். ஆரம்பகாலப் உத்திரப்பிரதேசம் கூட
    பாண-வில்லவர் ஆட்சியாளர்களால் மட்டுமே ஆளப்பட்டது. மதுரா என்பது சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட வடமதுரை. வட மதுரை கிமு ஆறாம் நூற்றாண்டில் சூரிய வம்சத்தால் கைப்பற்றப்பட்டது ஆனால் யாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வில்லவர்-மீனவரின் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன் அடையாளங்கள் இடைக்காலத்தில் அவுத் மாநிலத்தின் (அயோத்தி) அதிகாரப்பூர்வ சின்னமாகத் தொடர்ந்தன. இந்தோ-ஆரிய சூரிய வம்சத்தின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகும் வில்லவர்-பாணா-மீனா மக்கள் உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து ஆட்சி செய்தனர்.

    பகவான் ஸ்ரீராமர் ஒரு இக்ஷவாகு அரசராக இருந்தார், அதே சமயம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு யாதவ அரசராக இருந்தார். கிமு 543க்குப் பிறகு நடந்திருக்கக்கூடிய குருக்ஷேத்திரப் போரில் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்திற்கு சிங்கள இளவரசன் இலங்கையிலிருந்து பரிசுகளை கொண்டு வருவதை மகாபாரதம் குறிப்பிட்டது. கிமு 543 இல் இளவரசர் விஜயனால் சிங்கள ராஜ்யம் நிறுவப்பட்டது. கி.பி 543 க்குப் பிறகு சூரிய வம்சம் மற்றும் சந்திர வம்சத்தின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. பாகுபலி இக்ஷவாகு வம்சத்தில் பிறந்ததால், ஜைனர்களும் இக்ஷவாகு வம்சத்தைப் போற்றினர். ஆனால் பாண-வில்லவர்-பில்-மீனா மற்றும் மீனவர் அரசுகளின் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன் அடையாளங்கள் அவுத் இராச்சியம் மற்றும் நவீன உத்தரப்பிரதேச மாநிலத்தின் சின்னங்களாக உள்ளன.


    நவீன உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன், அதாவது வில்லவர் சின்னம். சூரிய வம்சம் உத்தரப்பிரதேசத்தில் சக்திவாய்ந்ததாக இருந்திருந்தால், உ.பி. அரசாங்கம் சூரிய முத்திரையைப் பயன்படுத்தியிருக்கும், வில்லவர்-பாண-மீன வம்சங்களின் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன் சின்னங்களை அல்ல.

    ஆரியர்கள் மற்றும் யாதவ-நாகர்கள் வடமேற்கு இந்தியாவில் சிறிது இறையாண்மையைக் கொண்டிருந்தனர். ஆனால் ஆரியர்கள் மற்றும் நாக-யாதவர்கள் தம் வலிமையை மிகைப்படுத்திக் காட்டிய நல்ல வரலாற்றாசிரியர்களைக் கொண்டிருந்தனர். ஆனால் பாணப்பாண்டியன் ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். ஆரியர்கள் மற்றும் நாக-யாதவர்கள் வட மேற்கு இந்தியாவில் மாத்திரமே இருந்தனர்.
    இந்தியா முழுவதையும் ஆண்ட திராவிடர்களான பாணப்பாண்டிய மன்னர்களை அசுரர் என்று அழைப்பது ஆரியர்களின் வழக்கம்.

    பதிலளிநீக்கு
  14. சூரிய, சந்திர மற்றும் அக்னி வம்சங்கள்

    சூரியவம்சம் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ராஜ்ஜியம் என்ற கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இக்ஷவாகு மற்றும் பாஞ்சால நாடுகள் கிமு 700 முதல் கிமு 500 வரையிலான குறுகிய கால சாளரத்தில் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே சக்திவாய்ந்தவை.
    கிமு 530 இல் பீமனின் கீழ் பாண்டவர்கள் கோசல அரசை தோற்கடித்தனர். இப்படி ஆரிய சூரிய வம்சம் நாகரின் சந்திர வம்சத்தால் தோற்கடிக்கப்பட்டது. சூரிய வம்சத்தின் கடைசி மன்னன் பிரசனாஜித் என்ற பசெனெடி ஒரு பௌத்தராகவும், கௌதம புத்தரின் சீடராகவும் ஆனார். சூரிய வம்ச மன்னர்கள் கிமு 700 முதல் கிமு 500 வரை கிழக்கு உத்தரப்பிரதேசத்தை மட்டுமே ஆட்சி செய்தனர், அவர்கள் சக்திவாய்ந்த ஆட்சியாளர்கள் அல்ல.
    கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகத மன்னர்கள் முன்னாள் இக்ஷவாகு பிரதேசத்தின் பெரும்பகுதியையும் ஆக்கிரமித்தனர்.

    சூரிய வம்சத்தின் மத முக்கியத்துவம் இக்ஷ்வாகு மற்றும் தொடர்புடைய சாக்கிய வம்ச இராச்சியங்களில் நிறுவப்பட்ட சமண மற்றும் பௌத்தத்தின் விளைவாகும்.

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடர்கள் (அசுரர்), ஆரியர்கள் (தேவர்) மற்றும் நாகர்கள். இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பழங்குடி இனம் திராவிடர்கள். ஆரியர்கள் மற்றும் நாகர்கள் மிகவும் பிற்காலத்தில் தோன்றினர்.

    ஒரு வில்லவர் அல்லது பாண மன்னன் ஒரு நாககுல இளவரசியை (பாண்டவர், கவுரவர் அல்லது யாதவர்) திருமணம் செய்து கொள்ளும்போது, ​​அவரது சந்ததியினர் தங்களை சந்திரவம்சம் என்று அழைக்கலாம்.

    வில்லவர்கள் அல்லது பாண மன்னன் ஒரு ஆரிய இளவரசியை மணக்கும்போது அவனுடைய சந்ததியினர் தங்களை சூரியவம்சம் என்று அழைக்கலாம்.
    இவ்வாறு இக்ஷவாகு வம்சத்துடன் கலந்து கொண்ட வில்லவர் ஆட்சியாளர்களான சோழர்கள் தங்களை சூரியவம்சம் என்று அழைத்தனர். இது வெறும் அலங்கார பட்டம் மாத்திரமாகும்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் பாண்டவர்களுடன் சில திருமண தொடர்புகளை கொண்டிருந்த வில்லவர் வழித்தோன்றல் பாண்டியர்கள் தங்களை சந்திரவம்சம் என்று அழைத்தனர்.

    மகாபலி மன்னனால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான வம்சம் அக்னிவம்சம் ஆகும்.வில்லவர்களாக இருந்த சேரர்களும் தங்களை அக்னிவம்சம் என்று அழைத்துக் கொண்டனர். சேரர்கள் ஆரிய நாகர்களுடன் ஒருபோதும் கலக்கவில்லை.

    இந்திய வம்சங்கள் திராவிடர்களிடமிருந்து உருவானவை அல்ல ஆரியர்கள்
    1.திராவிடர்கள் வில்லவர் மற்றும் பாணர் = அக்னிவம்சம்
    2. திராவிட வில்லவர் மற்றும் பாணர் + ஆரியன்= சூரியவம்சம்
    3. திராவிட வில்லவர் மற்றும் பாணர் + நாகா = சந்திரவம்சம்

    பாண்டியர்களின் சந்திர வம்சம்

    பாண்டியர்களுக்கு பாண்டவர்களுடன் சில திருமண தொடர்புகள் இருந்தன. கிமு ஆறாம் நூற்றாண்டில் நாக சந்திர வம்சத்தைச் சேர்ந்த அர்ஜுனன் பாண்டிய இளவரசி சித்ராங்கதையை திருமணம் செய்து கொண்டார். எனவே பிந்தைய பாண்டியர்கள் தங்களை சந்திரவம்சம் என்று அழைத்தனர்.

    பதிலளிநீக்கு
  15. சூரிய, சந்திர மற்றும் அக்னி வம்சங்கள்

    தெற்கு நோக்கி சூரிய வம்சத்தின் இடம்பெயர்வு

    இடம்பெயர்ந்த இக்ஷவாகு வம்சம் திராவிட குலங்களுடன் கலந்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ராஜ்ஜியங்களை நிறுவியது. வேத கால இக்ஷவாகு வம்சத்தின் பட்டங்கள் அவர்களிடம் இல்லை.

    தெற்கு கோசல இராச்சியம்.

    உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை இழந்த இக்ஷவாகு வம்சம் சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கிருந்து இக்ஷவாகு குலத்தினர் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    ஆந்திர இக்ஷவாகு வம்சம்

    ஆந்திர இக்ஷவாகு வம்சம் அதாவது விஜயபுரியின் இக்ஷ்வாகுக்கள் தற்போதைய நாகார்ஜுனகொண்டா பகுதியை கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை ஆண்டனர். அவர்களுக்கு தெலுங்கு பெயர்கள் மட்டுமே இருந்தன. அவர்கள் தங்களை சாந்தமூலா என்று அழைத்ததால், அவர்கள் பாண-வில்லவர் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம்.
    நான்காம் நூற்றாண்டில் பல்லவர்கள் ஆந்திர இக்ஷவாகு பிரதேசங்களைக் கைப்பற்றினர்.

    மேற்கு கங்கை இராச்சியம்

    மேற்கு கங்கை இராச்சியம் கிபி 350 முதல் கிபி 1000 வரை இக்ஷவாகு வம்சத்தால் ஆளப்பட்டது. மேற்கு கங்கை இராச்சியத்தின் தலைநகரங்கள்
    கோலார் மற்றும் தலக்காடு.

    கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது. மேற்கு கங்கா இராச்சியம் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த இக்ஷவாகு வம்சத்தால் ஆளப்பட்டது. இக்ஷவாகு வம்சம் தமிழ் சாம்ராஜ்யங்களுக்கு விரோதமாக இருந்தது மற்றும் இக்ஷவாகு வம்சம் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டைத் தாக்கியது.

    வில்லவர் சேர வம்சத்தினர் தாக்குதல்களை எதிர்த்த போதிலும், அவர்கள் கொங்குப் பகுதியையும் அவர்களின் பண்டைய தலைநகரான கருவூரையும் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் கங்கா-இக்ஷவாகு வம்சத்திடம் இழந்தனர்.

    சேர வம்சம் கொங்கு பகுதியை இழந்தது

    மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு நாடு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள். கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது.
    கங்கை மன்னர் முதலாம் பிருத்விபதி பல்லவ வாரிசுப் போரில் முதலாம் ஆதித்த சோழனுடன் கூட்டுச் சேர்ந்தார். கிபி 885 யில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருப்புறம்பியத்தில் எதிரிப் படைகள் சந்தித்தன. பாண்டியர்கள் மற்றும் நிருபதுங்க பல்லவரின் படைகள் அபராஜித பல்லவனால் தோற்கடிக்கப்பட்டன.

    சோழ இளவரசன் ராஜாதித்தியன் தக்கோலம் போரில் கொல்லப்பட்டான்

    938 இல் அரியணை ஏறிய கங்கை மன்னன் இரண்டாம் பூதுகன், தனது மாமனார் ராஷ்டிரகூட சக்ரவர்த்தி மூன்றாம் அமோகவர்ஷனுக்கு சோழ வம்சத்துக்கு எதிரான தக்கோலம் போரில் வெற்றிபெற ராஷ்டிரகூடர்களுக்கு உதவினார்.

    போரின் போது சோழ இளவரசர் ராஜாதித்தியன் தனது போர் யானையின் மேல் அமர்ந்திருந்த போது கங்க பூதுகனின் நஞ்சு தோய்ந்த அம்பினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    முதலாம் ராஜராஜ சோழன் கிபி 1000 ஆம் ஆண்டு கங்கவாடியைக் கைப்பற்றி, மேற்கு கங்கை வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
    தெற்கு இக்ஷவாகு வம்சம் கி.பி 1000 இல் முடிவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  16. சூரிய, சந்திர மற்றும் அக்னி வம்சங்கள்

    சோழர்களின் இக்ஷவாகு உறவு

    ஆந்திர இக்ஷவாகு மற்றும் மேற்கு கங்க வம்சத்தின் இக்ஷவாகு ஆட்சியாளர்களுடன் சோழர்களுக்கு சில திருமண தொடர்புகள் இருந்திருக்கலாம். அதனால்தான் பிற்கால சோழ வம்ச மன்னர்கள் தங்களை சூரிய வம்சம் என்றும் இக்குவாகு என்றும் அழைத்தனர்.

    10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆண்ட சோழர்கள் பண்டைய சூரிய வம்ச மன்னர்களான முச்சுகுந்தா, சிபி, மனு, இக்ஷ்வாகு, மாந்தாதா, ஹரிச்சந்திரன், பகீரதன், ஸ்ரீ ராமர் மற்றும் அவரது சகோதரர்கள் போன்றவர்களை அவர்களின் பரம்பரையில் சேர்க்கத் தொடங்கினர். அதற்கு முந்தைய சோழர்கள் சூரிய வம்ச மன்னர்களை தங்கள் மூதாதையர்கள் என்று குறிப்பிடவில்லை.


    சேர சோழ பாண்டிய பேரரசுகளின் வில்லவர் வம்சம்

    வில்லவர் வம்ச சோழர்கள் வில்லவர் மலையர் மற்றும் வானவர் போன்ற வில்லவர்களின் பல்வேறு உபகுலங்களிலிருந்து உருவானார்கள். வில்லவரும் அவர்களது வடநாட்டு உறவினர்களாகிய பாணரும் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாணரும் வில்லவர்களும் தாங்கள் அசுர மன்னன் மகாபலியின் வம்சாவளியினர் என்று கூறினர். திராவிட பாண குலங்களும் வில்லவர் குலங்களும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இந்தியாவை ஆண்டனர். ஆரியர்களின் சூரிய வம்சமும், யாதவர்கள் மற்றும் நாகர்களின் சந்திர வம்சமும் மிகவும் பிற்காலத்தில் இந்தியாவில் தோன்றின.

    சேர சோழ பாண்டியர்கள் மற்றபடி திராவிட வில்லவர் வம்சங்களாக தொடர்ந்தார்கள்.
    1. சேர வம்சம் = வில்லவர் குலம்
    2. பாண்டிய வம்சம் = வில்லவர் - மீனவர் குலம்
    3. சோழ வம்சம் = வானவர் குலம்.
    தமிழ் அரசுகள் அனைத்தும் வில்லவர் குலங்களால் ஆளப்பட்டன.

    இந்தியா அடிப்படையில் ஒரு திராவிட நாடு. பெரும்பாலான திராவிடர்கள் இதை உணரவில்லை.

    __________________________________________________________


    நவீன உத்தரப்பிரதேச மாநிலத்தின் சின்னம் பாண்டிய சேர முத்திரை வில் அம்பு மற்றும் இரட்டை மீன் ஆகும்.


    https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Seal_of_Uttar_Pradesh.svg/2048px-Seal_of_Uttar_Pradesh.svg.png


    __________________________________________________________


    அவுத் (அயோத்தி) இராச்சியத்தின் மீன் கொடி

    https://en.m.wikipedia.org/wiki/Oudh_State#/media/File%3AFlag_of_Awadh.svg

    __________________________________________________________


    பாண-வில்லவர் ஆட்சியாளர்களின் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன் சின்னம் இடைக்காலத்தில் அவுத் (அயோத்தி) இராச்சியத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருந்தது.


    https://en.m.wikipedia.org/wiki/Oudh_State#/media/File%3AOudh-arms_short.gif


    _________________________________________________________

    பதிலளிநீக்கு